Posted in Uncategorized

பொலித்தீன் ,லஞ்சஷீட் விற்றால் – ஒரு லட்சம் அபராதம்

பொலித்தீன் ,லஞ்சஷீட் விற்றால் – ஒரு லட்சம் அபராதம்

இலங்கையில் புதிய சட்ட நடைமுறையி கீழ் பொலித்தீன் மற்றும் லன்ச் சீற்று விற்பனை செய்தால்

அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் அறவிட படும் என் ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

சுட்டு புரா சூழலை பாதுகாக்கும் நோக்குடன் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    முல்லைத்தீவு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

    முல்லைத்தீவு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

    முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் பல வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மத்தியிலும் முதல் முறையாக வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் சாந்தருவன் பண்டார ஹெரத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ் போதனா வைத்தியசாலை

    எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்களும் இதனை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

    மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்திய குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண

    சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

    இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி

    சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Posted in Uncategorized

      கொவிட் தொற்று -குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி

      கொவிட் தொற்று -குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி

      கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

      பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

      முன்னர் வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் நாட்டில் பதிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

      கொரோனா தொற்று காரணமாக 3,500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் 350,000 குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

        Posted in Uncategorized

        பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு

        பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு

        சிரியா துருக்கிய எல்லை பகுதியில் பாரிய மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மேற்படி புதைகுழியில் சுமார் 65 சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

        அமெரிக்காவின் ஆதரவில் இயங்கிய குருதீஸ் போராளிகளினால் கொலை செய்ய பட்டவர்களது சடலங்கள் இவை என துருக்கி குத்துகாரணம் அடித்து கூவியுள்ளது

        ,குருதீஸ் போராளிகள் என கூறி அப்பாவி மக்களை துருக்கிய இராணுவம் கொன்று குவித்து

        வருகிறது ,தமது கொலைகளை மறைக்க சிங்கள இராணுவ பாணியில் இவ்விதம் கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          தென் ஆப்பிரிக்காவில் கலவரம் 120 ஆயிரம் இராணுவம் குவிப்பு

          தென் ஆப்பிரிக்காவில் கலவரம் 120 ஆயிரம் இராணுவம் குவிப்பு

          தென் ஆப்பிரிக்காவில் ஆளும் அரச அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

          ,இந்த போராட்டத்தில் காவல்துறை மற்றும் மக்களுக்கு இடையில் மூண்ட கலவரத்தில் சிக்கி 117 பேர் பலியாகினர்

          இதனை அடுத்து மேலதிகமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

            Posted in Uncategorized

            ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்

            ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்

            ஜெர்மனியின் south of Bonn பகுதியில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது


            இந்த வெள்ளத்தில் சிக்கி வீடு இடிந்து வீழ்ந்ததில் இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்

            ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் வீட்டின் கூரை மேல் அமர்ந்திருந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்


            இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேத மடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

              Posted in Uncategorized

              பிரிட்டனில் குளிர்காலத்தில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர் – வெளியான எச்சரிக்கை

              பிரிட்டனில் குளிர்காலத்தில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர் – வெளியான எச்சரிக்கை

              பிரிட்டனில் எதிர்வரும் குளிர் காலத்தில் மட்டும் சுமார் அறுபதாயிரம் மக்கள் மரணிப்பர் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்

              மூன்றாம் கொரனோ அலையின் தாக்குதலாக இது அமைய பெறும் என எச்சரிக்க பட்டுள்ளதுடன் ,இவ்வேளை மருத்துவ

              மனைகளினால் மக்களை கட்டு படுத்த முடியாத ,பராமரிக்க முடியாத நிலை நீடிக்கும் எனவும் அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர்

              மேற்படி தகவலை அடுத்து மீள கொரனோ தடைகள் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த பசில்

                வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த பசில்

                இலங்கையின் நிகழ்கால நிதி அமைச்சராகி விளங்கும் பசில் ராஜபக்ஸா வெளிநாட்டு தூதர்களை சந்தித்துள்ளார்

                இவரது சந்திப்பின் பொழுது இலங்கையின் புதிய முதலீடுகள் மாற்று பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் பேச பட்டுள்ளன

