சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் சிகரெட்டை வீதியில் எறிந்தமைக்கு ,
1500 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது .

காரை ஒட்டி கொண்டிருந்த பெண் ,கார் கதவை திறந்து சிகரட்டை வீதியில் எறிந்துள்ளார் .


இதனை அவதானித்த கவுன்சில் அதிகாரிகள்,
அந்த பெண்ணுக்கு 1500 பவுண்டுகள் தண்டம் விதித்துள்ளனர் .

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

பிரிட்டனில் நாய்களை வாக்கிங் அழைத்து செல்பவர்கள் ,
வீதியில் நாய் மலம் கழிந்தால் ,
அதனை அள்ளி செல்ல வேண்டும் .

அந்த மலத்தை அவ்விடத்தில் விட்டு சென்றால் ,
அவர்களுக்கு 1000 பவுண்டுகள் தண்டம் என ,
வீதி பலகைகளில் எழுத பட்டுள்ளது .

அதனை நாய் உரிமையாளர்கள் கடை பிடித்து செல்கின்றார் .
மேலும் பொது இடங்களில் புகைக்கவும் தடை உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
அரச விடுமுறை தினத்தில் 12 கார்களுக்கு தண்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரச விடுமுறை தினத்தில் 12 கார்களுக்கு தண்டம்

அரச விடுமுறை தினத்தில் 12 கார்களுக்கு தண்டம்

பிரிட்டனில் பாக்சிங் தினம் அன்று ,அதிக குளிர் காரணமாக வீதிகளில் ,
கார்களை பார்க்கிங் செய்து சென்றவர்களுக்கு தண்டம் வழங்க பட்டுள்ளது .

கார்களை உரிய முறையில் பார்க்கிங் செய்யவில்லை என தெரிவித்து இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .

பாக்சிங் தினம் அரச விடுமுறை நாளாக அறிவிக்க பட்டுள்ளது .
அந்த நாளில் கார் சாரதிகளுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது .

ஒரு காருக்கு 60 பவுண்டுகள் தண்டம் அறவிட படுகின்றன .
இந்த சம்பவம் டெக்கணம் பகுதியியல் இடம்பெற்றுள்ளது.

No posts found.
அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் எச்சரிக்கை

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக தொழில் வல்லுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் எச்சரிக்கை

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20,000 வைத்தியர்களிடம் மனுவொன்றில் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி 10ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட மனு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.

No posts found.
பொலிஸ் வாகனத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வாகனத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

பொலிஸ் வாகனத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று (29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் வாகனத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை

முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும் கட்டமைப்புடன் இணைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அம்பேவெல பண்ணைக்குச் சொந்தமான ‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று

(27) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள முறையான வளர்ச்சியைப் பாராட்டிய ஜனாதிபதி, இது ஏனைய பண்ணைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்திற்காக இப்பண்ணையை திறந்து வைப்பதுடன் அதற்குத் தேவையான பின்புலத்தை தயார்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அம்பேவெல பண்ணை, இலங்கை மற்றும் தெற்காசியாவின் பால் உற்பத்தி மற்றும் பண்ணை தொடர்பான அதியுயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் பிரதான மத்திய நிலையமாகச் செயற்பட்டு வருவதாக அம்பேவெல பண்ணைக் குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார குறிப்பிட்டார்.

‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவில் தற்போது சுமார் 1000 கறவை மாடுகள் உள்ளதோடு, அவற்றிலிருந்து தினமும் பால் சேகரிக்கப்படுகிறது.

இந்த மாடுகளிடமிருந்து தினமும் 03 முறை பால் கறக்கப்படுவதோடு நாட்டின் பால் தேவையின் 40,000 லிற்றர் திரவப் பால் இப்பண்ணை உள்ளிட்ட ஒட்டுமொத்த அம்பேவெல கட்டமைப்பிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.

பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

இக்கறவை மாடுகளைப் பராமரித்தல், தேவையான உணவு மற்றும் பானங்கள் வழங்குதல், எடை நிறுத்தல் , நோய் நிலைகளைக் கண்டறிதல், நோய்

நிலைமைக் காணப்பட்டால் மாடுகளைப் பிரித்தெடுத்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் இயந்திரம் மூலம் சுயமாக நடைபெற்று வருகின்றன.

