Tag: கற்பழிப்பு
கற்பழிப்பு குற்றவாளிக்கு ஈரான் பொதுவெளியில் மரண தண்டனை
கற்பழிப்பு குற்றவாளிக்கு ஈரான் பொதுவெளியில் மரண தண்டனை ,டஜன் கணக்கான வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தொடர் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஈரான் பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது.
இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி ஒருவரை அதிகாரிகள் பொது இடத்தில் தூக்கிலிட்டதாக ஈரானின் அரசு ஊடகம் கூறுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஆடவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக அக்டோபரில் ஈரானின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததை அடுத்து முகமது அலி சலாமத் தூக்கிலிடப்பட்டதாக அரசுக்கு
சொந்தமான ஈரான் செய்தித்தாள் கூறியது. மேற்கு நகரமான ஹமேடானில் உள்ள ஒரு கல்லறையில் செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் அவர் கொல்லப்பட்டார்.
நகரில் மருந்தகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த 43 வயதுடைய சலாமத் மீது 200 பெண்கள் கற்பழிப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
. இவர் கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஈரானிய ஊடகங்களின் அறிக்கைகள் பல வழக்குகளில், திருமணத்தை முன்மொழிந்த பிறகு அல்லது டேட்டிங் செய்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை
பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஈரானில் சட்டவிரோதமான கருக்கலைப்பு மாத்திரைகளை அவர் சிலருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் ஒரு குற்றவாளிக்குக் காரணமான மிகப்பெரிய பலாத்கார வழக்கில் ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, நகரின் நீதித் துறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, சலாமத்துக்கு மரண தண்டனை வழங்கக் கோரினர்.
செப்டம்பரில் ஐ.நா நிபுணர்கள், மரணதண்டனையை நிறைவேற்றும் உலகின் முன்னணி நாடுகளில் ஈரானும் இருப்பதாகக் கூறியுள்ளனர். ஈரானில்
அதிகரித்து வரும் மரணதண்டனைகள் மனித உரிமைக் குழுக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு ,இலங்கையில் கஞ்சா போதைவஸ்து ஊடாக கற்பழிப்பு படுகொலைகள் இடம் பெற்று வருவதான தகவல் மறுபடியும் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .
இலங்கை ஒரு கஞ்சா கற்பழிப்பு தேசமாக உள்ளதான தோற்றப்பாட்டை தமிழர் புலம்பெயர் ஊடகங்கள் முதல் இலங்கையினுடைய ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் மக்களுடைய வருகையை அதிகரித்து அதனை மேம்படுத்த நடவடிக்கையில் இலங்கை உல்லாசத்துறை பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது .
தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை
ஆனால் அவ்வாறான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை போத வஸ்து கஞ்சாவுக்கு அடிமையான ஒரு தேசமாக தற்பொழுது தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை செய்திகளை தாராளமாக எழுதி வருகின்றன.
இதன் ஊடாக இலங்கையிலுள்ள வாலிபங்களுக்கு கஞ்சா போதை செய்திகளை ஊட்டி ,அதன் ஊடாக கஞ்சா வியாபாரங்களை நடத்துவதற்கு இந்த தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை இடுகின்றன .
மக்களாகிய நீங்கள் இந்த ஊடகங்களை காணுகின்ற பொழுது நாள்தோறும் கற்பழிப்பு கஞ்சா போன்ற தலைப்புச் செய்திகளை இவர்கள் எழுதி வருகின்றன.
சமூக பார்வையில் எத்தனையோ நல்ல விடயங்கள் காணப்படுகின்ற பொழுதும் அதனை எல்லாம் தட்டிக் கழித்து விட்டு நாள்தோறும் கஞ்சாவை போத வஸ்து தலைப்புச் செய்திகளை ஈட்டு வருகின்றது .
இதன் ஊடாக இலங்கையில் கொடி கட்டி கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்கின்ற பெயரை இலங்கையின் மகுடமாக இவர்கள் சூட்டி வருகின்றனர் .
இதனையே ஆளும் அரச அதிகார வர்க்கங்களும் மகிழ்வோடு ஏற்று மகிழும் நிலையில் காணப்படுகின்ற்ன .
அதனால் தான் தமிழ் ஊடகங்கள் தலைப்புகளாக இந்த் செய்திகளை ஒட்டி வருகின்றன.
இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம்
இதன் ஊடாக இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம் நடக்கிறது போலும் .
