Posted in இலங்கை செய்திகள்

குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்

குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்

குருநகர் இளைஞன் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார்.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான பாசையூர் ரெமியின் சகோதரர்களைத் தேடி தீவகம் உட்பட பல இடங்களில் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

இந்த 9 நாள்களின் பின்னர் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Posted in இலங்கை செய்திகள்

2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை செலுத்து நடவடிக்கையின்,

ன்னேற்றம் குறித்து உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்தவுடன் ZOOM தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடினார்.

இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் செலுத்தி முடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் தனிமை படுத்தல்

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் தனிமை படுத்தல்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல்

ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (30) இத்திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 119 என்ற பொலிஸ்

அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 15 பேரும் எச்சரிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மரணச்சடங்கில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா

மரணச்சடங்கில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா

வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில்

கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 24ஆம் திகதி, ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில், மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு

சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரண சடங்கில் கலந்துகொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு, இன்றைய தினம் (30) அன்டிஜன் பரிசோதனை

மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதோடு, சுகாதார

பிரிவினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

Posted in Uncategorized

வலிந்துகாணாமல்ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

வலிந்துகாணாமல்ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி …..!!!


ஸ்ரீலங்கா இனவாத படைகளால்
திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும்


காணாமல் ஆக்க பட்டும் இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அவதிபட்டு கொண்டிருக்கும்
எம்மின மக்களுக்கு நீதி வேண்டி திங்கள் கிழமை


(30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டன் Trafalgar Square national gallery க்கு முன்பு பிரித்தானியாவிலுள்ள


தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினரும் (Freedom Hunters For Tamils )அவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பினரும் (TGTE) இணைந்து
மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை


ஒழுங்கு செய்திருந்தனர் .இந்த பேரணி கோவிட் விதிக்களுக்கு அமைய மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்

    ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்


    மதுரங்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய

    மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

    ஊரடங்கு உத்தரவின் போது, ​​மதுரங்குளிய – கனமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஊரடங்கு திருமணம் நடைபெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் படி, பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு

    குழுவினர் தப்பி ஓடியுள்ளனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்களை அந்த வீட்டில் தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      காவல்துறை வேட்டையில் 581 பேர் கைது

      காவல்துறை வேட்டையில் 581 பேர் கைது

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

      இதனால் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடுக்க பட்டுள்ளதுடன் ,நடமாடும் சுதந்திரம் முடக்க பட்டுள்ளது

      இந்த விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 581 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

        Posted in Uncategorized

        தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

        உலக

        தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

        இலங்கை வட கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆளும் அரசு சீனாவின் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது

        இந்த ஊசியினை பெற்று கொண்ட பல மக்கள் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன ,

        மேலும் உடல் வீக்கம் ஏற்படுவதாக குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது ,ஆனால் அரசோ இதனை ஏற்க மறுத்து ,இது வதந்தி என பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

          நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

          வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய

          இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

          அந்த வகையில் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில்

          மூன்றுமுறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் ஏ9 வீதியூடாக வாகனங்களில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

          டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினை அடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம் , அலுலக தேவை

          போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும்

          வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

            Posted in Uncategorized

            கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

            கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

            ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.

            இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

            கலந்துரையாடல் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும், கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14

            பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

            இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

            கட்சியின் தலைவர், சிரேஷ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர்

            மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோருடன் தானும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

              தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

              இலங்கையில் நிகழ்கால விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் 151 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

              கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                Posted in Uncategorized

                30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

                30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

                எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

                செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

                புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                இவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதை அடுத்து நாட்டை முழுமையாக திறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

                  Posted in Uncategorized

                  மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

                  மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

                  நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுமைகளுக்கு

                  உட்படுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.

                  குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

                  ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

                  இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் மனைவி உள்ளிட்ட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட பட்டுள்ளது

                  இவர்களது வீட்டில் சிறுமி ஒருத்தி வீட்டு வேலை செய்து வந்தார் ,இவர் தீயில் எரிந்த நிலையில்

                  சடலமாக மீட்க பட்டார் ,இவரது இந்த கொலை தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                  மரணம் கொலை என நிரூபிக்க பட்டால் அமைச்சர் உள்ளிட்டவர்கள் சிறை செல்லும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை

                    Ethiri.com – எதிரி இணையம்

                    மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை

                    இலங்கை மதுக்கம பிரதேசத்தில் ஒன்பது வயது மகளின் உடலில் அங்க சேட்டை புரிந்த நண்பனை ,அவளது தந்தை அடித்து கொன்றுள்ளார்

                    மேற்படி செயலை கண்ணுற்ற தந்தை கோபத்தின் உச்சத்திற்கு சென்று இந்த செயலை புரிந்துள்ளார்


                    கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுள்ளார் ,
                    மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

                      மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

                      நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                      நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச

                      செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                      இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;

                      அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.

                      மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை

                      எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

                      இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

                      அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


                      யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                      இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.

                      இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.

                        Posted in Uncategorized

                        போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது

                        போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது

                        இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது 3,009 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் பல் வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் நீதிமன்ற பிடியானையின் மூலம் கைது செய்ய பட்டுள்ளனர்

                        மேலும் மது போதையில் வாகனம் செலுத்திய 580 பெரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது

                          கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது

                          கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                          உள்ளே நுழைவதற்கான அனுமதி பத்திரங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட

                          குற்றத்திற்கு கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                            உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                            இலங்கை குற்ற புலனாய்வு துறையினர் என தம்மை கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

                            பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                            ,கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

                              பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

                              இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்

                              பட்ட 164 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்


                              இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் முக கவசம் அணியாது சென்றதுடன் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற செயல்களில் கைதாகியுள்ளனர்