அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்

அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்

எமது வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது.

அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன்- வெளிஓயா தோட்ட மக்கள் எச்சரித்துள்ளதுடன் இன்று (3) ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் சுகவீனமுற்றிருந்த நிலையில், உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கிடைக்காமை காரணமாக நேற்று(2) உயிரிழந்துள்ளார்.

அத்துடன், வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் உயிர்கள் பலியாக இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில்

பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம் என தெரிவித்த மக்கள், இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை.

எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்
அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம் எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

No posts found.
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை

டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் இருந்து தப்பித்து டுபாயில் வசித்து வரும் பத்து குற்றவாளிகளை ,கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை உளவுத்துறையின், ஈடுபட்டு வருகின்றனர் .

இவர்கள் யாவரும் போதைவஸ்து குற்ற செயல்களுடன் ,
தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .


இவர்களுடன் அரசியல் வாதிகளிற்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .

No posts found.
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஆகிய உயரதிகாரிகளுக்கான 2023 ஆம் ஆண்டின் புதுவருட சந்திப்பும்,

இவ்வாண்டின் வேலைத்திட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (02) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் அளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக கடமையாற்றிய வந்த எம்.வை.சலீம் கடந்த 31.12.2022 ஆம் திகதி ஓய்வுநிலைக்குச் சென்றதையடுத்து ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவியும் வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள்,
உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும்
ஆணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அபு அலா

No posts found.
இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

இலங்கை பொரளை பகுதியில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் , விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலை செய்த்திட முனைந்துள்ளார் .

ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரு பிள்ளைகளுக்கும், விஷம் பெருக்கி தானும் அருந்தியுள்ளார் .

எனினும் அயலவர்களினால் இவர்கள் காப்பாற்ற பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

இவ்வாறான நிலையில் ,ஐந்து வயது குழந்தை இறந்துள்ளது .

எட்டு வயது குழந்தை மற்றும் தயார் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

இவர்களின் இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .

No posts found.
இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றும் கடந்த 2022 ஆண்டு 180 பேர் தற்கொலை புரிந்துள்ளனர் .

நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் பண நெருக்கடி ,குடும்ப தகராறு ,பகை ,காதல் மாற்று இதர வாழ்வியல் நிலைப்பாட்டு நெருக்கடி காரணமாக, இந்த தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன .

இவ்வாறு இறந்தவர்களில் இளம் வயதுடையவர்கள் அதிகம் எனப்படுகிது .

அதிகரித்து செல்லும் இந்த தற்கொலைகள், மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி நிற்கிறது .

No posts found.
இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு

இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு

இலங்கையில் இன்று இரவு முதல் டீசல் 15 மற்றும் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் விலை குறைப்பு செய்ய படவுள்ளன .

ஆளும் இலங்கை ரணில் அரசினால் , தொடராக அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைப்பு இடம் பெற்ற வண்ணம் உள்ளது .

இவை மக்களை குஷி படுத்தும் நோக்கில் ,தேர்தலை மைய படுத்தி நடத்த படுகிறது .

No posts found.
இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும்

மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (02) உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 21ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

12 இந்திய மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு

ஒத்திவைத்ததுடன் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை
அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

No posts found.
பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (01) இரவு வீடு உடைத்து திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.​

வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீட்டில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,​

தனிப்பட்ட தேவையின் நிமித்தம் வீட்டிலுள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்த சமயத்தில் நேற்றிரவு வீட்டின் பின்பக்கமாக சென்ற திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து பணம் மற்றும் நகை ஆகியவற்றினை எடுத்துச் சென்றுள்ளனர்.​

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு

இன்று காலை வீட்டினை திறந்த போது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையடுத்து வீட்டின் உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.​

குறித்த திருட்டுச் சம்பவத்தின் போது 6 1/2 பவுன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.​

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No posts found.
இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி

இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.​

இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.​

கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​

இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும்,
6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க
மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

No posts found.
பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பம்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பம்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை வளவுகளைத் துப்பரவு செய்யும் பணிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வலயக் கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

No posts found.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

சீன அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் கடனுதவியை வழங்கும், அதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1,888 வீடுகளும், பழம் பெரும் கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்

பேலியகொட, மஹரகம, மொரட்டுவ, தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொட்டாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக சீன அரசு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள் இணைந்து மக்கள் தொகை ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தின் பிரதி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பரில் சீன அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட நிறுவனத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிதி அமைச்சின் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

