லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்தது – சீன ராணுவம்
கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல்,
உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இருதரப்பும் அங்கே படைகளை குவித்ததால் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நீடித்து வந்தது.
ஆனால் இருதரப்பும் தொடர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக அங்கே சர்ச்சைக்குரிய பகுதியாக
விளங்கி வந்த பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இரு தரப்பும் சமீபத்தில் படைகளை விலக்கிக்கொண்டன.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணியத்தொடங்கி இருக்கிறது. அதேநேரம் இருநாட்டு அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் பல இடங்களில் படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்திருப்பதாகவும், அங்கு படைகளை விலக்குவதற்கு இரு நாடுகளும்
மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், மூத்த ராணுவ
அதிகாரியுமான ரென் குவாகியாங் கூறியுள்ளார். அதேநேரம் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் நிறுத்தப்பட்டிருக்கும் மீதமுள்ள படையினரை விலக்குவது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை

- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்

- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.

- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்








