Tag: நடிகை
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
பிரபல நடிகையின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதால் நீக்க கோரி கோர்ட்டு உத்தரவிட்டுதுள்ளது.
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
சாக்ஷி மாலிக்
நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வி என்ற
பெயரில் தயாரான தெலுங்கு படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது புகைப்படத்தை அனுமதி
இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இந்தி நடிகை சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்த படங்களை சாக்ஷி மாலிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த
புகைப்படங்கள் வி படத்தில் இடம்பெற்று இருந்தன. அத்துடன் படத்தில் பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனத்திலும் சாக்ஷி மாலிக் படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
சாக்ஷி மாலிக் – நானி
இதை எதிர்த்து சாக்ஷி மாலிக் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தனது அனுமதி இல்லாமல் புகைப்படங்களை
பயன்படுத்தியது தவறு என்றும், இதற்காக ரூ.30 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சாக்ஷியின் புகைப்படத்தை நீக்கும்படி ஓ.டி.டி. தளத்துக்கு உத்தரவிட்டது. புகைப்படத்தை
நீக்கும்வரை வி படத்தை எந்த தளத்திலும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
நடிகையின் செயலால் கடுப்பான இயக்குனர்
நடிகையின் செயலால் கடுப்பான இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வாரிசு நடிகை, காதலால் சில காலமாக படங்களில் நடிக்காமல்
இருந்தாராம். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை, படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாருக்கும் சொல்லாமல் திடீரென வெளியேறினாராம்.
இதனால் கடுப்பான இயக்குனர் நடிகை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில்
இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் நடிகையை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறாராம் இயக்குனர்.
மேலும் டப்பிங், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நடிகையை புறக்கணிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு – புலம்பும் நடிகை
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு – புலம்பும் நடிகை
பிரபல நடிகரின் படத்தில் நடிச்சது தப்பா போச்சு என கோலிவுட் நடிகை ஒருவர் சினிமா வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு – புலம்பும் நடிகை
கிசுகிசு
முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ஒருவர், சமீபத்தில் முன்னணி நடிகரின் படம் ஒன்றில் நடித்தாராம். அந்த படத்தில்
நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று அவர் எண்ணினாராம். கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி
தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்பி வருகிறாராம் அந்த நடிகை.
அவருக்கு தற்போது வரும் வாய்ப்புகளும் முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப
காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.
40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை
40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை
தமிழில் துப்பறிந்த நடிகை அதன்பிறகு கடவுளின் பெயரைக் கொண்ட நடிகருடன் இணைந்து நடித்தாராம்.
இவர் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். இவர் தெலுங்கு இயக்குனருடன் நெருங்கி பழகி வருகிறாராம்.
இயக்குனருடன் நெருக்கமாக இருப்பதால்தான் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம் நடிகை.
அந்த இயக்குனருக்கு 40 வயது ஆகிறதாம். நடிகைக்கு 23 ஆகிறதாம்.
இவர்களுடைய காதல் தான் தற்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்
. ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கணவருடன் அனிதா ஹசானந்தனி
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்
தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா
ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.
அதில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிடுவதற்காக இந்த பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்
உயிருக்கு போராடும் நடிகை
தமிழில் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சிந்து. இவர் மார்பகப் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார்.
சிந்து
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி,
சிந்துவின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு,
ஆரம்ப கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது புற்றுநோய் மேலும் பரவியதால்
அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இதனால் நண்பர்கள், ரசிகர்கள் உதவுமாறு கேட்டுள்ளார்.
அந்த நடிகர் பேர் சொன்னால் தலை தெறித்தோடும் நடிகைகள்
அந்த நடிகர் பேர் சொன்னால் தலை தெறித்தோடும் நடிகைகள்
சில ஆண்டுகளாக படங்களில் சரிவர நடிக்காமல் இருந்த நடிகர் ஒருவர், தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளாராம்.
அந்த நடிகருக்கு ஒரு காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். அதற்கு அந்த நடிகர் சட்டென ஓகே சொல்லிவிட்டாராம்.
