Tag: பாராளுமன்று
Posted in இலங்கை செய்திகள்
பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு
Author: நலன் விரும்பி Published Date: 06/05/2022 Leave a Comment on பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு
பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சபைக்கு ஓரிடத்தில் ஒன்றாக கூடிநின்றவர்கள், ஆளும் கட்சியினர் பதிலளிக்க
வேண்டுமென கோஷமெழுப்பினர். அத்துடன், சபைக்குள் இறங்கவும் முயற்சிச்செய்தனர் இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,
சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.






