சொல்வாயா
Posted in கவிதைகள்

சொல்வாயா

சொல்வாயா

உனை நான் பார்த்தேன்
எனையே உடன் மறந்தேன்

காளை உனை நினைத்து
காதல் கொண்டு துடித்து

நீ செல்லும் வழி மீது
நித்தமும் விழி வைத்து

துடிதுடிக்கும் இதயத்தோடும்
படபடக்கும் விழிகளோடும்

கன்னி நான் காதலோடு
உனை எண்ணிக் காத்திருக்கின்றேன்

திருமகனே என் மனமகனே
ஒருமுறையேனும் உன்

உதட்டைக் குவித்து
நெத்தியில் அன்பாக

முத்தம் ஒன்று இட்டு
சத்தமாக சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

சொல்வாயானால்,

வெண்ணிலா சிரிக்கும்
விண்மீன் ஒளிரும்

வானம் பூத்தூவும்
வானவில் நிறம்கூடும்

மின்னல் மின்னும்
முகில்கள் நாணும்

இவைக்காக என்றாலும்
அவைமுன் காதலை சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

ஆக்கம் – ராகவி
08/05/2025

தோற்று போன காதல்
Posted in கவிதைகள்

தோற்று போன காதல்

தோற்று போன காதல்

முற்றத்தில் நீ இருக்க
முகம் கழுவா உன்னை பார்க்க
பக்கத்தில நான் வந்தேன்
பார்க்க என்னை மறந்ததேன்

சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லிவிட முடியாத
பாசத்தில் நான் துடிக்க
பாவை என்னை மறந்ததேன்

தேன் மலரும் பூ விழியால்
தேடுதல் செய்தவளே
ஒத்தை வரி சொல்லமால்
ஓடி போனதென்ன

மெத்தையில நீ இருந்து
மேனி வருட கண்ட கனா
பக்கத்தில கூடலையே
பார் விழி நோகுதடி

ஆசை பட்ட வாழ்வதனை
அப்படியே தந்து விட
வெளிநாடு போனேண்டி
வெற்றிடமாய் நின்றேண்டி

மணமகளாய் நீ யிருக்க
மாலையதை சூடிவிட
வீடு வந்து பார்த்த போது
விசரணாய் ஆனேண்டி

ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை மறப்பாய் நீ என்று
உன் நினைவை நான் சுமந்து
ஒத்தையாக வாழ்கிறேனே .

ஆக்கம் =- 29-04-2025

  • வன்னி மைந்தன் –
  • 0044 7536707793

லண்டன் அண்ணன் ஒருவரது உண்மை காதல் கேட்ட பொழுது என் பேனா முனையில் இப்படி உதிர்ந்து .

மாவீரன் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரன் பிரபாகரன் கவிதை

மாவீரன் பிரபாகரன் கவிதை

வீடியோ

தலைவர் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரன் கவிதை

தலைவர் பிரபாகரன் கவிதை

வீடியோ

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது

ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது

இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு

எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்

தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024

அழும் நீதி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அழும் நீதி

அழும் நீதி

உளம் உடைந்து நோகிறான்
ஊருக்காக வாழ்கிறான்
எவன் உணர்ந்து கொள்கிறான்
ஏனோ இவன் ஏற்க மறுக்கிறான்

கரை முட்டி அலையும்
களைத்து நோகிறது
எழுந்தேற முடியாது
ஏனோ தட்டி தவிக்கிறது

வேகம் தரும் காற்று
வேகம் மாறி வீசிட
தோற்று போனதாய்
தொலைவில் இருந்து அழுகிறது

வேர்த்து போன உடலுடன்
வேங்கை இன்று தூங்கிறது
வேலை வரும் இலக்கிற்காய்
வேடன் அழிக்க பதுங்கிறது …

காலம் ஒரு நாள் – உன்
கால் தடம் தழுவும் – அன்று
கண்ணீரால் கண்கள் நனையும்
கரிகாலன் தேசம் உன்னை பேசும் ….

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை எவர் இங்கு தொடுவாராம்
முடிந்தால் எம் முன் எவர் வருவார்
முடிவுரை தருவோம் மோதி பார்

பகையா பக்கம் வந்து பார்
பாமர மக்கள் நோதல் பார்
நீதியை விற்ற கூட்டங்களே
நீதவான் எங்கள் அர்ச்சுனா பார் ..

