Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார்

மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார்

இலங்கையில் இன்று பரபரப்பாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் பொலநறுவை பகுதியில் மைத்திரி குடும்ப சகிதம் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்

மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை விமானங்கள் திடீர் திசை திருப்பல் – பயணிகள் அவதி

இலங்கை விமானங்கள் திடீர் திசை திருப்பல் – பயணிகள் அவதி

பங்களாதேஸ் டாக்காவில் இருந்து பறந்து வந்து கொண்டிருந்த இலங்கை எயார்லங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இலங்கை கட்டு நாயாக்க விமான நிலையத்தில் தரை இறங்காது மாத்தளை விமான நிலையத்திற்கு திசை திருப்பி விடப்பட்டது , கால நிலை சீர்கேட்டால் இந்த விமானங்கள் இவ்விதம் திசை திருப்பி விடப்பட்டதாக குறித்த வான்நிலைய குரல் தரவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்

SriLankan Airlines flight
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய வென்றால் இலங்கை சுடுகாடாகும் – மேற்குலக ஊடகம் அபாய எச்சரிக்கை

கோட்டபாய வென்றால் இலங்கை சுடுகாடாகும் – மேற்குலக ஊடகம் அபாய எச்சரிக்கை

இலங்கையில் மகிந்த குடும்பம் மீளவும் ஆட்சியில் அமர்ந்தால் இலங்கை மீளவும் அதே நிலை ஏற்படும் எனவும் இதனால் சிறுபான்மை தமிழர்கள் முதல் சிங்களவர்கள் வரை கலக்கத்தில் உறைந்துள்ளனர் என அந்த ஊடகம் சுட்டி காட்டியுள்ளது , பணபலத்தின் ஊடாக ஆட்சியை பிடிக்க துடிக்கும் கோட்டபாய வெற்றி பெறுவார் என்ற மாயையை அவர் தம் ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது ,தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்த பின்னரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெரும் பரப்புரை நிகழ்ந்து வருவதாகவும் அது சுட்டி காட்டியுள்ளது , எனினும் பரவலான கருத்துக்கள் ,உளவுத்துறையின் அறிக்கை என்பன சஜித் வெல்வார் என்றே தெரிவிக்கப்படுகிறது ,அத்துடன் கூட்டணி ஆட்சியே அமைய கூடும் என்ற வாதம் நிலை பெற்றுள்ளது

கோட்டபாய
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த கார் – நடந்தது என்ன .?

பொரளையில் பற்றி எரிந்த கார்

இலங்கை – பொரளை பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இந்த் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . இதனால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த  கார் - நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் வாக்களிக்க 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில்

மக்கள் வாக்களிக்க 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில்

இன்றும் நாளையும் மக்கள் வாக்களிப்பதற்கு இலகுவாக 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,மக்கள் பெரும்பாலும் கூடும் இடம் என கருத படும் பகுதியில் இந்த சேவைகள் ஈடுபடுத்த பட்டுள்ளனவாம்

Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் பொலிஸார்

இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவும் ,பாதுகாப்பபுப்பணியில் சுமார் அறுபதாயிரம் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் ,அவசரகால நிலைமைகளை சமாளிக்கும் முகமாக இராணுவமும் ஈடுபடுத்த பட்டுள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு

தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு

இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் விறு விறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் கொழும்பில் சீனாவின் அதிநவீன போர் கப்பல்கள் தரித்துள்ளன ,இதில் கைக்கர்கள் வருகை தந்து இருக்கலாம் எனவும் கோட்டாவின் வெற்றியை தீர்மானிக்க இவர்கள் அவருக்கு உதவ கூடும் என எதிர்பார்க்க படுவதுடன் ,பலத்த சந்தேகத்தையும் இது கிளப்பியுள்ளது

கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழித்த என்னை வெல்ல வையுங்கள் கோட்டா முழக்கம்

