Posted in இலங்கை செய்திகள்

பேராபத்தில் தமிழர்கள் – எச்சரிக்கும் பிரபாகரனுடன் இருந்தவர்

மு .திருநாவுக்கரசு

“” இறைமை, சிங்கள நாடு”” இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும்.

இலங்கையின் தேர்தல் அரங்கில் தூணேறிய சிங்கம் – டிராகன் – கழுகு என்பன களமாடுகின்றன.

நெருப்பை சுவாசிக்கும் டிராகன் இலங்கையின் அரசியல் தடாகத்திலுள்ள தாமரை மொட்டைச் சூட விரும்புகிறது.

அதனைத் தடுத்து நிறுத்த தூணேறிய சிங்கமும், கழுகும் அன்னத்தின் பின்னால் நிலை எடுக்கின்றன. இது ஒன்றும் பஞ்சதந்திரக் கதையல்ல; இலங்கை அரசியலின் உண்மையான நிலை இதுதான்.

கார்த்திகைப் பூவை வாளேந்திய சிங்கம் வெட்டி வீழ்த்திய பின்பு அந்த சிங்கத்தின் எஜமான்கள் தற்போது தாமரை மொட்டைக் கையிலெடுத்து நெருப்பை சுவாசிக்கும் டிராகனின் தலையிற் சூடி இலங்கை அரசியல் அரங்கில் சாகசம் புரிய முயற்சிக்கின்றார்கள்.

கார்த்திகைப் பூவை வாளேந்தி வெட்டி வீழ்த்தியவர்கள் இப்போது தாமரைப் பூவேந்தி அரசியற் சாகசம் புரியப் புறப்பட்டுள்ளார்கள்.

தாமரை மொட்டை அன்னப்பறவையால் கொத்தி விழுங்க முடியுமென தமிழரசுக் கட்சி நம்புகிறது.

அதேவேளை தாமரைப் மொட்டைப் புடைசூழ்ந்து பௌத்த மகா சங்கமும், இராணுவமும் , நெருப்பை சுவாசிக்கும் டிராகனும் பலமாக நிலையெடுத்துள்ளன என்பதும் கவனத்துக்குரியது.

தற்போதய தேர்தல் இடாப்பின்படி ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 81% இற்கு மேல் வாக்களிக்கப்பட்டதனால் அதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சுமாராக 82 % வாக்காளர்கள் வாக்களிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் சுமாராக ஒரு கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடும் என கணிக்கலாம்.

அப்படியாயின் 65 இலட்சத்திற்கும் 66 லட்சத்துக்கும் இடைப்பட்ட வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவாக முடியும்.

2018 ஆம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் நிகழ்ந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 40.47 % வாக்குகள் கிடைத்தன.

அதேவேளை தற்போது தாமரை மொட்டுடன் தோழமை பூண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது 12.10% வாக்குகள் கிடைத்தன.

இதன்படி தற்போது 52.57% வாக்குகளைப் பெறலாம் என்பதற்கான முதலாவது ஏதுநிலை உண்டு.

அதேவேளை இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் 10 திகதி நிகழ்ந்த எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலின் போது மொட்டு சின்னத்தின் கீழான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 57 % வாக்குகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12% வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன்படி தனிச்சிங்கள வாக்குகளில் மொத்தம் 69% வீதமான வாக்குகளை மேற்படி இரு கட்சிகளாலும் இணைந்து பெறமுடிந்துள்ளது.

இதனை நாடுதழுவிய மொத்த வாக்குகளினோடு பொருத்திப் பார்க்கையில் இது 52 % வீதத்திற்கு மேலான வாக்குகளை காட்டுகிறது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள மக்கள் சுமாராக 75% ஆவார். எனவே அளிக்கப்படக்கூடிய மொத்த வாக்குகளில் 98 லட்சத்துக்கு மேல் சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் அமைய முடியும்.

இதன்படி சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் 52% வாக்குகளை மேற்படி கணக்கின்படி தாமரை மொட்டால் நிலைநாட்ட முடிந்தால் அவர்களால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மட்டும் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற முடியும்.

இதன்படி ஜனாதிபதியாகுவதற்கு தேவையான மொத்த வாக்குகளின் தொகையில் சுமாராக இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியும் என்பதும் ஒரு கணிப்பு.

அளிக்கப்படக்கூடிய ஈழத் தமிழர்களின் மொத்த வாக்குகள் சுமாராக 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.

அவ்வாறே அளிக்கப்படக்கூடிய முஸ்லீம் மக்களின் மொத்த வாக்குகள் சுமாராக 12 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் .