No posts found.
வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் புத்தாண்டு தினத்தில் கொடூர சம்பவம்

கிளிநொச்சியில் புத்தாண்டு தினத்தில் கொடூர சம்பவம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியுமுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை
கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

2000 மடங்காக உயரும் மின் கட்டணம்

2000 மடங்காக உயரும் மின் கட்டணம்

நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.​

அங்கு உரையாற்றிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், நுகர்வோருக்கு 0 முதல் 30 அலகுகள் வரை மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.​

மேலும் கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,​

​“நாளை அமைச்சரவைக்கு செல்லும் மின்சாரத் திருத்தத்தின் சில அளவீடுகளை நேற்று ஆய்வு செய்தேன். இதில், 0-30, 31-61, 61-90 மற்றும் 91-120 அலகுகளுக்கு இடையில் நுகர்வோரின் மின் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம் இல்லை என

2000 மடங்காக உயரும் மின் கட்டணம்

நினைக்கிறேன்.இதில் 0-30 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணத்தை 2003 மடங்காக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

இலங்கையில் சுமார் 50 லட்சம் பேர் 90க்கும் குறைவான அலகுகளை பயன்படுத்துபவர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர்களின் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், இந்த சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். 0-30க்கு இடையில் நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

31-60க்கு இடைப்பட்ட 120 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரிடமிருந்தும் அடுத்த ஆண்டு சுமார் 80 பில்லியன் கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது நியாயமற்ற பிரேரணையாக இருப்பதால், தற்போதைய நிலையில் இலங்கை மின்சார சபை கடந்த 4 மாதங்கள் மற்றும் இந்த மாதம் உட்பட செயல்பாட்டு இலாபத்தை ஈட்டுகிறது.

No posts found.
பேரூந்து விபத்து பயணிகள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்து பயணிகள் காயம்

பேரூந்து விபத்து பயணிகள் காயம்

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்து ,ஆடம்பர தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர் .பேரூந்து முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது .

சாரதி தூங்கிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

இலங்கை தெற்கு அதிகவேக சாலையில் இடம்பெற்ற புத்தாண்டு தின முதல் பயணிகள் பேரூந்து ,விபத்தாக இது பதிவாகியுள்ளது .

No posts found.
பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் பாதாள உலக குழு தலைவனாக செயல் பட்டு வந்த ,கஞ்சிபான இம்ரான்,தற்போது கடல் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக இந்தியா ரோ ஊடகம் அறிவித்துள்ளது .

இவர்களின் கருத்தின் பிரகாரம் ,அவர் தொடர்ந்து ராவின் ,கண்காணிப்பில் உள்ளாக்க பட்டுள்ளார் என்பது அர்த்தமாகிறது .

நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவரே இவ்வாறு தமிழ்நாடடுக்கு தப்பி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
மோட்டார் சைக்கிள் லோர் மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்

இலங்கை பிம்பர வைத்தியசாலைக்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ,ஒருவர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

60 வயதுடன் ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு

60 வயதுடன் ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு

இலங்கை ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் .அறுபது வயதுடன் தமது ஓய்வை பெற்று கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது .

இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் .இந்த புதிய சட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்கின்றனர் ரயில்வே பணியாளர்கள் .

No posts found.
இறந்த காதலிக்கு தாலி கட்டிய காதலன்
Posted in இலங்கை செய்திகள்

இறந்த காதலிக்கு தாலி கட்டிய காதலன்

இறந்த காதலிக்கு தாலி கட்டிய காதலன்

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் காதலி ஒருவர் இறந்த நிலையில் ,அங்கு வந்த காதலன் அவருக்கு தாலி கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இருவரும் பத்து வருடமாக காதலித்து வந்துள்ளனர் .ஆனால் பெண் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ,காதலி உயிரை மாய்த்துள்ளார் .

பெண்ணின் பெற்றவர்கள் தெரிவித்த எதிர்ப் பால் காதலி உயிரிழந்த நிலையில் ,காதலியின் இறுதி நிகழ்வில் கலந்த்து கொள்ள வந்த காதலன் அவரது சடலத்துக்கு தாலி கட்டிய கண்ணீர் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

தனக்கு பிடித்தவர்களின் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெண்ணின் விருப்பை ஏற்க மறுத்ததன் விளைவு இது .

No posts found.
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி தலையை வெட்டி சென்ற நபர்கள்

புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி தலையை வெட்டி சென்ற நபர்கள்

தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான இந்த பெண் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சடலம் புதைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் உயிரிழந்தவரின் மகளுக்கு தெரிவித்ததனையடுத்து அவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கலேவெல பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

No posts found.