மரண ஊர்வலத்தில் சுடலைக்குச சென்றவர்களை மோதி தள்ளிய ஆட்டோ
Posted in இலங்கை செய்திகள்

மரண ஊர்வலத்தில் சுடலைக்கு சென்றவர்களை மோதி தள்ளிய ஆட்டோ

மரண ஊர்வலத்தில் சுடலைக்கு சென்றவர்களை மோதி தள்ளிய ஆட்டோ

இலங்கை காலி வீதி பொதுப்பிட்டிய பகுதியில் இருந்து ,வஸ்கடுவ மாயணத்தை நோக்கி சென்று கொண்டிருருந்த மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்குள் ,

ஆட்டோ ஒன்று புகுந்ததில் ,அந்த ஊர்வலத்தில் பயணித்த ஏழுபேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் யாவரும் களுத்துறை மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

ஆட்டோவை செலுத்தி சென்ற சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஆனால் சிலரோ ஆவியின் கோர செயலினால், இந்த விபத்து இடம்பெற்றது என மக்கள் பேசி வருகின்றனர் .

No posts found.
முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்

இலங்கையில் முட்டைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ,பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது .

முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் வெதுப்பகங்களில் தயாரிக்க படும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்க படும் , என வெதுப்பாக சங்கம் எச்சரித்துள்ளது .

எனினும் அரசு இதனை செவிமடுப்பதாக இல்லை .

ஐந்து ரூபா விற்ற முட்டை ஒன்று ,இப்பொழுது ,55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் அவலம் எழுந்துள்ளது .

No posts found.
யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி

திருகோணமலை புலிகண்டி பகுதியில் கட்டு யானை ஒன்று ஆண் ஒருவரை தாக்கியதில் ,அவர் சம்பவ இடத்தில பலியாகினர் .

காட்டு யானையை விரட்டியடிக்க முனைந்த வேளை ,யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ,இவர் பலியாகினார் .

மேலும் ஒருவர் யானை தாக்குதலில் சிக்கி காயமடைந்த நிலையில் ,திருமலை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

No posts found.
யாழ் முதல்வர் மணிவண்ணன் பதவி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் முதல்வர் மணிவண்ணன் பதவி விலகல்

யாழ் முதல்வர் மணிவண்ணன் பதவி விலகல்

யாழ்ப்பாண முதல்வர் மணிவண்ணன் நாளை முதல் தான அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார் .

தம்மால் அந்த பொறுப்பில் இருந்து மக்கள் சேவையை செய்திட ,முடியா நிலையில் உள்ளதாக தெரிவித்து அவர் இந்த பதவி விலகலை மேற்கொள்கிறார் .

டக்கிளஸ் தேவானந்தாவின் பத்து ஆசனங்கள் ,அந்த முதல்வர் நாற்காலிகளுக்கு வேட்டு வைத்து வரும் நிலையில் ,வேறு வழியின்றி தனது பதவியை அவர் ராஜினாமா செய்கிறார் .

No posts found.
இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது

இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது

இலங்கை காவல்துறைக்கு இந்திய அரசானது 500 சொகுசு ஜீப் வண்டிகளை வழங்கியுள்ளது .

இந்தியா வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் இந்த வண்டிகள் வழங்க பட்டன .

இலங்கையில் மக்கள் சேவையை விரைந்து செய்திடும் நோக்கில் இந்த வண்டிகளை இலங்கை காவல்துறைக்கு இந்தியா வழங்கியுள்ளது .

இலங்கையை சீனாவுக்கு விற்றுள்ள நிலையில் ,இவ்வித உதவி திட்டத்தின் கீழ் இலங்கையை தாம் வாங்கிட முடியும் என இந்தியா கனவு காண்கிறது .

அதனால் என்னவோ போட்டி போட்டு இவ்விதமான உதவிகளை அள்ளி அள்ளி இந்தியா வழங்கி வருகிறது .

No posts found.
யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு

யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு

யாழ்ப்பாண மாவட்டத்தின் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட மற்றும் டக்கிளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் பேச்சு இடம்பெற்றுள்ளது .

