Tag: கொலை
தனிமையில் இருந்து பெண் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்
தனிமையில் இருந்து பெண் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்
இலங்கை வெலிக்கடை பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவபர் மர்ம நபர்களினால் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இவரது அலறல் சதம் கேட்டு அயலவர்கள் ஓடி சென்று பார்த்த பொழுது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மகிந்த ,கோட்டா ஆட்சியில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது
கணவனை அடித்து கொன்ற மனைவி – யாழில் நடந்த பயங்கரம்
கணவனை அடித்து கொன்ற மனைவி – யாழில் நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில், நேற்று (18) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேசன் தொழிலில் ஈடுபடும் குறித்த நபர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணை, திருமணம் முடித்து, பூம்புகாரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், குறித்த நபருக்கும் அரவது மனைவிக்கும் இடையில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த குடும்ப முரண்பாடு முற்றியதில், நேற்று இரவு, மனைவியால் அவர் திருவலைக் கட்டையால்
தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று, ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இன்று (19) அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் கைதுசெய்தனர்.
திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் 5க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் வாலிபன் அடித்து கொலை – பீதியில் மக்கள்
யாழில் வாலிபன் அடித்து கொலை – பீதியில் மக்கள்
காங்சேன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவதுடன், சடலத்தை உடற்கூற்றுப்
பரிசோதனையின் மருத்துவ ஆலோசனையின் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் நேற்று (16) பிற்பகல் 3.30 மணி அளவில் வீதியோரம் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார்.
அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்த போது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
சம்பவத்தை அடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டனர். ஆரம்ப
விசாரணைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கான தடையங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பிரான்சில் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பிரான்சில் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை
பிரான்ஸ் அதிபர் மெக்ரான்
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில்
நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிரடிப் படையினர் சகாராவில் நடத்திய அதிரடி தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக
அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இது மிகப் பெரிய வெற்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
மண்வெட்டியால் வெட்டி ஆண் , பெண் படுகொலை
மண்வெட்டியால் வெட்டி ஆண் , பெண் படுகொலை
நீர்கொழும்பு மற்றும் கொட்டவெஹர ஆகிய பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டவெஹர, திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமான 44 வயதுடைய ஒருவர் மண் வெட்டியால் தாக்கப்பட்டுள்ள கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீர்கொழும்பு, தளுபன பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தீக்காயங்களுடன் வீடொன்றின் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு
கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 89 வயதுடைய குறித்த பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி
நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி
நியூலாந்தில் பத்து வருடங்களாக வசித்து வந்த இலங்கையர் ஒருவர் பத்து பேரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்
இவர் ஐ எஸ் தீவிரவாதிகளின் போதனைகளால் ஈர்க்க பட்டு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளதுடன் ,இவர் தொடர்ந்து போலீஸ்
கண்காணிப்பில் உள்ளாக்க பட்டு வந்தவர் எனவும் அவ்விதமான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,சூப்பர் மரக்கட்டுக்கு வந்த அப்பாவி மக்களையே இந்த கொடூரன் குத்தியுள்ளான்
ஒரு நபர் புரிந்த செயலினால் ஒட்டு மொத்த இலங்கையருக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்
லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்
வடக்கு லண்டன் பகுதியில் கறுப்பின கணவர் ஒருவர் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி படுகொலை புரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஓராண்டுகளாக இடம் பெற்று வந்த நிலையில் கணவன் எரிபொருள் நிலையத்தில் டீப் ஒன்றுக்குள் நிரப்பி செல்லும்
காட்சிகள் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட படுகொலை என கண்டறியப்பட்ட நிலையில் கணவருக்கு ஆயூள் தண்டனை விதிக்க பட்டுள்ளது
குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்
குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்
குருநகர் இளைஞன் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார்.
அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான பாசையூர் ரெமியின் சகோதரர்களைத் தேடி தீவகம் உட்பட பல இடங்களில் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.
இந்த 9 நாள்களின் பின்னர் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
லண்டனில் கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்
லண்டனில் கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்
பிரிட்டனில் நிகழ் காலத்தில் விதிக்க பட்டுள்ள கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் இணைந்து பெரும் போராடட்ம நடத்தியுள்ளனர்
உள்ளூர முக்கிய நுழைவு வீதிகள் தடுக்க பட்டு அங்கு கமரா பொருத்த பட்டுள்ளது ,வாகனங்கள் செல்லாத வகையிலும் தடைகள் உள்ளன
மேலும் வெளி நாடுகளுக்கான பயண தடைகள்; உள்ளிட்ட முக்கிய விடயங்களை கருத்தில் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றுள்ளது
தொடர்ந்து இது போன்ற தடை நீடித்தால் எதிர்வரும் தேர்தல் ஆண்டில் ஆளும்
ஆட்சி கவிழ்க்க பட்டு தொழில் கட்சி
ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது’
இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்
இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்
இலங்கையில் ஆண்டு தோறும் நீர் நிலைகளில் மூழ்கி சுமார் 800 பேர் பலியாகி வருவதாக
இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இதனை தடுக்க பல்வேறு பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,அவை கடந்து இந்த
மரணம் சம்பவிப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
கொரனோவுக்கு 42 பேர் மரணம்
கொரனோவுக்கு 42 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 42 பேர் கடந்த தினம்
பலியாகியுள்ளனர் ,இதன் மொத்த இறப்பு விகிதம் 3,959 என தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி நோயினை கட்டு படுத்த பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற
பொழுதும் உயிர் பலியை தடுக்க இயலவில்லை
கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்
கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்
வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (16) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.
50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயை கோடாரியால் கொத்தி கொன்ற மகான்
தாயை கோடாரியால் கொத்தி கொன்ற மகான்
போதைபொருளுக்கு அடிமையான மகனால் மேற்கொள்ளப்பட்ட கோடரி தாக்குதலில் படுகாயமடைந்த தாய் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பலாதொட்ட பகுதியை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகன் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்
மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்
அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் தனது முன்னால் மனைவியை அவரது கணவர் மூன்று முறை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றுள்ளார்
மேற்படி சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளது
கணவனின் இந்த திட்டமிட்ட பட படுகொலைக்கு அவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்
இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது
கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது
லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது
கடந்த 13 ஆம் திகதி லண்டன் இல்போர்ட்டில் நபர் ஒருவர் 32 வயது இளம் பெண் ஒருவரை கோரமாக கொலை செய்துள்ளார்
பிணமாக கிடந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு இடம்பெற்ற மரண பரிசோதனையில் இது
கொலை என கண்டு பிடிக்க பட்டதை அடுத்து தற்போது கொலையாளி கைது செய்ய பட்டுள்ளார் ,
கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்
கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்
இலங்கை பமுனுவ பகுதியில் கம்பி ஒன்றால் மனைவியை தாக்கி கனவை படுகொலைசெய்துள்ளார்
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி மேற்படி கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் கொலை குற்ற
சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இருவர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்
நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுத்ததால் தாக்கல் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
இலங்கை பெரிய கல்லாறு பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தியை மூன்று பெண்கள்
உள்ளிட்ட ஆறுபேர் இணைந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்
இந்த அடி காயங்களினால் அவளது புண்களில் ஏற்பட்ட தொற்று கிருமி ஊடாக அவர் இறந்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இதனால் ஆறு பேரும் கைது செய்ய பட்டு கொலை குற்றச்சாட்டில் நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது,
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது











