Posted in Uncategorized

இரு ரயில் நேரெதிர் மோதல் 32 பேர் மரணம் -165 பேர் காயம்

இரு ரயில் நேரெதிர் மோதல் 32 பேர் மரணம் -165 பேர் காயம்

எகிப்தில் இரு பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதியதில் சம்பவ இடத்தில முப்பத்தி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்


மேலும் சுமார் 165 பேர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

குறித்த விபத்து தொடர்பிலான சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் -தடை பட்ட கப்பல் போக்குவரத்து – 200 கப்பல்கள் காத்திருப்பு

    சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் -தடை பட்ட கப்பல் போக்குவரத்து – 200 கப்பல்கள் காத்திருப்பு

    சூயஸ் கால்வாய் பகுதியில் மிக பெரும் சரக்கு கப்பலொன்று சூரியில் சிக்கியதால் அவ்வழி கப்பல் போக்குவரத்து பெருமளவு பாதிக்க பட்டுள்ளன

    இந்த கப்பல் மீட்க பட்ட பின்னரே அவ் வழியூடாக மேலதிக கப்பல்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்க படுகிறது

    இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பதாக அந்த கடல் நீரேரியை

    கண்காணிக்கும் அமைப்பு வெளியிட பட்ட தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in Uncategorized

      பேச வருமாறு புட்டினுக்கு அழைப்பு விடுத்த பைடன்

      பேச வருமாறு புட்டினுக்கு அழைப்பு விடுத்த பைடன்

      ரசிய அதிபர் பிளாடிமீர் புட்டீனுக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கால நிலை தொடர்பாக பேச வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்

      இவரது அழைப்பை ஏற்று ரஷியா அதிபர் கலந்து கொண்டால் அதில் அந்தரங்க விடயங்கள் சிலதும் பேச படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      காலநிலை தொடர்பாக பேச அழைக்கும் பைடன் டிரம்ப் தொடர்பான முக்கிய விடயங்களை பேச கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்த ஜெயக்குமார்

        படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்த ஜெயக்குமார்

        மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

        இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை

        சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது.

        ருத்ர தாண்டவம்

        அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்.

          Posted in Uncategorized

          திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி

          திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி

          விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.

          ரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக வரும் வரலட்சுமி, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருகிறார்.

          வரலட்சுமி சரத்குமார்

          சமீபத்தில் திருமணவிழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், மணமகனுடன் சேர்ந்து விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ உள்ளிட்ட பல பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

          clik here ,dance full video

          Posted in Uncategorized

          கட்சியில் இணைந்தார் நடிகை ஷகிலா

          கட்சியில் இணைந்தார் நடிகை ஷகிலா

          மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார்.

          ஷகிலா

          தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

          ந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா.

          Posted in Uncategorized

          இராணுவத்தால் 300 அப்பாவி மக்கள் படுகொலை

          இராணுவத்தால் 300 அப்பாவி மக்கள் படுகொலை

          மியன்மாரில் இராணுவத்தினரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய 164 க்கு மேற்பட்ட

          போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது இராணுவம் நடத்திய வன்முறை தாக்குதலில் சிக்கி இதுவரை 300 மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

          தொடர்ந்து இராணுவ ஆட்சி நீடித்து வருவதால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்

          மக்கள் சுதந்திரம் மறுக்க பட்டு அங்கு முழு இராணுவ நெருக்கடி இடம்பெற்ற வண்னம் உள்ளது

          உலக நாடுகள் கண்டித்த பொழுதும் ,ஆளும் அரச இராணுவத்தின் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            லண்டனில் ஆயுதங்களுடன் மருத்துவ மனையில் நபர் கைது

            லண்டனில் ஆயுதங்களுடன் மருத்துவ மனையில் நபர் கைது

            பிரிட்டன் University of Kentucky Chandler மருத்துவமனையில் ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

            எனினும் மேற்படி நபரினால் எதுவித அசம்பாதிங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

              Posted in Uncategorized

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்

              கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.

              கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாகவே உலகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

              தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

              இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்

              அதேபோல் சர்க்கரை நோயாளிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா? போட்டுக்கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

              இது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது.

              blood thinners மருந்து எடுத்துக்கொள்வோரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். அவ்வாறு போட்டுக்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

              அதே போல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் ஏதாவது பக்கவிளைவுகள் வருமா என்ற கேள்வி எழுகிறது.

              இதற்கு உறுதியாக சொல்ல முடியாது. பக்கவிளைவுகள் வரலாம். வராமலும் இருக்கலாம். எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சில பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்யும்.

              எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சிறிய அளவில் சில அறிகுறிகள் ஏற்படும். அதாவது காய்ச்சல், உடல் வலி போன்ற சில அறிகுறிகள் ஒரு சிலருக்கு ஒரு நாள் இருக்கலாம்.

              அதற்காக பயப்பட தேவையில்லை, இதற்கு பாராசிட்டமோல்(Paracetamol Tablets) மாத்திரையை போட்டுக்கொண்டு ஒருநாள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். எந்த பயமும் கிடையாது.

              உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருந்துவரை அணுகி அவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கான விடையை அறிந்து கொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டு

              கொள்ளுங்கள். இது மட்டும் தான் இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியில் வர ஓரே வழியாகும்.

                Posted in Uncategorized

                மதுரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது

                மதுரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது

                ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.

                மதுரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது
                படப்பிடிப்பு தளம்


                மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ

                இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

                பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.

                இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

                செந்தில்குமார் ஒரு சில டாகுமெண்டரி சினிமா படங்களை எடுத்து உள்ளார். தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்காக

                திடியன் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிவித்து உள்ளார். அவர் போலீசார் உள்பட யாரிடமும் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

                எனவே சிந்துப்பட்டி போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

                  Posted in Uncategorized

                  யாழில் இராணுவம் திடீர் முற்றுகை

                  யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                  யாழ் மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் (25) மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

                  யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

                  எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ் நகர பகுதியில் அதிகளவான

                  பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

                    Posted in Uncategorized

                    ஐநாவில் இலங்கைக்கு தோல்வி –சம்பிக்க ரணவக்க

                    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்காமல் தடுப்பதற்கு, தற்போதைய அரசாங்கம் சரியான இராஜதந்திர அரசியல்

                    வழிமுறைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இதன்மூலம் கிடைக்கும் பிரதிபலனை, அரசாங்கம், ஜனாதிபதி, அமைச்சர்கள் மாத்திரமல்ல, முழு இலங்கைச் சமூகமும் எதிர்காலத்தில் அனுபவிக்கும் என்றார்.

                    எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                    அங்கு தொடர்ந்துரைத்த அவர், இதைப் பாரிய பிரச்சினையாக நாம் பார்க்கிறோம் எனத் தெரிவித்ததோடு, இந்தச் செயற்பாட்டை நல்லாட்சியே ஆரம்பித்ததெனக் காட்டவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.

                    ஆனால், இந்த விடயத்தில் சர்வதேசத் தலையீடு ஏற்பட, தற்போதைய பிரதமர் மஹிந்தவே காரணமாக அமைந்தார் என்றும் கூறிய சம்பிக்க எம்.பி, யுத்தம் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பொறுப்புக்கூறல் என்ற இணக்கப்பாட்டை மஹிந்த ராஜபக்ஷ

                    ஏற்படுத்திக்கொண்டார் என்றும் இந்தப் பொறுப்புக் கூறல் தொடர்பான அர்த்தத்தை அப்போதைய அரச தலைவர் அறிந்து செயற்படுகிறாரா என நாம் கேள்விக்குட்படுத்தினோம். ஆனால் இந்தப் பொறுப்புக்கூறலே, இன்றைய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளதென்றார்.

                    “நாமும் தவறொன்று செய்ததோம். அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்மிடம் கேட்காமலேயே மனித உரிமைகள் பேரவையின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்கினார். இதைச் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று சிந்தித்தோம். எனினும், குறித்த காலப்பகுதியில்

                    நாட்டைப் பயமுறுத்தவோ, யுத்தக் குற்றங்கள் குறித்து மின்சார கதிரைக்கு அழைத்தச் செல்லவோ, சர்வதேச நீதிமன்றத்தக்கு கொண்டுசெல்லவோ இல்லை. 5 வருடங்கள் இந்த யோசனையை ஒத்திவைக்கப்பட்டதே நடந்தது” என்றார்.

                    இந்த அரசாங்கம், தமது கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றுவதன் மூலமே, இன்று இவ்வாறான பிரச்சினையை இலங்கை சந்தித்துள்ளது என்றும் யுத்தத்தின் பின்னர் எமது நாடு

                    செயற்பட்ட விதமே இன்றைய பிரச்சினைக்குக் காரணமாகவுள்ளது என்றும், குறிப்பாக வடக்கிலும் தெற்கிலும் சட்டத்தைப் பாதுகாக்கவோ மனித உரிமைகளைப் பாதுகாக்கவோ அரசாங்கம் செயற்படவில்லை. தமக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துபவர்களைச் சிறையில்

                    அடைக்கவும் அவர்களின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்து, அவர்களைத் தேர்தல் செயற்பாடுகளிலிருந்து தூரமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகச் செயற்பட்டுள்ளது” என்றார்.

                      Posted in Uncategorized

                      தமிழக மீனவர்கள் 54 பேர் சிங்களப் படையால் கைது

                      சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      இலங்கை கடற்படையினரால், இவர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
                      ‘கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 05 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன. அதிலிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

                      இவர்கள் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் வைத்தே செய்யப்பட்டனர் என்றார்.

                      மன்னார் – பேசாலை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த கடற்பகுதியில் பாரிய படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறினார்.


                      மேலும்இ முல்லைத்தீவு – சாலைக் கடற்பகுதியில் 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த கடற்படை பேச்சாளர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றார்.

                        Posted in Uncategorized

                        23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி

                        23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி

                        தன்னிடம் இருந்த பணம் அடங்கிய பொதியினை இரண்டு நபர்கள் கொள்ளையிட்டு சென்றதாக

                        பொய்யான நாடகமாடிய, ஹெய்யன்துடுவ பகுதியை சேர்ந்த நிறுவனமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                        தன்னிடம் இருந்த 23 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை வங்கியில் வைப்பில் இடுவதற்காக சென்ற போது கொள்ளையிடப்பட்டதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

                        எனினும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த நபர் தனக்கு நெருக்கமான இருவரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியமை தெரியவந்துள்ளது.

