Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
இலங்கையில் -43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சேவைத் தேவையின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு மேலதிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் வீழ்ந்தது எப்படி – விசாரணைக்கு உத்தரவு
இலங்கையில் -விமானம் வீழ்ந்தது எப்படி – விசாரணைக்கு உத்தரவு
இலக்கை விமான படைக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விமான விபத்தில் சிக்கி சுமார் நால்வர் பலியாகினர் .
குறித்த விபத்து தொடர்பில் விசாரிக்க விசேட விசாரணைக்குழு அமைக்க பட்டுள்ளது ,அவர்களது விசாரணை தரவுகள் விரைவில் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது
பிச்சைக்காரியிடம் இருந்து மீட்க பட்ட லட்சம் பணம்
இலங்கையில் -பிச்சைக்காரியிடம் இருந்து மீட்க பட்ட லட்சம் பணம்
இலங்கையில் ஆளும் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
கோட்டாபாயவின் உத்தரவின் அடிப்படையில்
பொது இடங்களில் மற்றும் பேரூந்துகள் ,தொடரூந்துகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க பட்டது .
அவ்வாறு மீறி தொடர்பவர்கள் மீது சட்ட நட்டவடிக்கை எடுக்க படும் என எச்சரிக்கை பட்டது .
அதையும் தாண்டி பிச்சை எடுத்த பெண் டசின் கணக்கானோர் கண்காணிக்க பட்டு வந்தனர் .
அவ்வேளை ஒருவரிடம் இருந்து இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கை ரூபா பணம் மீட்க பட்டுள்ளது .
அவர் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு
இலங்கை -யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (03) காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.
மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.
பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் பலி
இலங்கையில் -வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் பலி
ஹப்புத்தளை வீரவில பகுதியில் இருந்து நான்கு பேருடன் பயணத்தை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது
பலி யானவர்கள் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது .
இந்த விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .கோட்டாபய அரசில் இவ்விதமான விபத்துக்கள் திட்டமிட்டு நடத்த படுபவை என்பது மகிந்த ஆட்சி காலத்தில் வீழ்த்த பட்ட இரு மிக் விமான
விபத்து தொடர்பில் உலகம் அறிந்த உண்மையாக உள்ளது
8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் ஆரம்பம்
இலங்கையின் -8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் ஆரம்பம்
8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமானது.
தனக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 3 வது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதற்கமைய பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்ட நல்லூர் வளைவு
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில்
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
அந்த நிதிக்கு அமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஈழம் அக்கரையான் – சிந்து சமவெளிக்கும் உள்ள உறவு video
ஈழம் அக்கரையான் – சிந்து சமவெளிக்கும் உள்ள உறவு video
தமிழர் பகுதியான – அக்கரையான் சிந்து சமவெளியின் ஒரு பகுதி என வரலாற்று சான்றுகள் உள்ளது .
இந்த செய்தியை ஜெகஸ் கஸ்பர் தெரிவித்துள்ளார் .கீழடியில் உள்ள அகழ்வு ஆராய்ச்சியின் பொழுது கண்டு பிடிக்க பட்ட வரலாறு சான்றுகளும் ,
வடக்கு இலங்கை அக்கறையான் தமிழர் வாழும் பகுதியில் உள்ள சான்றுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவையாம்
உலங்குவானூர்தி தாய்வானில் வீழ்ந்து நொறுங்கியது – இராணுவ அதிகாரிகள் பலி
தாய்வானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – இராணுவ அதிகாரிகள் பலி
தாய்வான் – நாட்டின் மலை பகுதியில் புதுவருடத்தை முன்னிட்டு பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த உலங்கு வானவூர்தி ஒன்று பலத்த காடுகளுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது வீழ்ந்து நொறுங்கியது .
இதில் விமான படை தளபதி உள்ளிட்ட ஏழு முக்கிய அதிகாரிகள் பலியாகினர் .
இவர் இந்த பதவிக்கு ஜெனரலாக தெரிவு செய்ய பட்டு சில மாதங்களில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது .
