Tag: டக்ளஸ்
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – டக்ளஸ்
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – டக்ளஸ்
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ்
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ்
நந்திக்கடல், நாயாறு களப்புக்கின் புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய கூட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தார்.
அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புக்களில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், யாழ். காக்கைதீவு களப்பு தூர் வாரப்பட வேண்டுமென தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேலும், நடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நக்டா நிறுவனத்தின் தலைவர் நிமல் சந்திரரத்ன, நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள்
தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வலிகாமம் கிழக்கு விவசாயிகள்
கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பின்போது உருளைக்கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் பெற்றுத் தருமாறும் கோரியதுடன் நீர் இறைக்கும்
இயந்திரங்களையும் மானிய அடிப்படையில் பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர்.
அத்துடன் யூரியா மற்றும் அமோனிய உள்ளிட் உரங்களை விவசாயிகளுக்கு தேவையான அளவு பெற்றுத் தருமாறும் கோரியதுடன் அம்பன் புயலினால் சேதமடைந்த வாழைப் பயிற்
செய்கைக்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தனர்.
மேலும் யாழ்மாவட்ட சந்தைகளில் விவசாய உற்பத்திகளுக்கு 10Kg இற்கு 1Kg என்ற கழிவு என்ற நடைமுறை காணப்படுவதனால்
விவசாயிகளிடையே பெரும் இடர்பாடுகள் ஏற்படுகின்றது. எனவே அது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
குறித்த விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கெட்டறிந்துகொண்ட அமைச்சர் அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கதைத்து விரைவில் தீர்வகளை பெற்றுத்தர
நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில்
அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வடமாகாண விவசாய பணிப்பாளர்
சிவகுமார் மற்றும் கட்சியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய,
கடற்றொழில் திணைக்கள அதகாரிகளினால் கடந்த சில தினங்களாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், கடந்த காலங்களில் பருவகால மீன்வர்களிடமிருந்தும் தெனினிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ். மாவட்ட
மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்த
சுமார் 183 படகுகளை பதிவு செய்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள கடல் வழியான போதைப் பொருள் உட்பட்ட கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு
அதிகாரிகளினால் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளின் போது, பதிவு செய்யப்படாத படகுகளை பயன்படுத்துகின்ற
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அசெகரியங்கள் நீங்கவுள்ளது.
அத்துடன் படகுகளைப் பதிவு செய்வதன் மூலம், குறித்த படகுகளுக்கு காப்புறுதி செய்வதற்கும் அவசிய தேவைகளின் போது
வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்ளுதல் உட்பட பல்வேறு நன்மைகளை
கடற்றொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, வடக்கின் ஏனைய கடற்றொழில் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்படாத படகுகள் காணப்படுகின்ற நிலையில், அவை
அனைத்தையும் பதிவு செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய விசேட அணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி
1500 கிலோ வரை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (07.09.2020) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மீன் உணவு உற்பத்திகளை அதிகரிப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் அமைச்சரின்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனமானது தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா) ஆலோசனையுடன் கடந்த வருடம்
ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனமானது இலங்கையில் மீன்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் முதலாவது நிறுவனமாகும்.
தற்போது இங்கு மீன்களுக்கான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் இயந்திரங்களின் வினைத்திறனற்ற செயல்பாடுகள் காரணமாக உற்பத்தியை முழுவீச்சுடன் மேற்கொள்ள முடியாத
நிலையேற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட போது விசேடமாக தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் தற்போது உலகில்
பாவனையில் உள்ள அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்ளுக்கு இணையானவை அல்ல என்பதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்களும் எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் பொறியியலாளர்களும் இவ்வியந்திரங்களை நவீனமயப்படுத்தவதற்கு பாரிய
முயற்சிகளை மேற்கொண்ட போதும் இத்தொழிற்சாலையின் மூலம் தற்போது நாளாந்தம் குறிப்பிட்ட அளவிலான மீன் உணவுகளையே உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது.
ஆகவே பொருத்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை பெற்றுத் தருமாறு இத்தொழிற்சாலையின்
உரிமையாளர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும்
கொள்கையின் அடிப்படையில் நாட்டுக்கு தேவையான மீன் உணவவு அனைத்தையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதே
அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து
தீர்க்கமான மற்றும் சாதகமான முடிவொன்றை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய இயந்திரமொன்றை கொள்வனவு
செய்வதைவிட இருக்கும் இயந்திரங்களை மேலும் மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொழிற்சாலைக்கான தனது விஜயத்தின் பின்னர் இவ்விடயம்
தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா, எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின்
பணிப்பாளர் ஜயந்த குரே, கடற்றொழில் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
வடபகுதி கடற்பரப்புகளில்; தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில்
அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை
நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்
தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டுவந்திருந்தனர்.
குறிப்பாக எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான
அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை
பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்த கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை –அமைச்சர் டக்ளஸ்
அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை –அமைச்சர் டக்ளஸ்
தொழில் நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட
நடைமுறைகளை அனைவரும் ஏற்று செயற்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய சட்ட வரையறைகளை மீற எவருக்கும்
அனுமதி கிடையாது என்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை மீன்பிடியினால் சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் ஏற்படுகின்ற
பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் 46 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தத்தமது
பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது திருமலை மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலை
முன்னெடுப்பதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பவர்கள் அதற்காக கொடுக்கப்பட்ட வரையறைகளை மிறி செய்ற்படுவதாகவும்
இதனால் பலர் மீது வழக்குகள் கூட இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அத்தொழிலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அத்தொழிலை முன்னெடுக்க ஒருதரப்பினர் தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் இருதரப்பினரது நியாயங்களையும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலின் தன்மைகள் மாறுபட்டு
இருக்கின்றது. சுருக்குவலை தொழிலுக்கான சட்டங்கள் நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக இருப்பதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.
இதனால் இது தொடர்பில் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடக் கூடிய சட்டவரையறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இது தொடர்பான சட்டவரையறைகளை சீர்திருத்துவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றேன் என்பதுடன் அதுவரை அரசின் தொழில் சட்ட வரைமுறைகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திருமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்படையினர்
துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..






