Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் சில
வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்
தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
இலங்கை Alawwa-குருநாகல் வீதியில் கார் மற்றும் டிப்பர் ராக் என்பன
திடீரென மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஐவர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் வீதி விபத்துக்களை தடுத்திட புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ள போதிலும்
இவ்வாறான விபத்துக்களை ளி தடுக்க முடியவில்லை

திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
ஹம்பலாங்கொடை, பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே, இவ்வாறு பாதசாரி ஒருவர்
மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேன்முறையீட்டுக்காக
விண்ணப்பிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை இலக்கம் : 244 / 2020
வெளியிடப்பட்ட நேரம் : 09.15
ஊடக அறிக்கை
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் – 2020
மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள, இருப்பினும்
அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து, நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்துவம் இருந்தமை (EPF) மற்றும் தொழிலில் (Jop)
ஈடுபட்டிருந்தமை என்ற ரீதியில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்;ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தகுதிகளைப் பெறுவார்களாயின்
பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின்
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பிக்குமாறும், 2020.09.15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டை பிரதேச
செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு
கொழும்பு வடக்கு புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு
கொழும்பு வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர
தீர்வாக புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி நேற்று (21.08.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கொழும்பு பெருநகரை அண்மித்த நகர அபிவிருத்தி திட்டமாக இலங்கை
காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அலுத் மாவத்தை பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டு ஆரம்பமாகும் இந்த சுரங்கப்பாதை புதிய முகத்துவாரம் பகுதி
ஊடாக நிலத்தடி வழியாக சென்று முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடலுக்கு திறக்கப்படுகிறது.
இன்று நிறைவுசெய்யப்பட்ட சுரங்கப்பாதையின் நீளம் 778 மீட்டராகும். 3 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப்பாதையின் உள்ளே
ஒரு திடமான கொன்கிரீட் புறணி அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிறைவில், ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை என்ற வகையில் வினாடிக்கு 15,000 லீட்டர் நீர் கடலுக்குள் விடப்படும்.
புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை கட்டுமானம் சைனா பெட்ரோலியம் பைப்லைன் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்
மேற்கொண்டது. கட்டுமான மேற்பார்வை யூஷிங் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டினால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த,
இலங்கைக்கான சீனத் தூதர் ஹூ-வே மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் இன்று திருவிழா ஆரம்பமாகியுள்ளது
பல நூறு மக்கள் திரண்டு வந்து இந்த ஆலயத்தில் வழி பாடுகளை செய்வார் ,ஆனால் இம்முறை மக்கள் அதிக வரவின்றி ஆலயம் வெறிச்சு போயுள்ளது
கொரனோ நோயின் பாதிப்பும் ,குருக்கள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எதிரொலி காரணமாகவும் இந்த மக்கள் வரவு வீழ்ச்சியுற்றுள்ளது
லூசியம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பத்துக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளமை தெரிந்ததே
தொடர்ந்து மக்களை சமூக இடைவெளி விட்டு இருக்கும் படி அறிவுறுத்த பட்டு வருகின்றனர் ,
முக கவசம் அணியாமல் சென்றால் பிரிட்டனில் தண்டம் அறவிட படுகிறது ,
மக்கள் அதிகமாக ஒன்று கூடினால் அந்த நிறுவனம் சீல் வைக்க பட்டு இழுத்து மூடப்பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் குற்ற செயல்களை தடுக்கும் முகமாக இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 103,651
பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,கடத்தல் மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட நபர்களே குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் நீதிமன்றினால் தேட பட்டு வைத்த குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சுமந்திரன் மீது கிடுக்கு பிடி விசாரணை – சிறை செல்வாரா ..?
சுமந்திரன் மீது கிடுக்கு பிடி விசாரணை – சிறை செல்வாரா ..?
