Posted in இலங்கை செய்திகள்

போதைக்கு அடிமையான சாரதிகள்

போதைக்கு அடிமையான சாரதிகள்

வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10

சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1 ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைபொருளை பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போதைபொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

சிரேஸ்ட பொலிஸ் ஊடகபேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது

    கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது

    ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

    ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கவிழ்ந்த கோழி லொறி
    Posted in இலங்கை செய்திகள்

    கவிழ்ந்த கோழி லொறி – சாரதி கைது

    கவிழ்ந்த கோழி லொறி – சாரதி கைது

    மட்டக்களப்பு- கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமும் மோதிய விபத்தில் மோட்டர் சைக்கிளை

    செலுத்திச் சென்ற பெண், படுகாயமடைந்துள்ளார். கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இன்று புதன்கிழமை (02) அதிகாலையில் இடம்பெற்ற சம்பவத்தில், படுகாயமடைந்த

    பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

    வாழைச்சேனை பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி கோழிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கன்ரர் ரக மட்டக்களப்பில் இருந்து ஊறணிக்கு சென்ற

    மோட்டார் சைக்கிளும், ஊறணி சந்தியில் வைத்தே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

    வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      வீடுகளுக்கு சீல்
      Posted in இலங்கை செய்திகள்

      ஆடம்பர இரண்டு வீடுகளுக்கு சீல்

      ஆடம்பர இரண்டு வீடுகளுக்கு சீல்

      ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன்

      சமில பிரசன்னவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளுக்கு சீல் வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.

      சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு இதற்கான தடையை பெற்றுள்ளது.

      குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த இரண்டு சொகுசு வீடுகளையும் தனது மனைவியின் பெயரில் தெமட்டகொட ருவன் வாங்கியுள்ளார்.

      இந்த வீடுகள் இரண்டும் ரூ. 3 கோடி 46 இலட்சத்துக்கும் மேல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

        காதல் சண்டை
        Posted in இலங்கை செய்திகள்

        யாழ் கோண்டாவிலில் காதல் சண்டை – வீடு உடைப்பு

        யாழ் கோண்டாவிலில் காதல் சண்டை – வீடு உடைப்பு

        கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

        குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

        சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

        மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியது.

        சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.

        கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்.வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

        குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

        இந்த நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          தமிழக காவல்துறையை அலறவிட்ட இலங்கை படகு

          தமிழக காவல்துறையை அலறவிட்ட இலங்கை படகு

          தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

          குறித்த பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக திங்கட்கிழமை இரவு தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

          இதையடுத்து அங்கு சென்ற மெரைன் பொலிசார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

          மீட்கப்பட்ட பைபர் படகு புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்துள்ளது.

          படகில் யாரேனும் ஊடுருவினார்களா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கியுள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

          படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்கப்பட்ட படகை சுங்க துறையினரிடம் ஒப்படைத்தனர்.

          ஒப்படைக்கப்பட்ட படகு டிராக்டர் மூலம் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

          மர்ம படகு குறித்து இலங்கை பாதுகாப்பு படையினரிடம் விசாரித்த போது,

          படகின் பதிவு எண் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் ஆனால் படகு காணாமல் போனதாக மீன் துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு இது வரை எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

          மர்மமான முறையில் இலங்கை படகு கரை ஒதுங்கியது தனுஸ்கோடி பகுதி மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            அவர்களை விடுங்கள் -கோட்டாவுக்கு ஸ்டாலின் கடிதம்

            அவர்களை விடுங்கள் -கோட்டாவுக்கு ஸ்டாலின் கடிதம்

            இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத்

            தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

            இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம்:-

            நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 12 மீனவா்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே மீன்பிடிப்பில் ஈடுபட்டுக்

            கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள காங்கேசன் துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

            இதேபோன்று, மற்றொரு படகில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 6 மீனவா்கள் புதுச்சேரியைச் சோ்ந்த 3 மீனவா்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனா்.

            2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 68 தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் மத்திய அரசு

            மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனா். அவா்கள் தாயகம் திரும்பக் காத்திருக்கின்றனா்.

            இந்த நிலையில், தமிழக மீனவா்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும்

            ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவா்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவா்களையும் அவா்களது குடும்பத்தினரையும் துயரத்துக்கு ஆளாக்குவதோடு, அந்தக் குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன.

            இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா, இலங்கை மீனவா்களுக்கு இடையில் உள்ள நீண்டகாலப் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க, உறுதியான

            வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்கள், 2 விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

              Posted in உலக செய்திகள்

              பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்

              பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்

              தெற்கு ஈரானில் 3.3 என்கின்ற அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது ,இதன் போது

              வீடுகள் குலுங்கி உடைந்து வீழ்ந்தன ,மக்கள் பீதியில் வீதிகள் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

              இது போன்ற பாரிய நில அதிர்வால் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              இலங்கை வங்கிகளில் உள்ள பணத்தை சுருட்ட கோட்டா இரகசிய திட்டம்

              இலங்கை வங்கிகளில் உள்ள பணத்தை சுருட்ட கோட்டா இரகசிய திட்டம்

              இலங்கை வங்கிகளில் பணத்தை வைப்பு செய்து வட்டியை பெற்று வரும் மக்களுக்கு பெரும் ஆப்பு ஒன்றை வைக்க கோட்டபாய முனைந்து வருகிறார்

              நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி ,பொருளாதார பிரச்சனை குறித்து தீர்வு காண்பதற்கு மக்களின் பணத்தை அரசு உடமையாக்கவும் ,அவசரகால நிதியாக அதனை

              பயன்படுத்தவும் கோட்டபாய இரகசிய திட்டமிடல்கள் இடம்பெற்று வருவதான கசிவுகள் வெளியாகிய நிலையில்


              வங்கிகளில் பணத்தை வைப்பு செய்துள்ள மக்கள் அந்த பணத்தை மீள பெற்று வெளி நாடுகளில் பதுக்கி வருகின்றனர்

              இவ்வாறு 260 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய இரு வர்த்தகர்களை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

              இவ்வாறு முக்கிய செல்வந்தர்களை இலக்கு வைத்து கோட்ட பாய முதல் ஆட்டத்தை

              ஆரம்பித்துள்ள நிலையில் வங்கிகளில் பணத்தை வைத்துள்ள மக்கள் பீதியடைந்து வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              வாலிபர் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்

              வாலிபர் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்

              இலங்கை மாபோல பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு கொலையில் முடிந்துள்ளது
              19 வயது வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்

              பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான் நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இவர் மரணித்துள்ளார்

              கொலை குற்ற சாட்டில் கொலையாளி கைது செய்ய பட்டுளளார் ,இலங்கையில் இவ்வாறான கொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

                கயேந்திரகுமார்
                Posted in இலங்கை செய்திகள்

                ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்

                ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்

                ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்

                ஐக்கிய நடக்குகள் மனித உரிமை அவையில் இம்முறை இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் என கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

                இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களும் ,ஆளும் அரசின் கண் மூடித்தனமான செயல் பாடுகளுமே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் பீரிஸ் கூக்குரல்

                  தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் பீரிஸ் கூக்குரல்

                  இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய புலிகள் அமைப்புடன் பேச்சு மேசையில் கலந்து கொண்டவர்களில் பீரிஸ் முதன்மையானவர் ,அவ்வாரண ஒரு தேர்ச்சி பெற்ற ஒருவர் புலிகள் அழிக்க
                  பட்டதன் பின்னரும் தற்போது தமிழர்கள் ஒன்றிணைந்து தீர்வு காண வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

                    தென்கொரியா
                    Posted in இலங்கை செய்திகள்

                    தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

                    தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

                    தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

                    தென் கொரியாவுக்கு இலங்கையில் இருந்து வேலைவாய்ப்பு தேடி அதிக

                    இலங்கையர்கள் ஒரு மாதத்தில் பயணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது

                    இதன் பிரகாரம் சுமார் 169 க்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்

                    வேலைவாய்ப்பு தேடி பயணித்துள்ளதாக புதிய புள்ளி விபரம் வெளியிட பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம் …..
                      சத்தியத்திற்கு வந்த சவால் photo

                      யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம் …..
                      சத்தியத்திற்கு வந்த சவால் photo

                      யாழ் ஆஸ்பத்திரி பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறிய காலங்களில் அரசமருத்துவ சங்கம் என்னும் மருத்துவர்கள் அமைப்பு பல அதிரடியான திறன் மிகு

