Tag: திடீர் துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்
திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 22/08/2020 Leave a Comment on திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
ஹம்பலாங்கொடை, பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே, இவ்வாறு பாதசாரி ஒருவர்
மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







