நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு

Spread the love

நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு

பிரபல நடிகையின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதால் நீக்க கோரி கோர்ட்டு உத்தரவிட்டுதுள்ளது.

நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
சாக்‌ஷி மாலிக்
நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வி என்ற

பெயரில் தயாரான தெலுங்கு படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது புகைப்படத்தை அனுமதி

இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்த படங்களை சாக்‌ஷி மாலிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த

புகைப்படங்கள் வி படத்தில் இடம்பெற்று இருந்தன. அத்துடன் படத்தில் பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனத்திலும் சாக்‌ஷி மாலிக் படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

சாக்‌ஷி மாலிக் – நானி

இதை எதிர்த்து சாக்‌ஷி மாலிக் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தனது அனுமதி இல்லாமல் புகைப்படங்களை

பயன்படுத்தியது தவறு என்றும், இதற்காக ரூ.30 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சாக்‌ஷியின் புகைப்படத்தை நீக்கும்படி ஓ.டி.டி. தளத்துக்கு உத்தரவிட்டது. புகைப்படத்தை

நீக்கும்வரை வி படத்தை எந்த தளத்திலும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

Home » நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *