Tag: பொலிஸ்
இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்
வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது
கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய
முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது
மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து
கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்
வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்
உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி
செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய
காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.
அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர்.
அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்
உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி
கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து
விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.
தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500
முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து
விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள
சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்
மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது
மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய
தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்
அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19
ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்
தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது
கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது
இலங்கை சிலாபம் கடற்கரையில் உல்லாச கூத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் 38 காதல் ஜோடிகள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
ஜோடிகளாக வருகை தந்த அவர்கள் குடையை பிடித்து கொண்டு இந்த காம கலியாட்டத்தில் ஈடுபட்ட பொழுதே கைது செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறான செயல் பாடுகள் அங்கு ஒரு மாடலாக இடம்பெற்று வருகிறது .
பெண்கள் ஆண்களுடன் கூடி வரும் ,ஆண்கள் ,பெண்கள் தாம் உழைத்து சாப்பிட துணிவில்லை ,பெற்றவர்கள்
பணத்தில் உண்டு ,உலவி வரும் இவர்கள் தமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் எமது வருமானம் என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லாது .
காதல்; கசமுசாவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

பொலிஸாரால் 20 பேர் கைது
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் ஊடக வாகனங்களை பரிசோதனைக்கு
உட்படுத்தபட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, மதனமோதகம், சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, மாத்தறை, காலி, குருணாகல் போன்ற பகுதிகளை
சேர்ந்தவர்கள் என குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சிவனொளி பாதமலைக்கு வருகின்ற பக்த அடியார்கள் போதைப்பொருளை கொண்டுவர வேண்டாமென பொலிஸார் கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை
இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை
இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை
அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .
இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்
நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .
இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .
லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என
கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கையில் -பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கை – காலி பகுதியில் பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை பிரிட்டன் பெண் ஒருவர் கடித்துள்ள சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பிரிட்டன் பெண் தங்கியிருந்த விடுதியை காவல்துறையினர் சோதனை புரிந்த போதே கணவனுடன் தங்கி இருந்த பிரிட்டன் பெண் இவ்வாறு அந்த பெண்ணின் கையை கடித்துள்ளார்
இலங்கைக்கு வருடம் தோறும் சுற்றுலா வரும் இவர்கள் விசா முடிவடைந்த நிலையில் அங்கு மேலதிகமாக தங்கி இருந்த சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
பெண் காவல்துறை ஊழியரை கடித்த குற்ற சாட்டில் இப்பொழுது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்
புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .
மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் காணாமல் போனவர் சடலமாக இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையை அடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளதுடன்
சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவதினமான நேற்று கல்லடி சுனாமி நினைவு துாபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்
தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்
இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 41,000 காவல் துறையினர் பணியில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,மேலும் 7000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவமும் பாதுகாப்பபில் ஈடுபடுகின்றனராம்
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது
இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை விசேட அணியினரால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிலை படுத்த பட்டுள்ளனர் , இலங்கையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மீளவும் இவை சாட்சிகளாகி பதிவாகியுள்ளன







