Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
உள்ளே நுழைவதற்கான அனுமதி பத்திரங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட
குற்றத்திற்கு கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை – கரடிக்குளம், கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான
கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி
அமெரிக்கா கடல் படை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த MH-60 “Knighthawk ரக உலங்கு வானூர்தி ஒன்று கலிபோனியா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது
எனினும் இதில் பயணித்த நால்வரும் காப்பாற்ற பட்டுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது
மேற்படி வானூர்தி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்
ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்
தெற்கு கென்யாவில் ஆயில் ஏற்றி கொண்டு பயணித்த தாங்கி திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் ஏறி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
தாய்லாந்தில் ஆளும் அதிபரை பதிவை விலக கோரி மக்கள்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மக்கள் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் தண்ணியடி ,மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றது
எனினும் மக்கள் காவல்துறையின் அடக்குமுறையை உடைத்தெறிந்து போராடிய வண்ணம் உள்ளனர்
வடக்கு சைபிரஸ் புது நாடாக உருவாக்கம் – துருக்கி அதிரடி
வடக்கு சைபிரஸ் புது நாடாக உருவாக்கம் – துருக்கி அதிரடி
சைபிரஸ் மற்றும் கிரேக் ஆகியவற்றுக்கு இடையில் நீண்டு வந்த பெரும் பகைமை காரணமாக
அந்த பகுதிகள் தொடர்ந்து பர பரப்பு மிகுந்த வலயமாக இருந்து வந்தது ,இவ்வேளையில் துருக்கிய அதிபர் எடகோன்
வடக்கு சைபிரஸ் பகுதிக்கு இரு நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்
இதனை அடுத்து வடக்கை சைபிரஸ் புதிய நாடக உருவாகும் நிலை இடம்பெறுகிறது
இதற்கான அறிவிப்பை துருக்கி வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியனுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து
இதனை தடுக்க கிரேக்கம் என்ன செய்ய போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில் ,நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19
தடுப்பூசியை வழங்கினோம். இதனைத்தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் நாம் தற்போது கவனத்திற்கொண்டுள்ளளோம்.தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை
முறையாக முன்னெடுக்க வேண்டும் என்பதினாலேயே இவ்வாறு நடவடிக்ககைளை முன்னெடுத்துவருகின்றோம். தடுப்பூசியை வழங்குவதற்கு பணம் இல்லை என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜரோப்பா , அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகின்றன.உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. அதற்கமைவாக நாம்
நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.
இலங்கையில் கொரனோவுக்கு 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவுக்கு 46 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (17) தினம் மேலும் 46 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டெல்டா வைரஸ்
இலங்கையில் டெல்டா வைரஸ்
கொவிட் 19 வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுக்கள் பரவு வருகின்றன நிலையில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதி
றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதி
சுகயீனம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரின் பொறுப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்தான் சுகயீனமுற்றிருப்பதாக அதிகாரிகளுக்கு அறிவிதுள்ளார்
மருத்துவப் பரிசோதனைக்காக அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் – டயகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு பதவி
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு பதவி
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு 17 ஜூலை 2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனமானது பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையில் அதிமேதகு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக 19 ஜனவரி 2021 முதல் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 25 வது தளபதியாகவும் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, ,59 வது
படைப்பிரிவின் தளபதி , 51 வது படைப்பிரிவின் மேற்பார்வை தளபதி, 513 வது பிரிகேட் தளபதி, 144 வது பிரிகேட் தளபதி உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளதோடு, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில்
அமைந்துள்ள இராணுவ தலைமையக வளாகம், மற்றும் பல பாதுகாப்பு படை அலுவலகங்களின் சுகாதார அலுவல்களுக்கு பொறுப்பான அதிகாரியாகவும், இலங்கை மகளிர் படையணியின் தளபதியாகவும் அவர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா (ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.பி என்.டி.யூ) இறுதி யுத்த காலத்தில் வன்னியில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கான போரில் பெரும் பங்களிப்பு செயத் ஒருவரும் ஆவார். அவருடைய கட்டளையின் கீழான 593 வது பிரிகேட் மற்றும் 631 பிரிகேட் படைகளால்
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் வசமிருந்த மாங்குளம் நகரம், ஒழுமடு, அம்பகாமம் ஆகிய பகுதிளுடன் உடயர் கட்டுக் குளம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நீர்மூல்கி கப்பல்களை கட்டமைப்பதற்கான
கட்டிடமும் கைபற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட சமாதான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட பின்னர் 533 வது பிரிகேட் தளபதியாக நியமனம் பெற்றார்.
