Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி பல முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க வேலைத்திட்டத்தை புத்துணர்ச்சியுடனும் வேகத்துடனும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 வாகனங்கள் நேரெதிர் மோதல்
10 வாகனங்கள் நேரெதிர் மோதல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்று (17) பிற்பகல் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறி ஒன்று, 3 சொகுசு பேருந்துகள், 2 ஜீப் வண்டிகள், 4 கார்கள் இவ்விபத்தில் சிக்கியுள்ள
ஆற்றுக்கு குதித்த காதல் ஜோடி- காதலன் நீந்தி தப்பினார் – காதலி மரணம்
ஆற்றுக்கு குதித்த காதல் ஜோடி- காதலன் நீந்தி தப்பினார் – காதலி மரணம்
மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.
எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும் போது, முதலில் யுவதி ஆற்றில் குதித்ததாகவும் பின்னர் இளைஞன் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் அங்கிருந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்
சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்
இலங்கைக்கான சீன தூதுவர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்று ,யாழ் சென்று அந்த பகுதி மேயருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்
இவரது இந்த சந்த்திப்பின் நோக்கம் தொடர்பில் தெரியவரவிலை
வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்
வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்
இலங்கையில் சமீப காலங்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது
இவ்விதம் மாட்டு காத்தான் குடி பகுதியில் வீடொன்றில் காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது ,இதில்
சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு
இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு
இலங்கையில் தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான் நோயினால் பதஹிக்க பட்டு நல்லவர் சிக்கியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவும் நிலை ஏற்படுவதால் ,பலத்த கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளது
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 டிசம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது
மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது
வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை
பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று காலை சட்டத்தரணி ஊடாக வெயாங்கொடை பொலிஸில் முன்னிலையாகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலையில் நேர வகுப்புக்கு மாணவன் வராததால் குறித்த தொழில்நுட்ப ஆசிரியர், பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு வந்து மாணவனின் கை மற்றம் கால்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் கை, கால்களில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தொழில்நுட்ப மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதி நிதி அமைச்சராக பீரீஸ் நியமனம்
பிரதி நிதி அமைச்சராக பீரீஸ் நியமனம்
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசினால் பிரதி நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்க
பட்டுள்ளார் என அரசு அறிவித்துள்ளது
இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்
இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்
புதிய சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் இருக்கும்.
இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில்க் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்
,அதிக நோயாளர்கள் சமீப நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பொழுதும் இறப்பு
வீகிதங்கள் குறைவு என கோரி , உரிய மரண எண்ணிக்கையை குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பல மாவட்டங்களில் பதிவாகிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.2 – 1.5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 3 – 5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொவிட் மரணங்கள்; 5 வீதத்தால் குறைந்துள்ளன.
இவ்வாறு கொவிட் மரணங்கள் குறைவாக பதிவாவதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
தற்போது நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 74 வீதமானோருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 62 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும்; வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 14 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பல மாவட்டங்களில் பதிவாகிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.2 – 1.5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 3 – 5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொவிட் மரணங்கள்; 5 வீதத்தால் குறைந்துள்ளன.
இவ்வாறு கொவிட் மரணங்கள் குறைவாக பதிவாவதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
தற்போது நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 74 வீதமானோருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 62 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும்; வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 14 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கடலில் மிதக்கும் தமிழர் உடல்கள் நடப்பது என்ன ..?
கடலில் மிதக்கும் தமிழர் உடல்கள் நடப்பது என்ன ..?
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (13) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.
இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர். இதன் போது குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர்.
இதன் போது படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
இதன் போது காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்தது. இதன் போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.
எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
எனினும் ஏனையவர்கள் போராடியும் குறித்த இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.
இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் (வயது-19) என்பவர் மீட்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு கோந்தைப்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கைதியின் வயிற்றில் இருந்து வெள்ளி நகை மீட்பு
கைதியின் வயிற்றில் இருந்து வெள்ளி நகை மீட்பு
வெலிக்கடை சிறை சாலையில் இருந்து அழைத்து செல்ல பட்ட கைதி ஒருவரின் வயிற்றுக்குள்
இருந்து வெள்ளி நகை மீட்க பட்டுள்ளது
பின்னர் கைதியை மலம் கழிக்க வைத்து அதன் ஊடாக அந்த நகை மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
யாழில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர் – பெண் காயம்
யாழில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர் – பெண் காயம்
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பெண் ஒருவர்
காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் ,மேலும் வீட்டின் கூரைகள் என்பனவும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
நாடெங்கும் காஸ் சிலிண்டர் தொடராக வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்
சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு
விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட
வேண்டும். இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.
ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த
ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான்
நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும். ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.
ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது. இது 1987 1988
ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த
வேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக
கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம். சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.
என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.
அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள். அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள். மக்களை அதனை நம்பி
பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்கள். ஜெனிவாக்கு சென்று உள்ளக
விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள். இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள். இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.
முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன. மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
இலங்கையில் உணவு பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கை
இலங்கையில் உணவு பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கை
இன்னும் இரண்டு வாரங்களில் வௌநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வருவதால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த சில
வாரங்களில் அரசாங்கத்தால் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட வழங்க முடியாது என்றார்.
நேற்று முன்தினம் (12) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், யுனதனவி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதுடன், இதன்
மூலம் மின்சாரம் தொடர்பான சர்வாதிகாரத்தை வௌநாட்டு நிறுவனத்தக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு பாரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார்.
நாட்டின் இன்றைய நிர்வாகம் செல்லும் விதத்தில் எமது நாட்டில் டொலர் இருப்பதற்கான சாத்தியமே இல்லை. கடந்த காலங்களில் பிரயோசனமற்ற பல வேலைத்திட்டங்களுக்கு அதிக
வட்டியின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்துவதில், அதன் பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களும் சிரமத்தை எதிர்நோக்கின என்று சுட்டிக்காட்டினார்.
அன்று பெற்றுக்கொண்ட கடன் மூலம், நாட்டு நன்மை பயக்கும் ஒரே வேலைத்திட்டம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமாகும். ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களும் வௌ்ளை யானை போன்று நாட்டுக்கு பயனற்ற வேலைத்திட்டங்களே என்றார்.
நிதியமைச்சர் முன்வைத்த பட்ஜெட் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை. அதனால் தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாமல் போனது.
தான் அரசியலில் இருந்தாலும் தான் மக்கள் பக்கமே இருப்பதாகவும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அதன் தலைவர்கள் செய்யும் தவறை தவறென்று சுட்டிக்காட்டும் தைரியம் தனக்கு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர். சகலருக்கும் முதுகெலும்பு இல்லை. இன்றைய
அமைச்சர்கள் ஜனநாயக நாட்டில் முழுமையாக பொறுப்பு கூறும் அமைச்சர்கள் அல்ல. ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர் என்றார்.
இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்
இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்
இலங்கை கொட்டதெனிய பகுதியில் 10.12,மற்றும் சிறுவர்கள் காணமல் போயுள்ளனர் ,இவ்விதம்
காணாமல் போன சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
,இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது எங்கேனும் விபத்தில் சிக்கி இறந்தார்களா என்ற ஐயம் நிலவுகிறது
இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 27 பேர்
பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் 14 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என தெரிவிக்க
பட்டுள்ளது ,மேலும் புதிய கொரனோ தாக்குதலில் சிக்கி முதலாவது நபர் இறந்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது
சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா
சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா
இலங்கை ஆளும் தமிழ் இனக்கொலையாளி கோட்டபாய ராஜபக்ஸ்சா
தனிப்பட்ட விடயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு பயணித்துள்ளார் என ஜனாதிபதி
ஊடாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்