இவனை இழிவதை முதல் நிறுத்து -உன்
இதயத்தை முதலில் நீ கழட்டு
உரிமைக்காய் உன்னை முதல் சுழட்டு
உதவா மனிதனா நீ ஓடு

எதுகை மோனை அலறுவதோ
ஏறி சந்தம் உரிப்பதுவோ
உன்நிலை மறந்திட முன்னாலே
உன்னை கொஞ்சம் நீ திருத்து

ஆக்கம் 11-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

சிந்தை தளரா சிரித்து நடப்பவன்
சிகரம் உயர எழுந்து வெடித்தவன்
கள்ளம் இல்லா பேசி நடப்பவன்
கயவர் சூழ்ச்சி தோலுரிப்பவன்

விந்தை செய்திட விண்ணை அளப்பவன்
விடியல் பெற்றிட புரட்சி செய்பவன்
என்ன கேட்டாலும் எடுத்து உரைப்பவன்
எதற்கும் அஞ்சா எங்கும் நடப்பவன்

வெள்ளை வேட்டியை கதற வைத்தவன்
வெருட்டி வந்தாரை வாயில் அடித்தவன்
தோட்டா துளைக்க தலையை தந்தவன்
தோடுகள் பொங்கிட விதையை எறிந்தவன்

அண்ணன் பெயரை சொல்லி நடப்பவன்
அந்த வரலாறு மீட்டி படிப்பவன்
காலம் அறிந்து களம் திறந்தவன்
கரிகாலனாய் ஆகி நிற்பவன்

எட்டு திசையும் அலற வைத்தவன்
எரிமலையாய் பொங்கி வெடிப்பவன்
பாட்டன் பேரனை படைக்கு அழைத்தவன்
பாமர மக்களை நெஞ்சில் தரித்தவன்

அந்த மனிதன் இன்று யாராடா
அவன் எங்கள் அர்ச்சுனா காணடா
வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்தவன்
அவனை பாடடா அகிலம் போற்ரடா

இன்றைய மண்ணின் எழுச்சி இவனடா
எடுத்து கொஞ்சம் உலகம் பரப்படா
அடித்து புரட்டி எழுதினேன் நானடா
அணல் வரி வன்னி மைந்தண்டா !


போற்ரடா

வீடியோ

என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

கொண்டையில மல்லிகை பூ
கொலிசாட்டம் ஆடுதடி
தண்டவாள ரயில் போல
தாவணியோ ஓடுதடி

கண்டாவளை சந்தையில
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
இரணைமடு அருவி போல
இதயத்துள் ஓடுறியே

பரந்தன் வீதியில
பாவை நீ போகையில
பார்க்காமல் இருப்பேனோ
பாவி நான் துடிக்கேனோ

உன்னை தொடர்ந்திடவா
உள்ளத்திலே இருந்திடவா
என்னை நீ எண்ணாம
எக்காலம் இருப்பாயோ

ஒத்தையில நீ இருந்து
ஓரமா அழுகிறியோ
வித்தைகளை நான் காட்ட
வித்தகனை அழைக்காயோ .!

ஆக்கம் 21-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

என்னை அழைக்காயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைக்காயா

என்னை அழைக்காயா

கன்னத்தில் கை வைத்து
காதோரம் நிற்பவளே
கண்ணாடி சீண்டுதடி
காதலதை தூண்டுதடி

முன்னாடி உனை பார்க்க
முத்தமிட தூண்டுதடி
மூவேளை உனை தானே
முழு நாளும் நினைக்குதடி

கன்னக் குழி சிரிப்பழகில்
கதை சொல்லி நிற்பவளே
எண்ணத்தை தூண்டிடவே
எடுத்து கதை சொல்லிடடி

உன்னோடு நான் வாழும்
உயர்வான நாளதனை
என்று நீ சொல்வாயோ
ஏக்கத்தில் தவிக்கின்றேன்

வாலாட்டும் நாய்போல
வாசலில நான் நிற்க
வாய் பேசா நிற்கிறியே
வாவென்று அழைக்காயோ ..?