                  Posted in Uncategorized

                  13 வயது சிறுமி கற்பழிப்பு -தந்தை உள்ளிட்டவர்கள் கைது

                  13 வயது சிறுமி கற்பழிப்பு -தந்தை உள்ளிட்டவர்கள் கைது

                  இலங்கை நாவலபிட்டியில் பதின் மூன்று வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டார் ,இந்த சிறுமியின் கற்பழிப்புக்கு துணை போனார்கள் என்ற குற்ற சாட்டில்

                  தந்தை மற்றும் அதற்கு உதவிய பெண் ஒருவர் உள்ளிட்ட அறுவர் கைது செய்ய பட்டுள்ளனர்


                  தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன ,மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                    Posted in Uncategorized

                    13 வயது சிறுமியை கடித்து கொன்ற நாய்

                    13 வயது சிறுமியை கடித்து கொன்ற நாய்

                    அமெரிக்காவில் 13 வயது சிறுமி ஒருத்தியை pack of dogs கடித்து கொன்றுள்ளது ,பலமான கடி காயங்களுக்கு உள்ளான ஐவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

                    நாயின் உரிமையாளர் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மீது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                      Posted in Uncategorized

                      ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் – பிரிட்டன் முழக்கம்

                      ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் – பிரிட்டன் முழக்கம்

                      ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக போராடி வரும் தாலிபான்கள் தமது ஆட்சியை அமைத்து அங்கு நிலை பெறுவார்கள் என பிரிட்டன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்

                      இவர்கள் பலமானவர்கள்; என பிரிட்டன் திடீர் குத்து கரணம் அடித்து கூறுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                      இருபது ஆண்டுகளாக அந்த நாட்டை ஆக்கிரமித்து லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த இதே பல் நாட்டு படைகள் ,தாலிபான்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்து வந்தது

                      இப்பொழுது காட்சியை மாற்றி இவ்வாறு குத்துகாரணம் அடித்திருப்பது ,ஈரானுக்கு எதிராக இவர்கள் எதனையோ சாதிக்க துடிப்பதை இவை காண்பிப்பதாக அடித்து கூறலாம்

                        Posted in Uncategorized

                        நடுக்கடலில் எரிந்த ஈராக் கப்பல் – 9 பேர் மரணம்

                        நடுக்கடலில் எரிந்த ஈராக் கப்பல் – 9 பேர் மரணம்

                        ஈராக் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் சிக்கி ஒன்பது மாலுமிகள் பலியாகினர்

                        இந்த கப்பலில் எவ்வாறு தீ பிடித்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை ,எதிரி படைகள் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது

                        இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்க பெறவில்லை

                          Posted in Uncategorized

                          மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி- அதிர்ச்சியில் குடி மகன்கள்

                          மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி- அதிர்ச்சியில் குடி மகன்கள்

                          ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும்.

                          மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி- மது பிரியர்கள் அதிர்ச்சி
                          மதுபானம்

                          புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் அதிபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து

                          திடீரென அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை

                          சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும். புதுச்சேரி அரசின் இந்த அதிரடி உத்தரவால் மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

                            Posted in Uncategorized

                            ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அபாயகரமான வெடிபொருட்கள்

                            ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அபாயகரமான வெடிபொருட்கள்

                            முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட அம்பகாமம் தச்சடம்பன், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளில்

                            பதினாறு இலட்சத்து எண்பத்தொராயிரத்து இருநூற்று அறுபத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில்

                            (1681261) இருந்து இருபத்தெட்டாயிரத்து எழுனூற்று நாற்பத்துநான்கு (28744) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

                            ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ இதனை தெரிவித்துள்ளார்.

                              Posted in Uncategorized

                              இலங்கையில் ஆடு வளர்க்கும் கோட்டா

                              இலங்கையில் ஆடு வளர்க்கும் கோட்டா

                              மட்டக்களப்பில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆடுவளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு

                              சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் தலைமையில் இன்று (14) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

                              மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் டாக்டர். ஆமலஸ்ரீ சில்வா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.