இவர் சீனவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைத்து பணியாற்றி வந்தார் .
அதனால் இவரை சீனா உளவுத்துறை இரகசியாமாக இந்த வான்வெளியில் வைத்து போட்டு தள்ளியது என்ற தகவல் கசிந்துள்ளது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்வாறான நிலையில் சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு கடுமையாக எதிர்த்து வந்த முக்கிய
முதல் தர இராணுவ அதிகாரியே இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
உலங்கு வானூர்தி வான் தளத்தில் இருந்து பறந்து சுமார் பத்து நிமிடங்களில் ராடர் திரைகளில் இருந்து மறைந்து போனது
அதன் பின்னர் இடம்பெற்ற தேடுதலின் பொழுதே குறித்த பகுதியில் உலங்குவானூர்தி வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
உலங்குவானூர்தி தாய்வானில் வீழ்ந்து நொறுங்கியது – இராணுவ அதிகாரிகள் பலி
விமானம் ஏவுகணைகள் மூலம் தக்க பாட்டு வீழ்ந்ததா ..? அல்லது இயந்திர கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பது தொடர்பில் தாய்வான் அரசு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
இவரது இந்த திடீர் பாடு கொலை மரணம் தாய்வான் அரசில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
விசாரணைகளின் முடிவில் இது திட்டமிடப்பட்ட படுகொலையா என தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது ,
உள்வீட்டு சாதிகள் கூட்டு காரணமாகி இந்த இராணுவ முக்கிய அதிகாரி பாடுகொலை இடம்பெற்று இருக்கும் எனின் தைஅவன் இராணுவத்தில் பலத்த
களையெடுப்புக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்க படுகிறது .
இதில் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் வெளிவரலாம் என எதிர்பார்க்க படுகிறது

வருடப்பிறப்பில் 392,078 குழந்தைகள் பிறப்பு
உலகம் தழுவிய -வருடப்பிறப்பில் 392,078 குழந்தைகள் பிறப்பு
வருடப்பிறப்பில் -பிறந்த அன்று உலகம் தழுவிய நிலையில் சுமார் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன .
இதில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது
இங்கு சுமார் 67,385 சிசுக்கள் பிறந்து சாதனை படைத்துள்ளனர்
ஒரே நாளில் இத்தனை ஆயிரம் சிசுக்களா ?
உலக மக்களை அதிர வைத்த்துள்ளது ,சீனாவை மிஞ்சி இந்தியாவின் மக்கள் தொகை பெருக் கெடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது
கணவனை- கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி
கல்லைப்போட்டு- கணவனை கொலை செய்த மனைவி
இலங்கை -மாகொல, சிறிமங்கல பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவன் மீது கருங்கல்லை போட்டு மனைவி கொலை செய்துள்ளார் .
போதைக்கு அடிமையான இவர் களவு ,மற்றும் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சித்திர வதைகளை சகித்து கொள்ள முடியாத மனைவி இந்த படுகொலையை புரிந்துள்ளார் ர்
மனைவி கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார்
யாழிற்கு கடுகதி சாலை- வீதியோர வீடுகள் இடிக்க நடவடிக்க்கை
இலங்கை -யாழிற்கு கடுகதி வேக நெடுஞ்சாலை
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழிற்கு வரை அதிவேக நெடுஞ்சாலை
அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்
கண்டி – கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்,
கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேகப் அதிவேகப் நெடுஞ்சாலையும், குருநாகலில்
இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதிவேகப் பாதைக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயமான இழப்பீட்டு
முறை அமுல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.
நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
யாழிற்கு கடுகதி சாலை- வீதியோர வீடுகள் இடிக்க நடவடிக்க்கை
கண்டி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக விலியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து தென்னக்கும்புர வரை 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழிப் பாதை
அமைக்கப்படும். நகரின் வாகன நெரிசலை தவிர்க்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர்; லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
வீதி வடிகால் அமைச்சினால் வீதி நிர்மாணம் என்ற புரவியில் வீதிஉவட்டாரத்தில் இருந்த பல தமிழர்கள் வீடுகள் ,கடைகள் என்பன இடித்து அழிக்க பட்டது .