ஆக்கம் 14-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

எழுந்து வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எழுந்து வா

எழுந்து வா

எழுந்து வெடிக்கும் ஏவுகணையாய்
ஏன் வெடிக்க மறுக்கின்றாய்
ஏக்கமதை மனம் வைத்து
ஏன் நொந்து அழுகின்றாய்

தூக்கமதை நீ தொலைத்து
துயரில் ஏன் வாடுகின்றாய்
பாவி என்றேன் உன்னை
பாழ் படுத்தி கொள்கின்றாய்

நீதி வென்றிட வா
நீளம் பாய வா
உன் தகைமை எடுத்துரைக்க
உரு வேற்றி ஆட வா

சதிகள் புரிந்தாரை
சாகடிக்க வா
வந்த வழி தடத்தை
வரலாறாய் எழுத வா

உறங்கி கிடந்து
உறுமி அழுவதால்
ஏதும் நடக்காது
எழுந்து வா ..

ஆக்கம் 10-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

உயிராயுதம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உயிராயுதம்

உயிராயுதம்

உடலோடு வெடிசுமந்த
உயிரான ஆயுதம்
உலகத்தின் தலைசிறந்த
உன்னத காவியம்

அலையோடு படகேறிய
அசையாத ஓவியம்
அஞ்சாது பகைமுடித்த
அண்ணனின் வீரம்

நெஞ்சொடு வெடி சுமந்த
நெருப்பான போரியம்
நிழலாக தொடரும்
நினைவழியா காவியம்

ஆடியில் ஆடிய
அழியாத ஆழியம்
அந்நியன் ஓடிட
அனல் கக்கிய வீரியம்

அங்கையர் கன்னியும் மில்லரும்
அவருடன் கூடிய தோழரும்
நெஞ்சில் வாழும் ஆலயம்
நினைவில் உருகும் ஊழியம் .

ஆக்கம் 05-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

யார் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் நீ

யார் நீ

கல்லறை மேனியர் கண் திறப்பாரோ
கயவரை இங்கே கால் நசிப்பாரோ
நெஞ்சத்து ஊழ் வினை வந்தழிப்பாரோ
நேயத்தை இங்கே நட்டு வைப்பாரோ

கொடியான பகைவரை கொன்றிடுவாரோ
கொள்ளை புறத்தில் நின்றிடுவாரோ
எல்லை தாண்டி வந்தவர் யாரோ
ஏரி தணலாய் கொதிப்பவர் யாரோ

வந்து படையில் இணைந்தவரை
வழி வஞ்சித்தல் இங்கு முறையோ
கொஞ்சி தமிழ் கவி பேசினாலே -அவர்
கொள்ளையர் என்று நீ சொல்வதோ

எந்த தமிழ் நீ பாடினாய்
ஏனடா எம்மவர் இழித்தாய்
நஞ்சுடல் கொண்டவர் நீயோ
நக்கி பிழைக்கின்ற நாயோ

அஞ்சுதல் பெண் இங்கு முறையோ
அடக்கிட நினைப்பது சரியோ
இழித்தல் இன்று உந்தன் விதியோ
இடர் சுடுகாட்டு நீயென்ன நரியோ ..!

ஆக்கம் 04-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

முன்னாள் போராளிகள் அவலம்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முன்னாள் போராளிகள் அவலம்

முன்னாள் போராளிகள் அவலம்

உருக்கமான காட்சியதை
உருகி இதை பார்க்கையில
நெஞ்சு கனக்கிறது
நேயம் இன்னும் இருக்கிறது

வழித்தடத்தை மறந்தவர்கள்
வார்த்தைகளை எறிகையில
குருதி சிந்தியவர்கள்
குமுறத்தான் செய்கின்றனர்

இன்று பிறந்தார்க்கு
இவை ஏதும் தெரியாது
இவர்கள் மனக்குமுறல்
இதயங்கள் புரியாது

தேசம் வீழ்ந்ததால்
தேகங்கள் காய்கின்றன
ஆக்க பிறந்தவன்
அவை களம் வீழ்ந்ததால்

காக்க பிறந்தவர்கள்
காயங்கள் சுமக்கின்றன
கண்ணீரால் வாழ்வு
கரைந்து காய்கின்றன .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

இந்த குறும் படம் பாருங்கள் மக்களே

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே

கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே

பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட

காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி

எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அவளை தேடுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அவளை தேடுகிறேன்