அதேபோல் அளிக்கப்படக்கூடிய மலையக மக்களின் மொத்த வாக்குகள் சுமாராக 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.

இங்கு முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் தென் இலங்கையிலும் சுமார் 6 லட்சம் வரை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் உள்ளன.

தென் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கள மக்கள் தொகையுடன் கலந்து பின்னிப்பிணைந்தும், அவர்களில் தங்கியும் வாழ்பவர்கள்.

அவர்களின் வர்த்தகமும், வியாபாரமும் பெரிதும் சிங்கள மக்கள் தொகையின் மீதே தங்கியுள்ளது. இவ்வாண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் வெடித்திருந்தன.

இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் மக்களின் வாக்குகள் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அளிக்கப்பட்டது போல் இம்முறை அமைவது கடினம்.

தமது சொந்த பாதுகாப்பை கருதி இருபெரும் கட்சிகளில் ஒன்றை மட்டும் சாராது இரு கட்சிகளுக்கும் சரிக்கு சரி வாக்களிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் முஸ்லீம் மக்களுக்கு உண்டு.

எனவே தென்பகுதியில் வாழும் முஸ்லிம்களிடமிருந்து சுமாராக மூன்று லட்சம் வாக்குகளாவது கோட்டாபயவுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு உண்டு. ஆதலால் கிழக்கில் நிலை வேறு. எப்படியோ கிழக்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து ராஜபக்சக்களுக்கு ஒரு குறைந்தபட்ச வாக்குகளாவது நிச்சயம் கிடைக்கும்.

குத்துமதிப்பாக கூறுமிடத்து முஸ்லிம் மக்களின் 12 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வாக்குகளாவது ராஜபக்சக்களுக்கு கிடைக்க முடியும் என்று கணித்தால் நான்கு லட்சம் வரையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறமுடியும்.

தென்னிலங்கை தவிர்ந்த வடக்கு கிழக்கிலுள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளில் ஒரு இலட்சத்திற்கும், ஒன்றரை லட்சத்திற்கும் இடையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறக்கூடிய ஏதுநிலை உண்டு.

அதேவேளை மலையக மக்கள் மத்தியில் இருந்தது சுமாராக 1 லட்சம் வாக்குகளையாவது ராஜபக்சக்களால் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது சுமாராக 74 லட்சத்திற்கும் குறையாதளவு வாக்குகளை (56.5%) ராஜபக்சக்களால் பெறமுடியும் என்ற அபாயகரமான புள்ளிவிவரம் கண்முன் தோன்றுகிறது.

பொதுவாக ஜே.வி.பி கட்சியானது சிங்களமக்கள் மத்தியிலுள்ள “”கரவா”” சாதிச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கணிப்புண்டு.

நாட்டின் மொத்த சனத்தொகையில் சிங்கள “”கரவா “”சமூகத்தின் மக்கள் தொகை 10%. இதற்கிணங்க அளிக்கப் படக்கூடிய “”கரவா”” சமூகத்தின் மொத்த வாக்குகள்
13 இலட்சத்திற்கு மேல்.

ஆனால் இதில் கத்தோலிக்க”” கரவா””சமூகத்தினரின் தொகை 5 லட்சம் வரை என்று கூறப்படுவதால் அவர்கள் அனேகமாக ஐதேகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற கணிப்பு உண்டு.

இதன்படி மிச்சமுள்ள பௌத்த சிங்கள கரவா சமூகத்தின் எட்டு லட்சம் வாக்குகளில் பெருமளவு வாக்குகள் ஜேவிபியை சென்றடையும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேவிபி சுமாராக 7 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது .

அதன்படி சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புதுமை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் சாதி கடந்து வாக்களிக்க கூடிய ஒரு லட்சத்துக்கு குறையாத இளைஞர்களின் வாக்குகள் ஜேவிபிக்கு கிடைக்க வாய்ப்புண்டு என்பதும் இங்கு கவனத்துக்குரியது.

எது எப்படியோ சுமாராக ஏழரை லட்சத்திற்கு குறையாத வாக்குகளைப் பெறக்கூடியதற்கான அடிப்படை வாக்கு வங்கி ஜேவிபிக்கு உண்டு.

இங்கு ஜேவிபியுடைய இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள் அளிக்கப்படுமா இல்லையா என்ற வாதம் ஒருபுறமிருக்க., மக்கள் விரும்பினால் இரண்டாவது வாக்கை தாம் விரும்பும் வேட்பாளருக்கு அளிக்கலாம் என்று ஜேவிபி கூறுவதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ள நிலையில் இந்த இரண்டாவது வாக்கு யாருக்கு அளிக்கப்படும் என்பதிலேயே இதன் தாக்கம் பற்றிய அளவு தங்கியுள்ளது.

