Posted in இலங்கை செய்திகள்

ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை-சரத் பொன்சேகா

ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை-சரத் பொன்சேகா

தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி

செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Posted in Uncategorized

    கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை

    கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை

    நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர்

    நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

    எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

    நாடு திறந்திருக்கும் போதே, ​கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

      துருக்கி வெளியுறவு
      Posted in இலங்கை செய்திகள்

      துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்

      துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்

      துருக்கி குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் சாவுசோக்லுவுடன் 2022 ஜனவரி 28, வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், இலங்கைக்கும்

      துருக்கிக்கும் இடையில் நிலவும் ‘மிதமான, சுமூகமான மற்றும் பரஸ்பர ஆதரவான பங்காளித்துவத்தை’ வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக் காட்டினார்.

      இந்த வகையில், துருக்கி தனது ‘ஆசியா புதிய முயற்சி’ என்ற கட்டமைப்பில் இலங்கையுடன் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு

      வெளிப்படுத்திய விருப்பத்தை அமைச்சர் பீரிஸ் வரவேற்றார். துருக்கியுடனான இருதரப்பு உறவுகளில் பரஸ்பர ‘நண்பர், நட்பு நாடு மற்றும் மதிப்புமிக்க பங்காளி என்ற

      வகையில்’ இலங்கையின் முக்கியத்துவத்தை துருக்கிய வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு எடுத்துரைத்தார்.

      இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக துருக்கியினால் பேணப்படும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும், பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையையும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர்

      பாராட்டி, ஒப்புக்கொண்டார். மேலும் விளக்கமளித்த அமைச்சர், இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே

      வேளையில், நம்பகமான, அனைத்தையும் உள்ளடங்கிய உள்நாட்டு செயன்முறையின் மூலம் நல்லிணக்கத்தின் எஞ்சிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

      இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு வெளிநாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர். பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி,

      ஜூன் 2021 இல் நடைபெற்ற இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான துருக்கி கூட்டுக் குழுவின் இரண்டாவது அமர்வில் அடையாளம் காணப்பட்டவாறு, வர்த்தகத்தை மேலும் பன்முகப்படுத்தி, ஆண்டுக்கு 500 மில்லியன்

      அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கை அடைந்து கொள்வதற்காக சீராக செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடையாளம் கண்டனர். முதலீடு மற்றும் வணிக இணைப்புக்களை மேம்படுத்துதல், சுற்றுலா மற்றும் இணைப்பை மேம்படுத்துதல்

      மற்றும் ஒத்துழைப்பின் சாத்தியமான புதிய பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதில் துருக்கிய விமான சேவையின் பங்களிப்பை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.

      எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இரு அமைச்சர்களும் இந்த விஜயத்தின் போது இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

      இரு அமைச்சர்களும் பாதுகாப்பு, காவல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள ஏனைய பகுதிகள் குறித்தும் ஆலோசித்ததுடன், எதிர்காலத்தில் உயர்மட்ட விஜயங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் எதிர்பார்த்தனர்.

      கோவிட்-19 தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவரமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் மற்றும் 2004 சுனாமிக்குப் பின்னர் தென்னிலங்கையில் வீட்டுக்

      கட்டுமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்காக துருக்கி அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

      பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த இருதரப்பு சந்திப்பில் கலந்துகொண்டனர்.

      வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லுவுடன் இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டிமெட் செகெர்சியோகுலு மற்றும் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர்களும்

      இணைந்திருந்தனர். இந்த விஜயத்தின் போது துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

      இதற்கு முன்னர் ஜூன் 2016 இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.

      வெளிநாட்டு அமைச்சு

        புதிய சொகுசு போக்குவரத்து சேவை
        Posted in இலங்கை செய்திகள்

        முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை

        முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை

        புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

        தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில்,


        புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை

        உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு ,அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

          தற்கொலை
          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை

          அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை

          அவுஸ்ரேலிய பேர்த் நகரில் 40 வயதுடைய இந்தி குணதிலக என்பவர் தனது மகள் ,மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்

          மனைவியை பிரிந்து வசித்து வரும் இவரே இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

          அதிக மன விரக்தியில் இருந்த நிலையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது

          மக்கள் கண்ணீருடன்குழந்தைகள் கொலை புரிய ப்பட்ட பகுதியில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

          இலங்கையர்கள் வெளி நாடுகளில் அதிக மன அழுத்தம் காரணமாக இவ்வாறான
          மரணங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது

            கொரானா
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்

            இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்

            இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு 14 பேர் மரணமாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

            மேலும் குறித்த நோயானது வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்

              நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்

              இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் அருவியில் நீராடிய நால்வர் நீரோட்ட்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியாகியுள்ளனர்

              காணாமல் போன இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

              சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

                பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

                பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

                இலஞ்ச, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்..

                சந்தேகத்திற்குரிய அதிபர், மாணவர் ஒருவரை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                பின்னர் அது 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

                அதிபர் இலஞ்சம் கோரியதாக குழந்தையின் தந்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                பண்டாரகம பகுதியில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                லஞ்சம் , ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர், அதிபர் இலஞ்சம் வாங்கும் வேளையில் மாணவரின் தாயாகக் தன்னை அடையாளப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்

                  பயணிகள் பஸ்
                  Posted in Uncategorized

                  பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்

                  பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்

                  ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                  இந்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

                  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூக்கு இடம் கொடுக்க முயன்ற போது, குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

                  விபத்தில் காயங்களுக்கு உள்ளான 17 தொழிலாளர்களும் டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

                  சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..