சமூகம் சமூக அக்கறை தொடர்பாக பேசுகின்ற ஊடகங்களில் சமூகத் தலைப்புகள் இதுவாக பகிர முடியுமா என்கின்ற கேள்வியை தற்போது நாங்கள் முன்வைக்கின்றோம்.
பல்வேறுபட்ட மூத்த ஊடக யாம்பவான்கள் பத்திரிகையில் இவ்வாறான தலைப்புக்களை காண முடிவதில்லை .
அவ்வாறு வந்தாலும் ஆங்காங்கே ஒன்று இரண்டாக காணப்படுகின்றன .
ஆனால் தமிழ் இணைய வலைத்தளங்களை பார்க்கின்ற பொழுது ,இதனை ஆக்கிரமித்து செய்திகளை வெளியிடுவது ,அவர்கள் கஞ்சா போதை கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளார்கள் என்பதையே இந்த செய்திகள் காணப்படுகின்றன.
இனியேனும் இந்த கஞ்சா செய்தியாளர்கள் கஞ்சா செய்தியை நிறுத்துவார்களா ..?
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு காத்தான் குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பாலமுனை கடற்கரை பகுதியில் மீட்க பட்ட பெண் யார் என்பது தொடர்பில்விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் இலங்கை பொலிஸார் குற்றவாளிகளை தேடுகின்றனர் .
இந்த பெண்ணின் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ள கொலை குற்றவாளிகள் யார் என்பதை காத்தான் குடி பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை .
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
இந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பின்னர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்கின்ற தகவல்கள் வெளியாகி வருகின்ற பொழுதும் ,அது தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் எதனையும் தெரிவிக்கவில்லை .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான மர்ம கொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை இலங்கை போலீசார் கண்டுபிடிக்க முடியாது திணறி வருகின்றனர் .
சீரியல் கில்லர் ஒருவர் இவ்வாறான கொலைகளை செய்து வருகின்றாரா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
மகள்களை கற்பழித்த தந்தை
இங்கிரிய பகுதியில் தனது மகள்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தந்தை செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தாய் இறந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகளும் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர் .
இவ்வாறான கால பகுதியில் 17 வயதான தனது மூத்த மகளை தந்தை ஐந்து வருடமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .
இதே சமகாலத்தில் தனது இரண்டாவது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தந்தை முனைந்ததை கண்ணுற்ற மூத்த மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் .
அதனை அடுத்தே தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் .
Featured
மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட
நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறி கொண்டுள்ளனர்.
மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடம் இருந்து 2,000 ரூபாய் பணத்தையும் வலுக்ககட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து
விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது
புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்தி சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.
அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது
நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.
அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.
வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.
மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்
பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்
பிரிட்டன் Boston, Lincolnshire. பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார் .
குறித்த பெண் விபச்சாரம் புரிந்து வருபவர் .இவ்வாறான அந்த பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவர் மிரட்டி கற்பழித்ததுள்ளார் .
துப்பாக்கி முனையில் கற்பழிப்புக்கு உள்ளாக்க பட்ட பெண் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுததாரி மடக்கி பிடிக்க பட்டார் .
பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி சென்று கொண்டிருந்த காரினை சோதனை புரிந்த பொழுது அந்த காருக்குள் கத்தி மற்றும் துப்பாக்கி என்பன இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டது.
கை விலங்கு மாட்டப்பட்டு குறித்த ஆயுத தாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
இந்திய டில்லி பகுதியில் செருப்பு தொழில் சாலையில் பணிபுரிந்த 15 வயது இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் மேனேஜர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற கணவன் தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
மூன்று நாட்களாக கொடூரமாக கற்பழித்த அவர் பின்னர் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது அவளது வாய்க்குள் அசிட்டை ஊற்றியுள்ளார் .
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
அதனை அருந்திய இளம் பெண் உடல் பகுதியில் பலமாக எரிந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
கொலை கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டு நீதிமனற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
மேற்படி இளம் பெண் கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் அமைப்புக்கள் இந்த கற்பழிப்பை புரிந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்களில் குதித்துள்ளனர்.
தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை கற்பழித்த கணவன் செயல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .
கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்
பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்–
இந்த வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்- டெல்லியில் பரபரப்பு
பள்ளி மாணவிகள்
புது டெல்லி:
டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து மாணவிகள் 2 பேரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கு இருந்த இரண்டு பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டியுள்ளார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாணவிகள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விடும் என இருவரும் அமைதியாக இருந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிகளிடமும் இந்த சம்பவத்தை மறந்துவிடும் படி கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது டெல்லி பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் ஆணையம் டெல்லி போலீஸ் மற்றும் கிழக்கு முனிசிபில் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீதும், அதை மறைத்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இது மாநகராட்சி பள்ளி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை.
அதனால் குற்றவாளி குறித்த தகவல் தெரியவில்லை.
இருப்பினும் இதற்காக தனிப்படை அமைத்து அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம்.
அதேபோல பள்ளி மாணவிகளிடம் குற்றவாளி குறித்த தகவல்களை பெற்று அவர்கள் தந்த அடையாளத்தின் அடிப்படையில் தேடி வருகிறோம்.
சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும்
மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை
முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய பொலிஸார் தலைமறைவாக இருந்த 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு, தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை
(18) அன்று கப்பம் கோரிய சந்தேக நபரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரை கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்தனர்.
அதன் பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 31
வயதுடையவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்
துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை
மேற்கொண்ட பின்னர் நேற்று (19) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான சாய்ந்தமருது
பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை
உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த மாமா
இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த மாமா
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண் தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை இழந்த குழந்தையை தாய்மாமானிடம் வளர்ப்பதற்காக கொடுத்து விட்டு சென்ற போது அவள் வளர்ந்து பெரியவளாகி தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் சென்னை ராயபுரத்தில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
காசிமேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை- சாந்தி தம்பதியின் ஒரே மகள். பிறந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை இறக்கவே குழந்தையை தனது தம்பி தேசப்பனிடம் சாந்தி ஒப்படைத்து விட்டு மறுமணம் செய்து கொள்கிறார்.
தாய் மாமன் தேசப்பன்- ரேவதி தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அதனால் பாசத்துடன் குழந்தையை வளர்த்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. குழந்தை, சிறுமியாக வளர்ச்சி அடைந்தாள். 9 வயதாகும் போது அவள் தாய் மாமனின் பாலியல் சீண்டலுக்கு ஆளானாள்.
அன்பு, பாசம் காட்டி வளர்க்க வேண்டிய சிறுமி சித்ரவதைக்கு நேரிட்டாள். அத்தையும் சிறுமியை விடவில்லை. பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்ததால் அவள் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினாள்.
அனாதையாக வீதியில் நின்ற சிறுமியை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர். அங்கு தங்கி படிப்பை தொடர்ந்தாள். அங்கு அவளுக்கு பாதுகாப்பாக இருந்ததால் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்தாள்.
சிறுமி இல்லத்தில் தங்கி இருப்பதை அறிந்து தேசப்பனும் அவரது மனைவியும் வீட்டிற்கு அழைக்க காப்பகத்திற்கு சென்றுள்ளனர். காப்பக நிர்வாகிகளிடம் பாசமழை பொழிந்து மகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் கூறி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
தாய் மாமன் வீட்டிற்கு வந்த சிறுமி 10-ம் வகுப்பு படிப்பை தொடராமல் போனது மட்டுமின்றி மீண்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். ஒவ்வொரு நாள் இரவும் தாய்மாமனின் சீண்டல்களால் மனவேதனை அடைந்தாள்.
ஒரு கட்டத்தில் அவள் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் முடிவு செய்தார் தாய்மாமன். இதற்கு தேசப்பன் மனைவி ரேவதியும் உடந்தையாக இருந்தார். தாய் மாமனின் காம பசிக்கு ஆளான சிறுமி கர்ப்பமும் அடைந்தார். ஆனால் குழந்தை வளர்ச்சி இல்லாத காரணத்தால் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு இரவும் சிறுமிக்கு வேதனையாக கழிந்ததால் மீண்டும் வீட்டை விட்டு ஓடினாள். பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் அவளை சிலர் ஒப்படைத்தனர். தாய் மாமன் – அத்தையின் கொடுமைக்கு பயந்து சென்ற சிறுமி காப்பகம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினாள்.
ஆனால் அவளுடைய விதி அங்கும் விளையாடியது. காப்பகத்தில் உள்ள 2 பொறுப்பாளர்கள் அவளை பலாத்காரம் செய்தனர். அவர்களது காம பசிக்கு இறையான சிறுமியின் வாழ்க்கை கூண்டுக்குள் சிக்கிய கிளியாக மாறியது. காப்பக பொறுப்பாளர்களின் பாலியல் தொல்லையால் செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக இளம்பெண் நீதிபதி முன்பு நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது அவரின் உடலில் காயம்இருந்ததை பார்த்து நீதிபதி கேட்டுள்ளார். அதன் பிறகு நீதிபதியிடம் நடந்த சம்பவங்களை கண்ணீர் மல்க அவள் கூறியுள்ளார். தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளாள்.