அத்துடன் ராஜபக்சக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் சுதந்திரக் கட்சியிலிருந்து எவ்வளவு வாக்கை பிரித்து சஜித் பிரேமதாசவின் வாக்குப் பெட்டிக்குள் சேர்க்க முடியும் என்பதும் கணித்திடக் கடினமான இன்னொரு பிரச்சினையாகும்.

மேலும் சஜித் பிரேமதாஸவிற்கு தமிழரசுக் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதை ஆதாரமாகக் கொண்டு தெற்கில் தீவிர பௌத்த சிங்களப் பேரலையை ராஜபக்சக்கள் தட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர் .

இப்பின்னணியில் சஜித் பிரேமதாசாவுக் கான தமிழரசு கட்சியின் ஆதரவு “வரமா,சாபமா” என்ற கேள்வி பெரிதாக உண்டு.

எது எப்படியோ ஒட்டுமொத்த பௌத்த சிங்கள மகாவம்ச மனோநிலையின் பின்னணியில் பௌத்த மகா சங்கம், இராணுவம், டிராகன் என்பனவற்றால் புடைசூழப்பட்ட சூழலில் தாமரை மொட்டுக்கு அண்மைக்காலங்களில் கிடைத்திருக்கக்கூடிய தேர்தல் புள்ளிவிபரங்களும் இணைந்து தாமரை மொட்டை தூக்கலாக வைத்துள்ளன என்பது மட்டும் தெரிகிறது.

Posted in இலங்கை செய்திகள்

சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்-இராதாகிருஸணன்

சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்
பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸணன்

கொத்மலை ஹப்புகஸ்தலாவ மக்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் ‘ஒன்றாய் முன்னோக்கி’ செல்வோம் தேர்தல் பிரசார நடவடிக்கை மலையக மக்கள முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸிணன் தலைமையில் நடைபெற்றது

இதன் பொழுது கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்

சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டில் அன்மையில் ஏற்பட்ட கலவரங்களின் போது சிறுபான்மை மக்களை காப்பாற்றிய பெருமை ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்நதாக இருந்தது. அந்த பிரச்சனைகளை பின்புறமாக இருந்து உருவாக்கியர்கள் எதிரணியில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு கேட்பவர்களே. இதனால் முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தனர். இதனாலயே முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக விழகினர். பின் நிரபராதிகள் என்றதும் மீண்டும் இணைந்துக் கொண்டனர். சஹரான் என்ற தீவிரவாதிகளை வளர்த்து எடுத்த பெருமை எதிர்கட்சியினரையே சாரரும் அன்று ஐக்கிய தேசிய கட்சி எங்களை காப்பாற்றியது குருகிய காலத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்து சட்ட நடடிக்கை எடுத்து தற்போது சுமூகமான நிலமை நிலவி வருகின்றது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியே

அந்த வகையில் சிறுபான்மை மக்களுக்கு ஐ.தே.கட்சி பாதுகாப்பான ஒரு கட்சியாகும்.அந்த வகையில் இந்த கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அவர்கள் போட்டியிடுகின்றார். இவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும் அதனால் அனைவரும் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மேலும் கூறினார்

Posted in இலங்கை செய்திகள்

பற்றி எரிந்த ஜனாதிபதி பாதுகாப்பபு பிரிவின் கட்டடம்

பற்றி எரிந்த ஜனாதிபதி பாதுகாப்பபு பிரிவின் கட்டடம்

இலங்கை அளவும் ஜனாதிபதியின் பாதுகாப்பபு பிரிவின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 மோட்ட சைக்கிள் மற்றும் ஆட்டோ என்பன எரிந்து நாசமாகியுள்ளன .இந்த விபத்து மின்சார கசிவால் ஏற்பட்டது என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கடல்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

கோட்ட பாயாவுக்கு எதிராக சுவரொட்டி ஓட்டியவர் கைது

கோட்ட பாயாவுக்கு எதிராக சுவரொட்டி ஓட்டியவர் கைது

இலங்கையில் – பிரதான வேட்பாளராக விளங்கும் இரத்த காடடேறி கோத்தபாயாவுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,கைதானவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் விடுதலை – சஜித்துக்கு ஆதரவு

எட்டப்பன் பிள்ளையான் சிறையில் அடைக்க பட்ட நிலையில் தமக்கு ஆதரவு வழங்கி பிரச்சாரம் சேட்டைகள் விடுதலை செய்ய படுவார் என்ற நிலையில் தற்போது அவர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .சஜித்துடன் மேற்கொண்ட பேச்சுகளை அடுத்து இவை இடம்பெற்றுள்ளதாம்

Posted in இலங்கை செய்திகள்

90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து 90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது

பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது

இலங்கையில் வீதி சோதனை காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
வேகமாக வந்த லொறி ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்ற பொழுதே இந்த கைது இடம்பெற்றுளளது

Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்

கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்

இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்சார தூண்டிப்பால் மூன்று நாடுகளுக்கான விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலையம் அறிவித்துள்ளது ,எனினும் இந்த மின்சார தூண்டிப்பிற்கான காரணம் தெரியவரவிலை

Posted in இலங்கை செய்திகள்

அயோத்தில் பாபர் மசூதியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

‘இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது.

பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை.

மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன், அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி உள்ளனர் என்பது பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்.

இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்’ என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களை கடலுக்குச செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மீனவர்களை கடலுக்குச செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

இலங்கை கடல் பகுதியில் மீனவர்களை செல்ல வேண்டாம் என தெரிவிக்க பட்டுள்ளது ,பலத்த புயல் கரையோரங்களை தாக்கும் என்பதால இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது ,மக்களே உசார்

Posted in இலங்கை செய்திகள்

புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்

புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்

இலங்கையை தாக்கிய கோர புயலில் சிக்கி சுமார் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்க பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது ,தொடர்ந்து புயல் தாக்கம் இருக்கும் என தெரிவிக்க படுகிறது

புயல்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவே ஜனாதிபதி ஆவர் – விமல் வீரவன்சா முழக்கம்

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய மிக சிறந்த வெற்றியை பெறுவார் என விமல் வீரவன்ச முழங்கியுளளார் .இவருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ள பாடுவதாகவும் அதனை முறையடித்து இவர் உரிய வெற்றியை தீர்க்க தரிசனமாக பெறுவார் என அடித்து விட்டுள்ளார் .இறுதி சுற்று பிரச்சாரங்கள் தீவிரம் பெற்று வரும் நிலையில் களம் சூடு பிடித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் – ரணில்

இலங்கையில் ஆளும் பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,புதிய பிரதமரை தெரிவு செய்வேன் என சஜித் முழங்கி வரும் நிலையில் இலங்கை அரசாரசியல் அமைப்புக்கு அமைவாக தான செயல் படுவேன் என ரணில் தெரிவித்துள்ளதுடன் ஜனநாயகத்தை பல படுத்த வேண்டிய தேவையும் உள்ளது என அவர் சுட்டி காட்டியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தை சொர்க்க புரிபோல மாற்றுவேன் – சஜித்

மன்னார் மாவட்டத்தை சொர்க்க புரிபோல மாற்றுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இதனால் இவரது அலை அங்கு ஓங்கி வீசுகிறது ,வாக்குறுதிகளி அள்ளி வீசி வருகின்றார்

Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க வான் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு

இலங்கை கட்டு நாயாக்க வான்நிலையத்தில் இன்று திடீரென மின்சாரம் துண்டிக்க பட்டது ,இதனால் அங்கு பயணிகள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது .இந்த மின்சார தூண்டிப்புக்கான காரணம் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு

மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு

இலங்கை மாட்டு ஏறாவூரில் பகுதியில் மறைத்து வைக்க பட்டிருந்த ஒருத தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்க பட்டுள்ளன ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு

இலங்கையில் கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் ஒருவர் கூட வந்த நபர் ஒருவரால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுளளார் ,பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுளளார் .

Posted in இலங்கை செய்திகள்

இந்த தமிழரை தெரியுமா ..? மக்களே அவசரம் பாருங்க – வீடியோ

ஈழ தமிழ் வாலிபர் ஒருவர் புலம் பெயர் நாடு ஒன்றில் வீடற்று வீதியில் குளிரில் நடுங்கியபடி ,டென்ட் ஒன்றுக்குள் வசிக்கும் காட்சியும் ,உணவு இன்றி பட்டினியோடு வசிக்கும் நிலையம் பார்க்கும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

எம்முடன் தொடர்பு கொள்ள 00447536707793

Posted in இலங்கை செய்திகள்

யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்

யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்

இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாணம் ,சென்றார் ,அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் தனது திட்டங்கள் தொடர்பாகவும் தமிழருக்கு முக்கிய விடயங்களை தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளார் ,இவரது நிகழ்வுக்கு கலந்து கொண்ட மக்களை கண்ணுற்ற மகிந்தா அணியினர் சீற்றத்தில் உறைந்துள்ளனர்