                  சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    40 இற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஒமிக்ரோன்

                    40 இற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஒமிக்ரோன்

                    மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது.

                    கடந்த ஒரு வாரத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 1300 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்குள்

                    தொற்றுக்குள்ளான 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

                    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரோ நாளில் நூற்றுக்மேட்பட்ட நோயாளர்களும், 20 கற்பினித்தாய்மார்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

                    மொத்தமாக மாவட்டத்தில் 40 இற்கு மேற்பட்ட கற்பினித்தாய்மார்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பது அறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதன்

                    அபாயத்தினை உணர்ந்தவர்களாக அனைத்து நடவடிக்கைகளிலும் செயற்படவேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் கேட்டுக்கொண்டார்.

                    மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவலைத் தடுக்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனைகள் மாவட்ட செயலகத்தில்

                    வழங்கப்பட்ட போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

                    மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ்வாலேசனைகள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நேற்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      போராட்டங்களை நடத்துவதன் மூலம் தீர்வினை பெற்று விடமுடியாது- முசுலீம் அமைச்சர்

                      போராட்டங்களை நடத்துவதன் மூலம் தீர்வினை பெற்று விடமுடியாது- முசுலீம் அமைச்சர்

                      போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. காணாமலாக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

                      இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                      அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

                      நேற்றைய தினம் நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

                      எனவே அதிலிருந்து ஒன்றை நான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது.

                      கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத்

                      தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த காணாமலாக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

                      ஆனால் நான் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன்

                      பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது

                      போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை அதனை மதிக்கின்றேன் அதனை தடுக்க மாட்டேன் ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்

                        ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்

                        பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                        பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று (28) மாலை குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

                        இதில், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                        சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                        பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்-மனோ கணேசன் எம்பி

                          பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்-மனோ கணேசன் எம்பி

                          பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்; இதுவும் வெளிநாட்டு அழுத்தத்தின் பலாபலன்

                          • தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி
                            பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.

                          அதேவேளை, “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                          வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இதுபற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்புகளில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது

                          என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன். அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.

                          ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.

                          ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை. இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.

                          எனினும், அரசுக்கு அரசு இச்சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது. எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக கலந்துக்கொண்டுள்ளேன்.

                          1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.

                          ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.

                          “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம்

                          Posted in இலங்கை செய்திகள்

                          கிளிநொச்சியில் இளம் பெண் மாயம்

                          கிளிநொச்சியில் இளம் பெண் மாயம்

                          கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக

                          அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                          குறித்த சிறுமி 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதும் குறித்த சிறுமி காணாமல் போனமை

                          தொடர்பில் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

                            பயணிகள் பேரூந்து
                            Posted in Uncategorized

                            பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து

                            பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து

                            ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

                            ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

                            குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.

                            15 பேர் சென்ற இப்பஸ்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த

                            நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

                              நீதிமன்றம்
                              Posted in இலங்கை செய்திகள்

                              மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு

                              மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு

                              முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (27) திறந்து வைத்தார்.

                              முல்லைத்தீவு மாவட்டம் நிலபரப்பில் அதிகளவான நிலப்பரப்பாக காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மக்கள் மிகுந்த தூரங்களில் இருந்து வருகை தரும் போது அவர்களுடைய வழக்குகள் கூப்பிடப்பட்டு அவர்களுக்கு

                              பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் கடமையாற்றிய

                              அதிகாரிகளின் அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

                              ஆரம்பகாலத்தில் துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தர கட்டடம் ஒன்றை

                              அமைப்பதற்கு வழிவகுத்தது அந்த வகையிலே மாங்குளத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அங்கு வழக்கு விசாரணைகள் இடம் பெறுகின்றது.

                              குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வருகின்ற வழக்குகள் புதன்கிழமைகளில் இங்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

                              இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள

                              நீதிமன்ற கட்டடத் தொகுதியினை இன்றைய தினம் வைபவரீதியாக நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்தார்.

                              மாலை 3 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

                              இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத்

                              தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

                              காலப்போக்கில் குறித்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வாரத்தின் 5 நாட்களும் இடம்

                              பெறக்கூடிய வகையில் தனியாக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த நீதிமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                                கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                                இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                                அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                                2022 ஜனவரி28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                                மழை நிலைமை:

                                பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

                                காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                காற்று :

                                நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை

                                காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்

                                காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது

                                மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                கடல் நிலை:

                                மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

                                கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்

                                நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

                                இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்..

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை

                                  துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை

                                  எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்களும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள்

                                  பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

                                  அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றும் சுகாதார நடைமுறைகளைப்

                                  பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

                                  எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார்.

                                  இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

                                  இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                  கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை

                                  டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை

                                  கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

                                  அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

                                  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

                                  சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது.


                                  .

                                  பெண் சடலம்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஆற்றில் இருந்து பெண் சடலம் – பெரும் தொகை பணம் மீட்பு

                                  ஆற்றில் இருந்து பெண் சடலம் – பெரும் தொகை பணம் மீட்பு

                                  இலங்கை மகாவலி ஆற்றங்கரை ஓரமாக பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,குறித்த பெண்ணின் சடலத்தின் அருகில் இருந்த கைப்பையில் இருந்த்து 15 ஆயிரம் ரூபாய்கள் பணமும் மீட்க பட்டுள்ளது

                                  இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன