Tag: இலங்கை
புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது
புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது
இலங்கை யாழ்ப்பாண பகுதியில் முன்னாள் விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில்
ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இந்தியாவில்
ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டவர்களுடன் இவர்கள் நேரடி உரையாடலில் இருந்தமையால் இந்த கைது இடம்பெற்றுள்ளது
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லைதீவு நீராவிப்[பிட்டி பகுதியில் நபர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த கத்தி குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்போது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில்
அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்
வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது
இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- ஐரோப்பாவை சாடிய ஈரான்
- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்
- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்
- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்
- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது
ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
இலங்கை வேலி ஓயா பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற நால்வர் நீரில் மூழ்கினர்
,இதில் இருவர் காப்பாற்ற பட்டனர் ,ஆனால் தந்தை ,மகன் நீரில் டித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர்
இவ்வாறு பலியானவர்கள் சடலங்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது ,இதுவரை சடலங்கள் கண்டு பிடிக்க படவில்லை
தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்
இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை
1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு
1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு
இலங்கை இராணுவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 1.600 பேர் இராணுவத்தில்
இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
தமிழர்கள் சிங்கள இராணுவத்தில் இணைத்து கொள்ள படுவதில்லை ,
ஆசை வார்த்தை காட்டி இவ்வாறு பலநூறு தமிழர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்
இதில் இணைந்த பெண்கள் பலர் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமையும் ,தற்கொலை செய்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைபவரக்ளை தடுத்து அவர்களை கைது
செய்திடும் நோக்குடன் ஐந்து உளவு விமானங்களை இலங்கைக்கு இலவசமாக அவுஸ்ரேலிய வழங்கியுள்ளது
மகிந்த காலத்தில் கப்பல் ஊடாக அவுஸ்ரேலியாவுக்குள் பலநூறு பேர் மகிந்த மகனால் கடத்த பட்டனர்
அவ்வாறான ஒரு கடத்தல் இப் பொழுது இடம்பெறலாம் என்பதால்,அவுஸ்ரேலிய முந்தி கொண்டு
இந்த அன்பளிப்பை செய்துள்ளமை கவனிக்க தக்கது
போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது
போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது
இலங்கையில் புத்தண்டு தினத்தன்று மட்டும் போதையில் வாகனம் ஓட்டி சென்ற சுமார் 758 பேரை
தாம் கைது செய்துள்ளதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்
புத்தாண்டு தின நிகழ்வுகளில் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்
விசேட சேவையினரால் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளது
இவ்வாறான கைதின் மூலம் பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப் பலிகள் தடுக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை
போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க
வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னெடுக்கப்படும். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறோனரின் வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்த அவர்,வாகன
விபத்துக் காரணமாக நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர்.
மது போதையுடன் பயணிக்கும் சாரதிகளுக்கு மேலதிகமாக வீதிச் சட்டங்களை மீறுவோரையும் சட்டத்தின்
முன் நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
போலீசார் மீது தாக்குதல் – கார் சாரதி கைது
போலீசார் மீது தாக்குதல் – கார் சாரதி கைது
இலங்கையில் இன்று காலை Kurundugahahetekma வீதியில் போக்குவரத்துக்கு கண்காணிப்பில்
ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் மீது வாகன சாரதி ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்
இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசார் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார் ,சாரதி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
கோட்டா ஆட்சியில் முதன் முறையாக காவல்துறையினர் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே கூர்ந்து கவனிக்க தக்கது
புத்தாண்டு தினத்தில் 165 பேர் காயம் – எகிறிய அசம்பாவிதங்கள்
புத்தாண்டு தினத்தில் 165 பேர் காயம் – எகிறிய அசம்பாவிதங்கள்
இலங்கையில் இடம் பெற்று கொண்டிருக்கும் புத்தாண்டு நிகழ்வுகளில் பொழுது ஏற்பட்ட
விபத்துக்களில் சிக்கி 165 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இவர்களில் வீதி விபத்து ,மற்றும் தனி நபர்,குழு வன்முறை தாக்குதல் மற்றும் ,பட்டாசு
வெடிப்புகளின் பொழுது ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்டவை அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 42 வீதம் அசம்பாவிதங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
தெற்கு வேக சாலையின் மூலம் 4 நாட்களில் 13 மில்லியன் வருமானம்
தெற்கு வேக சாலையின் மூலம் 4 நாட்களில் 13 மில்லியன் வருமானம்
இலங்கை தெற்கு வேக சாலையின் ஊடக பயணித்த வாகனங்களினால் அரசுக்கு 13 மில்லியன்
ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அவ்வழியினை பயன்படுத்தி சென்று வந்தனர் ,இவ்வாறு மக்கள்
சென்று வந்த நிலையில் இந்த வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கை வீதிகளில் உடல் சிதறி பலியான 11 பேர்
இலங்கை வீதிகளில் உடைல்சிஉடல் சிதறி பலியான 11 பேர்
இலங்கை வீதிகளின் ,வீதி விதிமுறைகளை முறையாக பின்பற்ற தவறியதன் விளைவால் 11 பேர்
வீதி விபத்தில் சிக்கி பலியாகினர்
இவ்வாறு இறந்தவர்களில் எட்டுப்பேர் மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை வீதி விபத்துக்களில் அதிகம் இறந்து வருவது இருசக்கர வண்டி ஓட்டிகள் என போலீசா தெரிவித்துள்ளனர்
இலங்கையில் 14 முஸ்லீம் அமைப்புக்களுக்கு தடை – கொதிப்பில் சோனகர்
இலங்கையில் 14 முஸ்லீம் அமைப்புக்களுக்கு தடை – கொதிப்பில் சோனகர்
இலக்கையில் அடிப்படைவாத அமைப்புகளை கொண்ட 14 முஸ்லீம் அமைப்புக்கள் ஆளும் அரசு தடைவிதித்துள்ளது .