இலங்கையில் புதிதாக ஆளும் கொட்ட பாயா அடச்சியில் பழிவாங்கும் அரசியல் படலம் தொடர்ந்து வருகிறது
,இவ்வேளையில் நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ
சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மீட்டது ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த விசாரணைகளின் பின்னர் சுமந்திரன் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
சட்டவளாராக விளங்கும் சுமந்திரன் முதல் முறையாக இவவ்வாறு கோட்டா ஆட்சியில் விசாரணைக்கு உட்படுத்த படுகின்றார்
இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்என்ற நிலையிலும் பார்க்க படுகிறது
கடந்த தேர்தலில் சர்ச்சை கருத்துகளினால் மக்கள் மனதில் இருந்து தூக்கி
வீச பட்ட சுமந்திரன் நல்ல பெயரை வாங்கி கொள்ள இவ்வி தமான நாடக
விளையாட்டுக்கள் இடம்பெற்றாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை
இலங்கையில் கொரனோ நோயினால் 2,918 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் 2,918 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,918 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கடந்த தினம் மட்டும் புதிதாக 19 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தேர்தல் முடிவுற்ற நிலையில் திடீரென பாதிப்பு எண்ணிக்கியை அதிகரித்து அறிவித்து வருகிறது சுகாதார அமைச்சு என்பது குறிப்பிட தக்கது
எவருக்கும் அடிபணியாது – நாட்டை கொண்டு செல்வேன் – கோட்டா முழக்கம்
எவருக்கும் அடிபணியாது – நாட்டை கொண்டு செல்வேன் – கோட்டா முழக்கம்
9வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு…
அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்…
19வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்…
ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு…
அமைச்சுக்கள்இ நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி…
மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை…
எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில்
மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள்
வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக
நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம் போன்ற அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும்
பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக ஆகியோர் வரவேற்றனர்.
பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.
ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார
முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2ஃ3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையுடன் ஸ்திரமான ஆட்சியொன்றை அமைக்கும் வாய்ப்பு அரசாங்கத்திற்கு
கிடைத்துள்ளது. இந்த மக்கள் ஆணையை வழங்கிய நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதிஇ மக்கள்
அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம்
பொறுப்பேற்றோம். இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நோய்த்
தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது. இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு
தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை கிடைத்துள்ள மிகப்
பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும்இ பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் தான்
உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதிஇ அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தான் முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட ஆலோசனை சபை
ஒன்றை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் விசேட செயலணி ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம்இ இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச்
சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய
சூழல் ஒன்று மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தான் உறுதியளித்தவாறு பொதுவான மக்கள் வாழ்க்கைக்கு தடையாக உள்ள பாதாள உலக செயற்பாடுகள்இ போதைப்பொருள்
பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டு இருப்பது மக்களின் நம்பிக்கை மேம்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தில் தெளிவானதொரு மாற்றத்தை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்காக
அதுவரையில் இருந்துவந்த சம்பிரதாயங்களை மாற்றி நிபுணர் குழுவொன்றின் ஊடாக தகைமைகளை கண்டறிந்து
நியமனங்களை மேற்கொள்ளும் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று உற்பத்தி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயத்துறையில் புத்தெழுச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுதேச வர்த்தகர்களையும் தொழிற்துறையாளர்களையும் பாதுகாப்பதற்கு இறக்குமதியை மட்டுப்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படை பொறுப்பு மக்கள் சேவையாகுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதிஇ அனைத்து பதவிகளும்
பொறுப்புக்களே அன்றி வரப்பிரசாதங்கள் அல்ல என்றும் அதனை நினைவில் வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுதந்திரம் பெற்று 72 வருடங்களின் பின்னரும் மக்களின் பெரும்பாலான சாதராணமான தேவைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தான் தேர்தல் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது நேரில் கண்டுகொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்இ பல ஆண்டுகளாக தாம் வாழ்ந்து வரும் காணிகளுக்கு உரிய உறுதிகள் கிடைக்கப்பெறாத மக்கள் உள்ளனர். குடிநீர் பிரச்சினைஇ யானைகள் – மனிதர்கள் மோதல் பிரச்சினையை தீர்த்தல்இ கிராமிய வைத்தியசாலைகளின் வளங்கள்இ வசதிகளை மேம்படுத்தல்இ அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்குதல் போன்றவற்றுக்கு ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு குறுகிய காலஇ நீண்டகால தீர்வுகள் வழங்கப்படுவதுடன்இ தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்திஇ ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் அடிப்படை இலக்காகும். விவசாயத் துறையை முழுமையாக சேதன பசளைப் பாவனைக்கு மாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
துரிதமானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான அரச சேவையை தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்இ அனைத்து அமைச்சுக்கள்இ நிறுவனங்களில் வீண்விரயத்தையும் ஊழலையும்
முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் வீண்விரயம்இ ஊழலுடன் சம்பந்தப்படுபவர்களுக்கு அவர்களது
தராதரங்களை பொருட்படுத்தாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் பின்னிற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஏதேனும் ஒரு அமைச்சு அந்த
இலக்குகளை அடைவதில் பின்னிற்குமாயின்இ அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான
மாற்றங்களை செய்வதற்கும் தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி மக்களிடம் சென்று அவர்களது
உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறுஇ
19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய
அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் போது ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற
எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
‘நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாடு குறித்து பெருமையடைகிறேன். எனக்கு எனது நாடு பற்றிய ஒரு தொலைநோக்குள்ளது. எமது நோக்கம் வினைத்திறன் மிக்க
பிரஜைஇ மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்இ ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கொண்ட சுபீட்சமான தேசத்தை
கட்டியெழுப்புவதாகும்’ எனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ மக்களுக்கு உறுதியளித்த சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக
தன்னுடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் நட்புக் கரம் நீட்டி அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள்
யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள்
யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில்
முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்றைய (20) தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொராணா தாக்கத்துக்கு பின்னர்
இடம்பெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகளுடைய பாதிப்புகள் தொடர்பில் விவசாய சம்மேளத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
உரப் பாவணை மற்றும் அதனுடைய தாக்கம், அதனுடைய பாவணை முறை தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், சேதனப் பசளையினுடைய பயன்பாடு மிகவும் குறைவாக
இருப்பதாகவும் அசேதனப் பசளையின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில்
உருவாக்கப்பட்டுள்ளன அவற்றினுடைய செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
வேலணைபிரதேச செயலர் பிரிவில் உள்ள சேதனப் பசளை தயாரிக்கும் இடம் செயற்பாடு இல்லாத நிலையில்
காணப்படுவதாகவும். எதிர்வரும் காலங்களில் வேலணை பிரதேச பிரிவில் உள்ள சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினை சரியான
முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை சில பிரதேச செயலர் பிரிவுகளில் சேதனப் பசளையினுடைய பயன்பாடு மிகவும் அதிகரித்து
காணப்படுகின்றது. குறிப்பாக புத்தூர் சாவகச்சேரி கரவெட்டி போன்ற பிரதேசங்களில் இந்த சேதனப் பசளை பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அசேதனப் பசளை அதிக விலையிலேய தனியார் கடைகளில்; பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்
குறிப்பிடப்பட்டது. இதனை விலை கட்டுப்பாட்டு பிரிவினர் மூலம் கட்டுப்படுத்தி மக்களுக்கு சரியான விலையை உறுதிப்படுத்தி
விற்பனை செய்யக்கூடிய நிலைமையினை ஏற்படுத்துவதாகவும்; தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

262 மில்லியன் ரூபாசெலவில் -மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிலையம்
262 மில்லியன் ரூபாசெலவில் -மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிலையம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுவின்
கூட்டம் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே.ஜேக்கபின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயல் ஊடக அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளது. அவ் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்ட அமுலாக்கலின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகராலயம், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
மற்றும் திட்ட முகாமைத்துவ திணைக்களம், நிதி அமைச்சின் கண்காணிப்பு பிரிவு, மற்றும் ஒப்பந்ததாரரான மல்வத்தை
கொன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியக (CECB) திட்ட ஆலோசகரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த திட்டமானது 262 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடன் உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டம் (HICDP) என்ற அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நவீனமயப்படுத்தல் மூலம் கிழக்கு மாகாணத்தை சூழவுள்ள மக்கள் நன்மையடைவர்.