அம்பேவெல பண்ணைக் கட்டமைப்பு முழுவதும் உள்ள 4500 மாடுகளுக்கு தற்போது உணவளிக்கப்படுகின்றது.

2001 ஆம் ஆண்டு அம்பேவெல குழுமம் நிறுவப்படுவதற்கு முன்னர், அது அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தபோது, நாளொன்றுக்கு 1500 லிற்றர் பால் மட்டுமே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது.

தற்போது சிறந்த கறவை மாடுகளை இலங்கையில் உருவாக்குவதில் அம்பேவெல கட்டமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்குள் வெற்றிக் கண்டுள்ளது.

அதன்படி, இந்தக் கறவை மாடுகள் எதுவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.

மேலும் கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்காக உலகில் தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கமைய உலகிலுள்ள உயர் ரக ஆண் மாடுகளின் விந்துக்களை இறக்குமதி செய்து,

மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்குப் பொருத்தமான கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வது இந்நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு பகுதியாக உள்ளது.

அதேபோன்று, கறவை மாடுகளுக்கு உணவளிப்பதன் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சோள விவசாயிகளின் முழுமையான விளைச்சலை அம்பேவெல பண்ணைக்கு பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆண்டுக்கு சுமார் 25,000 மெட்ரிக் தொன் சோளப் பயிர்களை சேகரித்து, சேமித்து வைக்கும் வசதியும் அம்பேவல கட்டமைப்பில் உள்ளது.

அம்பேவெல பண்ணைக்கு அருகில் தற்போது கைவிடப்பட்ட நிலையிலுள்ள மேய்ச்சல் நிலத்துக்கு உகந்ததென இனங்காணப்பட்டுள்ள சுமார்
30 ஏக்கர் காணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பார்வையிட்டார்.

No posts found.
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்

பிரதான பொலிஸ் பரிசோதகராக ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த
பீ.கே.எட்டியாராட்சி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில்,

வெற்றிடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக இவர் (28) புதன்கிழமை சமய வழிபாடுகளை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

No posts found.
திருட்டு மின்சாரத்தில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

திருட்டு மின்சாரத்தில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு

திருட்டு மின்சாரத்தில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு

சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இரண்டு காட்டு யானைககள் இறந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

யானைகள் இறந்தமை தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்காமல்  ,பெக்கோ இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இறந்த யானைகளை இரகசியமாக புதைத்தhகவும் பொலிஸ் பொலிஸ் விசாரணையில் தெரியந்துள்ளது.

திருட்டு மின்சாரத்தில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு

திறப்பனை பொலிஸ் பிரிவின் ஊட்டிமடுவ, ஞானிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த 19ஆம் திகதி தனது விவசாய நிலத்துக்கு சென்ற போது ,இரண்டு காட்டு யானைகள் மின்சார வேலிக்கு அருகில் உயிரிழந்துள்ளதையறிந்து பேக்கோ இயந்திரத்தை கொண்டு யானைகளை புதைத்துள்ளார். இதற்காக அவர் ரூ.79000.00 பணத்தை செலவிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No posts found.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் ,அநுராதபுரம் – வவுனியா ரயில் பாதை மூடப்படும்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் அநுராதபுரம் வவுனியா ரயில் பாதை மூடப்படும்

வடக்கு ரயில் பாதை சீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 05 ஆம் திகதி முதல் அநுராதபுரம் – வவுனியா ரயில் பாதை மூடப்படவுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவை இக்காலங்களில் வவுனியா வரை நடைபெறும். கல்கிஸ்சை, கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி புறப்படும் யாழ்.தேவி ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழமை போன்று அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரி 05 ஆம் திகதி முதல் ,அநுராதபுரம் – வவுனியா ரயில் பாதை மூடப்படும்