                              சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்டத்தின் பிரதேச செயலளர்கள், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

                              இதன்போது இவ்வமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஆடுவளர்ப்புத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டில்

                              நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

                              இங்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி உழுந்து பயறு போன்ற சிறு பொருளாதார பயிர்ச் செய்கைக்கான தெரிவு

                              செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்குதல், ஆடுவளர்ப்புத்திட்டம் மற்றும் சேதனைப் பசளை உற்பத்திக்கான உபகரணங்களை வழங்கள் போன்ற திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

                              இதுதவிர இஞ்சி, உழுந்து, பயறு, மஞ்சள் போன்ற உற்பத்திப் பொருட்களையும் அவ்வுற்பத்திகளை மேற்கொள்வதற்கான விவசாய உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                Posted in Uncategorized

                                18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி

                                18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி

                                இலங்கையில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர படவுள்ளது ,.இதற்கான ஆலோசனை தற்போது வழங்க பட்டுள்ளது

                                விரைவில் இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                வீதி விபத்தில் 10 பேர் மரணம்

                                வீதி விபத்தில் 10 பேர் மரணம்

                                இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்


                                ஏழுபேர் ஊந்துருளி விபத்தில் ,மூவர் பாதசாரிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                காவல்துறையினரின் அசமந்த போக்கின் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன

                                  Posted in Uncategorized

                                  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

                                  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

                                  மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

                                  மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதுதொடர்பாக தெரிவிக்கையில், இந்த மாவட்டத்திற்கென மேலும் வழங்கப்பட்டுள்ள 22

                                  ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகள் புதன் கிழமை (14) முதல் 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிறந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

                                  மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

                                  அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் சமூகத்தடுப்பூசி வழங்களினுடைய 2 ஆவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3 ஆவது கட்டம் இடம்பெற்று வருகின்றது.

                                  2 ஆவது கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் வநனியோகிக்கப்பட்ட 5 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

                                  கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் ‘பைஸர்’ தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

                                  செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் தொடர்பு படுகின்ற மன்னார் மீனவர்களினால்

                                  ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.

                                  மேலும் நேற்று திங்கட்கிழமை இரவு எமக்கு மேலும் 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றினுடைய விநியோகம் இன்று (14) முதல்

                                  ஆரம்பமாகும். குறித்த தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் 5 அல்லது 6 நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.

                                  இதன் போது 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறந்தர வதிவுரிமை பெற்ற அனைவரும் எந்த நிலையத்திலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

                                  கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று

                                  தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையில்லை.இவர்களுக்கு விசேட விதமாக வேறு நிலையங்களில் எதிர் வரும் வாரம் வழங்கப்படும்.

                                  இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 899 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 882 பேர் இந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த

                                  மாதத்தில் தற்போது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

                                  Posted in Uncategorized

                                  நடு வீதியில் பற்றி எரியும் எண்ணெய் டாங்கர் – வீடியோ

                                  நடு வீதியில் பற்றி எரியும் எண்ணெய் டாங்கர் – வீடியோ

                                  எரிபொருளை ஏற்றி கொண்டு வேகமாக பயணித்த டாங்கர் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை

                                  இழந்து மிக முக்கி சாலை ஒன்றில் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன


                                  பார்ப்பவர்களை மிரள வைக்கும் இந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்

                                  click here video

                                    Posted in Uncategorized

                                    பிரபலத்தை கடித்து குதறிய சுறா

                                    பிரபலத்தை கடித்து குதறிய சுறா

                                    அவுஸ்ரேலியாவில் புகழ் பெற்ற சுறா நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கி வரும் Jackass. சம்பவ

                                    தினம் அன்று தனது ஒளிபரப்பு அன்பர்களுடன் இணைத்து தனது நிகழ்ச்சி படப்பிடிப்பை நடத்தி கொண்டிருந்தார்

                                    அப்பொழுது அவர் கடலில் குதித்தார்

                                    அவ்வளவுதான் அங்கு நின்ற சுறாக்கள் அவரை கடித்து குதறின

                                    பாதுகாப்பு நபர்கள் அவரை நெருங்கி சென்று காப்பாற்றி கரை சேர்த்தனர்


                                    எனினும் அவர் பலத்த சுறாவின் கடிகாயங்களுக்கு உள்ளன நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்