Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்
பிரித்தானியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் நாட்டிற்கு கடத்தப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், ஒருதொகை வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒருதொகை மசகு எண்ணெய் ஆகியவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி 150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மற்றொரு கொள்கலனில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு BMW கார் மற்றும் ஃபியட் வகையிவாய கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அபராதம்
விதிக்கப்படும் என்றும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம்
தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம்
இலங்கை ஜனாதிபதியின் செல்ல பிள்ளையாக வல்லவர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.
முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்
முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்
முல்லைத்தீவு ; இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர் சிக்கியுள்ளார் .
மாணவிகளின் நிழல்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பித்து வெளியிட்டு விடுவோம் எம்முடன் உடலுறவு கொள்ள வாருங்கள் என மாணவிகளை மிரட்டி கற்பழித்த சம்பவம் அம்பலமாகிய நிலையில் ஆசிரியர் கைது செய்ய பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பகுதியில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த இந்த விடயம் கசிந்த நிலையில் தலைமறைவான ஆசிரியர் தனது சட்டத்தரணி ஊடக மன்றில் ஆயராகியுள்ளார் .
இந்த ஆசிரியாரின் காம உல்லாச லீலைக்கு உடந்தையாக செயல்பட்ட பழைய மாணவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த செயல் பாட்டில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறி வருகின்றனர்.
முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்
கற்பழிப்புக்கு உள்ளான ஐந்து மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.இதில் நான்கு மாணவிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
பாடசாலைக்கு மாணவர்களுக்கு ஆசிரியர் போதிக்க வருகிறார் என்றால் இங்கே மாணவிகளுடன் காம உல்லாசத்தில் ஈடுபட்டு கற்பழித்த வாத்தியார் செயல் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த குற்ற செயல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தமிழீழ விடுதலை புலிகள் ஆளுகையில் நீதி நிலை நிறுத்த பட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இன்று அவை மறைந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன .
முல்லைதீவில் இது போன்ற செயல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் மாணவிகள் சிலர் தூக்கு போட்டு மரணமான பின்புலம் இவர்கள் செயல்பாடாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
குறித்த பாடசாலையில் கல்வி கற்று தற்கொலை புரிந்த மாணவிகள் தற்கொலை தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .
இவ்வாறு முல்லைதீவிவு பகுதியில் தற்கொலை புரிந்த மாணவிகள் இவர்களினாலே மிரட்ட பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்திருந்தால் இவர்களுக்கு தூக்கு தணடனை வழங்க வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது .
- இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது
- தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்
இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்
இலங்கை ;இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது .
இவ்வாறு எரிபொருளுக்கு காத்திருந்து அவை தீர்ந்ததும் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்ற துயர நிலையும் ஏற்படுகிறது .
பண்டுலுகம பகுதியில் எரிபொருள் வாங்கிட மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பத்தொன்பது வயது வாலிபன் ஒருவரை டிப்பர் மோதியதில் அவர் பலியாகியுள்ளார் .
நாட்டை கொள்ளையடித்து மக்கள் வாழ்வியலை எண்ணி கவலை கொள்ளாது இவ்வாறு இழிநிலைக்கு இட்டுள்ள கோட்டாபாயவை இந்த பழிபாவம் சும்மா விடாது என ஏரி பொருள் கொள்வனவு செய்திட காத்திருந்த பெண்மணி ஒருவர் திட்டி தீர்த்துள்ளார் .
திருடர்கள் நாட்டில் சுகபோக ஆட்சியை நடத்திய வண்ணம் உள்ளனர் .ஆனால் அப்பாவி மக்கள் நாள் தோறும் எரிபொருளுக்கு காத்திருந்து இறந்த வண்ணம் உள்ளனர்..
எரிபொருள் இன்றி தொழில் துறைகள் முடக்க பட்டுள்ளன .நாடு மிக மோசமான நிலையை சந்தித்த வண்ணம் உள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை எப்பொழுது மீள போகிறது என்பதே எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் ஏக்கமாக உள்ளது .
இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா
இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா
இலங்கை ;சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற தனது இராணுவச் செலவினங்கள் குறித்து பேச சிறிலங்கா மறுத்து வருகிறது .
இலங்கை மறுத்தாலும் நாங்கள் பேசாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ்.
தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற சிங்கள இராணுவம் வெளியேற்றினாலே, அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து கணிசமான அளவு மீள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் இடம்பெற்ற எழுக தமிழா நிகழ்வில் உரையாற்றும் போதே
இக்கருத்தினை முன்வைத்த அமைச்சர் சுதன்ராஜ் பேசினார் .
சிறிலங்காவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம்,
சர்வதேச நாணய நிதியம் உட்பட பல நாடுகள் முன்வந்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டுள்ளது.
இந்த உதவிகள் என்பன நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச அமைப்புக்கள்,
நாடுகள் வழங்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணிகளில் ஒன்றாக இருக்கின்ற
இராணுவச் செலவினங்களை குறைக்கு வகையில் தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினை வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையினை விதிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையினை தமிழர்கள் வலுவாக சர்வதேசம் நோக்கி முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் இவ்வாரு தெரிவித்துள்ள பொழுதும் இவர்கள் கூற்றை இலங்கை ஆளும் ஜனாதிபத்தி கோட்டாபாய ராஜபக்சே மற்றும் பிதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்று கொள்வார்களா என்பது கேள்வியாகிறது .
இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கு ஒதுக்க படும் இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா அரசு நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு மீளும் என்கின்ற இவரது கேள்வி நிலையான கணிப்பாக உள்ளது .
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான விடயங்கள் எதுவாக உள்ளது என்கின்ற விடய தரவுகளை சமீப காலங்களில் அமைச்சர் சுத்தராஜ் வெளியிட்டு இலங்கை அரசை திகைக்க வைத்துள்ள செயல்கள் இடம்பெற்றுள்ளன என்கிறது நாடு கடந்த ஆதரவு சக்திகள் .
இலங்கை பேச மறுக்கும் விடயங்கள் பேசு பொருளாக்கி நகர்ந்து செல்லும் நாடு கடந்த அரசின் செயல் தோற்றம் நேரிய பார்வையின் நேர்கோட்டு அரசியல் தந்திரமாக பார்க்க படுகிறது .
இதில் அழுத்தி அமைச்சர் சுதன்ராஜ் பேச்சை பாருங்கள்
பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்
கொழும்பு ; பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள் நாங்கள் மனோ கணேசன்
நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்!
மத-அரசியல்-சிவில் பிரதிநிதிகள் கூட்டத்தில் மனோ கணேசன்
காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்.
ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்.
நாம் மதவாதத்தால், இனவாதத்தால், அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனம்.
பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்
இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம்.
நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும்.
இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறினார்.
கொழும்பு பத்தரமுல்லை இம்பீரியல் மொனார்ச் விடுதியில் இன்று நடைபெற்ற “சீர்திருத்தத்திற்கான கூட்டு” என்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஓமல்பே சோபித தேரர் உட்பட மதத்தலைவர்கள்,
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பீக்கள் கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது.
225 பேர் கொண்ட நாடாளுமன்றம் என்ற சொற்பதம் இங்கே ஏற்பாட்டாளர்களினால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
அந்த கும்பலில் எங்களை போடாதீர்கள். இந்த கோதாபய அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. நாம் எப்போதும் இந்த ராஜபக்சர்களை எதிர்த்தே வந்துள்ளோம்.
நாங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள். நீங்கள் சொல்லும் அந்த 225 பேர் வேறெங்கோ இருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை.
நான் அந்த கும்பலில் இல்லை என்பது எனக்கு தெரியும். நான் மக்களுடனேயே இருக்கிறேன். நான் கட்சி மாறி சோரம்போன அரசியல்வாதி இல்லை.
பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்
காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம். “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் ஆதரிக்கிறோம்.
ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை, காலிமுக திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம்.
ஜனாதிபதி கோதாபய, இதைவிட பலமாக பாதுகாப்பு செயலாளர் கோதாபயவாக இருந்த போதே, “கோதா-கோ-ஹோம்” என கோஷம் எழுப்பி போராடியவர்கள், நாங்கள்.
எங்கள் கொழும்பில் எங்கள் மக்களை வெள்ளை வானில் வந்து, பலவந்தமாக தூக்கி சென்ற வேளையில், 2005ம் ஆண்டிலேயே ராஜபக்சர்களை எதிர்த்து போராடியவன்,
நான். எனது சக போராளி நண்பன் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். என்னை கொலை செய்ய முயற்சிகள் நிகழ்ந்தன.
இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம். மதவாத, இனவாத, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியவர்கள், நாம். நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்.
ஆகவே காலிமுக திடல் போராட்டத்தில் இருந்து போராட நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
நாங்கள் கற்க அங்கு எதுவும் இல்லை. நாம் புது போராளிகள் அல்ல.
நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம்.
அந்த போராட்டம் மூலம் வரும் மாற்றத்தை நாம் வரவேற்கிறோம்.
அந்த மாற்றத்தின் மூலம் இலங்கை அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும்.
இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும்.
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
பட்ட கொடை; இலங்கை பட்ட கொடை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்திட லொறியில் காத்திருந்த ஒருவர் அந்த லொறிக்குள் மரணம் அடைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்.
இவ்வாறு லொறிக்குள் சடலமாக மீட்க பட்ட நபர் அறுபத்து மூன்றுவயதுடைய ரப்பர் தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவரோடு உரையாடி விட்டு இரவு 11 மணியளவில் நாம் உறங்க சென்றோம் எனவும் அதன் பின்னர் இருமல் சத்தம் ஒன்று கேட்டது ,வந்து பார்த்த பொழுது அவர் லொறிக்குள் இறந்த நிலையில் காணப்பட்டார் என அவரது சகா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள நிரையில் காத்திருந்தவர்களில் பதினொரு பேர் இதுவரை இறந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
நாட்டையும் நட்டு மக்களையும் பிச்சை எடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார் ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே.
லொறிக்குள் இருந்து மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .
தொடரும் இவ்வாறான மரணங்கள் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை
காங்கேசன்துறை ; இலங்கை காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் தலைமையில் வெட்டேட்டில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
தனிமையில் வசித்து வந்த இவர் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை .
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவ்விதமே அவரது உடலில் காணப்பட்டுள்ளது.
பெண்ணை கொலை புரிந்தவர்கள் அந்த தங்க நகைகள் எதனையும் எடுத்து செல்லவில்லை .
அவ்விதமான நிலையில் இந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழமைபோல வீட்டுக்கு நீர் இறைக்க சென்ற உறவினர் ஒருவர் பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக உள்ளது கண்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார் .
இதனை அடுத்து சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நாள் தோறும் தொடரும் இவ்விதமான கத்தி வெட்டு கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை அறியப்படாத மர்மமாக உள்ளது.
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது
பண்டுற ; இலங்கை கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட முப்பத்தி ஐந்து பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் 25 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளிட்ட முப்பத்தி ஐந்துபேர் உள்ளடக்கம் பெறுகின்றனர் ..
பண்டுற பகுதியில் இடம்பெற்ற விசேட ரோந்து சுற்றிவளைப்பு தேடுதல் பணியின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இந்த படகில் செல்ல முற்பட்ட யாவரும் ஆறு முதல் ஐம்பத்தி ஆறு வயதுடையவர்கள் என கடல்படையினர் தெரிவிக்கின்றனர் .
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது
இவ்வாறு அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக பயணிக்க முனைந்த இவர்கள் யாவரும் Trincomalee, Mannar, Batticaloa, Negombo, Kalpitiya and Nuwara Eliya பகுதிகளை சேர்ந்த நபர்கள் என கடல்படையினர் தெரிவித்துள்ளனர் .
கடல் வழியாக அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் கிறிஸ்மஸ்தீவில் அடைத்து வைக்க பட்டு அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்த படுகின்றனர்.
இவ்வாறான சூழல் அவுஸ்ரேலியாவுக்கு தொடராக மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை
கொழும்பு ; அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக
,ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களை வெளிநாடுகளில் பணியமர்த்துவதற்காக வடிவமைக்கப்படதல்ல.
அரச உத்தியோகத்தர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்பினால், அவரே வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை
“அரசாங்க உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல்கள் தொடர்பான புதிய சுற்றறிக்கைகள்” என்ற தலைப்பில் அரசாங்க தகவல்
திணைக்களத்தினால் (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .
அரசாங்க ஊழியர்கள் குறிப்பிட்ட வெற்றிடங்களின் அடிப்படையிலேயே நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.
ஆனால் காலத்துக்குக் காலம் அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைவாகப் பெருமளவிலான மக்கள் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.
பெரும்பாலான அதிகாரிகளுக்கு நிரந்தர வேலை கூட இல்லாததால் பலர் வெளிநாடு செல்ல தீர்மானித்துள்ளனர்.
புதிய சுற்றறிக்கையின் விதிகளின்படி, அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், வெளிநாட்டில் பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களை
வளர்ப்பதற்குத் அவசியமான உள்நாட்டு பயிற்சிகளுக்கும் சம்பளம் இல்லாத விடுமுறை எடுக்க முடியும். தகுதிகாண் காலத்தை பூர்த்தி செய்யாத
உத்தியோகத்தர்களும் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பின்னர் தங்களின் தகுதிகாண்
காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.
பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை
பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை
கொழும்பு ;போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை இந்த வாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த வார இறுதிப் பகுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்து 193 பாடசாலைகளில் 9 ஆயிரத்து 567 பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடங்களில் பாடசாலை நாட்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதாகவும் ஒன்லைன் கல்வி நடவடிக்கை கிராமப்புறங்களில் வெற்றியளிக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை பிற்போட நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூலம் மாணவர்களுக்கான விசேட விரிவுரைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்
கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்
மின்சாரப் பவனை சிக்கனமாக பயன்படுத்தவும் மாகாண ஆணையாளர் வேண்டுகோள்
கிழக்கு மாகாணம் ;மின்சாரப் பவனை சிக்கனமாக பயன்படுத்தவும் மாகாண ஆணையாளர் வேண்டுகோள்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை
மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் சுதேச மருத்துவத் திணைக்கள கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எஸ்.சதீஸ், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக எமது நாடு பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
அதனால் எமது திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தேவைக்கேற்ப மின்சாரப் பவனை மற்றும் ஏனைய பாவனைகளை மிக சிக்கனமாக பயன்படுத்துமாறும்,
மின்சாரப் பவனை சிக்கனமாக பயன்படுத்தவும் மாகாண ஆணையாளர் வேண்டுகோள்
எமது திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளை மிக விரைவாக வழங்க வேண்டும் என மாகாண ஆணையாளர் இதன்போது சகல உத்தியோகத்தர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
கடந்த பல வருடங்களாக சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி
வேறு திணைக்களங்களுக்குச் சென்ற உத்தியோகத்தர்களை பாராட்டி அவர்களுக்கு
ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் ஊழியர்கள் நலபுரிச் சங்கத்தின்
ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது மாகாண ஆணையாளர் அவர்களினால் பரிசுப்
பொதிகள் மற்றும் ஞாபகச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பைஷல் இஸ்மாயில்.
லண்டனில் சாதனை படைக்கும் தமிழன்
லண்டனில் சாதனை படைக்கும் தமிழன்
லண்டன் ;லண்டனில் வீதியில் உறங்கிய தமிழன் ஒருவர் படைக்கும் சாதனை மக்களை வியபில் உறைய வைத்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற கொடிய போரின் பிடியில் சிக்கிய யோகி என்ற தமிழர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு இலங்கையில் இருந்து லண்டன் வந்தடைந்தார் .
அப்பொழுது அவருக்கு லண்டனில் தங்குவதற்கு வீடில்லா நிலையில் வீதிகளில் உறங்கியுள்ளார் .அவ்வேளை பலத்த மன நல பிரச்சைக்குள்ளும் சிக்கி இருந்தார் .
அவ்வாறான யோகி என்ற ஈழ தமிழன் தற்போது சமையல் கலை நிபுணராக லண்டனில் சமையலில் அசத்தி வருகிறார் .
நம்மவர்கள் மத்தியில் சமையல் செய்பவர் கூடாத நபரை போன்று பார்க்கும் நிலை தொடர்கிறது .

ஆனால் வெளிநாடுகளில்,லண்டனில் நீங்கள் சிறந்த சமையல்காரர் என்றால் அவருக்கு அதிக சம்பளமும் சிறந்த வரவேற்புடன் கூடிய தனி மரியாதை உள்ளது .
அவ்வாறே இந்த ஈழ தமிழன் யோகியும் லண்டன் மாநகரில் சாதனை படைக்கும் தமிழன் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் .
லண்டனுக்கு வரும் பொழுது தனக்கு ஒரு தேனீர் வைக்க தெரியாது ,ஆனால் இன்று நான் சிறந்த சமையல்காரனாக சாதனை மாற்றம் பெற்றுள்ளேன் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் .