அப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்தாராம்.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
ஆனால் அந்த நடிகருடன் நடிக்க அந்த முன்னணி நாயகிகள் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அதில் ஒரு நடிகையெல்லாம்,
அதிக சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் வேறு சில
நடிகைகளிடம் கதையை சொல்லி வருகிறாராம் அந்த இயக்குனர்.
காதலை மறைக்கும் நடிகை
காதலை மறைக்கும் நடிகை
வாரிசு நடிகை ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தராம். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க, விரைவில்
திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நடிகை. நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், திடீர் என்று காதலரை பிரிந்தாராம் நடிகை.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய இருக்கிறாராம்.
ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம்.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் பட போஸ்டர்
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து
விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
செக்ஸ் தொல்லையால் அவதிப்படும் இவர்கள்
வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன்
நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காதலரை அறிமுகப்படுத்திய நடிகை
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் ‘நேரம்’, ‘ஓம் ஷாந்தி ஓஷானா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் “உன்னை
சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு
சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள்
உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்” என்று பதிவு செய்திருக்கிறார்.
மடோனா
தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை
செய்திருக்கிறார் மடோனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
யாரையும் லவ் பண்ணல… வருத்தத்தில் நடிகை
யாரையும் லவ் பண்ணல… வருத்தத்தில் நடிகை
பிரபல நடிகையாக இருப்பவர் நான் யாரையும் லவ் பண்ணல என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறாராம்.
யாரையும் லவ் பண்ணல… வருத்தத்தில் நடிகை
கிசுகிசு
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தெலுங்கு பக்கம் வெற்றி
படங்களில் நடித்த நடிகை, மறுபடியும் தமிழில் வந்து அண்ணன் தம்பி இருவருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றாராம். இந்த
நிலையில் நடிகை பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வந்த தாம்.
இதை அறிந்த நடிகை, நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி ஒருவரை இன்னும் பார்க்கவில்லை என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறாராம்.
தலைகீழாக தொங்கிய நடிகை
தலைகீழாக தொங்கிய நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள்.
தலைகீழாக தொங்கிய நடிகை… பதறிய ரசிகர்கள்
அமலாபால்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் திரைப்படம்
உருவாகியுள்ளது. சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.
ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க
கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது. பின்னர் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக
வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அமலாபால்
தற்போது துணியில் தலைகீழாக தொங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வித்தியாசமாக யோகா செய்யும் அமலா
பாலின் இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் பதறிவிட்டனர்
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல நடிகை ஒருவர் மயங்கி விழுந்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை
விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல்
சுப்ரமண்யம். பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில்
விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்கி நடைபெற்றது. அப்போது விரதம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வரும் மதுமிதா, ஒருநாள் படப்பிடிப்பின்போது
விரதம் மேற்கொண்டிருக்கிறார். நாள் முழுவதும் உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளார். அன்றைய தினம் இரவு நேர
படப்பிடிப்பும் தொடரவே, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் மதுமிதா.
மதுமிதா
பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மயக்கம் தெளிவிக்க, அதன்பிறகும் கூட, தன்னுடைய காட்சியில் நடித்து முடித்த பின்பே சாப்பிட சென்றிருக்கிறார் மதுமிதா. தன்னால்
படக்குழுவினருக்கு சிறிய அளவில் கூட பாதிப்பு வந்துவிடக் கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.
காதலரை கரம்பிடித்த நடிகை
காதலரை கரம்பிடித்த நடிகை
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னா அன்ராய் தனது காதலரை கரம்பிடித்துள்ளார்.
மலையாள படமான ஒரு அடார் லவ், பிரியா வாரியரின் கண்சிமிட்டல் காட்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானது.
இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். படத்தில் ரோஷ்னா அன்ராயும் ஆசிரியை கதாபாத்திரத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
பாபம் செய்யாதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட மேலும் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். ரோஷ்னா அன்ராயும்,
அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் உள்ளிட்ட
மலையாள படங்களில் நடித்துள்ள கிச்சு டெல்லசும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர்.
