Posted in Uncategorized

சுமந்திரன் உருவ பொம்மை எரிப்பு – யாழில் மக்கள் போராட்டம்

சுமந்திரன் உருவ பொம்மை எரிப்பு – யாழில் மக்கள் போராட்டம்

குருநகரில், இன்று (26), குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்களால், கறுப்புக் கொடி கட்டப்பட்டு, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளுர் இழுவை படகு மீன்பிடி தொழில் தடை செய்யப்பட

வேண்டும் என தெரிவித்த கருத்தை எதிர்த்தே, இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து, எதிர்ப்புப் போராட்டத்தில்

ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்

சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பெற்ற பெண்

    ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பெற்ற பெண்

    பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

    கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.

    திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ

    அவர்கள், நைன்வெல்ஸ் மருத்துவமனையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் திரு.சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டார்.

    அதனை தொடர்ந்து பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.

    குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டார்.

    குறித்த சந்தர்ப்பத்தில் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் முகாமைத்துவ பணிப்பாளர் தியோ ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      Posted in Uncategorized

      சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

      சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

      சிரியாவின் இட்லி பகுதியில் உள்ள சுமார் இருபது மைல் நீளமான சிரியா இராணுவ நிலைகள் அனைத்தும் துருக்கியின் ஏவுகணை தாக்குதல் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

      மேலும் இந்த இராணுவ முகாம்கள் மீது தொடர் அகோர ஏவுகணை தாக்குதலை துருக்கி நடத்திய வண்ணம் உள்ளது

      எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெற்று வரும் சமரில் இதுவரை பத்து லட்சத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

      அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

      சிரியாவில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கிய இரு பிரதநா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது

      இதில் அமெரிக்கா படைகளிற்கு கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

      மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகும் வரை இவ்வாறன பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது

      Posted in Uncategorized

      செல்வராஜா கஜேந்திரன் எம்பிக்கு கொரனோ

      செல்வராஜா கஜேந்திரன் எம்பிக்கு கொரனோ

      தமிழர் அரசியல் பிரமுகர் செல்வராஜா கஜேந்திரனுக்கு தற்போது பரவி வரும் கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இதனால இவர் தற்போது தனிமை படுத்த பட்டுள்ளதுடன் ,மேலும் இவருடன் பழகியவர்களும் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in Uncategorized

        சகல ஆரம்பப் பாடசாலைகளும் இன்று ஆரம்பம்

        சகல ஆரம்பப் பாடசாலைகளும் இன்று ஆரம்பம்

        நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

        பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

        கொவிட் நிலை முழுமையாக ஒழியவில்லை. இதனால், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துதல் அவசியமாகும்.

        சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே செய்து கொடுக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

        பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

        பாடசாலைகளை விட்டு வீட்டிற்கு வந்தவுடனேயே, குளித்தல் அவசியமாகும். அவ்வாறே ஆடைகளையும் உடனடியாக சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

        அரசாங்க மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தற்சமயம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

        இன்று ஒன்பதாயிரத்து 100க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

          Posted in Uncategorized

          காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

          காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

          ஒஸ்ரலியாவில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

          இவரது தாக்குதலில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            Posted in Uncategorized

            வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் அமெரிக்கா ஏச்சரிக்கை

            வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் அமெரிக்கா ஏச்சரிக்கை

            வடகொரியா அதனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் என உலக சண்டியர் அமெரிக்கா தெரிவித்துள்ளது

            மேலும் தமது எச்சரிக்கை கடந்து சோதனை மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க படும் என்ற வகையில் மிரட்டியுள்ளது


            முடிந்தால் வா என நெஞ்சை நிமிர்த்தி வடகொரியா காத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்

              சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்

              நையீரியாவில் சிறை ஒன்றுக்குள் இருந்து சுமார் அறுநூறுக்கு மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

              கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் இவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்

              இதுவரை 250 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

              ஏனையவர்கள் கைது செய்ய படும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

                Posted in Uncategorized

                சீமானிடம் இருந்து விலகுகிறேன்? – இயக்குனர் அமீர் ஆவேசம் video

                சீமானிடம் இருந்து விலகுகிறேன்? – இயக்குனர் அமீர் ஆவேசம் video

                சீமான்

                சீமானிடம் இருந்து விலகி கொள்கிறேன் என இயக்குனர் அமீர் அதிரடியாக அறிவித்துள்ளார் ,இந்த திடீர் விலகல் ஏன் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                Posted in Uncategorized