புலிகளை அழித்த என்னை வெல்ல வையுங்கள் கோட்டா முழக்கம்

தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்கள் அவர்களை அழித்து இலங்கை முழுவதும் சிங்களவருக்கு சொந்தம் என்பதை நிலை நிறுத்திய என்னை வெல்ல வையுங்கள் என பிரதான வேட்ப்பாளரும் இரத்தக்கறை படிந்தவருமான கோட்டபாய முழங்கியுள்ளார் ,.இனவாதத்தை கக்கி நல்லிணக்கத்தை சிதைக்கும் முயற்சியில் கோட்டா நகர்ந்து செல்வது இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் தற்போதையை ஜனாதிபதி -தேர்தல் செலவு சுமார் 7.5 பில்லியன் –

இலங்கையின் தற்போதையை ஜனாதிபதி -தேர்தல் செலவு சுமார் 7.5 மில்லியன் –

இலங்கையின் தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் செலவு சுமார் 7.5 பில்லியன் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் ,ஆண்டு தோறும் இந்த தேர்தல் செலவுகள் அதிகரித்து செல்வதாக அவர் சுட்டி காட்டியுளளார் ,அதை எண்ணி தான் கவலை படுவதாகவும் முழங்கியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார்.

சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் விவாதிக்கப்பட்டு, அரசவைப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 16-11-2019 அன்று இடம்பெறுகின்ற தேர்தல் சிறிலங்கா அரசின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமைவதால் சிறிலங்கா அரசு குறித்து எமது பார்வையினை முதலில் தெளிவுபடுத்துவதும் அவசியமாக இருக்கிறது.

சிறிலங்கா அரசியற்கட்டமைப்பு சிங்களப் பௌத்த பேரினவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயிருக்கும் காரணத்தால், இக் கட்டமைப்பின் கீழ் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வையும் கண்டு விட முடியாது என்பதே சிறிலங்கா அரசு தொடர்பாக எமது நிலைப்பாடு ஆகும்.

தமிழீழ மக்கள் தமது தாயகத்தில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், கௌரவமாகவும், இனஅழிப்புக்கு உட்படாமல் வாழவேண்டுமாயின் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்றினை அமைப்பதனைத் தவிர வேறுவழியேதுமில்லை என்பதனை நாம் உறுதியாக நம்புகிறோம். இதுவே வரலாறு எமக்குக் காட்டி நிற்கும் வழியாகவும் இருக்கிறது. இதுவே மாவீரர்களுக்கும், சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்ட நமது மக்களுக்கும் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நீதியாகவும் இருக்கும்.

2009 ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் ஊடாக தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது. இவ் ஆக்கிரமிப்பு நிலைக்குள் நம்மை வைத்துக் கொண்டு தமிழீழ மண்ணையும் தமிழ் மக்களையும் கபளீகரம் செய்வதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசு பகீரத முயற்சி செய்து வருகிறது. இவ் இனக்கபளீகரம் சிறிலங்கா அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. இதனாற்தான்; சிறிலங்கா அரசினை ஆட்சி செய்யும் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்தக் கட்சியினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தமிழின அழிப்பைத் தமது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறார்கள். இங்கு தமிழின அழிப்பு என்பதனை உயிர்க்கொலைகளாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய தகமைகளையெல்லாம் அழித்து, அவர்களை உதிரி மக்களாகச் சுருக்கி சிங்களத்தின் மேலாண்மைக்கு உட்படுத்தல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமது இந்த தமிழின அழிப்பு இலக்கை அடைந்து கொள்வதற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை நீண்டகாலத் திட்டத்துடன் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மிகவும் மனவருத்தம் தரக்கூடிய விடயமாக இருப்பது என்னவென்றால் தமிழர் தேசம் என்ற மரத்தை வெட்டுவதற்கு தமிழர்களே கோடரிக்காம்பாக சிறிலங்கா அரசால் பயன்படுத்துப் படுவதுதான். சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் திட்டத்துக்கு என்ன காரணத்துக்காகவேனும் முண்டு கொடுக்கும் தமிழர்கள் பெரும் வரலாற்றுப்பழியைச் சுமந்து நிற்கிறார்கள். சிறிலங்கா அரசின் அடிவருடித் தமிழர்;கள் மட்டுமல்ல தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களும் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்குத் துணைபோய்க் கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.

