Posted in Uncategorized

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை

தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் அதிகாரியின் சகோதரரும் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

    இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

    தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர் தெஹிவளை கல்தேரா வீதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்

      கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்

      மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர்

      ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.

      நேற்று (30) இருவருக்கிடையில் வேலி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட

      வாய்த்தர்க்கம் முற்றியதால், ஒருவர் மற்றையவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு துண்டுகளாக்கியுள்ளார்.

      இதனையடுத்து கால்கள் துண்டாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

      இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான திருமணமாகாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      அத்துடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது

      செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் சித்தப்பா என்பதுடன், இவர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        தனிமையில் இருந்து மூதாட்டி கொலை

        தனிமையில் இருந்து மூதாட்டி கொலை
        சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம் இன்று (27) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

        சாய்ந்தமருது-15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதை உடைய ´சுலைமான் செய்யது புஹாரி´ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

        குறித்த மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது தாயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

        இதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் குறித்த மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

        இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        மூவர் வெட்டி கொலை

        மூவர் வெட்டி கொலை

        வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

        குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

        கொனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

        உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவரது கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

        கொலையை செய்த சந்தேக நபரும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

        41 வயதுடைய இவர் கோனதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

        வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

        இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ககேவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

        குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

        24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

        கொலைச் சம்பவம் தொடர்பில் 23 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

        சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை

          திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் மரணம்

          திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

          திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில்

          உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

          சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

          சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

            உடுப்பு கடையில் ஆயுததாரி – சுட்டு கொன்ற பொலிஸ் – திகில் வீடியோ

            உடுப்பு கடையில் ஆயுததாரி – சுட்டு கொன்ற பொலிஸ் – திகில் வீடியோ

            அமெரிக்கா லாஅஞ்சல் பகுதியில் உள்ள பிரபல புடவை கடை ஒன்றுக்குள் நுழைந்த ஆயுததாரி

            ஒருவர் அங்கிருந்த இரு பெண்களை சிறை பிடித்தார் இதில் ஒருவர் தப்பிக்க பிறிதொரு பெண்

            ஆயுத முனையில் சிக்கி கொண்டார் ,துப்பாக்கி தரியினால் அவர் சுட்டு கொலை செய்ய பட்டார்

            ,அதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் நடத்திய தாக்குதலில் ஆயுத தாரி துடி துடிக்க சுட்டு கொலை செய்ய பட்டார்

            இந்த தாக்குதல் திருட்டு முயற்சியாக இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது ,மேலும்

            உடுப்புகளுக்குள் மறைந்திருந்த சுட்டு கொலை செய்ய பட்ட பெண்ணின் 14 வயது மகளுக்கும் நெஞ்சில் பலதத்த சூட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளார்

            மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            இதில் அழுத்தி வீடியோ பார்க்க

              Posted in இலங்கை செய்திகள்

              எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன்

              எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன்

              எஜமானியின் அணிந்துவரும் தங்க நகையை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என மட்டக்களப்பு நகர்

              பார் வீதியில் எஜமானியை வெட்டி கொலை செய்த வேலைக்காரியான பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

              கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டார்.

              மட்டக்களப்பு நகரில் நகைக்கடை வர்த்தகரின் மனைவியை வேலைக்காரி பணத்துக்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

              இது தொடர்பாக வேலைக்காரியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளது.

              நகரின் நடுப்பதியில் அரசடி பகுதியில் உள்ள பார்வீதியில் அதிக சனநடாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டிம் கொண்ட வீட்டில் களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனை கடை நடாத்திவரும்

              செவ்வராசா செல்வி என்றழைக்கப்படும் தயாவதி ஆகிய தம்பதிகளுக்கு 23 வயதுடைய பெண், 26 வயதுடைய ஆண் பிள்ளைகளான இரு பிள்ளைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

              இந்த நிலையில் வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஒம்பிறோஸ் வீதியில் வசித்துவரும் 27 வயதுடைய ரவிகார்த்திகா என்ற பெண் ஒருவர் தினமும் காலையில்

              வந்து மாலை வரை வீட்டில் மனைவிக்கு ஒத்துழைப்பாக சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளனர்.

              குறித்த வேலைக்காரி பின்னர் மலேசியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகிதால் அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

              இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து கொண்டு பெற்றோருடன் அங்கு சென்று குடியிருந்து 8 மாதங்களாக வாழ்ந்து வந்த இவர் அடிக்கடி முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

              இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (20) வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் காரணமாக தனது கணவரிடம் கல்லாற்றுக்கு

              தனது 48 வயதுடைய ஏரம்பு ரவி என்ற தந்தையுடன் செல்வதாக தெரிவித்து தந்தையிடம் தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபா பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என

              தந்தையிடம் பொய்கூறி 48 வயதுடைய தந்தையாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையுடன் பஸ்வண்டியில் ஏறி மட்டக்களப்பு சினன் ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர்.

              இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றில் கோழிவெட்ட கத்தி ஒன்று தேவை என கோரி கத்தி ஒன்றை வாங்கி தனது தோல்பையில் வைத்துக்கொண்டு பார் வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

              அங்கு முதலாளியின் கார் நிற்பதை கண்டு வீட்டுக்கு செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.

              அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனாரை அனுப்பிவிட்டு மனைவியான 48 வயதுடைய தயாவதி மற்றும் மகளுடன் கோவிக்கு சென்று

              வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து மனைவியார் கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களை அணிந்து சென்ற நிலையில் அதோடு சமையலில் ஈடுபட்டுக்

              கொண்டிருந்துள்ள நிலையில் வேலைக்காரியும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடிய நிலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வேலைக்காரி அவரது தந்தையிடம் கூறினார்.

              இதன் பின்னர் வர்த்தகர் செல்வராசா அவரது மகள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்க சென்ற நிலையில் மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டு மண்டபத்தில்

              குசன் சோபாவில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரை போயுள்ளார்.

              அப்போது எஜமானியம்மா தனது கையால் வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பின்னர் எஜமானியம்மாவுடன் கதைத்துக்

              கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கி கொண்டிருந்த வேளை எஜமானியம்மாவும் வேலைக்காரியும் கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து அங்கிருந்து வேலைக்காரியின் தந்தையர் வீட்டின் வெளியிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.

              இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையினுள்

              எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கைத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனை கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

              எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலைகுப்பற வீழ்ந்தபோது அங்கு இருந்த தேங்காயில் தலைஅடிப்பட்டு கீழேகிடந்த எஜமானியம்மா சத்தம் போடதவாறு கழுத்தை சுற்று மின்னல் வேகத்தில் கழுத்தை கத்தியால்; சுமார் 10 தடவை படபடவென வெட்டியுள்ளார்.

              பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண்தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து

              தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர் கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலககட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புக்களை கழற்றியுள்ளார்.

              கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுன் கத்தியால் அறுத்து எடுத்து கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும்

              கொள்ளையிட்டு அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு கொண்டு கத்தியை அங்கு விட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.

              இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையர் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகள்மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும்

              சண்டிபிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரை யில் இருந்த எஜமானியின் மகள் விழித்தொழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.

              இந்த கத்தல் சத்தம் கேட்டு முதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கி வந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

              இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்

              அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸ்லி தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

              இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

              கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான சிசிரிவி ஒளித் தொகுப்புக்கள் அடங்கிய விசிடி எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

              கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
              Posted in Uncategorized

              கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்

              கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்

              அமெரிக்காவில் காரில் சிசுவுடன் பயணித்த பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையன் அவரது

              காரில் உள்ள பொருட் களை திருட முயன்றதுடன் அந்த பெண்ணை கற்பழிக்க முனைந்துள்ளார்

              இவ்வேளை அலறிய பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த

              போலீசார் அவனை மடக்கினர் ,ஆயினும் அவன் விடுவதாக இல்லை ,வேறு வழியின்றி துப்பாக்கி


              சூடு நடத்தினர் ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் பலியானார் ,சிசுவும் தாயும்

              உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்

                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்

                என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்

                அமெரிக்கா புளோரிடா பகுதியில் 57 வயதுடைய கணவர் காவல்துறையின் அவசர எண்ணுக்கு

                அழைத்து
                எனது மனைவி மற்றும் இருபிள்ளைகளை சுட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்

                அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டதால் அவர்கள் உயிர் ஆபத்து இன்றி காப்பாற்ற பட்டனர்

                மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்

                  இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்

                  இலங்கையில் ஆளும் கொலையாளிகள் ஆட்சியில் நாடெங்கும் பல மர்ம கொலைகள் இடம்பெற்ற

                  வண்ணம் உள்ளன, இவை நேரடி பார்வைக்கு தற்கொலை என காண்பிக்க படும் ,ஆனால்

                  அவையோ திரை மறைவில் திட்டமிடப்பட்ட படுகொலைகளாக பெற்றுள்ளன

                  இவ்விதம் புத்தளம் பகுதியில் வீடொன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

                  மீட்க பட்டுள்ளது

                  இது தற்கொலை என தெரிவிக்க படுகின்ற பொழுதும் அவை திட்டமிட்ட பட்ட படுகொலை என்ற நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

                    Posted in Uncategorized

                    மனைவியை அடித்து கொன்ற கணவன்

                    மனைவியை அடித்து கொன்ற கணவன்

                    இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள

                    து
                    இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை

                    செய்துள்ளார்

                    தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்

                    இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

                      பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

                      வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                      இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

                      அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

                      இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                      சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

                      உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                      ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

                      கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                      இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                        Posted in Uncategorized

                        தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

                        தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

                        கிரான்பாஸ், கஜீமா ​தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது.

                        சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

                          Posted in Uncategorized

                          வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

                          வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

                          கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                          நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                            Posted in Uncategorized

                            மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்

                            மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்

                            குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.

                            மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

                            கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

                            சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

                            அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                            சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                              Posted in Uncategorized

                              வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்

                              வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்

                              வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

                              பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

                                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

                                கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

                                தேர்வு எழுதச் சென்ற மாணவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.

                                கேரளாவில் கொடூரம்: கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

                                கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார்.

                                இவர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அபிஷேக் என்ற நபர் கல்லூரி

                                வளாகத்திற்குள் வைத்து அந்த மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

                                திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார்.

                                இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,

                                இதேபோன்ற சம்பவத்தால் சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மகளை கொன்ற தந்தை

                                  மகளை கொன்ற தந்தை

                                  புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

                                  பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                                  தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளது.

                                  பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                  அனர்த்தம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

                                  பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                                    Posted in Uncategorized

                                    இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்

                                    இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்

                                    இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை

                                    குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்