Tag: பொலிஸ்
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது இன்று (31) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 230 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 204 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .
பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .
உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .
அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்க பட்ட நிலையில் துப்பாக்கி தாங்கிய பொலிசார்
குறித்த பற்றையை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர் .
வன்னி புதுக்குடியிருப்பு மாலிகைத்தீவு பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து 37 துப்பாக்கி குண்டுகள் மீட்க பட்டன .
இந்த துப்பாக்கி குண்டுகள் யாவும் 50 மில்லி மீட்டர் கனரக துப்பாக்கிக்கு பயன்படுத்த படும் குண்டுகள் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளன .
போர் முடிவடைந்து 14 வருடங்கள் கழிந்த பின்னர் ,எவ்வாறு இந்த பற்றைக்குள்
குறித்த துப்பாக்கி குண்டுகள் ,வந்தடைந்தன என்பது தொடர்பில் போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை .
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்க பட்ட பகுதிகளில் ஆட்கள் நடமாட தடை விதிக்க பட்டு, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் இடம்பெற உள்ள வேளை பார்த்து ,இவ்வாறான ஆயுதங்கள் கண்டுபிடிக்க படுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
ஆயுதங்களை வைத்து விட்டு அவற்றை அதே இடத்தில் எடுத்து பர பரப்பை கிளப்பும் ,நல்லாட்சி அரசியல் வாதிகள் சித்து விளையாட்டு இதுவென தெரிவிக்க படுகிறது
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது
- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
கொழும்பில் உள்ள சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வாறு போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பொலிஸ் சுற்றிவளைப்பு 952 சந்தேக நபர்கள் கைது
பொலிஸ் சுற்றிவளைப்பு 952 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் ‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கையின் கீழ் நேற்று (14) முதல் இன்று (15) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 952 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவுகளில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹெராயின் 276 கிராம்
ஐஸ் 2 கிலோ 98 கிராம்
போதை மாத்திரைகள் 4,310
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 போதை மாத்திரைகளும்
இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது காவல்துறையை உள்ளடக்கிய நடவடிக்கைகளை
மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது
நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி
முதல் இந்த போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புச் சபை மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் தனது கடமைகளை மீறியிருந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்பட்ட காலத்தில், காலி முகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதையும் இந்த மனுக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இதனால், நாட்டின் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முக்கிய துறையை கையாளும் பொறுப்பு, மனித நேயமுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முரணாக செயற்பட்ட ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்குவது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற
தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக
கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை
ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.
தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.
தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும்.
அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட
கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி
மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்
போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்
போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ் சிப்பாய் ஒருவர் நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
அதிக போதையில் வீதியில் உருண்டு உருண்டு குத்துகாரணம் அடித்த படி நடக்கிறார் நம்ம மன்மத குஞ்சு .
மக்களை காக்கும் காவல்துறையின் பொழைப்பு இப்படி தான் உள்ளது .
இந்த சம்பவம் உபியில் இடம்பெற்றுள்ளது .
சட்டம் ஒழுங்கை காப்பற்ற வேண்டிய காவல்துறை ,சாராயத்தில் குளித்து வீதியை கூட்டி செல்லும் கேவலம் .
இந்தியா வல்லரசு ஆனது எப்படி என்பது இப்பொழுது புரிகிறதா மக்களே .
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது
பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது
தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரேகொட சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குறித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தலங்கம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது
- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது
புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்
கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. விரைவில் இந்த பதவி நியமனம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார்.
அடுத்த பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாகவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன், சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்களைக் கொண்டதாக அரசியலமைப்பு சபை காணப்படுகின்றது.
இந்த நிலையில், உத்தேச நியமனத்துக்கு ஜனாதிபதியும் அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
அத்துடன், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகிறது.
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது
- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது
பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
தான் இன்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
நான்காவது பணி நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவி காலியாக உள்ளது.
பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா
அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலியாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது
- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது
வட்டுக்கோட்டை நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியல்
வட்டுக்கோட்டை நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியல்
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது
செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் நாளை மறுதினம் (27) திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள
அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது
- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது
பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று
ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார்.
பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடகோமடிய, கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான உத்தியோகத்தர் என்பதுடன், இவர் குறித்த பிக்குவின்
20 வயதுடைய சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த காதல் உறவை நிறுத்துமாறு பிக்குவால் பல தடவைகள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், கடந்த 16ஆம் திகதி குறித்த
பொலிஸ் உத்தியோகத்தர் பிக்குவின் சகோதரியின் வீட்டுக்குச் சென்ற போது, பிக்கு குறித்த உத்தியோகத்தருக்கு தொலைபேசி மூலம் அழைத்து தன்னை சந்திக்குமாறு அறிவித்திருந்தார்.
பின்னர் பல்லேகம கங்கொட வீதியில் உள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் இருவரும் சந்தித்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சந்தேக நபரான பிக்கு, தனது பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தெனியாய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.