Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நீதிபதி விவகாரம் நாளை முடிவு நீபதிக்கு தீர்வு தேவை என முழக்கம்
நீதிபதி விவகாரம் நாளை முடிவு நீபதிக்கு தீர்வு தேவை என முழக்கம்
முல்லைத்தீவு மாவடட நீதிபதி சற்குணராஜாவுக்குஅச்சுறுத்தல் விடுக்க பட்டு நாட்டை விட்டு துரதியடிக்க பட்டார் .இதனை அடுத்து அவருக்கு தீர்வு தேவை என் கோரி தமிழ்கடச்சிகள் போராடடம் நடத்தின .
மேலும் யாழ்ப்பாணத்தை முடக்கி கத்தால் அனுஷ்ட்டிக்க தமிழ் தேசிய கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர் .
முல்லைதீவிவு நீதிபதி விவகாரம் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றுள்ள நிலையில் ,அவை இலங்கை அரசுக்கு மிக பெரும் அவமானத்தை ஈட்டி கொடுத்துள்ளது .
இவ்வாரண நிலையில் தப்பு அவரே புரிந்தார் என்ற நிலையில் சர்வதேச போலீஸ் ஆதரவுடன் அவரை கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
நிர்வாண படங்களை விற்பனை புரிந்த பெண் கைது
நிர்வாண படங்களை விற்பனை புரிந்த பெண் கைது
இலங்கையில் பெண் ஒருவர் தனது கணவனுடன் இணைந்து இணையதளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
முப்பத்தி மூன்று வயதாகும் இந்த பெண் தனது கணவனின் துணையுடன் நிர்வாணப்படங்களை காண்பித்து அதன் ஊடாக இரண்டாயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார்
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த இந்த சமபவம் தற்போது போலீசாரிடம் சிக்கிய நிலையில் ,தம்பதிகள் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
போதை வஸ்துடன் பெண் கைது .
போதை வஸ்துடன் பெண் கைது .
இலங்கை மன்னார் பேசலை கடல் பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கிலோகிராம் எடையுடய போதைவஸ்துடன் பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
பெண் மீது சநதேகம் கொண்டவர்கள் போலீசாருக்கு அழைத்து தெரிவித்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் ,கைதான பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
பிரித்தானியா லண்டனில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு சக்கர நாற்காலியில் வாழும் நிலைக்கு ஆளான ஈழத்தமிழ்ச் சிறுமி துஷா.
துஷா ஆகிய நான் 5 வயதில் ஒரு கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் முடங்கிவிட்டேன்.இப்போது நான் சுட்டவர்களை சந்திக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும்.
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள,தன் உறவினரின் மளிகைக்கடையில் விளையாடிக்கொண்டிருந்த போதே சூட்டுக்கு இலக்கானார் .
லண்டனில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட் துஷா கமலேஸ்வரன் என்னும் அந்த ஐந்து வயது ஈழத்தமிழ்ச் சிறுமிக்கு, அன்று தன் வாழ்வே மாறப்போகிறது என்பது தெரியாது.
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
அந்த கடைக்குள் நுழைந்த போதைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், தங்கள் எதிராளி ஒருவரை துப்பாக்கியால் சுட,அந்த நபர் தப்பிக்கொள்ள, துப்பாக்கிக் குண்டு விளையாடிக்கொண்டிருந்த துஷாவின் மார்பைத் துளைத்துக்கொண்டு சென்று அவளது முதுகெலும்பைத் தாக்கியது.
இரத்த வெள்ளத்தில் சாய்ந்த துஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்,அவளது முதுகெலும்பில் குண்டு தாக்கியதால்,அவளால் நடக்கமுடியாது என்னும் துயரச் செய்தி .
அவளது பெற்றோரான சசி மற்றும் ஷர்மிளா தம்பதியருக்குத் தெரிவித்தார்கள் மருத்துவர்கள்.
இது நடந்தது,2011ஆம் ஆண்டு. 2012ஆம் ஆண்டு துஷாவை சுட்ட Nathaniel Grant,Anthony McCalla மற்றும் Kazeem Kolawole ஆகிய மூவரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
தன்னை சுட்டவர்களிடம் துஷா கூற விரும்புவது.
தற்போது 18 வயதாகிறது துஷாவுக்கு. நடனத்தில் விருப்பம் கொண்ட துஷாவின் நடனக் கனவுகளை அந்த போதைக் கும்பல் கலைக்க பட்டது .