அது போன்று மீளவும் இந்த விடயம் தமிழர் பகுதியில் இடம்பெற போகிறது .
அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு தமிழர்கள் வீடுகள் இல்லாது அழிக்கும் நகர்வும் ,அந்த மக்களை அங்கிருந்து அகற்றும் படும் நரித்தனம் இடம் பெறப்போகிறது
ஒன்றை புரிவதற்கு ஒன்றை விட்டு கொடுக்க வேண்டும் எனவும் அதற்குரிய நஷ்டா துடை அரசு தரும் என்ற ஆசை வார்த்தைகள் பேச படும்
வீதி அமைப்பின் ஊடாக தமிழர் வீடுகள் அழிக்கும் விடயம் இனி வரும் காலங்களில் யாழ் நோக்கி பேச பட போகிறது
யாழிற்கு இதுவே அரசியலாக மாறி வெடிக்க போகிறது
ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்- திருமதி சாள்ஸ்
இலங்கையில் -ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்- திருமதி சாள்ஸ்
வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராகதிருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண ஆளுநராககடந்த
திங்கட் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின்
பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.
இன்றைய நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் இராணுவம், பொலிஸ்
அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பொலிஸ் அணி வகுப்பு மரியாதையினையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இலங்கையில் -துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இலங்கை -ராகம, கெந்தலியந்தபாலுவ பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்
இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகராறு மோதலாக உருவெடுத்து இந்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
பலியானவர் சடலம் மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
போலீசார் இந்த கொலை குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கோயிலுக்குள் ஒருவர் பலி
வவுனியா -கோயிலுக்குள் ஒருவர் பலி
இலங்கை – வவுனியா ஈச்சங்குள பிள்ளையார் ஆலயத்தில் வழிப்பாடுகள் இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற பக்தர் ஒருவர் அந்த குளத்தில் நீரில் மூழ்கி பலியானார்
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை : பிரதமர் வி.உருத்திரகுமாரனின் புத்தாண்டுச் செய்தி !!
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை
என்ன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது புத்தாண்டுச் செய்தியில் விளக்கியுள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் சமத்துவமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு
உள்ளாகாத வகையிலான அரசியல் உடன்பாடு எவற்றுக்கும் வரமுடியாது என்பதனையும், இத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சிங்கள தேசம் என்றும் தயாராக இருக்கப்
போவதில்லை என்பதனையும் 2019 மீண்டும் நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழர் தேசத்;தின் அரசியற்குரலாக தேர்தல் அரசியலைக் கடந்த
தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக வேண்டும். சுயநல அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மக்களை உண்மையாக நேசிக்கும், மக்களுடன் இணைந்து
செயற்படும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் புதிய அரசியற் தலைமை தமிழ் மக்களுக்காக உருவாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்று, நிமிர்ந்த நன்நடை, புதுமைமிக்க சிந்தனை, அறிவுசார் நடத்தை, தளராத உறுதி, சொல்லில் தெளிவு, செயற்பாட்டில் துணிவு, சோர்ந்து போகாத தொலைநோக்கு,
சமூகநீதியில் பற்றுறுதி, இயற்கை மீது காதல், சூழல் பாதுகாப்பில் அதியுயர் அக்கறை, உயரிய மனித நேயம் இத்தனையும் கொண்ட புதியதோர் அரசியற் பண்பாட்டு
அரசியற்சமூகம் உருவாக்குவதற்கான விதைகளை நாட்டும் பெரும்பணி 2020 தொடக்கம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இப் புதிய ஆண்டினை வரவேற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா
2019ம் ஆண்டில் கடந்தவை, ஈழத்தமிழர் தேசத்தின் நிகழ்ச்சி நிரல் என ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல்
இறைமைக்குhன செயல்வழிப்பாதையினை முன்வைத்துள்ள புத்தாண்டுச் செய்தியின் விரிவான அறிக்கை :
புதியதோர் அரசியற் சமூகமும் புதுமை கொண்ட அரசியற் பண்பாடும் உருவாக 2020 ஆண்டு வித்தி;டட்டும்!
