Posted in Uncategorized

குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி

பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்

இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    பேரூந்து டிப்பர் மோதல்
    Posted in இலங்கை செய்திகள்

    பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

    பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

    அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து

    ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்

    காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி

    விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

      சீனா வெளிநாட்டு
      Posted in இலங்கை செய்திகள்

      சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு

      சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு

      இலங்கை வந்தடைந்துள்ள சீனாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இலங்கை அதிபர்

      கோட்டாபாயாவும் சந்தித்து பேசியுள்ளார்

      இந்த சந்திப்பின் பொழுது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பபு அபிவிருத்தி தொட்ரபில்

      கலந்துரையாட பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது

        பொலிஸாரின் வலையில்
        Posted in Uncategorized

        பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

        பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

        தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

        களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

        சோதனையின் போது, ​​ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

        பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

        கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in Uncategorized

          கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை

          கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை

          இலங்கை கொழும்பு கடல் பகுதியிகள் முதலைகள் உலவி வருவதால் மீனவர்கள் மற்றும்

          மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க ப்ட்டுள்ளது


          குறித்த கடல் பகுதியில் மக்கள் குளித்து வருகின்ற நிலையில் இந்த அவசர அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது

            பலர் உயிரோடு எரிப்பு
            Posted in Uncategorized உலக செய்திகள்

            இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

            இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

            நையீரியாவில் காட்டுப்புற பகுதியில் அமைந்துள்ள கிராம புறங்களை இலக்கு வைத்து அரச

            இராணுவம் நடத்திய ஈரூடக தாக்குதலில் சிக்கி இதுவரை 200 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

            தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்க பட்டுள்ளதாகஆளும் அரசு கூறி வருகிற பொழுதும்

            அப்பாவி மக்கள் அங்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு அரச இராணுவத்தின் மனித வெறி தாக்குதலை அம்பல படுத்துயுள்ளன

            இங்கு பல கிராமங்களில் மக்கள் உயிருடன் எரியுண்டு மரணித்துள்ளதான காட்சிகளும்

            வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

              கடலில் மிதக்கும்
              Posted in இலங்கை செய்திகள்

              முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

              முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

              முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

              தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில்

              கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

              இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில்

              புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

              உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

              2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

              சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து

              முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு

              இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                கணவனை வெட்டி கொன்ற மனைவி

                கணவனை வெட்டி கொன்ற மனைவி

                மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.

                உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

                நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

                இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

                குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

                  இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

                  இலங்கை ஒரு கிலோ அசிசி தற்போது 160 முதல் 180 ரூபா வரை விற்க படுகிறது ,இதனால் மக்கள்

                  மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

                  அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென அதிஅக்ரித நிலையில் ஆளும்

                  ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடு கோபத்தில் உறைந்துள்ளனர்

                    சீனா வெளிநாட்டு அமைச்சர்
                    Posted in இலங்கை செய்திகள்

                    சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு

                    சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு


                    இலங்கை வந்தடைந்த சீன வெளிநாட்டது அமைச்சர் பிரதமர் மகிந்தவுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார்

                    இரு நாடுகளின் பாதுகாப்பபு மாற்று பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இந்த பேச்சு


                    இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

                      லொறியை துரத்தி சென்ற எம்பி
                      Posted in Uncategorized

                      லொறியை துரத்தி சென்ற எம்பி

                      லொறியை துரத்தி சென்ற எம்பி

                      இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து

                      வ்ருகின்றனர் ,எரிவாயு ,மின்சார வெட்டு ,அத்தியாவசிய பொருட்களை விலை என தொடர்ந்த இன்னல்களை சநதித வண்ணம் உள்ளனர்

                      இவ்வேளை எம்பி ஒருவர் டயனா க​மகே தமது வீட்டில் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில் எரிவாயு ஏற்றி சென்ற லொறி ஒன்றை துரத்தி சென்றுள்ளார்

                      அந்த லொறி எரிவாயுவை இறக்கிய நிலையத்தில் வைத்து அதனை கொள்வனவு சையதுசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்

                        இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்

                        இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 13 பேர்

                        பலியாகியுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                        எனினும் இவர்கள் வெளியிடும் இழப்புக்களை விட அதிக மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக

                        சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                          Posted in Uncategorized

                          இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்

                          இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்

                          இலங்கையில் நாள்தோறும் இடம் பெறுகின்ற பல்வேறு பட்ட விபத்துக்களில் சிக்கி முப்பத்தி ஐந்து

                          பேர் பலியாகிய வண்ணம் உள்ளதுடன் ,35 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வைத்யசாலைகளில்

                          அனுமதிக்க பட்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                          மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                          சீனா
                          Posted in இலங்கை செய்திகள்

                          சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                          சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                          இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை அடுத்து சீனாவின் வெளிநாட்டு அமைச்சர்


                          Wang Yi began இலங்கை வரவுள்ளதுடன் ,

                          இவர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதுடன் ,இலங்கையின் பொருளாதார

                          அபிவிருத்தி தொடர்பாகவும் பேச உள்ளார் என தெரிவிக்க படுகிறது

                            பேருந்து விபத்தில்
                            Posted in இலங்கை செய்திகள்

                            பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

                            பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

                            ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

                            இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

                            சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

                            இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                              ஓய்வூதிய வயதெல்லை
                              Posted in இலங்கை செய்திகள்

                              அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு

                              அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு

                              அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக அதிகரித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

                              நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான

                              வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக

                              அதிகரிப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

                                12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

                                12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

                                15 முதல்19 வயது வரையான சிறுவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரையான பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட சிறுவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

                                இதன் கீழ் சுமார் 30- ஆயிரம் சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

                                பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு இணைவாக இதுவரை 3 ஆவது தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

                                எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமைக்குக் கொண்டு வந்து அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் வகையில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்

                                  பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்

                                  குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அறுவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட

                                  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                  டிக்கோயா ஒட்டரி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே குளவிக் கூடு களைந்து கட்டியுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

                                    30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

                                    அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்

                                    அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                                    இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை

                                    ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

                                    மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                    பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

                                    குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

                                    மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

                                      வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

                                      சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை

                                      பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

                                      சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்