அவளால் இனி நடனமாட முடியாது.துஷாவின் இன்னொரு விருப்பம், மருத்துவராவது.தன்னைக் காப்பாற்றிய மருத்துவர்களைப் போல,தானும் ஒரு
மருத்துவராக விரும்புகிறார் என்கிறார் துஷா.
தன்னை சுட்டவர்களை சந்தித்து அவர்களிடம் சில விடயங்களைக் கூறவேண்டும் என விரும்புகிறார் துஷா.

அவர்களுடைய கண்களை நேருக்கு நேராக பார்க்க வேண்டும் .,சிறையிலிருந்தபோது அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள், தாங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

சில விடயங்களுக்காக அவர்களை நான் மன்னிக்கிறேன், ஆனால்,சில விடயங்களுக்காக அவர்களை என்னால் மன்னிக்கமுடியாது என்கிறார் துஷா.
அவர்கள் என் பிள்ளைப்பிராயத்தின் சில பகுதிகளைத் திருடிவிட்டார்கள்.
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
அவர்கள், நான் என்ன சாதித்துள்ளேன் என்பதைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் துஷா, நான் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவம் படிக்கிறேன் .
நான் என் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார்.
ஒரு மருத்துவராகி, எனக்குக் கிடைத்த அக்கறையை, கவனிப்பை, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, நான் கொடுப்பேன், அதுதான் என் கனவு என்கிறார் துஷா.
மனம் சோர்ந்து போகாதது கனளவுகளை நெஞ்சுக்குள் புதைத்து விடாது எழுந்து நடக்கும் இந்த இளம் தமிழ் பெண் போற்றுலாத்துக்கு உள்ளானவர் ,அவரை எதிரி இணையமும் வாழ்த்துகிறது .
முடியம் என மோது முகில் முட்டும் மலையும் தகரும் .
நன்றி ஈழம் ரஞ்சன் .

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
சமூக வலைத்தளங்களை தடை இல்லை அமைச்சர் குத்துகாரணம்
சமூக வலைத்தளங்களை தடை இல்லை அமைச்சர் குத்துகாரணம்
சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சர் குத்துகாரணம் அடித்துள்ளார் .
இதில் எவ்வித உண்மையும் இல்லை, சமயங்களை அசௌகரியப்படுத்தல், இனபேதம், சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு ஏதுவானதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர் .
, அதனால் சமூகத்தை நேர்வழியிலிருந்து திசை திருப்பக்கூடிய விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்காகவே இச்சட்டம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனை

“சமூக ஊடகங்களுடன் தொடர்புபடும் புதிய சட்டம் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக உருவாக்கப்படவுள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களினால் அப்பாவி மக்களுக்கு பலர் பல்வேறு விதமான அசௌகரியங்கள், இதனால் ஏற்படுத்த படுகிறது .
சமூக வலைத்தளங்களை தடை இல்லை அமைச்சர் குத்துகாரணம்
சிரமங்கள் மற்றும் வெறுப்புக்கள், குரோதம், ஆத்திரம், போன்றவற்றை ஏற்படுத்துவதனால் மனித வாழ்க்கையில் பாரியளவில் அழிவுகளை சந்தித்தவாறு செயற்படுவதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் இச்சட்டத்தினால் சிறந்த வெற்றிகரமான சந்தர்ப்பங்களே ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.
உலகில் பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் எவ்வித சமூக ஊடகங்களும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அவ்வாறான நாடுகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட வெகுஜன ஊடக அமைச்சர், அந்நாடுகளில் எவ்வித தணிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வில்லை.
அவ்வாறே நமது நாட்டிலும் இப்புதிய சட்டம் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என தெளிவுபடுத்தினார்.
