Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன் ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உணவகங்களில் திடீர் சோதனை
உணவகங்களில் திடீர் சோதனை
உணவகங்களில் திடீர் சோதனை ,சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் ஞாயிற்றுக்கிழமை (25) சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.
உணவகங்கள் பார்வை
சில வாரங்களுக்கு முன்னர் உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள்
சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை
குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி
உணவகதின் மீது உரிய நடவடிக்கை
பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது
உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை
பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது இன்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை
பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.
எச்சரிக்கை
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியங்களை கொண்ட உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது.
அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார் ,யாழில் ஜனாதிபதி இளைஇவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவேன் .
நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன.
அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது.
அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது
அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.
அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும்.
கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.
நவீன விவசாயச் செயற்பாடு
அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.
நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.
அரசாங்கம் கவனம்
அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன.
அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.
இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலம்
மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும்.
வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது.
மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.
நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.
கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.
பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம்.
வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும்,
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஞர்களுக்கு வழங்கிய உறுதி
முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி ,மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பொலிஸ் பிரிவு
நேற்று (25) இரவு ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை, பங்கெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாத்திரை சென்ற வான் விபத்து
யாத்திரை சென்ற வான் விபத்து ஒருவர் பலி
யாத்திரை சென்ற வான் விபத்து ,யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை கலக்கம்
பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சியில்
ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியுள்ளார் என ரணில் விக்கிரமசிங்கா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி பயணம்
தமிழர் வடபகுதியாக விளங்கும் கிளிநொச்சி இரணை மடுவிற்கு பயணம் செய்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் மக்கள் 1700 பேருக்கு காணி உறுதிகளை வழங்கி வைத்தார் .
டக்கிளஸ் தேவானந்தா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, காணி உறுதிகளை மக்களுக்கு கிளிநொச்சி இரணைமடுவில் வழங்கி வைத்துள்ளார் .
வனஜீவராசி திணைக்களம்
வனஜீவராசி திணைக்களம் உறுதிகளை ,இதே ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியில் பறித்து வரும் நிலையில் ,கிளிநொச்சி இரணைமடுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் இவ்விதம் உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .
இலங்கை ஆளும் ஜனாதிபதிகள் சிங்கள பவுத்த மேலான்மை பாசிச கொள்கைகள் இன்றுவரை மாறவில்லை என்பதை ,காணி அபகரிப்பு நடத்தும் வனஜீவராசிகள் திணைக்கள நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன .
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுவிட வேண்டும் என்பதில், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அதி தீவிர நகர்வில் ஈடுபட்டு வருவதை ,இந்த பயண விடயங்கள் மக்கள் சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .
வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
வடகிழக்கிற்கு ரணில் உதவினார் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டடத்தை நேற்று முற்பகல் திறந்து
வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.
இன்று திறந்து வைக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்கிற்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் ஒரு நல்ல முதலீடாகும் என சுட்டிக்காட்டலாம்.
மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகிறேன்.
முன்னதாக இச்சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்றார்.
ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி ,யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள்
சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார்.
ரோலை உண்பதற்காக பரிமாறியபோது
உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான படங்களை குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இதனிடையே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலத்தில்
பொதுமக்கள் தரப்பில் விசனம்
தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொது மக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள் ,தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வயல்வெளியில் இரண்டு சடலங்கள்
தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த
முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌிறேயி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மர்ம மரணங்கள்
இலங்கை திரு நாட்டில் இடம்பெறு இவ்விதமான மர்ம மரணங்கள் தொடர்பில் மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .
ஆளும் அரசும் அதன் காவல்துறையினாலும் ஏன் இந்த மர்ம மனித படுகொலைகளை தடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
வரலாற்று சாதனையாக பல ஆண்டுகளாக இவ்விதமான மர்ம படுகொலைகள் ,இடம் பெற்ற வண்னம் உள்ளது .
இவை ஆளும் அரசுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .
காணாமல் போன மாணவன்
காணாமல் போன மாணவன்
மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் –
டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கிருந்த நிலையில் 22 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி முன்மாதிரி பாடசாலை
மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும்
வீடு திரும்பவில்லை என உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாகவும், பின் அந்த மாணவனின் விருப்பத்தின் படி
கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார்
இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவனின் விருப்பத்திற்கிணங்க கடந்த 20 ஆம் திகதி “மதுரங்குளி சுபோதி” எனும்
பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் என கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலன்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன், கௌதம சதகம் அரன விகாரையில் இருப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு
தகவல் வழங்கப்பட்டதுடன், அந்த மாணவனை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் எனவும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை என மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ள அந்த மாணவன் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை ,நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில்
மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற
வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்கள்
இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க
முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது.
வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை
குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர் எனவே குறித்த
சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக
தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு
விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
படகு சேவைகள் நிறுத்தம்
படகு சேவைகள் நிறுத்தம்
படகு சேவைகள் நிறுத்தம் ,யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும்
இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம் நேற்று 24 ஆம் திகதி கடல் அதிக கொந்தளிப்பாகக் காணப்பட்டதன்
காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
படகுச் சேவைகளே நேற்று முதல் நிறுத்தப்பட்டன
இதன் பிரகாரம் நெடுந்தீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கான படகுச் சேவைகளே நேற்று முதல் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், அதிக காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதன் காரணமாக இன்றும் குறித்த 3
தீவுகளுக்குமான படகுச் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும் நயினாதீவுக்கான படகுச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
இடம்பெறும் எனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை ,தமது வறுமையை நீர்த்திட கோரி போராளி குடும்பம் கண்ணீர் கோரிக்கை .
தமிழீழ விடுதலை புலிகளின் படையில் இணைந்து மக்களுக்காக போராடி காயமடைந்த முன்னாள் போராளி ஒருவர் ,தனது வாழ்வாதாரத்தை உயர்த்திட கோரி உலக தமிழ் மக்களிடம் உதவி வேண்டி இருக்கின்றார் .
தேசத்தையும் ,தேச மக்களையும் காப்பற்றிட தன்னை அர்ப்பணித்து அந்த ஈழ விடுதலை போராளி ,காலில் காயமடைந்த நிலையில் ,தனது குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில் தவித்து வருகிறார் .
அவ்வாறன அந்த குடும்பத்தை காப்பற்றிட வேண்டிய பொறுப்பு உலக தமிழ் மக்களிற்கு உள்ளது .
வவுனியா பாவற்குளம்
எனவே அன்பார்ந்த தாய் தமிழ் உறவுகளே, வவுனியா பாவற்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த போராளி குடும்பத்தை காப்பற்ற வேண்டியது நமது பொறுப்பாகும் .
இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் இந்த வவுனியா பாவற்குளம் போராளி குடும்பத்திற்கு ,குழாய் கிண்று ஒன்றை நிறுவிட மக்களே உதவிடுங்கள் .
உதவிட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் இதோ –0044 7536707793
வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம் ,அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்தில் குறித்த வீது சேதமடைந்துள்ளது.
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில்
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமாகியுள்ளது.
இதேவேளை, அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
இலங்கையை இவ்வாறான புயல் தாக்கும் என காலநிலை அவதான நிலையம் அவதானித்து எச்சரித்த பொழுதும் இந்த சம்பவம் இடம்பெற்றதள்ளது .
பயன் பெறும் பனை மரங்கள்
மக்கள் அதிக பயன் பெறும் பனை மரங்கள் ,தமிழ் மக்கள் கலை பண்பாட்டு வாழ்வியலுடன் ஒன்றித்து பயணிக்கும் ஒரு காரனையாகி மாற்றம் பெற்றுள்ளது .
அவ்வாறான பனை மரங்கள் ,;தென்னை மரங்கள் என்பன வீடுகளின் அருகில் வளர்க்க படுகின்றன .
இது அறியாமையின் தன்மையா அல்லது ,அதன் விருப்பு நாள் இடம்பெறுவதா என்பதே கேள்வியாக உள்ளது .
இந்த பனை மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகவே காணப்படுகின்றன .
மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி ,நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
வீசிய கடும் காற்றினால்
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் திருமணத்தின் பின்னர் மனைவியுடன் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களாக இலங்கை நாடு தழுவிய நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
வீதிகள் ,வீடுகள் மேலே மரங்கள் முறிந்து விழும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றன .
அபாயம் நிறைந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட மக்கள் தயக்கம் அல்லது அலட்சியம் அற்று காணப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என படுகிறது .
மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன் ,எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் இடம்பெற உள்ளதை அடுத்து ,அத்தியாவசிய பொருட்டாகள் முதல் ,பல விலை கழிவை ரணில் விக்கிரமசிங்கா அரசு ஏற்படுத்தி வருகிறது .
அதன் ஒரு தொடர்ச்சியாகவே மக்களுக்கு மானிய வட்டிவீதத்துடன் உதவி திட்டங்கள் வழங்க படுவதன் புதிய அறிவிப்பையும் பார்க்க முடிகிறது .
இவை நன்கு திட்டமிடப்பட்ட மக்களை ஏமாற்றும், ஒரு கபட நாடகமாக பார்க்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது.
ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ,ஆண்களின் பாலின உறுப்புகளில் ஒன்று, விதைப்பை. இதுவே, ஆண்களின் இனப்பெருக்கத்துக்குத் தேவையான விந்தணுக்களை உற்பத்தி செய்யும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விதைப்பையினுள் `மைக்ரோ பிளாஸ்டிக்’ (Microplastics) எனப்படும் சிறு சிறு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
கருத்தடை அறுவை சிகிச்சையின்போது
பிரேதப் பரிசோதனையின்போதும், கருத்தடை அறுவை சிகிச்சையின்போதும் சேகரிக்கப்பட்டிருந்த 23 ஆண்களின் விதைப்பை மாதிரி செல்கள் மற்றும் 47 வளர்ப்பு நாய்களின் விதைப்பை மாதிரி செல்களையும் பரிசோதனைக்கு
எடுத்துக்கொண்டனர். சோதனையின் முடிவில், அனைத்து விதைப்பையிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு நாயின் விதைப்பையினுள் 122.63 மைக்ரோகிராம் அளவும், மனிதனின் விதைப்பையினுள் 328.44 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதில், 12 வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப்படுத்தியுள்ளனர். அதில், பாலிஎத்திலீனால் உருவான பிளாஸ்டிக் துகள்கள் அதிக அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து நியூ மெக்சிகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சியோசங் யூ பேசுகையில், “வாய்வழியாக மற்றும் தோலில் இருக்கும் துளைகள் மூலம் உடலினுள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
இவை, மனித இனப்பெருக்க மண்டலத்தை சென்றடையுமா என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது.
இதனைக் கண்டறியவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். நாய்களின் விதைப்பையில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதிகமான பிளாஸ்டிக் துகள்கள்
அதைவிட மூன்று மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் விதைப்பையினுள் கண்டறியப்பட்டது எங்களுக்கு
பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பிளாஸ்டிக் துகள்கள் உடல் உறுப்புகளில் படிவதால் தொற்றுநோய், உறுப்புச் செயலிழப்பு, வளர்சிதை மாற்ற கோளாறு, டிஎன்ஏ சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
இவை, விதைப்பையினுள் இருப்பதால் விந்தணு உற்பத்தியையும் பாதிக்கலாம். விந்தணுக்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவலாம்.
ஆண்களின் விதைப்பைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதால் இனப்பெருக்கத்திறன் குறைவது, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இது எதிர்காலத்தில் குழந்தையின்மைப் பிரச்னைகளைத் தீவிரமாக்கும் வாய்ப்பு உள்ளது.
இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்
இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்குமான என்பதற்கான ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவை எந்த அளவு இனப்பெருக்க மண்டலத்தையும், விந்தணு உற்பத்தியையும் பாதித்துள்ளத என்பது குறித்து இனிதான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அது மிகவும் முக்கியமானது என்பதால் உடனடியாக அதற்கான முயற்சிகளைத் தொடங்க இருக்கிறோம்” என்றார்.
6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு ,பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் 57 பிரிவிலும்
கெம்பியன் கீழ் பிரிவிலும் நேற்று (22) இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய வானிலையால் ஆறு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் குடியிருப்புகளில் உள்ள கூறைதகடுகள் வீசிய பலத்த காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ளது இதனால் ஆறு குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் இருந்த சில பொருட்கள் சேதமடைந்துள்ளது.
வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கை
பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இனைந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவளை நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக பொகவந்தலாவ மற்றும் இராணிகாடு வரையிலான பிரதான வீதிகளின் அருகாமையில் உள்ள
மரங்கள் சரிந்து விழுந்துள்ளமையினால் பொகவந்தலாவ பிரதேசத்திற்கான மின்சாரம் முழுமையாக தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் கேசல்கமுவ ஒயாவின்
அன்மையில் உள்ள குடியிருப்பாளர்களை அவமானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் ,தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு
முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் சமகால வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்தல்.
- அவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் சம்பளத்தைச் செலுத்துவது தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளிடம் காணப்படுகின்ற இயலுமைகளை பரிசீலிப்பதற்குக் குழுவொன்றை நியமித்தல்
- அத்துடன், ஏதேனுமொரு தோட்டக் கம்பனி முறைகேடான முகாமைத்துவத்தால் சம்பளம் செலுத்துவதற்கு தவறினால், அவ்வாறான தோட்டக் கம்பனிகளுடனான காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.
- வீடியோ
தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
தமிழர்களுக்கு நீதி கிடையாது
தமிழர்களுக்கு நீதி கிடைக்காது ,பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப்பசியும் தமிழ் மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது.
இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டது. சட்டம் சாகடிக்கப்பட்டு விட்டது .இலங்கையின் சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுத்தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகிறதா? சட்டங்களின் வரையறைகளை பின்பற்றுகின்றதா? நீதித்துறை சட்டங்களின் ஊடாக கொண்டுவரப்பட்ட பல்வேறு விடயங்கள் அந்த நீதித்துறை ஊடாகவே
நடைமுறைப்பபடுத்தப்படாமல் போகின்றது .கடந்த மே 17,18 ஆம் திகதிகளில் இலங்கையின் பல பாகங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் இந்த நாடு ஒரு சட்டத்திற்குள்தான் இருக்கின்றதா? என்பதையும் இங்கு கேட்க விரும்புகின்றேன்.
மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு
மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு நிறைவில் அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தி வடக்கு,கிழக்கு தெற்கு மக்கள் கூட இந்தக்கஞ்சியை எல்லா இடங்களிலும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது ,
இவ்வாறு செய்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள சம்பூரில் கஞ்சி காய்ச்சியதற்காக இரவில் வீடு புகுந்து பெண்களை பொலிஸார் அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர்.
கைது செய்வது எந்த நாட்டு சட்டத்திற்குள் உள்ளது. ?இலங்கை சட்டத்தில் இவ்வாறு உள்ளதா அல்லது இன்னொரு நாட்டு சட்டத்தை இலங்கை பின்பற்றுகின்றதா? என்றும் வினவினார்.































