Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு
பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பண்டாரவளை ஞாயிறு சந்தையை நடத்துவது மறுஅறிவித்தல்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பண்டாரவளை நகரசபை தலைவர் ஜனக்க நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில், பண்டாரவளையிலுள்ள கிராமங்கள், தோட்டங்களுக்கு
அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
வெல்லவாய, வெலிமடை, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவான
விவசாயிகள், பண்டாரவளை ஞாயிறு சந்தைக்கு மரக்கறிகளைக் கொண்டுவந்து
விற்பனை செய்வதாகவும் அத்துடன், நுகர்வோர் உட்பட பெரும்ளவானோர்
இந்தச் சந்தையால் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்த அவர், அவர்களது
சுகாதார பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மறுஅறிவித்தல் வரை ஞாயிறு சந்தையை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு
களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு
மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல்
ஊரடங்குச் சட்டம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல்
வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக
கொவிட்-19 வைரஸைத் தடுக்கும் மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவல, அளுத்கம
ஆகிய பிரதேசங்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்
நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்
நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும் என சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அவ்வாறு நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பவில்லை என்று பொலிஸ் ஊடகப்
பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்போது 50 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே அமுற்படுத்தப்பட்டிருப்பதாக
தெரிவித்த அவர், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் உள்ள மக்களும் அவசியமற்ற பிரயாணங்களைத் தவிர்த்து
வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸ் ஊடகச் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.
38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது
38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது
2020 அக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கடற்படையினர் மற்றும்
காவல்துறையினர் இனைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் போல்டர் துடுவ, பவுல் துடுவ, கோபால்புரம், நயாரு ஆகிய கடற்பகுதிகளிலும்இ கொடுவமட களப்பு பகுதியிலும் மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தியும், மின்சார விளக்குகளைப் பயன்படுத்தியும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில்
ஈடுபட்ட 28 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன 07 டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் பல மீன்பிடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் உச்சமுனாய் தீவுக்கு வட மேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில்
ஈடுபட்ட 08 நபர்கள் ifJnra;ag;gl;ldu;. 02 டிங்கி படகுகள் மற்றும் சில சுழியோடி பொருட்களுk; கைப்பற்றப்பட்டன
மேலும், மன்னார் பொலிஸாருடன் ஒருங்கிணைந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை
நடவடிக்கையின் போது சங்குகள் சேகரிக்கும் இடமொன்றில் இருந்து 70 மிமீ க்கும் குறைவான விட்டம் கொண்ட 60
சங்குக்களுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். மேலும்,அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 1814 சங்கு ஓடுகளை சட்டவிரோதமான
முறையில் சேகரித்து வைத்திருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 55 வயது வரையிலான பொடுவக்கட்டு, குச்சவேலி, சாண்டிபே, நிலாவேலி, இக்பார் நகர், கோக்கிலாய், கந்தக்குலிய, கல்பிட்டி மற்றும்
இருக்குளம்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு இயக்குநர்களிடம், முல்லைதீவ், குச்சவேலி, கல்பிட்டி மீன்வள ஆய்வாளர்களிடம் மற்றும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட்
#தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்தார்.
இந்த நோயாளி 56 வயதைக் கொண்ட பெண் ஆவார். அத்தோடு குளியாப்பிட்டி, ஊரலிய, கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான
இவர் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன், நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.
இது இலங்கையில் பதிவான 15ஆவது கொவிட் நோயாளியின் மரணமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
பிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு
பிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு
ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இன் தடை மீதான மேன்முறையீடு
ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் 2020 அக்டோபர் 21 ஆந் திகதிய
திறந்த தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மார்ச் 08 ஆந் திகதியிட்ட ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க செயலாளரின் தீர்மானத்தை எதிர்த்து எல்.ரீ.ரீ.ஈ. முற்போக்கு அமைப்பால் 2019 மே மாதம் தாக்கல்
செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பிரதிபலிப்பாக அமையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு
ஆணைக்குழுவின் இந்த தீர்மானமானது, 2000 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின்
(எல்.ரீ.ரீ.ஈ.) மீதான தடையை நீக்குவதற்காக குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான
பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து
பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும்
சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், இங்கிலாந்தில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும்.