இக் குறிப்புகளோடு சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களைப் பதிவு செய்கிறோம் :

  1. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிறிலங்கா அரசியல்யாப்பின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் தமிழ் மக்கள் கொள்கை அடிப்படையில் பங்கெடுக்க முடியாது. இத் தேர்தல்களில் எந்தவகைப் பங்குறபற்றலும் கொள்கையினை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய உத்தி அடிப்படையில் மட்டுமே அமைய முடியும்.
  2. சிறிலங்கா அதிபர் தேர்தல் தமிழர் தாயகப்பகுதியின் மக்கள் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிப்பதில்லை. இத் தேர்தல்களில் தமிழின அழிப்புக் குற்றவாளிகளுக்கு தமது வாக்குகளை அளிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்களை தமிழர் தலைவர்கள் தள்ளியுள்ளனர். 2010 ஆம் ஆண்டிலும் 2015 ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தலில்
    அளிக்கப்பட்ட தமிழர் வாக்குகள் தமிழ் மக்களுக்கு உரிய பயனை அளிக்கவில்லை.
  3. அதிபர் தேர்தலை உத்தி சார்ந்து கையாள்தில் கடந்த காலங்களைப் போல இத் தடவையும் தமிழ் தரப்பு வெற்றியடையவில்லை என்பதே எமது அவதானிப்பு. இத் தேர்தலில் பங்குபற்றும்போது தமிழர் தேசத்தின் பலத்தை வளர்த்தெடுத்தல், அனைத்துலக அரசுகளுடனான உறவுகளில் சிங்களத் தரப்புக்கு இணையான ஒரு தரப்பாக தம்மை நிலைநிறுத்துதல் போன்றவை குறைந்தபட்ச உத்திகளாகக் கடைப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவையேதும் நடைபெறவில்லை.
  4. இந்த தேர்தலை எவ்வாறு தமிழர் தரப்பு கையாளவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கின்ற பணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக சமூகத்தினை நாம் பாராட்டுகின்றோம். அதில் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கை மட்டமல்ல எத்தனை கோரிக்கைகளை முன்வைத்தாலும், சிங்கள ஆட்சியாளர்களால் அதனை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் வெளி, சிறிலங்காவில் அதற்கு இல்லை என்பதே தெளிவு. இனநாயகமயப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் அரசியற்கட்டமைப்பு இதற்கு காரணமாக இருக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரை பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கோள்ளபட்ட 5 கட்சிகளின் 13 அம்சத்திட்டக் கோரிக்கை முன்னெடுப்பும் உத்திரீதியாக சரியாக வடிவமைக்கப்படவில்லை என்றே கருதுகிறோம். இதனை எந்த சிங்கள பேரினவாதத்தலைவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை உய்த்துணர்ந்து கொள்வது கடினமானதொன்றல்ல. இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. சிங்களத் தலைவர்கள் இக் கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் போது தமிழர் தேசிய பலத்தை நிலைநிறுத்துவதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைத் திட்டம் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது போனமை தமிழர் தரப்பின் அரசியல் வறுமையின் வெளிப்பாடகவே தெரிகிறது.

  1. தமிழ்த் தேசியம் சாரந்த அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு பொது வேடபாளரை தமிழ் மக்களின் கொள்கைசார் நிலைப்பாடுகளோடு அதிபர் வேட்பாளராக தமிழர் தரப்பு நிறுத்தியிருக்குமானால் தமிழ் மக்களை ஒரு அரசியற்சக்தியாகப் பொருட்படுத்தாத சிங்களத் தலைவர்களையும் அனைத்துலக அரசுகளையும் எம் மீது கவனத்தைத் திருப்ப வைத்திருக்க முடியும். தமிழ் மக்களை தாம் நினைத்தவாறெல்லாம் பயன் படுத்த முடியாதென்பதனை நிறுவியிருக்க முடியும். இத்தகையதொரு வாய்ப்பும் தவற விடப்பட்டிருக்கிறது.
  2. சிலர் பரப்புரை செய்வது போல அதிபர் தேர்தலில் ஆபத்து குறைந்த பேயைத் தேர்ந்தெடுத்தல் என்பது கொள்கை சார் உத்தியாக இருக்க முடியாது. ‘பேய்’ என அடையாளம் கண்ட பின்னர் எந்தப் பேய்க்கும் வாக்களிப்பது மனிதர்கள் மேற் கொள்ளும் முடிவாக இருக்க மாட்டாது. எந்தப் ‘பேய்க்கு’ வாக்களித்தாலும் அது தமிழின அழிப்பைத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் என்பதனை நாம் மறந்து போகக் கூடாது.
  3. தாயகத்தில் உள்ள மக்களுக்கு இக் கருத்துகளுக்கு மேலதிகமாக அதிபர் தேர்தல் குறித்து எந்த வழிகாட்டுதலையும் செய்வதற்கு நாம் விரும்பவில்லை.
  4. அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளப் போகும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றினை எதிர் கொள்வதற்கான செயற்பாடுகளில் நாம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற வேண்டுதலை அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் இத் தருணத்தில் முன்வைக்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச – மலையக மக்கள்

ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி
அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

ஜனாதிபதியாக வெற்றி பெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். தற்போது கிடைக்கபெற்ற தகவல்களுக்கும் புள்ளி விபரங்களும் வெளிநாடுகளின் முன்னணி கணீப்பீட்டுக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றி நிச்சயிக்கபட்டுள்ள ஒன்னறாக இருக்கின்றது. இந்த வெற்றிக்கு மலையக பெண்களும் காரணமாக இருந்து உள்ளார்கள் என்ற நிலைக்கு அனைத்து பெண்களும் கட்டாயம் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் ஒன்றாய் முன்னோக்கி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மலையக மக்கள் முன்னணியின் மகளீர் அணியுடனான மாபெரும் ஒன்று கூடல் இன்று (13) ஹட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மகளீர் முன்னணியின் செயலாளார் திருமதி சுவர்ணலதா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விரிவுரையாளர் திருமதி விஷாகா புதிய ஜனநாயக முன்னணி மகளீர் இணைப்பாளர் திருமதி ருவனவெல மனிதவள அபிவிருத்தி ஸ்தானப மகளீர் இணைப்பாளர் திருமதி மெட்லின் மேரி உட்பட கட்சியின் உயர் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்

மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் வாக்கு வங்கியில் பெரும்பாலன வாக்குகள் பெண்களுக்கு உரியதே. இந்த வாக்குகள் அனைத்தும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அளிக்கபட வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள். இந்த நாட்டில் வாழும் அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் மிகவும் பொருத்தமான பெண்கள் சாசனம் ஒன்றினை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து உள்ளார். பெண்களின் உரிமை உட்பட பெண்கள் சார்பான நல்ல பல சமூகசார் அபிவிருத்தி விடயங்களையும் முன் வைத்துள்ளார். இந்த நாட்டில் உள்ள சனத்தொகையில் 51 வீதமானோர் பெண்களே. ஆனால் இவர்கள் குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் உரிய கவனத்தை செலுத்தவில்லை என்று தான் கூர முடியும். பேச்சுகளுக்கு பலர் பல கூறினாலும் அவை நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. இந்த நாட்டிற்கு பெருமளவிளான வருமானத்தை பெற்றுத் தருபவர்கள் பெண்களே. இலங்கையை பொருத்த வரையில் உயர்பதவிகளுக்கு வருபவர்கள் பெண் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் பெண் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட உள்ள செயற்திட்டங்கள் பாராட்டதக்க ஒன்றாகும்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 60 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் சொல்லன்னா துயரங்களை அடைந்து வருகின்றனர். இவர்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் பெண்கள் தொர்பான உயர்வான அவளுடன் இணைய குற்றங்களில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க புதிய சட்;டங்களையும் உருவாக்க உள்ளார் அதுவும் வரவேற்க்கதக்க ஒன்றாகும். என்று அவர் மேலும் தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

முசுலீம் அரசியல் வாதிகளை அலற வைத்த கோத்தா

முசுலீம் அரசியல் வாதிகளை அலற வைத்த கோத்தா

இலங்கையில் நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதல் தொடர்பான அணைத்து விடயங்களும் கிளற பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தி ,சம்பந்த பட்டவர்களை நீதியின் முன் நிலை நிறுத்துவேன் என கோட்டபாய அதிரடியாக அறிவித்துள்ளார் ,முசுலீம் கட்சிகள் பெரும் பான்மையினர் இவரை கைவிட்ட நிலையில் இந்த விடயத்தை இவர் அறிவித்துள்ளார் ,இந்த செய்தியை கேட்டு கிசுப்புல்லா ,ரிச்சர்டு, உள்ளிட்டவர்கள் பீதியில் உறைந்துள்ளனராம்