என் வாழ்க்கையை தாய் மாமன் மட்டுமின்றி அவரது நண்பர்களும் சீரழித்து விட்டனர். அவர்கள் என்னுடன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் மாமன் செல்போனில் பதிவு செய்வார். நண்பர்களுடன் என் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று இளம்பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து நீதிபதி காசிமேட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மையத்தின் நிர்வாகி லதா, ராயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அவர் புகாரின் பேரில் போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, ஆகியோர் இளம்பெண்ணின் தாய் சாந்தி மற்றும் அத்தை ரேவதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணை சீரழித்த தாய் மாமன் தேசப்பன் மற்றும்
அவரது நண்பர்கள் உள்பட பலரை தேடி வருகிறார்கள்.
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுவதாக புதிய புள்ளி
விபரம் ஒன்று தெரிவித்துள்ளது
நாட்டில் அதிகரித்து செல்லும் போதைப்பொருள் ,மட்டும் அயலவர்கள் ,உறவினர்களினால் இந்த
சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது
போதை பொருள் நாடக இலங்கை மாற்றம் அடைந்து செல்வதும் அதனால இளம் தலைமுறை
தவறான வழிகளில் சென்று கொண்டுள்ளதும் நாளாந்த நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் கோடிட்டு காட்டுகின்றன
பிரிட்டனில் கார் பாக்கில் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டனில் கார் பாக்கில் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டன் கென்ட் பகுதியினுள் உள்ள Park Street, Ashford, கார் பாக்கிங் ஒன்றில் வைத்து பெண்
ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பெண் மீது தாக்குதல் நடத்த பட்டு இந்த விடயம் இடம்பெற்றுள்ளது ,இது தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு
வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்
துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது
மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள்தோறும் 25 சிறுவர்கள் கற்பழிப்பு
இலங்கையில் நாள்தோறும் 25 சிறுவர்கள் கற்பழிப்பு
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், “இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட
சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரிந்தால், 21%மானோர் 5
வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் . 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் சுமார் 6 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
தாயின் மூன்றாவது கணவரால் கற்பழிக்க பட்ட இரண்டு மக்கள் – முல்லையில் பயங்கரம்
தாயின் மூன்றாவது கணவரால் கற்பழிக்க பட்ட இரண்டு மக்கள் – முல்லையில் பயங்கரம்
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,
வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிசார் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள்.
ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது
தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.
இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த 11 பெண்கள் கற்பழிப்பு
ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த 11 பெண்கள் கற்பழிப்பு
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருந்த வயது குறைந்த சிறுமிகளும் யுவதிகள் பலரும் பல்வேறான பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகையால், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஐந்து நியமிக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முழுமையான கண்காணிப்பிக் கீழ், இந்த பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்ளும்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக கடமையாற்றிய யுவதிகள் மற்றும் பெண்கள் 11 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறு அழைத்துவரப்படும் யுவதிகளும் சிறுமிகளும், ரிஷாட் பதியூதீனின் மைத்துனரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய
யுவதியொருவர், ரயில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .
15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .
15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை
15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின்
பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படையின் சத்திர
சிகிச்சை நிபுணரின் சேவையை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை கடற்படை உடனடியாக அமுலுக்கு வரும் வைகயில் இடைநிறுத்தம் செய்துள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த சம்பவம் குறித்து தனித்தனி உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த நபர் இலங்கை கடற்படையின்
எந்தவொரு கடற்படை தளத்திற்குளோ அதுசார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.
அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தற்போதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேலும் 300 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த வித்தியாப்பத்திரண தெரிவித்துள்ளார்.
14 வயது சிறுமியை கற்பழித்தவர் கைது
14 வயது சிறுமியை கற்பழித்தவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (03) உத்தரவிட்டார்.
குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வருவதுடன் தாயார்
வேலைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரு திருமணங்கள்
முடித்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெரியதாயார் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து
பொலிஸார் வெள்ளிக்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்
முன்னிலையில் நேற்று (03) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.




