அநுராதபுரம் – ஓமந்தை வரையிலான ரயில் பாதை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும். இத்திட்டம் எதிர்வரும் ஜனவரி (05) முதல் ஆரம்பமாவதால்,05 மாத காலத்துக்கு அநுராதபுரம் – வவுனியாவுக்கிடையிலான ரயில் பாதை முழுமையாக மூடப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்திய கடனுதவித் திட்டத்தில் சுமார் 33 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய டெல்கொன் நிறுவனம் இந்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்த அபிவிருத்திப் பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொண்டால், எதிர்வரும் காலங்களில் சிறந்த ரயில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டதுடன் வடக்குக்கான ரயில்கள் சுமார் 100 கிலோ மீற்றர் முதல் 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும். இதனால், சுமார் ஒரு மணி நேரத்தைமீதப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் கூறினார்.

இதனால் ரயில் பயணிகள் எந்தவித தடங்களுமின்றி தமது பயணத்தை தொடர விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும். அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிப்பதற்காக, ரயில்வே திணைக்களம் விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.இதற்கான நேர அட்டவணையொன்றும் தயாரிக்கப்படும். இக்காலப் பகுதியில் வடக்குக்கான ரயில் சேவை அநுராதபுரம் வரை வழமை போன்று நடைபெறும்.
.

இந்திய இர்கொன் நிறுவனத்தின் பணிப்பாளர்களான குருபட்சன், சி.கே.பன்டிட் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்தனர் .

No posts found.
பிரிட்டன் பிரான்ஸ் நடுகளுக்கு பனங்கள் ஏற்றுமதி
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டன் பிரான்ஸ் நடுகளுக்கு பனங்கள் ஏற்றுமதி

பிரிட்டன் பிரான்ஸ் நடுகளுக்கு பனங்கள் ஏற்றுமதி

ஒரு தொகை பனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள் பிரான்ஸுக்கு அண்மையில்; அனுப்பப்பட்டதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்றுமதி மூலம் 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரான்ஸ் நடுகளுக்கு பனங்கள் ஏற்றுமதி

இதேவேளை, டிசம்பர் மாதம் 14 அம் திகதி பிரிட்டனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகை பனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள்

ஏற்றுமதி மூலம் 6,300 அமெரிக்க டோலர் வருமானம் பெறப்பட்டதாக தெரிவித்த அவர் ,இது போன்று மேலும் பல நாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

thumbnail 1பனை அபிவிருத்தி சபை மற்றும் பனை ஆய்வு நிறுவனத்தின் கீழ் பனை அபிவிருத்தி சபையில் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மூலம் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள விநியோக முகவர் நிறுவனம் ,லண்டனில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கால பகுதியில் பர்னட்
(Barnet) என்ற பிரதேசத்தில் விற்பனை ஊக்குவிப்பு திட்ட நடவடிக்கையை முன்னெடுத்தது என்றும் அவர் கூறினார்.

No posts found.
வெளிநாடு செல்வோருக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடு செல்வோருக்கு ஆப்பு

வெளிநாடு செல்வோருக்கு ஆப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்புடன் ஒப்பநோக்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெயர். வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை தயாரித்து தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சந்தேகத்திற்கிடமான நபர்களின் தகவல்களை உடனடியாக சரிபார்க்க இதன் மூலம் முடியும்.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (28) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜெஃப் குணவர்தன,
ஆட்கள் பதிவு ஆணையாளர் வியானி குணதிலக்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

No posts found.
பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து ஆட்டோ மோதல் சிறுமி மரணம் 3 பேர் காயம்

பேரூந்து ஆட்டோ மோதல் சிறுமி மரணம் 3 பேர் காயம்

இலங்கை அம்பிட்டிய பகுதியில் இலங்கை அரசு அபோக்குவரது பேரூந்து ஒன்று ,ஆட்டோ ஒன்றுடன் மோதி சிதறியதால் ,ஏழுவயது சிறுமி பலியாகியுள்ளார் .

மேலும் அவரது பெற்றவர்கள் உற்றவர்கள் மூவர் காயமடைந்த நிலையில் ,சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
இலங்கை கொழும்பில் முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கொழும்பில் முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை

இலங்கை கொழும்பில் முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை

இலங்கையில் முட்டை ஒன்றில் விலை 55 ரூபாவாக விற்பனை செய்ய படுகின்றது .