                புலிகள் போராட்டத்தை எண்ணி அழுத சீமான் – வீடியோ

                புலிகள் போராட்டத்தை எண்ணி அழுத சீமான் – வீடியோ

                தமிழீழ விடுதலை புலிகள் போரை எண்ணி கதறிய சீமானின் கண்ணீர் பேச்சு


                வீழ்ந்து வீழ்ந்து எழுவோம் என்பதற்கும் தடைகள் தன்னை பயணிப்போம் என்பதாகும் இவரது கடந்த கால சுமைகள் ஒரு படமாக விழுகியது

                Posted in Uncategorized

                லண்டனில் புதிய சட்டம் – இந்த கார் இருந்தால் பணம் செலுத்த தேவை இல்லை

                லண்டனில் புதிய சட்டம் – இந்த கார் இருந்தால் பணம் செலுத்த தேவை இல்லை

                லண்டனில் புதிய ULEZ சட்டம் அறிமுகமாகிறது .எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகிறது

                இதில் 2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் உள்ள பெற்றோல் கார்களும் ,2015 ஆண்டிற்கு முன்னர் உள்ள

                டீசல் கார்களுக்கும் மட்டுமே இந்த வரி செலுத்த வேண்டும் ,அது தவறின் இந்த பணம் செலுத்த தேவை இல்லை
                என அறிவிக்க படுத்துள்ளது

                மேலும் உங்கள் வண்டியின் இலக்கத்தை கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் .ஓடலாமா இல்லையா என்பதை இதில் காண்பிக்கிறது ,இது அரச இணையம்

                click here

                  Posted in Uncategorized

                  வென்றுவிட ஒன்று படு

                  வென்றுவிட ஒன்று படு

                  வென்றுவிட ஒன்று படு …!

                  சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
                  சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
                  சில்லறை காவடி தோள்களிலே
                  சிலுக்காக ஆடுது வேட்டிகளே

                  தன் மானம் இங்கே விற்று விட்டார்
                  தமிழரை காலடி வைத்து விட்டார்
                  தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
                  தமிழரே தாமெனே கூவி நின்றார்

                  வந்தேறி குந்திட வைத்து விட்டார்
                  வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
                  துயர் போக்க இன்று என் செய்வார்
                  தூர பார்வை என்று கொள்வார்

                  வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
                  வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
                  ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
                  ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்

                  இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
                  இடி மின்னல் இவரை கொல்லாதோ
                  இன்றே தமிழர் விழித்து விட்டால்
                  இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 24-10-2021

                    Posted in Uncategorized

                    அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்

                    அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்

                    அமெரிக்கா ஜோர்ச்சியா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்

                    அமெரிக்காவில் இது போன்ற தாக்குதல்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      ஆப்கான் எல்லை பகுதியில் ரசியா இராணுவம் குவிப்பு

                      ஆப்கான் எல்லை பகுதியில் ரசியா இராணுவம் குவிப்பு

                      ஆப் கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்பொழுது Tajik-Afghan எல்லையில் ரசியா இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

                      மேலும் கடந்த ஆறு தினங்களாக போர் பயிற்சிகளும் அப்பகுதியில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      எவ்வேளையும் தலிபான்கள் தம் வசம் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்ச நிலையில் இந்த படை நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized

                        பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

                        பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

                        கொலம்பியாவில் தேடப்பட்டு வந்த முதல்தார போதைவஸ்து கடத்தல் மன்னன் போலீசாரின் திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்ய பட்டுள்ளார்
                        59 வயதுடைய இவர் அமெரிக்கா உளவு த் துறையாலும் தேட பட்டு வந்தவர்

                        பல மில்லியன் சொத்துக்களுக்கு இவர் அதிபதியாக உள்ளவர

                        அவ்வாறான அரசியல் ,ஆள்,பண பலம் படைத்த நபரே போலீசாரினால் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் யுத்தத்திற்கு காரணம்


                          சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் யுத்தத்திற்கு காரணம்

                          மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

                          அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச

                          செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ” போகஸ்வெல” என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

                          இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ

                          பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும் பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

                          அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபரினால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

                          வடக்கு – வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல்க் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது

                          திட்டமிடப்பட்டுள்ளது என்பதுடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும் இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இது அமையும் என்பதால் இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை

                          பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன் செயல்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கிறோம்.

                          இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதாகவும் இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகிறோம். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                            Posted in Uncategorized

                            இலங்கை காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது


                            காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது

                            மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              Posted in Uncategorized

                              மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

                              மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

                              மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

                              எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.

                              மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.

                                Posted in Uncategorized

                                காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

                                காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

                                இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                                மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                                இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.