Posted in Uncategorized

கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி

கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி

போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் வெளியே வந்தார்,

கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி? – போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை
சஞ்சனா கல்ராணி
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கினார். அதில் நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் சூசை மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சூசைமணி வழங்கி உள்ளார். அதன்பேரில், ராஜராஜேசுவரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது; நான் தவறு செய்யவில்லை. இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன்.

சஞ்சனா கல்ராணி
சஞ்சனா கல்ராணி

ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரி நகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன். ராஜராஜேசுவரி நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.

நான் மேக்கப் போடாத காரணத்தால், என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மேக்கப் போடாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவேன். டிரைவருக்கும் நான் யார்? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.

இந்த சம்பவம் குறித்து நடிகை சஞ்சனாவிடமும், கார் டிரைவரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் 2 பேரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதற்கிடையில், கார் டிரைவருடன் நடந்த மோதல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Posted in Uncategorized

    பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்

    பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்

    முசாபர்பூரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பீகாரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்
    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி


    பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் கத்ரா என்ற இடத்தில் அரசு பள்ளி இயங்கு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் கடந்த 5-ந்தேதி துப்பாக்கியுடன் பள்ளிக்கு

    வந்துள்ளான். மாணவன் துப்பாக்கி வைத்துள்ளான் என்ற தகவலை அறிந்த போலீசார், அதை கைப்பற்றி மாணவனை கைது செய்துள்ளனர். தற்போது மாணவரை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.

    கை விலங்குடன் மாணவன்

    துப்பாக்கி கிடைத்தது எப்படி? உள்ளிட்ட தகவலை பெற அவனிடம் விசாணை நடத்தி வருகிறோம் என முசாபர்பூர் கிழக்குப் பகுதி எஸ்.பி., எம்.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

      Posted in Uncategorized

      பாகிஸ்தானில் பூகம்பம் – 20 பேர் பலி – 300 பேருக்கு காயம்

      பாகிஸ்தானில் பூகம்பம் – 20 பேர் பலி – 300 பேருக்கு காயம்

      பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

      இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது.

      பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      மிர்பூர் நகரின் போலீஸ் டிஐஜி சர்தார் குல்பராஸ் கான் கூறுகையில், “இன்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானார்கள் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

      பாகிஸ்தான் புவியியல் அமைப்பு கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்தின் ஜீலம் நகரின் மலைப்பகுதி அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.8 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது

      பூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

      மிர்பூர் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்ற பல வாகனங்கள் கவிழ்ந்தன, சில கார்கள் சாலை இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.

      பூகம்பம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் இருந்தமக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாலைக்கு ஓடி வந்தனர்.

      பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவப்படைகள், மருத்துவக்குழுக்கள் பூகம்பம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

      பூகம்பத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர், பலர் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

      இந்த பூகம்த்தின் அதிர்வு பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.

      பாகிஸ்தானின் மிகப்பெரிய அணைக்கட்டான மங்களா அணை, பூகம்பம் நடந்த பகுதிக்கு அருகே இருந்தது அந்த அணை எந்தவிதமான சேதாராமும் இன்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

      Posted in Uncategorized

      நானும் மனைவியும் அப்பாவிகள்- மோசடி மன்னர் அழுகை

      நானும் மனைவியும் அப்பாவிகள்- மோசடி மன்னர் அழுகை

      பென்டோரா பத்திரிகை வெளிப்படுத்தியுள்ள ஆவணங்களில் தனது பெயரும்,
      தனது மனைவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில்
      பதிலளித்துள்ள பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், தானும் மனைவியும்
      முழுமையாக அப்பாவிகள் எனத் தான் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

      வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் தொடர்பான பென்டோரா ஆவணங்களில் நடேசனினதும்,
      அவரது மனைவியான நிரூபமா ராஜபக்‌ஷ வினதும் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை
      குறிப்பிடத்தக்கது.

      அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வுக்கு எழுதியுள்ள கடிதத்திலே​யே
      மேற்கண்டவாறு தெரிவித்துள்ள திருக்குமார் நடேசன், எப்பிழையையும் செய்யவில்லை எனக்
      கூறியுள்ளார்.

      இதேவேளை, சுயாதீன விசாரணையாளர் ஒருவர் மூலம் தாமதமில்லாமல் இவ்விடயத்தை
      விசாரணை செய்யுமாறு நடேசன் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற
      நீதிபதியொருவர் விரும்பத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

        Posted in Uncategorized

        விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

        விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

        விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

        குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசாக்களும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        இதனையடுத்து, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும்.

        அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized

          எரிபொருள் நிலைய ஊழியரை அடித்த இருவர் கைது

          எரிபொருள் நிலைய ஊழியரை அடித்த இருவர் கைது

          மீகொடை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

          நேற்று (06) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், முகக்கவசம் அணியாது எரிபொருள் நிரம்புமாறு கோரியுள்ளார்.

          இதன்போது, முகக்கவசம் அணியுமாறு கூறிய எரிபொருள் நிலைய ஊழியரிடம் கோப்பட்ட சந்தேக நபர், அங்கிருந்து சென்று மற்றுமொரு நபரை அழைத்து வந்துள்ளார்.

          இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை இருவரும் சேர்ந்து கடுமையான முறையில் தாக்கியமை அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

          அத்துடன், அவர்களில் ஒருவர் ஊழியரை தரையில் அடித்து தாக்கியதுடன், அதனை தடுத்த மற்றுமொரு ஊழியரையும் அவர்கள் தாக்கியமை அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

          இதனையடுத்து, 24 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

          காயமடைந்த ஊழியர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

            யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

            இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்வானிலைமற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

            அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

            2021 ஒக்டோபர் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

            மழை நிலைமை:

            காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            காற்று :

            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

            மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            கடல் நிலை:

            மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

              யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்

              யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்

              நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை நேற்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.

              நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிpகையில் இருந்து நேரடியாக கலந்து கொண்ட கௌரவ பிரதமர், மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.

              யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

              தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன் அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்யஎதிர்பார்க்கப்படுகிறது.1இப்புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும்.

              மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.

              ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

              நயினாதீவு விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பபுமகித்திதிஸ்ஸ தேரர், நயினாதீவு அம்மன் ஆலய பிரதான குருக்கள் சாமதேவ குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் மற்றும் யாழ். மக்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்;ளிட்ட அரசாங்கத்திற்கு இத்திட்டம் ஊடாக கிடைக்கும் நன்மை குறித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

              வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
              நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்கள்,

              ‘எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார். அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் குறிப்பிட்ட போது எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார். இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் கௌரவ பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது என கூற வேண்டும்.

              நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

              நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

              Posted in Uncategorized

              மதிலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த வாகனம்

              மதிலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த வாகனம்

              யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (06) மாலை வாகனமொன்று வீட்டின் மதில் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

              இந்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

              அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்த வாகனமே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

              விபத்தில் வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன், வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

              விபத்தில் வீட்டின் மதில் உடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

                Posted in Uncategorized

                216,000 சிறார்களை கற்பழித்த பாதிரிமார் – விசாரணைகள் ஆரம்பம்

                216,000 சிறார்களை கற்பழித்த பாதிரிமார் – விசாரணைகள் ஆரம்பம்

                1950 ஆண்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் சுமார் 216,000 சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                இதனை அடுத்து பிரான்சு தீவிர விசாரணைகளை ,ஆரம்பித்துள்ளது இவ்வாறு குற்ற சுமத்த பட்ட பாதிரிமார்கள்
                மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  அமெரிக்காவில் இரு உளவுத்துறையினர் மீது சூடு – ஒருவர் மரணம்

                  அமெரிக்காவில் இரு உளவுத்துறையினர் மீது சூடு – ஒருவர் மரணம்

                  அமெரிக்காவில் அதன்முக்கிய உளவுத்துறையாக விளங்கும் எப்பீ ஐ சேர்ந்த இருவர் சூட்டு தாக்கல் நடத்த பட்டுள்ளது
                  இதில் ஒருவர் பலியானார் ,ஏனையவர் ஆபத்தான நிலையில் உள்ளார்

                  இவர்கள் இந்த உளவுத்துறையின் முகவர்களாக செயல் பாட்டு வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
                  இந்த கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை தெரிவிக்க படவில்லை

                    Posted in Uncategorized

                    வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

                    வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

                    துனிசியாவில் இராணுவத்தினரை காவியபடி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று

                    விமணிகளின் கட்டு பாட்டை இழந்து வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொது இதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                    இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      Posted in Uncategorized

                      13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்

                      13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்

                      ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.

                      ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்
                      தலிபான்கள்

                      ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

                      இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் முந்தைய ஆட்சியில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

                      இந்நிலையில், அந்நாட்டின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30-ம் தேதி நுழைந்த தலிபான்கள் முந்தைய ஆட்சியில் அரசுப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உள்பட 13 பேரை கொலை செய்தனர். இதில் 17 வயது சிறுமியும் அடக்கம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

                        Posted in Uncategorized

                        ஆரம்பமானது முதல் சண்டை… அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு

                        ஆரம்பமானது முதல் சண்டை… அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு

                        பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில், கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும் என போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

                        ஆரம்பமானது முதல் சண்டை… அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு
                        நிரூப், சிபி சக்கரவர்த்தி


                        பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுவதற்கு காரணம் அதில் நடக்கும் சண்டைகள் தான். அந்த

                        வகையில் தற்போது நடந்து வரும் 5-வது சீசனில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில்,

                        மூன்றாவது நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள புரோமோ மூலம் அது உறுதியாகி உள்ளது.