வன்முறையைத் தூண்டி, நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தங்களுடன் இணைந்த குழுக்களின்
எச்சங்கள் வெளிநாடுகளில் செயலில் உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான போதுமான சான்றுகள் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றன. இலங்கையின் தேசிய
பாதுகாப்பு மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதுடன், பயங்கரவாதத்திற்கு
எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எப்பொழுதும் தனது ஆதரவுகளை வழங்கும்.
வெளிநாட்டு அமைச்சு
கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள
அரச மருந்தகங்களிலிருந்து (ஒசுசல), ஒன்லைன் மூலமாக
மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கையினூடாக இது தொடர்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அரச தகவல் பணிப்பாளர் ஜெனரல் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தலுக்கு அமைவாக, ஒன்லைன் மூலமாக மருந்துகளை
விநியோகிப்பதை மீள ஆரம்பிக்குமாறு, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர்
ஜெனரல் டொக்டர் எஸ்.ஸ்ரீதரன் அரச மருந்தகங்களுக்குப் பணித்துள்ளார்.
கொரனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ,558 ஆக உயர்வு
கொரனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ,558 ஆக உயர்வு
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-23 06:31:27
6287
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
2712
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
3561
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
14
இறப்பு எண்ணிக்கை
இதேவேளை, திவுலபிற்றி கொவிட் கொத்தில் நேற்றிரவு வரை பதிவான மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து
558 ஆகும். நேற்றைய தினம் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றொதுக்கல் மத்திய நிலையங்களில் உள்ள மினுவாங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களில் இரண்டு பேரும் பேலியகொட மீன் சந்தையில் 182
பேரும் மேலும் 75 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளைஇ கொவிட்-19 தொற்றுக் காணரமாக 14 ஆவது மரணம் நேற்று சம்பவித்தது. மொத்த கொரோனா தொற்றாளர்களின்
எண்ணிக்கை நேற்று வரை 6 ஆயிரத்து 287 வரை அதிகரித்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், நேற்றையதினம்
இனங்காணப்பட்டனர். அதில், 188 பேர், பேலியகொட மீன்பிடி சந்தையைச்
சேர்ந்தவர்கள் ஆவர். என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் இனங்காணப்பட்ட 188 பேரில், 79 பேர் கொழும்பு,
53 பேர் களனி, 09 பேர் வத்தளை, களுபோவிலயைச் சேர்ந்த அறுவர், தெமட்டகொடையில்
15 பேர், கடவத்தையில் எழுவர், கிரிபத்கொட மற்றும் மொரட்டுவ பகுதியில்
தலா மூவரும், கொட்டாஞ்சேனையில் நால்வரும் வெல்லம்பிட்டியவில் 9 பேரும் அடங்குகின்றனர்.
ரிஷாட், ஹக்கீமை நீக்க ஐ.ம.ச மந்திராலோசனை
ரிஷாட், ஹக்கீமை நீக்க ஐ.ம.ச மந்திராலோசனை
முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம்
ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இடைநிறுத்த சஜித் பிரேமதாஸ அறிவுறுத்தியுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்
பிரேமதாஸ தலைமையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள்,
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்
மீன்கள் உண்டால் கொரோனா வைரஸ் – பீதியில் இலங்கை மக்கள்
மீன்கள் உண்டால் கொரோனா வைரஸ் – பீதியில் இலங்கை மக்கள்
மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை
எவ்வித ஆய்வுப்பூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதனால் மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை”
என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
மீன்களை தொட்ட பின்னர் கைகளை சரியாக கழுவினால், அந்த சந்தர்ப்பங்களில்
முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியும்” என, சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது
அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது
நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்த 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டின் எந்தவொரு தரப்பிற்கும்
நன்மைகள் கிடைக்கவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
20ஆவது அரசியல் யாப்பு திருத்தம் மீதான விவாதம் இரண்டாவது நாளாக தற்பேபது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
விவாதத்தில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், 19ஆவது திருத்தத்தின் கீழ் பல்வேறு தரப்புக்கள் மீதும்
பொறுப்புக்கள் சுமத்தப்பட்டாலும், அவர்களுக்கு பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் கிடைக்கவில்லை. மக்கள்
பெரும் எதிர்பார்;ப்புடன் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதில் இது பெரு தடையாக அமைந்துள்ளது.