அவரது சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையில், பல்வேறுப்பட்ட திறன்களுடன் வெவ்வேறான நியமனங்களை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் உக்கிரமான போர் நடவடிக்கைகளின் போது களத்தில் செயப்பட்ட வீரமிக்க காலாட் படை வீரராகவும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. 5 வது
கெமுனு ஹேவா காலாட் படையணியின் பிலட்டூன் தளபதியாக அவர் வடமராச்சி நடவடிக்கைகளின் பங்கேற்றார்., பின்னர் திருகோணமலை பகுதியில் பணியாற்றினார்.
தாய்நாட்டை இரக்கமற்ற பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக “பலவேகய” மற்றும் “அகுணு பிராஹார” ஆகிய முக்கிய போர் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துளார்.
அத்தோடு 7 வது கெமுனு ஹேவா காலாட் படைகளின் கம்பணி தளபதியாக மன்னார் – சிலவத்துறையிலுள்ள கடற் புலி தளத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட முதலாவது நடமாடும் போர்க்கள நடவடிக்கைகளின் போதான அனுபவம் கொண்டவர். அத்தோடு யாழ். நகரத்தை
மீட்பதற்கான ரிவிரெச நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்தவர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் 9 வது கெமுனு ஹேவா காலாட் படையின் 2 ஆம் நிலை கட்டளை அதிகாரியாகவும் நியமனம் பெற்ற
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆணையிறவில் எதிர்கொண்டு பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களித்தார்.
கொமாண்டோ படைப்பிரிவின் கீழான 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியாகவும் 2007 ஆம் ஆண்டில் தொபப்பிகலவை விடுவிக்கும் நடவடிக்கைகளிலும் அவர்
ஒரு முக்கிய பங்கு வகித்தார். அத்தோடு, அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பட்டாலியன் மூலம் 593 பிரிகேடுக்கு பல எல்.டி.டி.ஈ வசமிருந்த முல்லைத்தீவு பகுதிகளை கைப்பற்றுவதற்கு படையினருக்கு காணப்பட்ட நெருக்கட்டிகளை கலைந்தவராகவும் அவர் திகழ்ந்தார்.
கனிஷ்ட காலாட்படை பயிற்சி கல்லூரியின் – மஹொவ் இந்தியா, எதிர்த்து போரிடும் உத்திகள் மற்றும் வனப் பகுதிக்குள் போரிடுதல் தொடர்பிலான கற்கைநெறி, வெரிகேட் இந்தியா
கல்லூரியில் சிரேஸ்ட போர் கட்டளை பயிற்சி கல்லூரியிலும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு கட்டமைப்பை விஸ்தரிப்பது தொடர்பிலான கற்கை நெறியை
அமெரிக்காவிலும் மூலோபாயங்கள் தொடர்பான பாடநெறியை சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.
அதேபோல், சீனாவில் முதுநிலை இராணுவ அறிவியல் மூலோபாயம் மற்றும் முகாமைத்துவ கற்கை நெறியையும் , கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவ கற்கை நெறியில் முதுகலை பட்டத்தையும், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தி
ல் தந்திரோயங்கள் தொடர்பான டிப்ளோமாவையும், சர்வதேச துறைமுகங்கள் மற்றும் கடல்சார் குறியீடுகள் தொடர்பிலான சான்றிதழுக்கான பயிற்சி நெறியை இலங்கை கடற்படையிலும்,
வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படுகின்ற பயங்கர வாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்தரிப்பது தொடர்பிலான பயிற்சி நெறி,
ஆகிய பசுபிக் நிலையத்தில் பாதுகாப்பு கற்கை நெறியை அமெரிக்காவிலும், இந்தியா மற்றும் மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அவர் தொடர்ந்துள்ளார்.