Posted in இலங்கை செய்திகள்

மீண்டும் இலங்கையை ஆட்சியை செய்ய துடிக்கும் மகிந்த கும்பல் – வெளிநாட்டு ஊடகம் பரபரப்பு

மீண்டும் இலங்கையை ஆட்சியை செய்ய துடிக்கும் மகிந்த கும்பல் – வெளிநாட்டு ஊடகம் பரபரப்பு

இலங்கையில் மீளவும் இரத்தக்கறை படிந்த மகிந்த குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் ஏறி ,ஆட்சி செய்ய துடிப்பதாக மேற்குலக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது ,இலங்கை தேர்தல் களம் உலகநாடுகள் பார்வையில் சிக்கியுள்ளது மேற்படி செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,2009 ஆம் ஆண்டில் தமிழர்களை கொன்று குவித்து இனவாதத்தை தூண்டி ஆட்சியில் ஏறி உட்க்கார்ந்து கொலைகள் ,கடத்தல் ,கப்பம் என நாட்டையே சூறையாடிய கும்பல் மீளவும் அரியணை ஏறிட துடிப்பது குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்

சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்

இலங்கை வெலிக்கடை சிறைச்சாலை கூரை மேல் ஏறி இரு கைதிகள் போராட்டம் நடத்தி ,.வருகின்றனர் ,கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தணடனை விதிக்க பட்ட இரு கைதிகள் ஜனாதிபதி தம்மை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடான் முடிவு

தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடான் முடிவு

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் பரப்புரைகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன ,அதனால் இன்று அதி உச்ச கட்ட பரப்புரையில் இரு பிரதான வேட்ப்பாளர்களும் களத்தில் குதித்துள்ளன ,இதன் பின்னர் நாளை கொழும்பில் பல அதிரடி எதிர்மறை மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வீதியில் விழுந்து கிடந்த வாக்காளர் அட்டைகள்

வீதியில் விழுந்து கிடந்த வாக்காளர் அட்டைகள்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையே டுத்து வாக்காளர் அட்டைகள் தேர்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க பட்டன ,அவ்விதம் அனுப்பி வைக்க பட்ட வாக்காளர் அட்டைகள் திருட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .வீதியில் 14 க்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வீழ்ந்து கிடந்த நிலையில் அதனை காவல்துறையினர் மீட்டு சென்றுள்ளாராம்

Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதை புரிந்த 10 மாணவர்கள் கைது

பகிடிவதை புரிந்த 10 மாணவர்கள் கைது

இலங்கை – ஊவா பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த பத்து மாணவர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது ,பகிடிவதைக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்

தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்

இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 41,000 காவல் துறையினர் பணியில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,மேலும் 7000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவமும் பாதுகாப்பபில் ஈடுபடுகின்றனராம்

Posted in இலங்கை செய்திகள்

கோத்தா ஆட்சிக்கு வந்தால் – முதலைக்கு இரையாகுவீர்கள்

கோத்தா ஆட்சிக்கு வந்தால் – முதலைக்கு இரையாகுவீர்கள்

இலங்கையில் இரத்த கறைபடிந்த கோட்டபாய ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வான் கடத்தல் தொடர்வதுடன் மீளவும் கடத்த பட்டு கொலை செய்ய பட்டு முதலைக்கு இரையாகுவீர்கள் என வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட சாரதி எச்சரித்துள்ளார் ,கொலையாளிக்குள்ளு வால் பிடிக்கும் கும்பல் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பணத்தை வேண்டி வாலாட்டி வருகின்றனர் ,இவர்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை என்பதே அவர்கள் பேச்சுக்கள் மூலம் உறுதியாகின்றன என தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

நான்கு ஆண்டுகள் நடந்த போர் – முடிவில் நடந்தது என்ன தெரியுமா ..?

அ.மயூரன்.

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.

சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை இந்நாளில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.