கொழும்பு ,கம்பாக பகுதியில் இந்த விலையில் விற்பனை செய்ய படும் என அறிவிக்க பட்டுள்ளது .

மக்களை காப்பாற்றுவேன் என முழங்கிய ராஜபக்ச குடும்பம் ,நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்டதன் நிலையில் ,இன்று இலங்கை மக்கள் பிச்சைக்காரர்களாக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு
Posted in இலங்கை செய்திகள்

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், , இராதாகிருஷ்ணன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம் ஒன்றுக்கு, நுவரெலியா மாவட்ட ​உதவித் தேர்தல் ஆணையாளர்

கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற

உறுப்பினர்களான அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் ஆகியோரது சொத்து விவரங்கள், கல்வி தகமைகள் உள்ளிட்டத் தகவல்களை

வழங்கக் கோரி 02.10.2022 அன்று நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.

வழங்கப்பட்ட பதில் கடிதத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1994, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். முத்துசிவலிங்கம் 1994, 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில்

பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பழனி திகாம்பரம் 2004, 2010, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும், வே.இராதாகிருஷ்ணன் 1999, 2004, 2009, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும், மயில்வாகனம் திலகராஜ் 2015ஆம் ஆண்டும், ஜீவன் தொண்டமான் 2020ஆம் ஆண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு

அரசியல்வாதிகளின் கல்வித் தகவல்கள் வேட்புமனுக்களில் சேர்க்கப்படாததால் ”தேர்தல் ​ஆணையகத்திடம் அரசியல்வாதிகளின் கல்வி தகவல்கள் இல்லை” எனவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் “RTI விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள “சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்” தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும்.

எனவே சொத்துகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதற்கு அவர்களின் அனுமதி எதிர்காலத்தில் கோரப்பட்டு, அனுமதி கிடைத்தால் மாத்திரமே அந்தத் தகவல்கள் வழங்கப்படும்” எனவும் ​தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவலறியும் உரிமைச் சட்டத்தின் 3(1) 5ஆம் பிரிவின்படி இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடமையில், கட்டுப்பாட்டில், உள்ள தவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய வழங்கிய தவல்களில் திருப்தி இல்லை என்பதால் இது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேன்முறையீட்டுக்கு 14.11.2022 என திகதி குறிப்பிடப்பட்டு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், “நீங்கள் கோரியிருக்கும்

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களின் அனுமதி கோரப்பட்டது.

இதன்படி, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க சம்மந்தப்பட்டவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனவே, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க

முடியும். ஆனால் இதனை எதனையும் குறிப்பிடாமல் தகவல்களை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆலுவலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், எம்.கே சமன் ஶ்ரீ ரத்நாயக்கவுக்கு 28.11.2022 அன்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள​போதிலும் இதுவரையில்
பதில் கிடைக்கவில்லை என்பதால் தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No posts found.
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

டிசம்பர் 26 ஆம் திகதி வரை சுமார் 701,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள், 2022 ஆம் ஆண்டில் சுமார் 720,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 இல் 194,495 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்திருந்தனர்.

இதுவரை வெளியாகியுள்ள தரவுகளின்படி,
இம்மாதம் 26 ஆம் திகதி வரையில் 73,314 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No posts found.
இலங்கையில் 2000 எம்பிகள் சாராய கடை முதலாளிகளாக உள்ளது அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்

இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்

இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என கூறி தேர்தலில் போட்டியிட்டு ,வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் 2000 சாராய கடைகள் வைத்துள்ளது உள்ளது அம்பலமாகியுள்ளது .

மக்களின் பிரதிகள் தாம் என பேசி கொள்ளும் இவர்கள் ,மக்களை குடிகாரராக்கி ,அதில் பலகோடி பணத்தை சுருட்டி செல்வது அம்பலமாகியுள்ளது .

பல மக்களின் வாழ்வில் கண்ணீர் வாழ்வை எழுதி ,அவர்கள் கண்ணீரில் காசு உழைத்து ,சொகுசாக வாழும் இந்த எம்பிகளை அறிந்து ,மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் .

