Posted in இலங்கை செய்திகள்

100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்

100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (09.07) காலை யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பரீட்சார்த்தமாக பயணத்திருந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹோ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பரீட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து, மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை அதேவேகத்தில் பயணித்திருந்தது.

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது. இப் புகையிரதத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்

போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (09.07) வவுனியா, தோணிக்கல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே குறித்த படங்களுடன் முன்னாள் போராளிகள் ஒன்று கூடியிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரி சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அனுககூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்திருந்தார்.

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்

இதன்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தியாகதீபம் திலீபன் மற்றும் அனைபூபதி ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிகுமரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்

வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன் போது புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நவகமுவ சம்பவம் 8 பேருக்கு விளக்கமறியல்

நவகமுவ சம்பவம் 8 பேருக்கு விளக்கமறியல்

நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நேற்று (8) கடுவலை நீதிவான் முன், ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரை உங்களுக்குத் தெரியுமா
Posted in இலங்கை செய்திகள்

இவரை உங்களுக்குத் தெரியுமா

இவரை உங்களுக்குத் தெரியுமா

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடி படகுகள் 02 வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து ஜூலை 08 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தி இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை

கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் 74 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கைகள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையினர் தொடர்ந்து

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை (07) கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று சனிக்கிழமை (08) பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் கரை தட்டி உள்ளது.

நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ


நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ

இரு பெண்களுடன் சிக்கிய பிக்கு காம லீலை சர்ச்சை ,பொக வந்தலாவ ராகுல தேரர் ,கேட்கும் கேள்விகளுக்கு தமிழர்கள் உங்கள் பதில் என்ன ..?.அறிவுபூர்வமாக சிந்தித்தால் ,எல்லாம் அரசியல் தாங்க போங்க .

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை
Posted in இலங்கை செய்திகள்

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை


உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதான அமெரிக்க பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!

இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜீலை 20 ஆம் திகதி புதுடில்லி விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன் போது ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!

இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள்

கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி

கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி

எனினும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த இளைஞன், கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட்ட பின் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் (BIMSTEC) வலயத்தை அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அழைப்பின் பேரில் இந்திய சுற்றுலா சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு “எல்லைகளைக் கடந்து – வாழ்வை மாற்றும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன. இதில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 50 இந்திய ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் திருமதி. ஜோதி எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற வேண்டும். புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுறுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

இந்த மாநாட்டிற்குப் பின்னர், இங்கு வருகை தந்துள்ள பலர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சன்னதியை தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வலயத்தில் மிகப் பழைமையான ஆலயமொன்றாகும். சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம். மலைகளையும் மற்ற அழகிய இடங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், நான் இங்கு சொன்ன இடங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஒகஸ்ட் மாதம் நல்லூர் திருவிழாவும் கண்டி பெரஹெராவும் நடைபெறுகின்றன. இது நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிறப்பு சுற்றுலா ஈர்ப்புள்ள தலமாக இது திகழ்கிறது. காலி இலக்கிய விழா ஜனவரி மாதம் நடைபெறுகின்றது. தென்மாகாணத்தின் காலியிலுள்ள

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான திருவிழாக்கள் உள்ளன. ஹிரிகெட்டிய கடற்கரையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் டிஸ்கோடெக் நவீன ஜாஸ்

இசை என்பன பல இருக்கின்றன . மாத்தறையில் பல பாரம்பரிய இசைக் கச்சேரிகள் நடைபெறுவதுடன் ஜனவரி மாதம் கொழும்பில் ஆண்ட்ரியோ பொசெல்லியின் பாடலைக் கேட்கலாம்.

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனை 5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன.

நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும். தெதுவ பிரதேசத்தை அண்மித்து, நீர்த்தேக்கத்திற்கு அண்டிய 1000 ஏக்கருக்கும் அதிகமான பகுதி, சுற்றுச் சூழலுக்கு உகந்த சுற்றுலாத் துறைக்குப் பொருத்தமான பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம்.

ஹோடன் சமவெளிக்கு அருகில் மேலும் 900 ஏக்கர் உள்ளது. பசுமை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் பங்களிப்பதன் மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும் பல இடங்களில் துடுப்புப் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

அண்மையில் சென்று வந்த எல்ல பயணத்தின் அற்புதமான அனுபவத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், அதன் வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை அதன் தனித்துவமான உணவு மற்றும் கலாச்சார துறைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உலகிற்கு காண்பிக்க முடியும்.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க

விரும்பினால் அதற்கான வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையின் அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்த சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றுவது அவசியம். சுற்றுலாத் துறை மூலம் அதிக வருமானம் பெறுவதன்

மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். சுற்றுலாத் துறை தொடர்பான இந்தத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பதவிக்காலம் மேலும் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பதவிக்காலம் மேலும் நீடிப்பு

பதவிக்காலம் மேலும் நீடிப்பு

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே நாளை அல்லது திங்கட்கிழமை சி.டி.விக்ரமரத்ன பணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (09) வரை வழங்கப்படவில்லை.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஜனவரி 12ஆம் திகதி ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியதுடன், உரிய இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை (12) ஆறுமாத காலம் நிறைவடையவுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என மூத்த சட்ட நிபுணர் ஒருவர் கூறினார்.

இதனால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது

இதேவேளை, பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் சிசிர மெண்டிஸிற்கு பத்து மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பிரதிவாதிகள் யாரும் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை எனவும், உரிய இழப்பீட்டை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்

.மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மூன்று பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

மூன்று பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மீட்டியாகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, ​​போகஹவெல பிரதேசத்தில் உள்ள ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவ சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது

கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேர், நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது

சில மாதங்களுக்கு முன்னர், கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக மற்றுமொருவரை இதே போன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன

அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்

சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்

பொலன்னறுவை பெலத்தியாவ பகுதியில் இளைய சகோதரனால் கத்தியால் குத்தப்பட்டு மூத்த சகோதரன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாய்த்தர்க்கத்தை அடுத்து மூத்த சகோதரனை இளைய சகோதரன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்

தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்