மேலும் நான் கற்று கொண்ட சமையல் கலையை நமது பிள்ளைகளுக்கும் ,மக்களுக்கும் கற்று கொடுக்கிறேன் என தெரிவித்து யோகி தனது மகிழ்ச்சியை புன்னகையோடு வெளிப்படுத்தியுள்ளார்.
வந்த வெள்ளையர் நாடுகளில் ,பிரிட்டனில் நம் தமிழர்கள் பலவேறு துறைகளில் கொடி கட்டி பறக்கும் முதல்தர நபர்களாக மாற்றம் பெற்றுள்ளனர்.
நாம் நமது நாட்டில் வாழும் ,சுதந்திரம் ,பாதுகாப்பு வழங்க பட்டால் இலங்கை ஒரு சிங்கப்பூராக மாற்றம் பெறுவதுடன் தன்னிறைவு பொருளாதாரத்தில் தமிழர் தேசம் கொடி கட்டி பறக்கும் .
ஆனால் ஆளும் இலங்கை அரசியல்வாதிகள் முற்போக்கு சிந்தனையில் யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.
தற்காலத்தில் உலக அளவில் சமையல் காணொளிகள் அதிகம் மக்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது ,அதற்கே மவுசு அதிகமாக உள்ளது.
காரணம் யாவரும் நாளாந்தம் சமையலில் பங்கு பெறுவதால் சமையல் கலை நிபுணர்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது.
நமது ஈழ தமிழ் மகன் யோகி இதுபோல மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி தமக்கும் தான் பிறந்த தமிழ் மண்ணுக்கு பலம் சேர்ப்பாராக.
உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற எதிரி இணையம் உங்களை நெஞ்சார வாழ்த்துகிறது .
பிரிட்டனில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றில் யோகி கீரோவாக வர்ணிக்க பட்டுளளார் .
தமிழன் என்றால் சும்மாவா என்ன .வெல்லட்டும் தமிழ் .வளரட்டும் சாதனைகள் .
யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ்
யாழ்ப்பாணம் ;யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ்
யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ் செயல்பாடு உலக மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று கொடுத்த வண்ணம் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாகம் நோக்கி பயணித்த பேரூந்தில் பயணித்த பெண்மணி ஒருவர் தான வங்கியில் எடுத்து சென்ற 95 ஆயிரம் ரூபா பணத்தை தொலைத்து விட்டார் .
விரைந்து செயல்பட்ட போக்குவரத்து சோதனை பொலிசார் அந்த பணத்தை பேரூந்தில் எடுத்தவர்கள் குறித்த பெண்ணிடம் வழங்க வேண்டும் என கூறி பேரூந்தை மறித்து வைத்தனர்.
அப்போது அந்த பெண்ணின் பணத்தை எடுத்தவர்கள் அதனை திருப்பி வழங்கிவிட்டு சென்றுள்ளனர் .
தொலைந்த பணத்தில் ஆறாயிரம் ரூபாய்களை அந்த நபர்கள் எடுத்து விட்டு 89 ஆயிரம் ரூபாய்களை திருப்பி வழங்கியுள்ளனர்.
ஆனால் இந்த உதவியை செய்திட்ட மக்களுக்கு அந்த பெண்ணின் நன்றி தெரிவிக்கா விடைபெற்ற செயல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு அல்லாத தேசமாக தொடர்ந்து இலங்கை வாழ் மக்கள் சிக்கியுள்ளனர் என்பதை குறித்த காணொளியும் கண்ணபிப்பதாக சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த சிங்கள பொலிஸ் கீரோவாக தமிழர்கள் மத்தியில் கொண்டாட பட்டு வருகிறார்.
இலங்கையில் தமிழர் பகுதியில் இப்படியும் சிங்கள பொலிசார் இருக்கத்தான் செய்கின்றனர் .
குறித்த போலிசார் பண மீட்பு காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது .
தவிர மக்கள் மனதில் சிங்கள மக்கள் மற்றும் பொலிசார் தொடர்பிலு மாறு பட்ட கருத்துக்கள் முதன் முறையாக வீழ்ந்து வெடிப்பதை அவதானிக்க முடிகிறது .
யாழில் தொலைத்த பெண்ணின் பணத்தை மீட்டு கொடுத்த காவல்துறையின் செயல் பாடும் அவர்கள் மக்கள் சேவையும் நீதியானதாக உள்ளது தான் என்பது இந்த விடயம் மட்டும் வெளிப்படுத்தி நிற்கிறது .