மேலும் இந்த கடைகளுக்கு அதனை செய்ய வேண்டும் ,என மக்கள் கொதிப்புடன் தெரிவித்து கொள்கின்றனர் .

இது தாங்க இலங்கை ஜனநாயகம் ,மக்கள் அறம் .இவர்கள் தான் மக்களின் சிறந்த தலைவர்கள் .கோயில் கட்டி கும்பிடனும் .

No posts found.
வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்

வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்

கடல்வழியாக ஐரோப்பாவுக்கு நுழையும் முகமாக பயணித்த இலங்கையர்களில் 303 பேர் வியட்நாமில் சிக்கினர் .

இவர்கள் பயணித்த கப்பல் வியட்நாமில் கரை ஒதுங்கிய நிலையில் ,கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டனர் .

அவ்வாறான இலங்கையர்களில் 152 பேர் ,தற்போது இலங்கைக்கு விசேட விமானம் ஒன்றில் அனுப்பி வைக்க பட்டனர் .

இலங்கை செல்லும் இவர்கள் நீதிமன்ற ,விசாரணைகளுக்கு உட்படுத்த பின்னர் ,விடுவிக்க படுவார்கள் .

No posts found.
சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி

சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி

இலங்கையில் பல மக்களின், மூன்று பில்லியன் பணத்தை மோசடியான முறையில் ,சுருட்டிய திலினி கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்க பட்டார் .

இவருடன் பல அரசியல்வாதிகள் ,மற்றும் மகிந்தாவின் மனைவி உள்ளிட்டவர்கள் ,நெருங்கியவர்களாகவும் விளங்கினர் .

மகிந்த மனைவியின் ,பலமில்லியன் பணத்தை இவர் வியாபாரம் செய்து வந்துளளர் .

இவர்களது முகவராக இவர் செயல்பட்டுள்ளார் .

சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி

எனினும் அவை மூடி மறைக்க பட்டுள்ளது .இந்த பெண்ணை யார் என்றே தெரியாது என அறிக்கை விட்டவர் ,மகிந்த ராஜபக்சவின் மனைவி அவர்கள் .

ஆனால் தற்போது அவருடன் கூட நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி ,இவர்கள் பின்புலம் ,எது வரை உள்ளது என்பதை பார்த்து தீர்ப்பை ,நீங்களே எழுதி கொள்ளுங்கள் மக்களே .

பூலன் ராணியை கேள்வி பட்டிருக்கிறோம் ,இவர் இந்தியாவை சேர்ந்தவர் அரசியல் ஈடுபட்ட பின்னர் சுட்டு கொலை செய்யப் பட்டார் .

அவருக்கும் கொள்ளை ராணி என்ற பெயர் உண்டு ,அதே போலவே இப்பொழுது ,திலினியும் அந்த பெயரை பெற்று பெருமை தேடி கொண்டுள்ளார் .

No posts found.
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு வீடியோ

லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு

பிரிட்டன் லண்டன் பகுதியில் தமிழர் கடை ஒன்றில் பட்ட பகலில் நடந்த கத்தி முனை கொள்ளை .

இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .

கைபேசி ,பணம் ,சாராயம் ,சிகரெட் என்பனவற்றை திருடி தப்பி ஓடும் திருடர்கள் .

உயிர் தப்பிய தமிழ் வாலிபன் .

.காணொளி முழுமையாக பாருங்கள்

No posts found.
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் ​பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த உறவினர்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த இரு சந்தேகநபர்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

ஜோன்டியா மற்றும் கலயா என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைத்தொலைபேசி தொடர்பில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து அதனை சமரசம் செய்து கொள்வதற்காக அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்ததாகவும், பின்னர் அவர்களது உறவினர்கள் குழுவொன்று வந்து சந்தேக நபர்களை அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது ​​அங்கு பதற்றமான சூழல் உருவானதுடன், நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட போது அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பதற்றமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின்
அதிகாரிகளும் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

No posts found.
இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை

இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை

2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேர் உட்பட இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன்,

நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No posts found.