                        தான் பணிபுரியும் நிறுவனத்தின் பணத்தை தனது தேவைகளுக்காக செலவழித்த பின்னர், அதிலிருந்து தப்புவதற்காக இவ்வாறான பேலியான கொள்ளை நாடகமொன்றை அவர்

                        நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                          Posted in Uncategorized

                          லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்தது – சீன ராணுவம்

                          லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்தது – சீன ராணுவம்

                          கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல்,

                          உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இருதரப்பும் அங்கே படைகளை குவித்ததால் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நீடித்து வந்தது.

                          ஆனால் இருதரப்பும் தொடர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக அங்கே சர்ச்சைக்குரிய பகுதியாக

                          விளங்கி வந்த பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இரு தரப்பும் சமீபத்தில் படைகளை விலக்கிக்கொண்டன.

                          இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணியத்தொடங்கி இருக்கிறது. அதேநேரம் இருநாட்டு அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் பல இடங்களில் படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

                          இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்திருப்பதாகவும், அங்கு படைகளை விலக்குவதற்கு இரு நாடுகளும்

                          மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், மூத்த ராணுவ

                          அதிகாரியுமான ரென் குவாகியாங் கூறியுள்ளார். அதேநேரம் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் நிறுத்தப்பட்டிருக்கும் மீதமுள்ள படையினரை விலக்குவது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

                          Posted in Uncategorized

                          தந்தையை அடித்து கொன்ற மகன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

                          தந்தையை அடித்து கொன்ற மகன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

                          இலங்கை கொலோன்துடுவ பகுதியில் முப்பத்தி இரண்டு வயது மகனின் கோர தாக்குதலில் சிக்கி 72 வயது தந்தை பலியாகியுள்ளார்

                          இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகறாரு முற்றிய நிலையில் இந்த படுகொலை

                          இடம்பெற்றுள்ளது ,மேற்படி விடயம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

                            Posted in Uncategorized

                            பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி

                            பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி

                            ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம்,

                            இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்,முத்தையா முரளிதரன் 1 பில்லியன் ரூபாய் நட்டஈட்டை கோரியுள்ளார்.

                            இந்த மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா,

                            முரளிதரனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராகவே, முரளிதரனால் நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை

                            உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை

                            சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

                            இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக

                            அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை (OHCHR) கோரியுள்ளது என்பதை இலங்கை

                            ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

                            இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                            அரசாங்கம் இன்று கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டுகிறது. தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐநா தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுகிறது.

                            கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம். ஆகவே, “வாக்களிக்காதவர்களும் நம்மவரே” என்ற

                            அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ச உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார். ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், எனது கொழும்பு மாவட்ட நண்பர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன்.

                            இலங்கை அரசாங்கம் கனவு கண்டுக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில், ஐநா செயற்பட போகிறது. அதற்கான பலமும், அதிகாரமும் இந்த தீர்மானம் மூலம் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) கிடைக்கிறது. ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHRC) அங்கம் வகிக்கும், வகிக்காத சுமார் 40 இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்ட இலங்கை பற்றிய இந்த தீர்மானம், இலங்கையை கண்காணிக்கும் பொறுப்பை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) வழங்குகிறது.

                            முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.

                            இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை, அலுவலகம் ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியுடன் பொறுப்பு கூறல், நீதி விசாரணை, மனித உரிமை மீறல், சர்வதேச மனித உரிமங்கள் மீறப்படல் ஆகியவை தொடர்பில் கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

                            எனவே பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல், பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் பேட்டை ரவுடியை போன்று முரண்பட முடியாது. அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை. அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை.

                              Posted in Uncategorized

                              சூயஸ் கால்வாயில் சிக்கிய இராட்சாத கப்பல்

                              சூயஸ் கால்வாயில் சிக்கிய இராட்சாத கப்பல்

                              பணம் நாட்டு கொடியுடன் பயணிந்து வந்த சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கியது


                              மேற்படி கப்பலானது 224,000 டன் எடை கொண்டதும் எனவும் இந்த கப்பலை அதில் இருந்து மீட்டு நகர்த்தும் பணியில் எட்டு கப்பல்கள் ஈடுபடுத்த பட்டுள்ளன

                              குறித்த கப்பல் அப்பகுதியில் சிக்கியதால் அதிக கப்பல் போக்குவரத்து இடம்பெறும் இந்த கப்பல்

                              பாதையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சுயஸ் கால்வாய் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                கொலண்டில் ஊரடங்கு சட்டம் சித்திரை 20 வரை நீடிப்பு

                                கொலண்டில் ஊரடங்கு சட்டம் சித்திரை 20 வரை நீடிப்பு

                                கொலண்டில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருவதால் ,தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டுள்ளது

                                இந்த ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் சித்திரை மாதம் இருபதாம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,


                                வேகமாக நோயானது பரவி வருவதால் அதில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த தடைகள் பிறப்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது