பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம் ,மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு

கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.

சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் பெற்றோர்கள்

சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்

வாகனம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்குதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை திருப்பி கையளிக்குமாறு அறிவிப்பு வந்தது.

பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது

இந்நிலையில் தற்போது பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர், அடுத்த வாரம்,

பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களை

பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைப்போம் எனத் தெரிவித்துள்ளார்

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை ,பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்,

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்

ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் அபாயத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு ,மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

காணி ஒன்றை பண்படுத்தலில் போதே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

குறித்த தகவல் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள் ,கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு

இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

(02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர்

வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது,

டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து

அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு

பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு

பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு ,2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள்

நுகர்வோர் விவகார ஆணையம்

அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.

அக்டோபர் 1, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் SLS

சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால்

தரநிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மற்றும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால், அத்தகைய போத்தல்களை உற்பத்தி

செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்வது, சேமித்து வைப்பது அல்லது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு

கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு

கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு ,இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது.

நவியாழக்கிழமை(02) காலை 6.00 மணியளவில் தனது முன் கதவைத் திறந்தபோது பை அசைவதைக் கண்டதாக அவர் கூறினார்.

அதை அவிழ்த்தபோது, ​​குழந்தை உள்ளே இருப்பதையும், குழந்தை ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்ததைக் காட்டும் மருத்துவ விளக்கப்படத்தையும் கண்டார்.

குழந்தை நிகவெரட்டிய ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது, அங்கு மருத்துவர்கள் அவள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ‎“நான் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஒரு அனுபவம் வாய்ந்த

குடும்ப சுகாதார அதிகாரி

குடும்ப சுகாதார அதிகாரி. குழந்தை எடை குறைவாக இருப்பதை உணர்ந்தேன்.

பால் பாட்டில், உடைகள் மற்றும் பால் பவுடர் பாக்கெட் உட்பட குழந்தையின் அனைத்துத் தேவைகளையும் கண்டுபிடிக்க பையைச் சரிபார்த்தேன்.

இருப்பினும், தாயின் பெயர் மற்றும் பிறந்த இடம் விளக்கப்படத்தில் அழிக்கப்பட்டிருந்தன. பின்னர் நான் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தேன்,

”என்று அவர் கூறினார். தாயாரின் இருப்பிடத்தைக் கண்டறிய, தலைமையக மஹோ காவல்துறை அதிகாரி ஏ.ஏ.பி.ஏ. குலதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில்,

குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக பொறுப்பதிகாரிஐ.பி. அபேக்ஷா மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள்

பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள்

பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள் ,உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது

போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மீட்டியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காவலில் வைக்கப்பட்ட நான்கு மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள்.

நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாணவர்களும் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சிறுவர்கள் தினத்தன்று நேற்று முன்தினம் (1) பாடசாலைக்கு மது போத்தலைலை கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மது கொண்டு வந்ததாக பாடசாலையிலிருந்து கிடைத்த தகவலின்படி, அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையின்

போது, ​​ஹிக்கடுவையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி தண்ணீர் போத்தலில் ஊத்திக்கொண்டு தெரியவந்தது.

கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின்
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின்

கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின்


கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின் ,இலங்கை படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.

மத்திய அரசுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஏன் கசக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி ,பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பக்கமுன பிராந்திய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று

வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி

குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு ,கொழும்பில் உள்ள நீச்சல் கிளப்பின் நீச்சல் குளத்தில் விழுந்த தனது எட்டு வயது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக குறித்த சிறுவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

பிறந்தநாள் விழாவிற்காக அங்கு சென்றிருந்த சிறுவன், நீச்சல் குளத்தில் விழுந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

​​சம்பவத்தின் போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்
Posted in இலங்கை செய்திகள்

தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்

தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்

தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம் தொட்டலங்க பொட்டி அக்கா’ எனப்படும் விந்தனி பிரியதர்ஷிகாவுக்கு சொந்தமான கிரேண்ட்பாஸ் பர்குயூஷன் பகுதியிலுள்ள 03 கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம்

இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம் பணம் ஈட்டியதாகக் கூறி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபர் நடத்திய விசாரணையை தொடர்ந்து குறித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள்
Posted in இலங்கை செய்திகள்

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள்

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள்

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின்

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா

காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட

செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர்

கிருஷ்ணசந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள்

கிருஷ்ணசந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல்

குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல்

குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல் ,ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம்

இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

மேலும் 17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில்

ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு

உத்தரவிடப்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி பின்னணி

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) அன்றுமீட்கப்பட்டிருந்தது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த

குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்17 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்

கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளார். உங்களுக்கும் பெண்

குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து

அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவர் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.

இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜேராம இல்லம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை
Posted in இலங்கை செய்திகள்

விஜேராம இல்லம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

விஜேராம இல்லம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

விஜேராம இல்லம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக .

ஒப்படைக்கவில்லை என்று அரசாங்கப் ஊடகப் பேச்சாளர்

ஒப்படைக்கவில்லை என்று அரசாங்கப் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குப் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, மஹிந்த வளாகத்தை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் ஆகின்றன என்றார்.

இந்த விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சகம் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ விரைவில் ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடித்து கொழும்புக்குத் திரும்பக்கூடும் என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார்.

ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்)

ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துவிட்டு தங்காலைக்குத் திரும்பினார்.

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் ஓய்வு பெற்ற எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம்,

செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் எந்த திருத்தங்களும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது ,சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள் நடத்திய சட்டவிரோத ஜோதிட நிலையம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் இந்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது.

இந் நிலையத்தினை இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த மூவரே நடாத்தி வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, நேற்று பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து மேற்படி இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்தும் ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப்

பிரஜைகளன் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது , அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவத்தது.

இதனையடுத்து மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்

கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு

கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு

கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு ,கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு வின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் சிசு கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீட்கப்பட்டிருந்தது.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் , ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும்

நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாயை செவ்வாய்க்கிழமை (30) கைது செய்தனர்.

அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயது உடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, காதலியின் வீடு சென்று தனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்

ஆரம்பக் கட்ட விசாரணை

கொண்டு வந்துள்ளார் என ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்துள்ளேன்.

உங்களுக்கு பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவர் உறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தையின் தொப்புள் கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து ரத்தம் கசிந்ததை அடுத்து அருகில்

உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.

இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பினார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது பயணத்தை

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

முடித்துக்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டார்.

சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத்

அவருடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை தூதுக்குழு வந்தடைந்தது

பொலிஸ் முன்னாள் அதிகாரிக்கு கடூழியசிறை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் முன்னாள் அதிகாரிக்கு கடூழியசிறை

பொலிஸ் முன்னாள் அதிகாரிக்கு கடூழியசிறை

பொலிஸ் முன்னாள் அதிகாரிக்கு கடூழியசிறை 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள்

பொரளை காவல்துறை அதிகாரி

பொரளை காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார்.

2009 செப்டம்பர் 13, அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் அந்தரங்க பாகங்களை பாலியல் ரீதியாகத் தொட தனது

உடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும்,

இதன் மூலம் தண்டனைச் சட்டத்தின் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர்

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் ஷைனி வீரசூரிய, குற்றம் சாட்டப்பட்டவர், சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து, ஒரு குழந்தைக்கு

எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்ய தனது அதிகாரப்பூர்வ பதவியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை காவல் துறை அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறுவதாகவும், சட்ட அமலாக்க அதிகாரிகளிடமிருந்து

எதிர்பார்க்கப்படும் சமூக நீதியை கடுமையாக மீறுவதாகவும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இது ஒரு சாதாரண குற்றம் அல்ல, மாறாக மிகவும் கடுமையான இயல்புடைய குற்றம் என்று நீதிபதி வலியுறுத்தினார், குறிப்பாக சமூகம் இதுபோன்ற

குற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக நீதியைப் பாதுகாக்க காவல் துறையை நம்பியிருப்பதால். இந்தக் குற்றத்தைச் செய்ததன் மூலம், குற்றம்

சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் நம்பிக்கையை மீறியது மட்டுமல்லாமல், காவல் துறையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளார்.

சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், 1995 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் கடுமையான பாலியல்

துஷ்பிரயோகம் என்ற குற்றம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது.

இதுபோன்ற குற்றங்களை விசாரிக்கும் பொறுப்புள்ள ஒரு காவல்துறை அதிகாரியால் இதுபோன்ற கடுமையான குற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது இந்த விஷயத்தை மேலும் தீவிரமாக்கியது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலதிகமாக, ரூ. 25,000 அபராதம் விதித்து

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 400,000 ரூபாய் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

10கோடி ரூபாய் மோசடி இருவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

10கோடி ரூபாய் மோசடி இருவர்கைது

10கோடி ரூபாய் மோசடி இருவர்கைது

10கோடி ரூபாய் மோசடி இருவர்கைது ,2024 ” உறுமய ” திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) மோசடி செய்து

பெண்ணும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது

தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு சந்தேக நபரும் ஒரு பெண்ணும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது

செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பணம் மோசடி செய்யப்பட்ட நபரை சிறிகொத்த தலைமையகத்திற்கும் கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான

ஹோட்டலுக்கும் அழைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 43 வயதான சந்தேக நபரான பெண், பக்கமுன பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு விடுதியில்

தற்காலிகமாக வசித்து வருகிறார்

தற்காலிகமாக வசித்து வருகிறார் என்றும், சந்தேக நபர் 55 வயதான மகரகமவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உறுமய திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாகக் கூறி கல்முனை பகுதியில் 164 தொழிலதிபர்களை ஏமாற்றி,

தன்னை ஒரு வழக்கறிஞராக அறிமுகப்படுத்தி, தொழிலதிபர்களை ஏமாற்றி, ஒருவரிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்

என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.