Tag: குண்டு வெடிப்பு
ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
ஆப்காணிஸ்தான் தலைநகர் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
மேலும்பலர் படு காயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் தலைநகர் பகுதியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .
இந்த குண்டு தாக்குதலில் சிக்கி தலிபான்கள் ஆட்சி அமைத்தான் பின்னர் பலநூறு பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 10 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பல வாகனங்கள் , தீ பிடித்து எரிந்தும் ,பல கட்டங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன .
சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலினால் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .
ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்
கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்
இலங்கை கொழும்பு பகுதியில் 2019 ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு இடம்பெற்றன .இந்த குண்டு வெடிப்பு விசாரணைகளை மேற்கொள்ள ,பிரிட்டன் தயராக உள்ளது என அறிவித்துள்ளது .
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 30 இலங்கையர்கள் நன்கு பயிற்றுவிக்க பட்டு ,அவர்கள் சர்வதேச போலீசாருடன் இணைந்து செயல்படும் விதத்தில் ,தயாராகி உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது .
இலங்கையில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பு தொடர்பில் ,பிரிட்டன் காவல்துறையினர் இரகசிய புலனாய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர் .
தற்போது லண்டனுக்கு வருகை தந்து சென்ற ரணில் விக்கிரமசிங்கா, இந்த குண்டு வைப்பு பின்புலத்தில் செயல் பட்ட நபர்களை ,தமக்கு வழங்குமாறு பிரிட்டனிடம் கோரியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இதனை அடுத்தே பிரிட்டன் இந்த விடயத்தில் களத்தில் குதித்துள்ளது .
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி ,உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் சமாதான தூதராக பணியாற்றி வந்த, Idris Khan பயணித்த கார் மீது நடத்த பட்டு குண்டு தாக்குதலில் ,அவர் உள்ளிட்ட எட்டு பேர் பலியாகியுள்ளனர் .
பாகிஸ்தான் சமாதான தூதரான Idris Khan பயணித்த காருக்குள் ,பொருத்தி வைக்க பட்டிருந்த குண்டு ,ரிமோர்ட் ,கொன்றால் மூலம் வெடிக்க செய்ததில் இந்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது .
இது திட்டமிடப் பட்ட தீவிரவாத குண்டு தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குண்டு தாக்குதல் இடம் பெற்ற பகுதிக்குயில்
,ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பில் சிதறிய மனித உடல்கள் ,எங்கும் பரவி காணப்படுகின்றன..
தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ,மனித உடல்கள் எங்கும் சிதறிய வண்ணம் , காணப்படுகின்றன .
தலிபான்கள் ஆண்டு வரும் ,இந்த கால பகுதியில், தொடராக குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தொடரும் இந்த குண்டு வெடிப்பு ஊடாக ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்குடனும் ,மேலும் தாலிபான்களுக்கு நெருக்கடியை தருவிக்கும் விதமாக ,இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் ,நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
இடைவிடாது தொடரு குண்டு வெடிப்பும் ,அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் ,அவர் தம் ஆளுமை மிக்க பகுதிகளில் இடம்பெறும் ,இந்த குண்டு வெடிப்பை கட்டுப்படுத்த முடியா நிலையில் ,தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர் .
திகில் குண்டு வெடிப்பு பார்க்க இதில் அழுத்துங்கள்
இவ்வாறான குண்டு வெடிப்பு தொடர்ந்து சென்றால், தலிபான்கள் ஆட்சி அதிகாரம் இழந்து ,மீளவும் குழுநிலை போராளிகாகளாக, மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் இன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை விபரம் முழுமையாக வெளிவரவில்லை .
தாலிபான்களுக்கு இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ,இருண்டகாலம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .
சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் வடக்கு காபூல் பகுதியில் ,பள்ளி வாசல் ஒன்றுக்குள் குண்டு வெடித்து சிதறியது . ,இதன் போது 20 பேர் மரணமாகியும் ,40 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ச்சியடைந்த பின்னர், நாள்தோறும் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் சிவில் நிர்வாகம் முடக்க படும் ,தாக்குதலாக இவை பார்க்க படுகிறது .
இவ்வாறு தொடர்நதுகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றால் ,தலிபான்கள் ஆட்சியும் நாட்டில் சீர்குலைக்க பட்டு , புதிய ஆட்சி பீடம் ,அரியணையில் ஏறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை
லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை
லெபனான் நாட்டுக்குள் மீளவும் இன்று மூன்று பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,இந்த
குண்டு தாக்குதல் பெரும் சத்தத்துடன் அதிர்ந்த வண்ணம் இருந்தது
இஸ்ரேல் உளவுத்துறையால நன்கு திட்டமிடப்பட்டு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதனால ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்
,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது
இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை
மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்
.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,
மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .
மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற
போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .
இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …
இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன
தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது








குண்டு வெடிப்பு கண்டு பிடிப்பு – கிசுபுல்லா சிறையில் அடைப்பு
குண்டு வெடிப்பு கண்டு பிடிப்பு – கிசுபுல்லா சிறையில் அடைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என இவ்வழக்கை விசாரிக்கவென
நியமிக்கப்பட்ட சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது தீர்மானத்தை அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி
விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.
அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட
இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கு விஷேட உத்தரவினைப் பிறப்பித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல்
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று மீளவும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின்
நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முதலில் கடந்த தவணையின் போது அறிவித்ததர்கு அமைய,
நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பிலான தனது தீர்மானத்தை அறிவித்தார்.
பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை
என்பதால், அவர்கலின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கபப்டுகிறது.´ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.
தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு
தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு
ஆப்கான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆண்டு வருகின்றனர் ,இவர்களது ஆட்சியில் தற்போது இரட்டை குண்டு தாக்குதல் ஒரே நாளில் இடம் பெற்றுள்ளது
சம்பவ இடத்தில் பத்து பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு – ஒருவர் காயம்
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு – ஒருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு
வெட்டிய போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர்
ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் அருகிலே சென்று
மனைவியும் மகனும் உப்பு அள்ளிக் கொண்டிருந்த போது கணவன் அருகில் உள்ள பற்றைக்காடுகளில் விறகு வெட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் காலை எட்டு முப்பது மணி அளவில் குறித்த குடும்பஸ்தர் விறகு வெட்டியபோது மரத்தடியில் இருந்த வெடிபொருள் மீது கோடாரி மோதி குண்டு வெடித்துள்ளது.
இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் அறிந்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று குறித்த பகுதியை பாதுகாப்பற்ற பகுதியாக அடையாளப்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு
இலங்கை முல்லைதீவு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது,
உடையார் கட்டு அருகில் உள்ள தேவிபுரம் பகுதியில் பெண் ஒருவர் காணியை துப்பரவு செய்து
அந்த குப்பைகளை எரித்த பொழுது அதற்குள் மறைந்து கிடந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது
இதனால் பலத்த காயமடைந்த நிலையில் பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
விரைந்து சென்ற இராணுவத்தினர் காணியை சோதனை செய்து வருகின்றனர்
ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்
ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்
ஆப்கான் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதல் சிக்கி இருபத்தி எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்
தாலிபான்களுக்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இதேவேளை தாலிபான்களின் உளவுத்துறை தளபதி அரச இராணுவத்தின் விமான தாக்குதல்
மூலம் படுகொலை செய்யப்பட்டுளள்ளார் ,இவருடன் மேலும் முக்கிய 11 பேர் பலியாகியுள்ளதாக அரச இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்
உலக
சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்
சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய
நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
இலங்கை பன்னல பகுதியில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது
இதில் படுகாயமடைந்த 22 மாற்று 27 வயதுடைய வாலிபர்கள் குருணாகல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டு பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனைகள் ,மற்றும் ஆய்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதில் வெடித்து சிதறிய குண்டு எவ்வகையை சேர்நதது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம் photo
முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம்
முல்லைத்தீவு வட்டு வாகல் பாலத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்தில்
ஒருவர் பலியானார் மேலும் ஒருவர் படுகாயமடைந்த்துள்ளார்
காணி ஒன்றுக்குள் இருந்த குண்டே இவ்வித வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
தமிழர் பகுதிகளில் மீளவும் புலிகள் மீள் உருவாக்கம் இடம்பெறுவதாக சிங்கள இராணுவம்
பரப்புரை புரிந்து வரும் இவ்வேளையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது


மாங்குளத்தில் குண்டு வெடிப்பு – இராணுவம் குவிப்பு
மாங்குளத்தில் குண்டு வெடிப்பு – இராணுவம் குவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று (26)காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.
குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (26) தடயவியல் பொலிஸார் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் இந்த குண்டு அண்மையில் பளை
பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அந்த வீட்டில் இருந்த குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த குண்டுகள் எவ்வாறு இங்கு வந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இன்று (27) அதிகாலை 5.30 தொடக்கம் காலை 10 மணிவரை குறித்த பகுதியில் இருக்கின்ற வீடுகள் அனைத்திலும்
இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பளையில் குண்டு வெடிப்பு – ஒருவர் காயம்
கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்
சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றுடன் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆசிரியையின் வீட்டில் கடந்த 3 ஆம் திகதி வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் அதில் ஆசிரியையின் கணவரே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம்
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஆசிரியை 43 வயதானவர் எனவும் இவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கும்
பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






