50 சதவீத பங்குகளைக்கொண்ட அரசு சார் நிறுவனங்களில் கணக்காய்வாளருக்கு உள்ள அதிகாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையிலேயே நாம் தற்போது நடவடிக்கை
மேற்கொண்டுள்ளளோம். அதிகார சமநிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்hர். அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது
பொறுப்புக்களை நடைமுறை ரீதியில் அமுல்படுத்த 19ஆவது அரசியல் அமைப்பின் கீழ் அதிகாரங்கள் வழங்கப்படாமை
சிக்கலானதாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகார சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த திருத்தமானது, தனி
நபர்களை மையமாகக் கொண்ட அதிகார போராட்டத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. சரியான அரசியல் இலக்குகள்
அற்றவர்களே 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அஞ்சுகின்றனர்.
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம்
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம்
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். இவர் 50 வயதான பெண் நோயாளி ஆவதுடன்
குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 17ஆம் திகதி குளியாப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பெண் நாட்பட்ட நோயாளி; என்ற ரீதியில்
அவதிப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட நாட்பட்ட நோயின் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் பதிவான 14 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளானவரின்
மரணம் இது என தொற்று நோயியல் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அவர்கள் உறுதி செய்துள்ளார்.
இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் ஆளும் மகிந்த சகோதர ஆட்சியில் கொண்டு
வரப்பட்ட இருபதாவது சட்ட மூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறை வேற்ற பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச்
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்ப மீதான வாக்கெடுப்பில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.
திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட
மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் மூலம் நல்லாட்சி அரசு கொண்டு வந்த அதிகாரங்கள் செயல் இழக்க பட்டுள்ளன .
வவுனியாவில் 3 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு
வவுனியாவில் 3 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 25 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
செய்யப்பட்டதையடுத்தே, குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறித்த ஒப்பந்த நிறுவனத்தால் தொடர்புடைய வவுனியா-
வேப்பம்குளம் பிரதேசத்தில் கொடுக்கல் வாங்கல் செய்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில்-கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்
உடன் அமுலுக்கு வரும் வகையில்-கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்
உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய,
முகத்துவாரம், புளுமெண்டல்ஆகிய பிரதேசங்களுக்கான தனிமைப்படுத்தும்
ஊரடங்கு சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும்
நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நவராத்திரி விழா
அலரி மாளிகையில் நவராத்திரி விழா
ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப்
பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (2020.10.20) தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Nawarathri TT PMO Tamil News 019கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும்
முன்னெடுப்பதாக தெரிவித்த பிரதமர் இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து
நலன்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.Nawarathri TT PMO Tamil News 018
தொடர்ந்து இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் வழங்கப்படும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கான புலமைப்பரிசில்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.Nawarathri TT PMO Tamil News 016
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
‘நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பயணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்றோம்.
சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்கநெறியான சமூகம் ஒன்றினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஆன்மீகத்
துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்கான மத அனுட்டானங்களைச் சரிவரப்
பின்பற்றுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். இந்நாட்டில் இப்பொழுது, மக்களுக்குத் தமது மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது தாய் நாடான இலங்கை உட்பட, உலகில் எங்கெங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நவராத்திரி விரதம்
மற்றும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இந்துக்கள் அனைவரும் தாயாகப் போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு
இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும்
மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.
ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாள் மிகவும் விசேடமான தினமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும்
வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் திருநாளாகவும் பத்தாவது நாள் ‘விஜயதசமி’ திருநாள் அமைகின்றது.
