பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சூடுபிடிக்கும் பிரச்சாரம் !

Spread the love

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சூடுபிடிக்கும் பிரச்சாரம் !

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, சுதந்திரமான அரசியல்

செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்ற நிலையில், அதத்தடை நீக்க கோரும் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் என்பது, இத்தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓர் வாதுரையாகவுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள

நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும் தமது விருப்பினை இந்த இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த முடியும்.

பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை http://www.lifttheban.uk/ இந்த இணையவழி மூலமாக கொண்டு செல்ல மின்மடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால தமிழ்சந்ததியின் மீது பயங்கரவாத முத்திரையினை இல்லாதிருக்கவும், தமிழர்கள் சுதந்திரமாக தமது அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் பிரித்தானிய வாழ்

தமிழர்கள் அனைவரையும் பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

விடுதலைப் புலிகள் மீதான தடை
விடுதலைப் புலிகள் மீதான தடை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *