Tag: பொலிசார் எச்சரிக்கை
போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை
போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க
வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னெடுக்கப்படும். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறோனரின் வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்த அவர்,வாகன
விபத்துக் காரணமாக நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர்.
மது போதையுடன் பயணிக்கும் சாரதிகளுக்கு மேலதிகமாக வீதிச் சட்டங்களை மீறுவோரையும் சட்டத்தின்
முன் நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை








