Posted in சினிமா

பூதமாக மாறிய பிரபுதேவா

பூதமாக மாறிய பிரபுதேவா


பொன் மாணிக்கவேல் படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில், தேள், யங் மங் சங், பஹிரா உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

பூதமாக மாறிய பிரபுதேவா… வைரலாகும் புகைப்படம்
பிரபுதேவா


நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமையுடன் இருக்கும் பிரபுதேவா வித்தியாசமான கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் உள்ள படங்களை

தேர்வு செய்து நடிக்கிறார். பொய்க்கால் குதிரை என்ற படத்தில் ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். ஒரு

நிஜ கால் மற்றும் ஒரு செயற்கை காலுடன் இருக்கும் பிரபுதேவாவின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் `மை டியர் பூதம்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் பூதமாக நடிக்கிறார்.

பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

பிரபுதேவா

படத்தை ராகவன் இயக்குகிறார். இதில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருந்த தேள் படம் சில பிரச்சினைகளால் தள்ளி

வைக்கப்பட்டுள்ளது. யங் மங் சங்',பஹிரா’ மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.

Posted in சினிமா

80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

பிரபல இந்தி பட நடிகை கத்ரினா கைப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
கத்ரினா கைப்- விக்கி கவுசல்


பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.

திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடந்துள்ளது. சொகுசு விடுதியில் மணமக்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை ரூ.7 லட்சம் ஆகும். திருமணத்துக்கு செல்போன்

கேமராக்கள் கொண்டுவர தடை விதித்து இருந்தனர். திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.80 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கத்ரினா கைப்
கத்ரினா கைப்- விக்கி கவுசல்

கத்ரினா திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில்

புகார் அளிக்கப்பட்டது. கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு

எடுத்துள்ளனர். வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் ஆகும். இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முன்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளன

    Posted in சினிமா

    இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா

    இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா

    விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

    மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா
    சமந்தா


    நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி

    அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. சமந்தா மீதும் பழி சுமத்தப்பட்டன.

    இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார்.

    இந்தநிலையில் விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

    சமந்தா

    இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள்.

    விவாகரத்து செய்து பிரிவதால் மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால்

    நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவள்

    என்பதில் பெருமைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மூலம் எனது

    வலிமை எனக்கு தெரிந்துள்ளது. நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழவேண்டும்” என்றார்

    Posted in சினிமா

    நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்

    நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்

    தமிழில் மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அமலாபால், சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார்.

    சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்
    அமலாபால்


    முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர கதை தேடுதலில் இறங்கியிருக்கிறார்.

    அதோடு கதை பிடித்திருந்தால் அவரே தயாரிப்பிலும் ஈடுபடத் தயங்குவதில்லை. தற்போது

    கடாவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனூப்.எஸ் என்பவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

    அமலாபால்

    அதோடு மட்டுமல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா

    இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சக நடிகைகள் மீது

    அமலா பால் வைத்திருக்கும் இந்த நட்புதான் இந்த சிபாரிசுக்குக் காரணம் என்கிறார்கள்

      Posted in சினிமா

      துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு

      துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு

      முன்னணி நடிகர் விஷால் நடித்து இயக்க இருக்கும் துப்பறிவாளன் 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

      துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு
      விஷால்
      விஷால் ஏற்கனவே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி செல்லமே படம் மூலம்

      கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் டைரக்டர் அவதாரம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

      ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியாகி

      வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2-ம் பாகமும் இதே கூட்டணியில் உருவானது. இதன்

      முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல்

      ஏற்பட்டதால் படத்தை இயக்க முடியாது என்று மறுத்து மிஷ்கின் வெளியேறிவிட்டார். இதையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார்.

      ஆனாலும் பட வேலைகளை தொடங்காமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்ததால் துப்பறிவாளன்-2 படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பேச்சு கிளம்பியது. இந்த நிலையில்

      துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை ஜனவரி மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் விஷால் அறிவித்துள்ளார்.

      இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

        Posted in சினிமா

        விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்

        விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்

        விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாநகர காவல் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சாலையோரமாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

        விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்
        விஜயகாந்த் – தியாகராஜன்
        விஜயகாந்த் நடித்த மாநகர காவல், பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை

        இயக்கியவர் தியாகராஜன். மாநகராக காவல் படம் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 150-வது படமாகும்.

        அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர் டி.எப்.டி. படித்து முடித்து முதல் படமாக மாநகர காவல்என்ற

        படத்தை எடுத்தார். இந்திராகாந்தி கொலையை மையமாக வைத்து வந்த இந்தப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு பிரபு நடித்த பாக்சிங் சண்டையை மையமாக வைத்து வெற்றி மேல் வெற்றி என்ற படத்தை எடுத்தார்.

        இவர் திருமணம் முடிந்து மகன், மகள் இருவருடனும் ஏ.வி.எம். காலனியில் வசித்து வந்தார். சில

        ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு சிகிச்சைக்கு போதுமான பண வசதி இல்லாமல் கஷ்டத்தில் இருந்தார்.

        இன்று காலை ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரிலேயே சாலையோரமாக உயிரிழந்த நிலையில் அவர்

        உடலைக் கண்டு ஆம்புலன்சுக்கு சிலர் போன் செய்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தியாகராஜன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

        Posted in சினிமா

        நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி

        நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி

        சூது கவ்வும், பிட்சா 2, ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி, பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்க இருக்கிறார்.

        பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி
        சஞ்சிதா ஷெட்டி


        இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.

        அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில்,

        திடீரென்று புதிய படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.

        யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

        சஞ்சிதா ஷெட்டி
        அமீர் – சஞ்சிதா ஷெட்டி – சத்யா

        கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா

        ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மௌனம்

        பேசியதே, ராம், பருத்திவீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து எங்களுடைய இப்படத்தின்

        ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார். கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, ”அதர்மம்”,

        ”பகைவன்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.

          Posted in சினிமா

          நடிக்க தயாராகும் விஜயகாந்த்

          நடிக்க தயாராகும் விஜயகாந்த்

          நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.

          மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த்
          விஜயகாந்த்


          இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி

          மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில்

          முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க இருக்கிறார்.

          விஜய் மில்டன் ஏற்கனவே கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து ஒரு அதிரடிப்படத்தை எடுத்து

          முடித்திருக்கிறார். இப்போது விஜய் ஆண்டனியை வைத்து எடுத்து வரும் தமிழ்ப் படத்தில்தான்

          விஜயகாந்த்தை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வைக்கக் கேட்டிருக்கிறார்.

          விஜயகாந்த்

          இதே படத்தில் சரத்குமார் ஒரு கேரக்டரில் நடித்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

            Posted in Uncategorized

            காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது

            காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது

            காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தர​வேற்றம் செய்துவிட்டு, தலை​மறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்​பவமொன்று இடம்பெற்றுள்ளது.

            மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்​வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

            தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை

            துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர். எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

            அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார். எனினும்,

            விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர்,

            பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.

            .ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு. இளைஞன் வரும்போது, இடைநடுவிலேயே மறித்த பொலிஸார், அவரை

            கைது செய்துள்ளனர். இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

            அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.

            அவர், பல பெண்களை காதலித்துள்ளார். அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும்,

            வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார். அவற்றை, உறவினர்கள் மற்றும்

            இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

            கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..

              Posted in சினிமா

              திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

              திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

              தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, வெளியாக இருக்கும் ஒரு படத்தை பார்த்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

              திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா
              பாரதிராஜா


              மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.

              சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும்

              என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

              ஆன்டி இண்டியன் வரும் டிச-1௦ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சிறப்புக் காட்சித்

              திரையிடலில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

              இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த புளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே..

              இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்.

              பாரதிராஜா
              மாறனை பாராட்டும் பாரதிராஜா

              ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை

              நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த புளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான்’’ என்றார்.

                Posted in Uncategorized

                கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்

                கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்

                கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.

                கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
                கமல்


                தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால்

                மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

                கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

                செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

                கமல்

                இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா

                விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்

                  Posted in சினிமா

                  அந்த கதையில் சரத்குமார்- சுஹாசினி

                  அந்த கதையில் சரத்குமார்- சுஹாசினி

                  குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் உள்ள ஒரு படத்தில் சரத்குமார்- சுஹாசினி இருவரும் மண் சார்ந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

                  குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்- சுஹாசினி
                  சரத்குமார், சுஹாசினி
                  ரோஷ்குமார் தயாரிக்க, பாலுச்சாமி டைரக்டு செய்கிறார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது,

                  “இந்த காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது. இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். இது எனக்கான கதை என்றார்.

                  மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.

                  இன்னொரு முக்கிய வேடத்தில் அஷ்வதி நடிக்கிறார். இவர்களுடன் நந்தா, சிங்கம் புலி, சித்திக்,

                  கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். இது அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த திரைப்படமாக இருக்கும்” என்றார்.

                    Posted in சினிமா

                    சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்

                    சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்

                    தங்க மீன்கள் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை சாதனாவின் நடனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

                    தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
                    சாதனா


                    ‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட

                    ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை

                    வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

                    ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது.

                    இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு

                    வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத சாதனாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

                    சாதனா

                    பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை

                    நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

                      Posted in சினிமா

                      நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்

                      நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்

                      பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.

                      திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்


                      சந்திரலேகா – மனிஷா – சாய் தன்ஷிகா – சிருஷ்டி டாங்கே


                      எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று

                      போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா

                      ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.

                      பட பூஜை

                      கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

                      இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு

                      விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

                        Posted in சினிமா

                        வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

                        வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்


                        பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.

                        வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

                        தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க

                        ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு

                        கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

                        இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க

                        ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை

                        ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்

                        Posted in சினிமா

                        விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்

                        விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்

                        விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.

                        விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
                        விஜய் சேதுபதி – இளையராஜா


                        காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும்

                        டைரக்டு செய்தார். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில்

                        நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.

                        கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து

                        இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிட்டனர்.

                        இளையராஜா

                        இது பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

                        டிரெய்லரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது

                        அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து

                        படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில்

                        இளையராஜா புகார் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

                          Posted in சினிமா

                          சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

                          சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

                          தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.

                          சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
                          சசிகுமார்


                          இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது

                          குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான். இடையில் பாலா எடுக்கப்போவதாகத் தகவல் வர,

                          இருவருக்கும் கருத்து மோதல் வந்தது. இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு குற்றப்பரம்பரை பற்றி இருவருமே பேசவில்லை.

                          சசிகுமார்

                          தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

                          வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தைத் தயாரிக்க

                          இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தை சசிகுமார் இயக்க அதிக வாய்ப்புள்ளது.

                          அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

                            Posted in சினிமா

                            கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

                            கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

                            கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3ம்தேதிவரை

                            தனிமைப்படுத்தப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
                            கமல் ஹாசன்

                            பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள

                            ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில்

                            கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

                            இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக

                            தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று

                            தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                            கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருவதுடன்

                            நீண்டநாள் கிடப்பில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                              Posted in சினிமா

                              மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

                              மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

                              பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

                              மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
                              கங்கனா ரணாவத்


                              நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு

                              எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.

                              இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா

                              வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு

                              துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

                              கங்கனா ரனாவத்

                              இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

                              நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

                                Posted in சினிமா

                                மதுபான விளம்பரத்தில் நடிகைகள்

                                மதுபான விளம்பரத்தில் நடிகைகள்

                                முன்னணி நடிகைகள் பலரும் மதுபான விளம்பரத்தில் நடித்து வருவதால், அவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

                                மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு
                                ஹன்சிகா – பூஜா ஹெக்டே


                                நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

                                தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

                                ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார்.

                                தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.

                                இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

                                ஹன்சிகா – பூஜா ஹெக்டே

                                திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும்

                                நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும்

                                புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

                                இது பரபரப்பாகி உள்ளது. பூஜா ஹெக்டே தற்போது விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்