                      திட்டங்களை மாஸ்டர் பிளானுடன் நகர்த்திவந்தது குறித்த காலத்தில் கடமையாற்றி பதில் பணிப்பாளரின் நேர்மை யும் மக்களிற்காக அற்பணிப்புடன் பணியாற்றும்

                      மருத்துவர்களின் சிந்தனையும் ஒருமித்த செயல் வடிவமே இதுவாகும் குறித்த காலப் பகுதியில் நிகழ்ந்த அபிவிருத்திகள் யாவுமே முன்னுதாரணமானவை என்றே கூறவேண்டும்

                      இங்கு கட்டிடங்களை இடிப்பதும் விற்பதும் பின் புதிய கட்டிடம் கட்டுவதும் என்று ஒரு கட்டமைக்கப்பட்ட நிதித்திருட்டை ஒரு வழிப்பண்ணுமுகமாகவும்

                      மக்களின் தேவைக்கான அபிவிருத்தி என்னும் புதிய தொணிப்பொருளுடன் சத்தியத்திற்கு வந்த சவால் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமேயாகும்

                      நிருபர் – யாழவன் –

                        Posted in இலங்கை செய்திகள்

                        கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்

                        கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்

                        மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர்

                        ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.

                        நேற்று (30) இருவருக்கிடையில் வேலி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட

                        வாய்த்தர்க்கம் முற்றியதால், ஒருவர் மற்றையவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு துண்டுகளாக்கியுள்ளார்.

                        இதனையடுத்து கால்கள் துண்டாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

                        இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான திருமணமாகாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                        அத்துடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது

                        செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் சித்தப்பா என்பதுடன், இவர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்

                          கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்

                          இலங்கை கொழும்பு பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாய் ஒன்றில் இருந்து


                          ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

                          இவர் கொலை செய்ய பட்டு கணவாயில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,

                          இவ்வாறான சடலங்கள் சமீப காலங்காக மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            கொரானா
                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆறு மாணவர்கள் கொரானாவுக்கு மரணம்

                            ஆறு மாணவர்கள் கொரானாவுக்கு மரணம்

                            இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி

                            Dhammissara National school லாய் சேர்ந்த ஆறு மாணவர்கள்


                            அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி

                            இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு

                              ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு

                              தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று

                              தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

                              தமிழரசுக் கட்சியின் மத்தயிகுழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

                              தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,

                              “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தை உடனடியாக

                              அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.

                              எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய

                              சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும்

                              இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ்த்

                              தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.

                              இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில்

                              இல்லை என்கின்ற விடயம் தொடர்பாக கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள். அவ்வாறான பிரேரணை வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

                              அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்கு கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்கு தெரியாது.

                              அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே

                              இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தையும் எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம்

                              கொடுக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்துக்கு

                              நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை

                              அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்கு தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்,

                                பெண் சிப்பாய்கள்
                                Posted in இலங்கை செய்திகள்

                                லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்

                                லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்

                                லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (30) திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

                                இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.


                                6லெபனானுக்குச் செல்லும் இலங்கையின் பாதுகாப்புப் படை 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்களைக் கொண்டுள்ளது. இதில் இலங்கை காலாட் படையணி ,இலங்கை பொறியியலாளர் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இயந்திரவியல் காலாட்

                                படையணி ,கமாண்டோ படையணி, விஷேட படையணி ,பொறியாளர் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ மருத்துவப்

                                படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி,

                                இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி என்பவற்றின் படையினர் அடங்குவர்.

                                ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான இராணுவ பணிப்பகம் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக லெபனானின் பாதுகாப்புப் பணிகளை

                                மேற்கொள்வதற்காக, இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கான முதல் பெண் படைக் குழு இதுவாகும்.

                                நுழைவாயிலில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை, அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

                                சில நிமிடங்களுக்குப் பின்னர், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியும் பிரதி பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு, அன்றைய பிரதம அதிதியை வரவேற்றதுடன் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச்

                                சென்றதுடன்இ அணிவகுப்பின் தளபதியின் வேண்டுகோளுக்கமைவாக, அன்றைய பிரதம அதிதியிடம் அணிவகுப்பு மீளாய்வு செய்யுமாறு அழைக்கப்பட்டனர்.