                        ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தற்போது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும். நேற்று

                        இசைவாணி, சின்னப் பொண்ணு ஆகியோர் தங்களது கதைகளை சொன்ன நிலையில், இன்று இமான் அண்ணாச்சி தனது கதையை கூறுவது போன்ற காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

                        அதில், ‘பிக்பாஸ் டைட்டிலை ஒரு நகைச்சுவை நடிகர் வென்றால் நன்றாக இருக்கும்’ என்று இமான் அண்ணாச்சி கூற, அவரது பேச்சிற்கு சிரித்ததாக நிரூப் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது.

                        இதையடுத்து நமீதா ’கஷ்டப்படுறோம் கஷ்டப்படுறோம் என்று யாரும் சொல்ல வேண்டாம், கஷ்டப்பட்டால் தான் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும்’ என்று கூறுகிறார். இன்னொரு புறம் நிரூப் மற்றும் அபிஷேக் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.

                        இதைக் கேட்டு சிபி சக்கரவர்த்தி மீண்டும் ஆவேசமாக, கடைசியில் நமீதா ’வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில்

                        இன்றைய எபிசோடில் காரசாரமான சண்டை நடக்கும் என்பது மட்டும் முதல் புரோமோவின் மூலம் தெரியவருகிறது.

                          Posted in Uncategorized

                          விபத்தில் சிக்கிய மாட்டு லொறி – சிக்கிய திருடர்கள்

                          விபத்தில் சிக்கிய மாட்டு லொறி – சிக்கிய திருடர்கள்

                          சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில்,


                          லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து, தியத்தலாவை வைத்தியசாலையில்
                          அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                          ஹப்புத்தளை- வல்கவெல பகுதியிலேயே நேற்று (5) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
                          விபத்துக்குள்ளான

                          லொறியிலிருந்து 16 கால்நடைகளும் வெள்ளவாயவிலிருந்து
                          நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதே, விபத்துக்குள்ளாகியுள்ளது.

                          Posted in Uncategorized

                          அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

                          அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

                          சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று (06), அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு

                          வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

                          இதற்கமைய, யாழ். – செம்மணியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்துக்கு முன்னாள், காலை 10 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                          இதன்போது, ஆசிரியர்கள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                          இதேவேளை, வவுனியா வடக்கு கல்வி வலயம் சார்பாக, காலை 9 மணிக்கு, புதுக்குளம் பகுதியில் உள்ள வவுனியா தெற்கு வலயத்துக்கு முன்னாள், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                          மேலும், கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்துக்கு முன்பாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                          Posted in Uncategorized

                          சகோதரி ஊழலை வெளியிட்ட பத்திரிகை தொடர்பாக விசாரிக்க கோட்டா உத்தரவு

                          சகோதரி ஊழலை வெளியிட்ட பத்திரிகை தொடர்பாக விசாரிக்க கோட்டா உத்தரவு

                          பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

                          இன்று (06) காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

                          அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                          இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

                          Posted in Uncategorized

                          கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்

                          கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்

                          கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம்

                          காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் : மரபணு உயிரியல் மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

                          இந்த நோய் அறிகுறிகள் ஆண்களுக்கும் ஏற்படலாம்.

                          இந்த நோய் அறிகுறிகளில், மன அழுத்தம் சுமார் 15 வீதம் உயர்வாக காணப்படும்.

                          ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற ஒன்பது அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

                          1. இயல்பற்ற சுவாசம் 8%
                          2. வயிறு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் 8%
                          3. மன அழுத்தம் 15%
                          4. மார்பு மற்றும் தொண்டை வலி 6%
                          5. அறிவாற்றல் பிரச்சினைகள் 4%
                          6. சோர்வு 5%
                          7. தலைவலி 5%
                          8. தசை தொடர்பான வலி 5%
                          9. மற்றும் பிற உபாதைகள் 7%

                          ஆகியன அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

                          இந்த நாள்பட்ட கொவிட் நோய் அறிகுறிகள் நவீன மருத்துவத்திற்கு ஒரு சவாலாக இருக்கலாம் என்று விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர ட்விட்டர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்..

                          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                          புகையிலை, மதுபான அதிகாரசபை உறுப்பினராக திரு.அஜித் ரோஹண நியமனம்

                          புகையிலை, மதுபான அதிகாரசபை உறுப்பினராக திரு.அஜித் ரோஹண நியமனம்

                          தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

                          இவருக்கான நியமனக்கடிதத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையளித்தார்.

                          முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், குற்றத் தடுப்பு மற்றும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரான அஜித் ரோஹண, சிறுவர்

                          பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினராக கடந்து ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in Uncategorized

                          கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

                          கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

                          பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் மேற்கொண்ட திடீர்

                          சுற்றிவளைப்பில் 1,100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர், நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டார்.

                          பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி. ரத்நாயக்க தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.பி.பண்டார, பொலிஸ் சார்ஜென்ட்

                          குணபால மற்றும் சுபசிங்க, அபேரத்ன, நிம்ஸ் ஆகிய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

                          இதன்போது நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்ட கிராமப் பகுதிக்கு கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த 4 பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டார்.

                          கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.