இந்த பேச்சில் வாள்வெட்டு ,மாட்டு திருட்டு ,காணி விடுவிப்பு என்பன பேச ப் பட்டுள்ளனவாம் .

டக்ளஸ் காரியாலயத்தில் திடீரென இடம் பெற்ற இந்த சம்பவம் தேர்தலை மைய படுத்திய ,நாடகம் ஒன்றை ஆட டக்கிளஸ் திட்டமிட்டு வரும் வேளையில் இந்த கண்துடைப்பு நாடகம் ஒன்று அரங்கேற்ற பட்டுள்ளது .

காணி விடுவிப்பு தொடர்பாக மக்களுக்கு நல்ல விடியல் கிடைக்கும் என கூட்டமைப்புக்கு ரணில் தெரிவித்து இருந்தார் .

அவ்வாறான நிலையில் தற்போது டக்கிளசும் இராணுவத்தை சந்தித்து ,தாம் இராணுவத்துடன் பேசிய நிலையில் காணி விடுவிக்க பட்டது என்கின்ற ,அறிக்கையை விடுவிக்க இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

No posts found.
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு

இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு

இலங்கையில் இன்று மற்றும் நாளை மின்சாரம் துண்டிக்க பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதனால் மக்கள் குசியில் உறைந்துள்ளனர் .

மேலும் அதனை அடுத்து வரும் நாட்களில் , இரண்டு மணித்தியாலம் இருப்பது நிமிடங்கள் வரை மின்சார தூண்டிப்பு இடம்,பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு

சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிய வி.திவாகர சர்மா தனது அரச சேவையிலிருந்து இன்றைய

தினம் (31) ஓய்வுபெறவுள்ளதையடுத்து அவரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு
நிகழ்வில் அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன்,
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நிருவாக உத்தியோகத்தர்

எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
(திருமதி) எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள்,


ஊழியர்கள் கலந்துகொண்டு அவரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

அபு அலா –

No posts found.
நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்
Posted in இலங்கை செய்திகள்

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

வளர்ப்பு நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபா நட்டஈட்டை கோரி ஆசு மாரசிங்க வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, ஆசு மாரசிங்க மீது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

பிரேமசந்திர மற்றும் ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா ஆகியோர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

குறித்த இருவரும் ஊடக சந்திப்பில் காண்பித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், போலியாக தயாரிக்கப்பட்டவை எனவும் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தன்மீது தேவையற்ற எண்ணமொன்றை மக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிக்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்த இருவரும் செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக கோரியுள்ளார்.

No posts found.
அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 4000 ரூபாய்கள் சிறப்பு முறைப்பணமாக செலுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

இலங்கையில் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் ,மக்களை நாடி அரசு புதிய புதிய சலுகை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது .

தேர்தல் முடிவுற்றதும் இவை நிறுத்த படும் . அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு அரசு தனது தாண்டவத்தை ஆடும் .

இது வாக்காளர்களின் மறதியை மனதில் வைத்து ,அரசுகள் செய்து வரும் அரசியல் நிலை செயற்பாடுகளாகும் .

பணம் இன்றி தவித்து வரும் இலங்கையில் ,மேலதிக பணத்தை மக்களுக்கு இவ்வாறு வழங்க முடியும் என்பதை மக்கள் நினைவில் வைத்தால் நன்று .

No posts found.
இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு

இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு

இலங்கையில் உலகில் பரவி வரும் கொரனோ தாக்குதல் இல்லை என இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளில், பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இலங்கையில் பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை .

இலங்கை வரும் உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சி அடைந்து விடும் என்பதால் , இலங்கை சுகாதார அமைச்சு ,கொரனோ பாதிப்பு இல்லை என்கின்ற கதையினை கட்டவிழ்த்து விட்டுள்ளது .

No posts found.
பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

தம்புள்ளையில் ஆட்டோ வண்டியொன்றில் இருந்து பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் ,ரொட்டியை கொள்வனவு செய்தமைக்காக, குழந்தையொன்றை தரையில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.