                                ஐக்கிய நாடுகளின் பணிக்கு அடையாளத்தின் முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், அன்றைய பிரதம அதிதியினால் தேசியக் கொடிஇ இராணுவக் கொடி,

                                ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கொடி ஆகியவற்றை சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக கையளித்தனர், இவை

                                அவர்களின் பணிகளுக்கான முன்னேற்றத்தினை குறிக்கிறது. மேலும் முழுமையான பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்கவும் இவர்கள் தயாராக உள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்ற வகையிலும் அமைந்தது.

                                இராணுவத்தின் அணிவகுப்பு முடிந்தவுடன் இராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டிற்கு பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத்தருமாறும்

                                அவர்களின் வெளிநாட்டு பணிகளுக்கான மதிப்பையும் எடுத்துரைத்தார. லெபனானில் நமது படைகள் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றதால்,

                                பணியாற்றும் போது மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும், லெபனானில் அவர்களின் பணிகளுக்கான அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.

                                “1881 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியானது, 1900 ல் ஆபிரிக்காவின் போயர் போருக்கு இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களை அனுப்பிய பின்னர் அதன் அனுபவங்களுக்காக புகழ்பெற்றது மற்றும் 2004 இல் ஐக்கிய

                                நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக ஹைட்டிக்கு செல்லும் முதல் குழுவை அனுப்பியது இலங்கை இலேசாயுத காலாட் படையணியாகும். ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும், இலங்கையின் துணை நிரந்தரப்

                                பிரதிநிதியாகவும் நான் கடமையாற்றிய காலத்தில், 2010ஆம் ஆண்டு முதல் குழுவை லெபனானுக்கு அனுப்ப முடிந்தமையையிட்டு ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் நியூயோர்க்கில் ஐக்கிய

                                நாடுகளில் பணியாற்றிய போது இதுபோன்ற பல வெளிநாட்டு வாய்ப்புகளைப் பெற முடிந்தது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை குழுவில் முதன்முறையாக பெண் சிப்பாய்கள் இணைந்ததைக் கண்டு நான் சமமான

                                மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைப் பொருட்படுத்தாமல், நீங்கள் அனைவரும் மிக உயர்ந்த ஒழுக்கம், கடமைகளில் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப்

                                பேணுவீர்கள் என்று நம் நாடும் நானும் எதிர்பார்க்கிறோம். என்று பிரதம அதிதியான இராணுவத் தளபதி படையினரிடம் கூறினார்.

                                ஏற்கனவே ஐக்கிய நாடுகளில் இடைக்காலப் பணியில் சேவை செய்து வரும் 12 வது இலங்கைக் குழு, ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு இணங்க லெபனானில் தங்கள் சேவைக் காலம் முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது

                                . அன்றைய பிரதம அதிதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனான குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை அடுத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியின்

                                தலைமையகத்தின் பிரதம அதிதியினால் பார்வையாளர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது கையொப்பமிட்டதுடன், அன்றைய நிகழ்ச்சி நிரல் முடிவுக்கு வந்தது.

                                நிகழ்வில் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, , பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, முதன்மை

                                பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள் பிரதான, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

                                2010 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவம் லெபனானில்

                                சேவையாற்றுவதற்காக இது போன்ற 11 குழுக்களை இன்றுவரை அனுப்பியுள்ளது. இந்த பணி 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது மற்றும் 2010 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முதலாவது பெரிய குழு அங்கு அனுப்பப்பட்டது.

                                  சிறுநீரக அறுவை சிகிச்சை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள் video

                                  யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள்

                                  யாழ்ப்பாண மருத்துவமனையில் இதுவரை சிறுநீராக மாற்று சிகிச்சை மையம் இல்லாமை இருந்தது ,இதனை அடுத்துசிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் மற்றும்

                                  குத்திக்கலன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் முயற்சியால் தற்போது புதிய சிறுநீரக மாற்று சிகிச்சை மையம் ஒன்று புதிதாக ஆரம்பிக்க படுகிறது

                                  இந்த சிகிச்சையை மேற்கொள்ள மக்கள் கண்டி ,மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் நிலையே இதுவரை இருந்து வந்தது

                                  மேற்படி நிலையம் இங்கு புதிதாக அமைய பெறுவதால் ,வடக்கு மக்கள் இங்கே இதே

                                  சிகிச்சையை, கொரனோ காலத்திலும் மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்

                                  செய்தி காட்சி – யாழவன்