அவளை தேடுகிறேன்

முரசுமோட்டை வீதியில
முன்னே நான் நிற்கையில
பரந்தன் வீதியில
பார்த்தவள் பக்கம் வந்தாள்

என்னப்பா இங்கே எண்டு
எடுத்தெரு கேள்வி கேட்டால்
என்னத்தான் நீ என்று
ஏங்க என்னை வைத்துவிட்டாள்

பேச்சின்றி நான் நிற்க
பேரிடியாய் அவள் சிரிக்க
வானரங்கம் போல அவள்
வந்த வழி போய்விட்டாள்

திரும்பி பார்க்கையில
திசை தெரியா போனவளை
திரும்ப பார்ப்பன் என்று
திகதியை தேடுகிறேன்

அரும்பு மீசையில
அழகாய்த்தான் உள்ளேனென்று
ஆள் மனதில் நான் நினைத்து
அவளை தேடுகிறேன் …!

ஆக்கம் 02-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

என்னை எரிக்காதே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை எரிக்காதே

என்னை எரிக்காதே

பங்கு சந்தை போல
பாவை நீ ஆடாத
ஏற்ற இறக்கம் போல
ஏறி என்னை மிரட்டாத

சேர்த்து வைத்த இலாபத்தை
சேதமாக்கி போகாத
செய்கூலி இல்லாமாலே
சென்நெருப்பை வீசாத

சாட்டை நீ பார்க்காமலே
சாளரத்தை திறக்காத
தோற்றுவிட்ட பின்னாலே
தோல்வி என்னில் வீசாத

மூச்சு முட்ட பாசம் வைத்தேன்
முன்னே என்னை முறைக்காத
தாலி கட்டும் வரைக்கும் என்னை
தள்ளி என்னை வைக்காதே

வன்னி மண் யுத்தம் போல
வாட்டி என்னை எடுக்காத
வாலாட்டும் நாயைப்போல
வாசலில வைக்காதே

உன்னை நானே நம்பி வந்தேன்
உயிரே என்னை வெறுக்காதே
வைகாசியில் பிறந்தவளே
வைக்கோலாய் என்னை எரிக்காதே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-06-2024

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

ஒத்தவரி நீயுரைத்தால்
ஓடினான் வருவேனே
பத்தடி தூரத்திலே
பார்த்துதான் நிற்பேனே

எட்டுமாத கருபோல
எடினான் சுமந்தேனே
ஆழ மனதில்
அடி பதியம் வைத்தேனே

கட்டுடைத்து பாயுதடி
காதல் வெள்ளம்
சொத்து வேணாண்டி
சொந்தமா வாவேண்டி

அப்பன் காசு வேணாண்டி
அவர் வேர்வை வேணாண்டி
முதுகெலும்பு உள்ளவனே
முதுகிலுனை சுமப்பேனே

பாத்திரங்கள் வாங்கிவிட
பாதுகாசு போதுமடி
சொத்தெழுதி தரவேண்டாம்
சொந்தமா வாவேண்டி

நீயும் நானுமே
நிலவொளியில் காய்வோமே
காலம் முழுதும்
காதலித்தே வாழ்வோமே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-06-2024

படிக்க துடிக்கும் புத்தகம் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

படிக்க துடிக்கும் புத்தகம் நீ

படிக்க துடிக்கும் புத்தகம் நீ

படிக்க துடிக்கும் புத்தகம் நீ
பக்கங்கள் புரளும் பக்கம் நீ
எண்ணத்தை தூண்டும் எண்ணம் நீ
எழுத வைத்த கவிதை நீ

இப்படி எழுததென உரைத்தவள் நீ
இதயம் உள்ளே துடிப்பவள் நீ
படிக்க படிக்க பிடித்தவள் நீ
பார்வைகள் தேடும் பாவை நீ

காற்றில் கரையும் கற்பனை நீ
காலத்தால் அழியா காவியம் நீ
கவிதைக்குள் புதுமை செய்தவள் நீ
காதல் செய்திட வைத்தவள் நீ

எப்படி மறப்பேன் உன்னை நானோ
எதுகை மோனையை எறிவேனோ
வித்தகி இன்று நீ தானே
விவாகம் செய் என்னை மானே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-06-2024