இது அர்த்தமுள்ள நல்லதொரு பூஜை வழிபாடு, ‘கொலு’ வைப்பது இந்த வழிபாட்டில் சிறப்பான ஒரு விடயம். இந்த உலக உயிர்கள் எல்லாமே எல்லோர்க்கும் மேலான சக்தியாலேதான்
இயங்குகின்றன என்ற உண்மையை எங்களுக்குக்குச் சொல்லுகிறது. ஆலயங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள், வீடுகள்
என எல்லாத் துறைகளிலும் ‘கொலு’ வைத்து வழிபடும் இந்த நிகழ்வால் நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் இனிதே மலரட்டும் என பிரார்த்திப்போம்.
இன்று நம் தேசத்தில் மூன்றாவது அலையாக எழுவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை கொவிட் – 19. இது மக்களிடையே ஒரு பய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய பயங்கள் ஆன்மீக பலத்தினாலேதான் வெல்லப்பட வேண்டும். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முடிந்தளவு முயற்சித்து வருகின்றோம்.
இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சமய விழுமியங்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளோம்.
இதுவரை இருந்த இந்து அமைச்சர்கள் நவராத்திரி விழாவை தங்களது வீடுகளிலிருந்து கொண்டாடினர். அந்த இந்து
அமைச்சர்கள் போன்று நானும் நவராத்திரியை இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அனுஷ்டிக்கவுள்ளேன்.
இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும்
வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ‘உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள்’ என தமிழ் மொழியில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க
அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன்
இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தற்போதைய
அரசியலமைப்பு மாற்றபட வேண்டும் என்பதை வழியுறுத்தி 1994 ஆம்
ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் தற்போதைய அரசியல் யாப்பை நிராகரித்துள்ளனர்.
விசேடமாக தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை முன்னிலைப்படுத்தியே வாக்களித்தனர்.
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை
நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கே வழங்குவதற்கு வழிவகை செய்கின்றது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட
வேண்டும் இதனையே அனைத்து மக்களும் விரும்புகின்றனர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
சரியான கொள்கைகளின் அடிப்படையில் நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம். என்று அவர் மேலும் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில களுத்துறை மாவட்டத்தில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பரிவுகள் மீண்டும் அறிவிக்கும்
வரையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெரிடப்பட்டிருப்பதாக COVID 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அகலவத்த பிரதேச செயலக பிரிவில்:
• அகலவத்த
• கோரக்கொட
• பெரகம
• தாபிலிகொட
• கெகுலண்தர வடக்கு
பாலிந்த நுவர பிரதேச செயலக பரிவில்:
• பெல்லன
பிரிட்டனில் புலிகள் மீதான தடை நீக்கம் – லண்டன் முடிவு என்ன ..?
பிரிட்டனில் புலிகள் மீதான தடை நீக்கம் – லண்டன் முடிவு என்ன ..?
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு விதித்திருந்த தடை முறையற்றது என்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது
இதனை அடுத்து இவர்களினால் விதிக்க பட்ட தடையின் விதம் தொடர்பில் கருத்துரைத்த நீதிமன்றம் இந்த விடயத்தை
வெளியிட்டுள்ளது ,எனினும் தமிழர்கள் இதில் மகிழ்ச்சி கொள்ள கூடிய விடயமாக அமையுமா என்பது எதிர்வரும் 28 நாட்களுக்கு
இலங்கை அரசு மற்றும் பிரித்தானிய அரசு மேற் கொள்ள போகும் சட்ட நடவடிக்கைகளை வைத்தே தெரிய வரும்
எனினும் இந்த வழக்கின் தீர்ப்பு இத்தாலி மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் வழங்கியது போன்ற ஒன்றாக உள்ளது .எனினும்
தொடர்ந்து வரும் நாட்களில் நடக்க போகும் இராயத்தந்திர உறவுகளின் அடிப்படையில் எழப்போகும் மாற்றங்கள் ஆளும்
இலங்கை அரசின் நாடியை பிடித்தறியும் ஒன்றாக அமையும் எனலாம்
இந்த தடை தளர்த்த பட்டால் அது இலங்கை அரசுக்கு விழுந்துள்ள முதலாவது
இராயத்தந்திர அடியாகவும் ,அத்துடன் மீள தமிழர் தேசம் எழுச்சி கொள்ளும் நிலையை இது தோற்றுவிக்கும் எனலாம்