மட்டக்களப்பில் சுகாதார பராமரிப்பு அலகுகளை நிர்மாணித்தமை, 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை போன்ற உதவித்திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமாக இலங்கையின்
சுகாதார உட்கட்டமைப்பினை மேலும் வலுவாக்குவதில் இந்தியா தொடர்ந்தும் தனது உறுதிப்பாட்டை கொண்டிருக்கிறது. கொவிட் நோய் நெருக்கடியான காலப்பகுதியில் இந்தியா 25 தொன்கள்
நிறையுடைய அவசர மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது. அத்துடன் கண்டியில் உள்ள தேசிய வைத்திய சாலையில் கொவிட் தனிமைப்படுத்தல் விடுதி
ஒன்றினை அமைப்பதற்காக சார்க் அபிவிருத்தி நிதியம் ஊடாக 01 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட உதவியாக வழங்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு மேற்கொண்டுவரும் மக்களை இலக்கு வைத்த அபிவிருத்தி ஒத்துழைப்பின்
தொடர்ச்சியாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 517 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான ஒட்டுமொத்த
திட்டங்களில் 92 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video
எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video
பாட்டு தலைவன் பால சுப்பிரமணியம் மீண்டும் மீண்டு வர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் 45 ஆயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளனர்
அனைவரும் கண்ணீர் மல்க பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் ,அவர் தம் நெஞ்ச குமுறலை கொட்டி தீர்த்துள்ளனர்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி
இன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஊந்துருளியில் பயணித்த இரு வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர்
வேகமாக பயணித்த ஊந்துருளியை கட்டு படுத்த முடியாது சாரதி திணறியதால் மரத்தில் மோதி பலத்த காயமடைந்தனர்
யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்
வாலிபர்களின் அலட்சிய போக்கும் ,இவ்வாறான வேகமான வாகன செலுத்துதல் ஊடாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்
16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்
கடந்த நலலாட்சி அரசில் சிறை படுத்த பட்ட பிள்ளையான் இன்று ஒன்பதாவது பாராளுமன்ற மார்வில் கலந்து கொண்டார்
நீதிமன்றின் விசேட அனுமதியை பெற்று பாராளுமன்றம் வருகை தந்த இவர் ,நல்லாட்சி அரசு தொடர்பாக கிழித்து தொங்க விட்டார்
இலங்கை தமிழர் வரலாற்றில் சிறையில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழர் இவராகத்தான் இருக்க முடியும்
தன்னை வெல்ல வைத்த மக்களிற்கு தான் நல்லதை செய்ய வேண்டும் எனவும் முழங்கி தள்ளினார்
எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்
எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன இதனை இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
ரணில் படுதோல்வி அடைந்த நிலையில் சஜித் இவ்வாறு பதவி ஏற்றுள்ளமை ரணிலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக படகில் வந்த MP
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக படகில் வந்த MP
9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது. புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு
செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில்
கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி
செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள்
மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

முதலாவதாக கூடும் பாராளுமன்றம் – -விக்கியரும் வந்தார்
முதலாவதாக கூடும் பாராளுமன்றம் – -விக்கியரும் வந்தார்
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில்
கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்

12 வயது மாணவனை கற்பழித்த வாத்தியார் கைது
12 வயது மாணவனை கற்பழித்த வாத்தியார் கைது
இலங்கையில் தனியார் வகுப்புகளில் ஆசிரிராக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய ஆசிரியர் ஒருவர் 12 வயது மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்
மேற்படி சம்பவம் போலீசாருக்கு தெரியவரவே தற்போது அவர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்
இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது
இலகுவாக மக்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சட்ட மாற்றம்
இலகுவாக மக்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சட்ட மாற்றம்
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பொது மக்களுக்கு வசதியானது சட்டமே அன்றி அது சிரமங்களை
அளிக்கக்கூடியதாக இருக்க கூடாது என்று பஸ் போக்குவரத்து சேவை மற்றும் ரயில் பெட்டி மற்றும் மோட்டார் வாகன
தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்தார்.
தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் பொது மக்களுக்கு தேவையற்ற
சிரமங்களை ஏற்படுத்தும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் வீதிகளில் பயணிக்க முடியாத
அளவிற்கு புகை வாகனங்களில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தில் ஏதோவொரு
இடத்தில் தவறு இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் சட்;டங்களை நீக்குவதே ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.