எதிரியான குறித்த சிங்கள காவல்துறை ஊழியர் நேரிய குடும்பத்தில் பிறந்து நீதிக்கு துணை நிற்பவர் என்பது பலரது கருத்தாக பதிய பெற்று வருகிறது .
காலியில் பொலிஸ் மீது தாக்குதல்
காலியில் பொலிஸ் மீது தாக்குதல்
காலி ; காலியில் எரிபொருள் நிலையத்தில் நிரையில் நின்ற மக்களை முந்தி கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் எடுத்துவரப் பட்டு கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி சென்ற சம்பவம் கை கலப்பாக மாறியுள்ளது .
காலியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் மீது நடத்த பட்ட தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் இயல்பு வாழ்வு முடங்கியுள்ளதுடன் மக்கள் தொழிலும் பாதிக்க பட்டுள்ளது .
மீள நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனின் எரிபொருள் விநியோகம் சீராக கிடைக்க பெற்றால் மட்டுமே நாட்டின் நிலவும் நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும்.
ஆனால் ஆளும் கோத்தபாய அரசினால் இதனை கையாள முடியாத நிலையில் மேலும் நாட்டில் நிலை மோசமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது.
தமது அதிகாரங்களை தக்க வைத்து அதன் ஊடாக தமது குடும்ப வியாபாரத்தை கவனித்து வரும் ராஜ பக்சே குடும்பத்தினால் நாட்டு மக்கள் இன்னல்களை தீர்த்து வைக்க முடியாது .
அதனால் தான் தற்போது கோட்டபாய ராஜபக்சே அரசு திணறிய வண்ணம் உள்ளது .
மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா
மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா
மட்டக்களப்பு ;இலங்கையில் மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் என டக்கிளஸ் தேவானந்தாதெரிவித்தார் .
மட்டக்களப்புக்கு பயணம் செய்த மீன்பிடி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மக்கள் எதிர் கொண்டுள்ள எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பெறும் எனவும் அவை கட்டம் கட்டமாக தீர்க்க படும் என தெரிவித்தார் .
மட்டக்களப்பு ஓட்டமாவடி துறைமுகத்திற்கு சென்ற அவர் மீனவர்கள் நிலைமையை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டார் .
மக்களுக்கு உதவுவதாக தெருவிக்கும் மீன்படி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா,பேச்சில் மட்டும் உதவுவார் என்கின்றனர் பாதிக்க பட்டவர்கள் .
டக்கிளஸ் தேவானந்தா செயலில் செயல் வீரர் அல்ல என்பது பொதுவான மக்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo
சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo
கொழும்பு ;இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இல்லத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சகதி தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிருணிகா கலந்து கொண்டார் .
அப்போது அங்கிருந்த பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை ஹிருணிகா கட்டி பிடித்தார் .
அப்போது அவரது மார்பகங்கள் வெளித்தோன்றின .இதுவே தற்போது சர்ச்சையில் சிக்க வைக்க பட்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஹிருணிகா மார்பகம் தொடர்பாக கிண்டல் செய்து வருகின்றனர்.
எனது மார்பங்களால் நான் மகிழ்வடைகிறேன் .இந்த மார்பகங்கள் ஊடாக மூன்று பிள்ளைகளுக்கு பாலூட்டியுள்ளேன் .
எனது மார்பகங்களை கேவலமாக நயப்புடைத்து பேசும் நெட்டிசன்கள் ,இதே போன்ற மார்பு ஒன்றின் மூலமே ,அதன் காம்பின் வாயிலாகவே பாலை அருந்தி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் .
சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo
ஆகையால் மார்பகங்களை கிண்டல் செய்பவர்கள் தாம் பால் அருந்திய மார்பகங்களை நினைத்து பார்ப்பார்கள் என உணர்வு பூர்வமாக ஹிருணிகா பேசியுள்ளார் .
ஹிருணிகா மார்பகங்கள் தொடர்பாக யாரையும் கொச்சையாகவோ ,அல்லது ஹிருணிகா தொடர்பில் கேவலமாகவோ பேச வேண்டாம் என ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கேட்டுளளார் .
அரசியல் ரீதியாக முன்னெடுக்க பட்ட போராட்டத்தை அவ்வழியே நாம் தீர்த்திட முயல்வோம் .
ஆனால் இவ்வாறாக பெண் ஒருவர் மீதான கேவல சித்தரிப்புக்களை தவிர்த்து கொள்வோம் என
ஹிருணிகா தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கே விரும்பி வேண்டி கருத்து பகிர்ந்துள்ளார் .

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த அவசர கருது பகிர்வு அவர் மீதான நல்லெண்ணத்தை பிரதிபலித்துள்ளது .
குறித்த பிரச்சனையை நயமாக கையாள முயன்றுள்ள ரணில் பேச்சும் செயல் நகர்வும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளுக்கு உறைக்கும் முகமாக அமைய பெற்றுள்ளது .
அரசியல் ரீதியா மோதிட முடியா போவார்கள் பெண் விடயத்தை அரங்கேற்றி அதன் ஊடாக சேறு பூசும் நகர்வில் ஈடுபட்டு வருகின்றமை அநாகரிகமாக தொடந்த வண்ணம் உள்ளது .
அவ்விதமான செயல் பாட்டின் நீட்சியாக ஹிருணிகா மார்பகம் தொடர்பில் கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வருகின்றன.
இந்த ஹிருணிகா மார்பகம் சர்ச்சைக்கு பின்னர் கருது பதிவிட்டவர்கள் பிரதான எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் ஆதரவு சக்திகள் என நம்ப படுகிறது .
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்
எஹலியகொட ;இலங்கை எஹலியகொட, கெட்டஹெட்ட பகுதியில் நேற்று அரச பேரூந்து மாற்றும் தனியார் பேரூந்து நேருக்கு நேருக்கு நேர் மோதி கொண்டன.
இவ்வாறு நேருக்கு நேர் மோதிய பேரூந்துகளில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பயணிகள் அவிஸ்ஸாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர் .
முடக்கு வளைவு பகுதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றை ,அரச பேரூந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது .
அரச பேரூந்து சாரதி முடக்கு பகுதியில் பேரூந்தை வேகமாக செலுத்தி சென்றமை இந்த விபத்துக்கு காரணமாக மைந்துள்ளது .
பேரூந்தின் வேகத்தை கட்டு படுத்த முடியாது திணறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
குறித்த பேரூந்துகள் நேர் எதிர் மோதல் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
காவல்துறையால் நான்கு பேர் கைது
காவல்துறையால் நான்கு பேர் கைது
இலங்கை ;இலங்கை காவல்துறையினர் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
எரிபொருள் நிலையங்களில் குவிந்த இவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஊழியர்களுக்கு இடையாறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
அவ்விதம் இடையூறு விளைவித்த நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளதுடன் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
நாள் கணக்கில் கியூவில் காத்திருந்தும் எரிபொருள் இன்றி மக்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது .
காவல்துறையால் நான்கு பேர் கைது
இவ்விதம் கோபமடையும் மக்களுக்குள்
மோதல் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டு விடுகின்றது .
ஆளும் அரசு தனது நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ,இதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு எழுந்திட இலங்கையால் முடியாது உள்ளது .
அரசுக்கு எதிராக நடத்த படும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் நூற்று கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி
இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி
இலங்கை ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முப்பது வீதத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .
மக்கள் வேலைவாய்ப்பு இழந்து சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வரும் நிலையில் ,குடி பிரியர்கள் குடிப்பதற்கு பணம் இன்றி தவிப்பதால இந்த மதுபான விற்பனையில் திடீரென பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
மதுபான விற்பனை மூலாமே அரசு அதிகளவு வரி சம்பாதித்து வருகிறது .
இவ்வாறு அறவிடப்படும் வரி மூலமே நாட்டை நடத்தி வருகிறது பல நாடுகள் .
அவ்விதமான முக்கிய வருமானத்தை அதிகமாக பெற்று தரும் புகைத்தல் ,மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
மீளவும் மதுபானத்தை குடி மகன்கள் குடித்திட இயல்பு நிலைக்கு நாடு திரும்பினால் மட்டுமே மதுபான விற்பனை மீள சூடு பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திருப்பினால் மூட பட்ட அல்லது முடங்கிய தொழில் துறைகளை மீள இயங்கும் நிலை ஏற்படும் .
அதன் பின்னர் வருமானத்தை அரசு மற்றும் மக்கள் பெற்று கொள்ளும் நிலை ஏற்படும் .