கொழும்பு 05 இன் இசிபதன கல்லூரியின் பெருமைமிக்க மாணவர்களில் ஒருவரான அவர், 1986 ஜூன் 2 ஆம் திகதி நிரந்த படையணியின் கெடட் (பயிலுனர்)-24 அதிகாரியாக இராணுவத்தில் இணைந்துகொண்டார். இவர் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படை
பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர் அவர் பாகிஸ்தான் மங்லாவிலுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், கனிஷ்ட அதிகாரிகளுக்கான ஆயுத பயிற்சி பாடநெறியை பாகிஸ்தான் குவேட்டாவிலுள்ள காலாட் படை மற்றும் போய்
உபாயங்கள் தொடர்பான பயிற்சி கல்லூரியில் பெற்றுக்கொண்ட அவர், 18 மே 1987 அன்று 4 வது கெமுனு ஹேவா படையனியின் 2 ஆம் நிலை லெப்டினனாக நியமனம் பெற்றார். அவர் விரைவில் தனது புதிய அலுவல கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சிறுமி மரணம் – ஐவர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சிறுமி மரணம் – ஐவர் காயம்
அமெரிக்கா வாசிங்டனில் இடம் பெற்ற துப்பாக்கி தாக்குதலில் ஆறு வயது சிறுமி பலியாகியுள்ளார் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி சூடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ஜெர்மனியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் மரணம்
ஜெர்மனியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் மரணம்
ஜெர்மன் சுட்காட் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது சம்பவ இடத்தில் மூவர் மரணமாகினர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர்களை வாங்கிய இந்தியா
அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர்களை வாங்கிய இந்தியா
அமெரிக்காவின் சான் டியாகோ நார்த் ஐலேண்ட் கடற்படை தளத்தில் நடந்த விழாவில், ஹெலிகாப்டர்கள் அமெரிக்க கடற்படையிடம் இருந்து இந்தியக் கடற்படைக்கு முறைப்படி மாற்றப்பட்டது.
அமெரிக்காவிடம் இருந்து நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை வாங்கியது இந்தியா
இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்
இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து 24 எம்.எச்-60 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ்
இந்த 24 ஹெலிகாப்டர்களும் வாங்கப்படுகின்றன. அனைத்து காலநிலைகளிலும்
பயன்படுத்தக்கூடிய, இந்த எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்களை, அமெரிக்காவின் லாக்கீட் மார்டின் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.
இதில் முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா அமெரிக்காவின் சான் டியாகோ நார்த் ஐலேண்ட் கடற்படை தளத்தில் நடந்தது.
அப்போது ஹெலிகாப்டர்கள் அமெரிக்க கடற்படையிடம் இருந்து இந்தியக் கடற்படைக்கு முறைப்படி மாற்றப்பட்டது. ஹெலிகாப்டர்களை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து பெற்றுக் கொண்டார்.
இந்த ஹெலிகாப்டர்கள், இந்தியாவுக்கு தேவையான தனிச்சிறப்பான சாதனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படையின் முப்பரிமாண திறனை அதிகரிக்கும் என்றும், இந்த ஹெலிகாப்டர்களை
இயக்குவதற்காக, இந்திய கடற்படையின் முதல் குழுவினர் அமெரிக்காவில் தற்போது பயிற்சி பெற்று வருவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை
முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை
இலங்கையில் முகக் கவசம் அணியாது பயணித்தால் அவர்களுக்கு அரசு ஆறு மாதம் சிறை
தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நாள் தோறும் பலநூறு பேர் கைது செய்ய பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு
சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு
உடைந்து இரண்டாக ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணியுடன் பேசிட ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்
ஒன்றாக இணைந்து பயணித்து ஆட்சி அமைக்கும் நோக்குடன் இவரது செயல்பாடுகள் அமைய
பெறுகின்றன ,இந்த சந்திப்பு இடம்பெறுமா என்பதும் ,அதில் இணைக்க பாடு ஏற்பட்டு ஒன்றாவார்களா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கையில் 230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது
சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக மாற்றம் பெற்றதன் பின்னர் இலங்கையின்
முப்படைகளில் அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்
வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்
வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது
பள்ளி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.
- பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.
- பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை
- மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.
பேருந்துகள்
- புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை.
- சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
- பார்கள் எனப்படும் அனைத்து மதுபான கூடங்களுக்கான தடை தொடர்கிறது.
- தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி.
- திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி.
- பொழுது போக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு
- பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்
- பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
- கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்.
குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – 11 பேர் பலி
குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – 11 பேர் பலி
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
விபத்து நடந்த கிணறு
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்தது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது
. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் கட்டமாக 2 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
இந்நிலையில், கிணற்றில் இருந்து 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.