குழந்தை பணத்தை திருடி வருவதாக நினைத்து அந்த நபர் அடித்துள்ளார் .விசாரணிகளில் குழந்தை தனது தாத்தவைதாம் இருந்து பணத்தை பெற்று பொருளை கொள்வனவு செய்ததது தெரியவந்துள்ளது .

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

ரொட்டியை வாங்குவதற்காக குழந்தை வாகனத்தை அணுகியபோது ,குழந்தையை தூக்கி தரையில் அடித்ததற்காக அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சந்தேக நபர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

படுகாயமடைந்த குழந்தை உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

No posts found.
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் ‘ராஜபக்‌ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத்

தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்,

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்

ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.


இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.
நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும்,வைத்தியசாலையில் இருந்தும்,வீடுகளில் இருந்தும்

இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம்.

அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி


அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

No posts found.
ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை

ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை

ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.


அண்மையில் இடம்பெற்ற நேபள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய தம்பி மதிசுதா அவர்கள் அழைத்துக் கெளவிக்கப்பட்டிருந்தார்.


தயாரிப்பாளரே கிடைக்காத உள்நாட்டு சினிமாவில் ஐபோனில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பெரிய பெரிய நிறுவனங்களின் படங்களுக்குள் இவ் விருதைப் பெற்றிருக்கின்றது.

எம்மவர்களின் வலிகளை
தனது திறமை மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கும் தம்பி மதிசுதாவிற்கு எம் வாழ்த்துக்கள்.


உங்கள் திரைப்பயணம் வெற்றிகரமாக தொடரட்டும் என பாரளுமன்ற உருபினர் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

No posts found.
யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு

யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு

நேற்று (29) இரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத மர்மக் கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

காயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்

போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் வத்தளையில் உள்ள உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் போலி இலக்கத் தகடுகள், பொம்மை கைத்துப்பாக்கிகள் மற்றும் போலி இலக்கத் தகடுகள் கொண்ட கெப் வண்டியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறிப்பிடுகின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (29) ஜாஎல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பொம்மை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீடொன்றுக்கு சென்று அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி கெமராவில் சந்தேக நபர் ஒரு குழுவினருடன் வாக்குவாதம் செய்வதும் பொம்மை துப்பாக்கியை எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

No posts found.
போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த பள்ளிவாசல்

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.

அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த பள்ளிவாசல்

உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே, திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.

அத்துடன் குறித்த திருமணத்திற்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

குறித்த இவ்விடயம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
அழகு சாதனப் பொருட்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அழகு சாதனப் பொருட்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

அழகு சாதனப் பொருட்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு வைத்திய நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்

இதுதொடர்பாக வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவிக்கையில்,சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப்பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டினார்

சருமததுடன் சேரும் சில ரசாயண பொருட்களினால் உடலுக்கு
பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

No posts found.
வாகன இலக்கத்தகட்டில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன இலக்கத்தகட்டில் மாற்றம்

வாகன இலக்கத்தகட்டில் மாற்றம்

வாகனங்களை புதிதாகப் பதிவுசெய்தல் மற்றும் வாகன உரிமையில் மாற்றத்தை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் வாகன இலக்கதகட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக வாகன இலக்கத்தகட்டில் தற்போதுள்ள மாகாணத்திற்கான குறியீட்டு எழுத்து நீக்கப்படவுள்ளது.

No posts found.
வாடகை வாகன சாரதி கொலை - மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது

வாகன சாரதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது கார் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரின் சாரதி தாக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, செய்தித்தாள் துண்டுகளை வாயில் திணித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேகநபர்கள் அவர் ஓட்டி வந்த சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது

சந்தேக நபர்களில் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களான முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மற்றைய சந்தேக நபர் கொலையுண்ட நபரிடம் இருந்து 02 கையடக்கத் தொலைபேசிகளை அடகு பெற்றவர் ஆவார்.

இந்த கொலையில் நேரடியாக தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளனர்.

மினுவாங்கொட கல்லொலுவ குறுக்கு வீதி பகுதியில் வசித்து வந்த 48 வயதுடைய அசோக பண்டார என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

No posts found.