மேற்படி அமைப்புகளுக்கான தடையினை வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது
கோட்டா அரசின் இந்த திடீர் தடையினால் மேற்படி அமைப்புக்கள் கொதிப்பில் உறைந்துள்ளன
இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் இலங்கை அரசை அண்டிப்பிழைத்து வசித்து வந்தனர் ,அவ்விதமான
அதே முஸ்லீம்களுக்கு புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் அதே அரசினால் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சூடுபிடிக்கும் பிரச்சாரம் !
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சூடுபிடிக்கும் பிரச்சாரம் !
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, சுதந்திரமான அரசியல்
செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்ற நிலையில், அதத்தடை நீக்க கோரும் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் என்பது, இத்தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓர் வாதுரையாகவுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள
நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும் தமது விருப்பினை இந்த இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த முடியும்.
பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை http://www.lifttheban.uk/ இந்த இணையவழி மூலமாக கொண்டு செல்ல மின்மடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்கால தமிழ்சந்ததியின் மீது பயங்கரவாத முத்திரையினை இல்லாதிருக்கவும், தமிழர்கள் சுதந்திரமாக தமது அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் பிரித்தானிய வாழ்
தமிழர்கள் அனைவரையும் பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்து சென்ற திருடர்கள்
முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்துசென்ற திருடர்கள்
கிளிநொச்சி ஏ-35 வீதி முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்கச் சென்ற பாடசாலை மாணவன் உட்பட மூவர் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு
அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்று சென்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த மாணவன்உட்பட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி. ஏ- 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்க கடைக்கு சென்ற பாடசாலை மாணவனும்
அவரது சகோதரும் சாமான் வாங்க கடைக்குச் சென்று திரும்பிய சமயம் மது போதையில் இருந்தவர்களால் குறித்த
மாணவன் மீதும் அவரது சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதேவேளை குறித்த சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றும் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இதே வேளை தனது பிள்ளைகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்பதற்கு விரும்புகிறார்கள் சென்ற அவர்களது தாய் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவத்தில்
காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட 2 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்
நமது நிருபர் – சங்கிலியன்
கல்முனை – காரைதீவு கடற்கரை வீதி காபட் வீதியாகும் வேலைத்திட்டம் ஆரம்பம்
கல்முனை – காரைதீவு கடற்கரை வீதி காபட் வீதியாகும் வேலைத்திட்டம் ஆரம்பம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில்
கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான 3.4 கிலோமீற்றர் கடற்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வேலைத்திட்டங்கள் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன
. இதனை (08) கடந்த வியாழக்கிழமை காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், என்.எஸ் என்ஜினீரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பாளருமான எம்.யூ.எம்.நியாஸ்,
றிஸ்லி முஸ்தபாவின் செயளாலர் ஜவாஹீர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் கல்முனை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி: இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது.
தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஐயாயிரம் ரூபாவை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது.
கொரோனா வைரசு தொற்றினால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், அங்கவீன கொடுப்பனவை பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது
இதன் கீழ் இதுவரையில் 12 லட்சத்து 33 ஆயிரத்து 55 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளைச் சந்திப்பதன் மூலம் இதனை பெறுவதற்கு தகுதியானவர்கள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும். 30 லட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வுள்ளது..
இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக கொழும்பு மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கேகாலை மாவட்டத்தில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெறுகிறது. கேகாலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள நான்கு லட்சம் பேருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் சமுர்த்தி அலுவலகங்களின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. களுத்துறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.
125 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 12 பேர் கைது
125 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 12 பேர் கைது
ஐஸ்’ என்ற போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து 125 கிலோகிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
110 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் சபுகஸ்கந்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.. இதனுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
வனவாசல மற்றும் மாபோல பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்குகிறார்கள்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வெயல்படும் ரூபன் மற்றும் லால் ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழிகாட்டலுக்கு அமைய இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி, ஹொரணை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
டுபாயில் தலை மறைவாக இருந்து செயற்படும் நிபுண என்பவர் கடல் வழியாக இதனை நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார் என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
பஸ் விபத்து ஒருவர் மரணம் – ஒருவர் காயம்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள மஞ்சள் கோட்டிக்கு சமீபமாக நேற்று (12) இடம்பெற்ற விபத்தில்
இளம் குடும்பஸ்த்தர் பலியானதாகவும் மற்றுமொரு பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியை சேர்ந்த குபேரன் கருணாகரன் வயது சுமார் 28 மதிக்கதக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது, ஹட்டன் – விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அதே பக்கத்தில் நடந்து சென்ற மேற்படி இளம் குடும்பஸ்த்தர் மீது மோதியுள்ளது.
குறித்த நபர் பஸ்ஸில் மோதுண்டு வீதியில் சென்ற பெண் மீது வீழ்ந்து நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு மீண்டும் வீதியின் பக்கம் வீழ்ந்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பஸ் சாரதி பஸ்ஸினை நடு ரோட்டில் விட்டு விட்டு இறங்கி பொலிஸ் நிலையம் நோக்கி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஆண் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பஸ்ஸினையும் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