கணவருடன் ரோஷ்னா
சில வாரங்களுக்கு முன்பு ரோஷ்னா அன்ராய் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “எங்கள் திருமணத்தை முறைப்படி
அறிவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. உண்மையான காதலோடு என்னை நேசித்த கிச்சுக்கு நன்றி” என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ரோஷ்னா அன்ராய்க்கும், கிச்சு டெல்லசுக்கும் கொச்சியில் திருமணம் நடந்தது. கொரோனாவால் நெருங்கிய
உறவினர்களை மட்டும் அழைத்து அங்குள்ள தேவாலயத்தில் திருமணத்தை முடித்தனர்.
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது – வரலட்சுமி கோபம்
வரலட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில்
‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும்,
தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.
வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற
தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி
தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள்.
என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத்
திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத்
திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்
கொரோனா நிவாரணத்துக்காக தான் உடுத்திய உடைகளை ஏலம் விட்டு வருகிறார் நடிகை நித்யாமேனன்.
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும்
நித்யா மேனன்
மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன்
பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக
ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார்.
இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100
சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை
மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள்
சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான
டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெஷலாக செய்யப்பட்டது. பேஷன்
நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது.
இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன்.
நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல
டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? – தமன்னா கறார்
தமன்னா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில்
நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு
நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து
எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த
பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
தமன்னா
எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட
சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று
பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.
நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும்
படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள்
மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
எனக்கு பாலியல் தொல்லை- கதறும் நடிகை
எனக்கு பாலியல் தொல்லை- கதறும் நடிகை
தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில், சூரன் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். கேரளாவை சேர்ந்த இவர்
மலையாளத்தில் சாயில்யம், அகம், வெடிவழிபாடு, ராக் ஸ்டார், பிரமோஸ்தரம் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி
நடிகையாக இருக்கிறார். தற்போது 4 மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒரு பெங்காலி படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் அனுமோளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சிலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் எனக்கு
அனுப்புகிறார்கள். அவர்கள் என்னை பின்தொடராமல் இருக்க சமூக வலைத்தளத்தில் தடை செய்து நான் சோர்வடைந்து விட்டேன்.
ஒருவர் தனது ஆபாச வீடியோக்களை வெவ்வேறு கணக்கில் இருந்து எனக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இப்படி அந்தரங்க
புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். இனியும்
தொடர்ந்து செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுபோன்ற ஆபாச படங்களை
அனுப்பினால் பெண்களுக்கு அறுவெறுப்புத்தான் வரும். வேறு எந்த உணர்வும் ஏற்படாது”. இவ்வாறு அனுமோள் கூறியுள்ளார்.

தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமாக இருக்கும் தமன்னா தாய் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதால் அதை கற்று வருகிறார்.
தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
நடிகை தமன்னா
‘கேடி’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா.
இதைத் தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. தனுஷின் படிக்காதவன்,
சூர்யாவின் அயன், கார்த்தியின் பையா, விஜயின் சுறா, அஜித்தின் வீரம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தமிழ் வெப்சீரிசில்லும் நடித்து அவரே டப்பிங்கும் பேசி வருகிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார்.
தமன்னாவின் தாய் மொழி சிந்தி. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில்
பேசும் நடிகை தமன்னாவுக்கு தனது தாய்மொழியில் பேசத் தெரியாது.
சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால்,
இந்த ஊரடங்கில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்கிறார்.
மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய் மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்
நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்
47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை சித்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகை சித்தாரா விளக்கம் சித்தாரா
கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்த படம் வெற்றி பெற்றதால், வாய்ப்புகள் குவிந்தன.
இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன்,
ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இப்போது வயதாகிவிட்டதால் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும்
தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், தான் இன்னும்
திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .
சித்தாரா
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன்.
அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு
எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.