  அந்தவகையில் நவம்பர் 11 திகதி அமுலுக்கு வந்த இந்த சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் Armistice day  எனவே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர். மாறாக ஜேர்மன் படைகள் ஹிட்லரின் தலைமையில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு 2 வது உலகயுத்தம் தொடங்கப்பட்டமையால் இந்த யுத்தநிறுத்த தினம் கைவிடப்பட்டது. இருந்தும் 2வது உலக மகாயுத்தம் முடிவடைந்த்தன் பின்னர் பிரித்தானிய அரசினால் இந்த யுத்தநிறுத்த தினமானது நினைவு தினமாக (Remembrance Day) ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டபோது அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டன. அன்றிலிருந்து இத்தினம் பொப்பி தினமாக நினைவுகூரப்படுகின்றது. 

   மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக்க் கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் 35,527 வீர்ர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 35,527 அவுஸ்திரேலிய வீர்ர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் (Western Front)  புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவனது உடலே 35,527 வீர்ர்களின் நினைவுகளுக்கும் சாட்சி.இதேபோல 2007 ஆண்டு 1வது உலகப் போரில் கொல்லப்பட்ட ஜக்ஹண்டர் என்ற அவுஸ்திரேலிய வீரனின் உக்கிய எலும்புகள் மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெல்ஜியம் போர் மயாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பிரித்தானியாவும் 2007 இல் இறந்த வீரனை அடக்கம் செய்த்து நினைவிருக்கலாம்.   

 தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.

ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்

“Flanders Fields போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் தங்கள் காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம் வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக் கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள். இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் இல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்”.

            அற்புதமான உள்ளார்த்தம் நிறைந்த உயரிய கவிதை வரிகள் எம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் வீழ்ந்தவர்களுக்காக வருடாவருடம் விழா எடுப்பவர்களல்லவா நாங்கள். அழகிய சிவந்த இதழ்களைக் கொண்ட பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. 

மேலும் இந்தப் பொப்பி மலரானது ஆரம்ப காலம் முதல் அபின் எனப்படும் கெரோயினுக்கு முக்கிய பொருளாக அமைகின்றதுடன். பொப்பியின் விதையானது கசாகசா எனப்படும் வாசனைத்திரவியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

   அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. ஆகவேதான் கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் மடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இந்த வீர்ர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்கள். என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதைக் காணலாம்.

மாறாக கடந்த சில ஆண்டுகளாக லண்டனுக்குள் வெளிநாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் லண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடிக்கப்படுகிறது.

 அத்தோடு போரில் இறந்த வீர்ர்களுக்கு பிரித்தானியாவில் தனித்தனிக் கல்லறைகள் எதையும் அமைக்கவில்லை மாறாக பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பிரித்தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீர்ர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்த்து உதாரணமாக பிரான்ஸில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், தனிக்கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தானிய 228 வீர்ர்களுக்குத் தனித்தனி கல்லறை அமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

     இந்தக்கல்லறைகளை இன்றும் திருகோணமலைக்கு வெளியே திருகோணமலையிலிருந்து நிலாவெளி செல்லும் வீதியில் கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் காணமுடிகின்றது. 

வேற்று நாட்டுப்படைகள் தம் நாட்டிற்குள் இறந்த்தற்காக கல்லறை அமைப்பதை அனுமதித்திருந்த இலங்கையரசு. தம்நாட்டில் அந்தநாட்டின் விடிவிற்காக வீழ்ந்த எம்புனிதர்களின் கல்லறைகளை அனுமதியாது களைந்திருக்கின்றது இது எந்தவகையில் சரியானது உறவுகளே.

      மேலும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் (postmouth ) என்னும் கடற்கரை நகரத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மியூசியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்து அந்த வீரர்களை கௌரவித்திருக்கின்றது பிரித்தானிய அரசு.

      இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம் இனி இதே கார்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.

   இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.   “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.

      “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்”  

என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.

“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்”
என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.

“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை”

என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.

      இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.  தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

  சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களின் 

’’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும்
கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’’

என்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயணம் காணப்படுகின்றது.

இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்த்து. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.

 ஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ  இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது.

இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.

   அந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.

       வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள்  இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.    

   ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

   இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும்.

  ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதரர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோதரர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா?.

ஆகவே வீரமரணமடையும் மாவீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.

அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது.

முள்ளிவாய்க்காலின் பின்னர். இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 45.000 இற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது.

இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை.

பௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது.

ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது.

நன்றி
அ.மயூரன்.