அத்துடன்; மிகவும் சிறந்த வாதப்பிரதிவாதங்கள், விமர்சனங்களினால் ஏற்படக் கூடியது என்றும் ஆனால் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, வெறுப்புக்களை பரப்பும், சமய மற்றும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் தேசிய பாதுகாப்பிற்கு
எச்சரிக்கையானவற்றிற்காக ஒழுங்குபடுத்தலை ஏற்படுத்துவதே இச்சட்டத்தின் பிரதான நோக்கமாக இதனை முன்வைக்க வேண்டும், எந்த அமைச்சராக இருந்தாலும் அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை
என்றும் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சருக்கு இதற்கான தமது அபிப்பிராயங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ என்பன நேரடியா மோதியதில் ரயிலில் பயணித்த நால்வர் படு காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
அனுராதபுரத்தில் இருந்து பொலியத்த நோக்கி பயணித்த கொண்டிருந்த ,ஆட்டோ ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
இந்த ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த ரயில் ஆட்டோ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் இடம்பெற்று வரும் வாகன விபத்துக்களில் சிக்கி,
நாள்தோறும் ,நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளதாக,
செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிடதக்கது .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
விபத்தில் சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்தோடு சாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் மூவர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறு காயங்களுடன் ஒரு ஆண் நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு பேருந்து மோதி விபத்து பலர் படுகாயம்
இரு பேருந்து மோதி விபத்து பலர் படுகாயம்
பேருவலையில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ஒன்றும், கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில்
சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (04) காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்
நீளுகின்ற வகையில் சில இடங்களில் குறித்த மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்
இதன் போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக்
கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காதலியுடன் தான் வந்துள்ளீர்களா
காதலியுடன் தான் வந்துள்ளீர்களா
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (03) இலங்கையை வந்தடைந்த கிரிக்கெட் வீரர், சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று கிரிக்கெட் வீரர் கூறினார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்றும், அதன் மூலம் அவர் தனது விசாரணையின் போது தனது சட்டத் தேவைகளுக்காக செலவழித்த பணத்திற்காக இழப்பீடு கோரலாம் என்றும் குணதிலக தெரிவித்தார்.
காதலியுடன் தான் வந்துள்ளீர்களா
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையைத் தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த குணதிலக, கிரிக்கெட்டைத் தொடர்வதற்கு விரைவில் பயிற்சியில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்துடன் காதலியுடன் தான் நீங்கள் இலங்கைக்கு வந்துள்ளீர்களா என்று ஊடகவியலாளர் தனுஷ்கவிடம் கேட்ட போது, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தனுஷ்க வினவினார்.
அதற்கு அவர்கள் நீங்கள் காதலியுடன் தான் வந்துள்ளீர்கள் எனக்கூற, நீங்கள் நினைப்பது போன்றே எடுத்துகொள்வோம் என தனுஷ்க சிரித்தவாறு கூறினார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார்.
குடியரசு கட்சி உறுப்பினர்களின் 08 வாக்குகளும், ஜனநாயக கட்சியின் 208 உறுப்பினர்களும் இதற்காக வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்
அதன்படி, 216க்கு 210 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு நீக்கப்படுவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று சபையில் தெரிவித்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 பிள்ளைகளின் தாயாவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,
இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு
அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்
தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்
ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை
வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து
விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது
சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.
குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்
சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து எதிர்ப்பு
ஆர்ப்பாட்ட பேரணியை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக செவ்வாய்க்கிழமை(03) முன்னெடுத்தனர்.
நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள்
சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்
வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் , வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை
தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை
குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.
40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை
குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைதுby நிருபர் காவலன்
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலைby நிருபர் காவலன்
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்ததுby நிருபர் காவலன்
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியதுby நிருபர் காவலன்
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலைby நிருபர் காவலன்
மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது
மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது
மில்லனிய, கிம்மன்துடாவ பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மில்லனியா கிம்மன்துடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திஷான் சங்கீத் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது
உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவன் தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து உயிரிழந்த நபருக்கு 120,000
ரூபாவை வழங்கியுள்ள நிலையில், அதனை உரிய வகையில் செலுத்ததாத காரணத்தால் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்டவரின் வீட்டிற்கு தனது சகோதரனுடன் வந்த மைத்துனரான குறித்த நபர், வாய்த்தர்க்கம் நீண்டதில் தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த நபரின் தலை, முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைதுby நிருபர் காவலன்
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலைby நிருபர் காவலன்
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்ததுby நிருபர் காவலன்
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியதுby நிருபர் காவலன்
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலைby நிருபர் காவலன்
அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்
அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த வவுனியா
வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,
மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்
முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட மாதிரி
ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை சனிக்கிழமை இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் அரச அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்த நிலையில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிக்கு கடித்து, தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான முருங்கன் (வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி) தப்பி ஓடியுள்ளார்.
மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச அம்புலன்ஸ் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டமை பல்வேறு சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. அம்புலன்ஸ் வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் இரண்டாம் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
குறித்த வங்காலையை சேர்ந்த முருங்கன்முன்னதாக பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் வண்டி பல தடவைகள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம்
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.