தமிழீழ மக்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும், தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிவரும் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மலரும் இப்
புத்தாண்டில் எனது தோழமையுடனான வணக்கத்தையும், வாழ்த்தையும், அன்பையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். இன்று மலர்ந்துள்ள புத்தாண்டு உலக
மக்களின் வாழ்வில் வளத்தையும், சமத்துவத்தையும், சமாதானத்தையும் மேம்படச் செய்யும் என நம்புவோமாக.
2019ஆம் ஆண்டு தமிழ்மக்களுக்கு அரசியல்ரீதியாகத் தெளிவான சில செய்திகளைக் கூறிவிட்டுக் கடந்து சென்றிருக்கிறது. இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள
தேசத்துடன் சமத்துவமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு உள்ளாகாத வகையிலான அரசியல் உடன்பாடு எவற்றுக்கும் வரமுடியாது என்பதனையும்,
இத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சிங்கள தேசம் என்றும் தயாராக இருக்கப் போவதில்லை என்பதனையும் 2019 மீண்டும் நிரூபித்துள்ளது.
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா
தமிழீழ மக்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளைக் கைவிட்டு, தமிழீழ மக்களைப் பெரும் அரசியற்தோல்விக்குள் தள்ளிவிடக்கூடியதொரு அரசியல்
ஏற்பாட்டுக்குத் தமிழரது நாடாளுமன்றத் தலைமை தயாராக இருந்த போதும் சிங்கள தேசம் அதனையும்;கூட 2019 இல் நிராகரித்துள்ளது. தமிழர் தலைமை
கைகோர்த்திருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் வழங்க முடியவில்லை. இவர்களால் முடியவில்லை எனக்
கூறுவதைவிட சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வழங்குவதற்குத் தயாராக இல்லை எனக் கூறுதலே கூடுதல் பொருத்தமுடையதாகும்.
2009ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் மீதான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குத் தலைமை தாங்கியவர்களை சிங்கள தேசம் மீண்டும் ஆட்சி
அரியணையில் ஏற்றியதனை நாம் 2019இல் கண்டுள்ளோம். மனிதகுல வரலாறு வெட்கித் தலைகுனியுமளவுக்குத் தமிழ் மக்களைக் கொன்றொழித்தவர்களிடம் இது குறித்து ஒரு
கிஞ்சித்த சலனமோ மனக்கிலேசமோ இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான சிங்கள மக்களிடமும் தமிழ் மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவது
தொடர்பான எந்தவித அக்கறையும் வெளிப்படவில்லை. இலங்கைத் தீவு தமக்கு வாக்களிக்கப்பட்ட பூமி (Promised Land) என்ற மகாவம்ச புனைவு மனவுலகிற்குள் அவர்கள்
புதைந்து கிடக்கிறார்கள் என்பதனையே இது வெளிப்படுத்துகிறது. இலங்கைத்தீவில் தமிழின அழிப்புக்கு எதிராகத் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை உறுதியாகத்
தொடர வேண்டும் என்பதனை 2019ஆம் ஆண்டு; மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய இராஜபக்ச பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு மாறாக அரசியல் அதிகாரம் எவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது எனக்
கூறியுள்ளார். இவர் தன்;னைச் சிங்கள தேசத்தின் தலைவர் என்ற நிலையில் வைத்துக் கொண்டு, தமது நாட்டை வழிநடத்தும் ‘ஒரு நாடு – ஒரு மக்கள்’ என்ற கோட்பாட்டின்
நிலைப்பட்டுத்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது இக் கருத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.
இலங்கைத்தீவு ஒரு மக்களைக் கொண்டதொரு நாடல்ல. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு அமைந்துள்ள சிறிலங்கா என்ற அரசினை சிங்கள தேசம்
தனக்கான அரசாக உருமாற்றியிருக்கிறது. இலங்கைத்தீவில் சிறிலங்காத் தேசியம் என்பது சிங்களத் தேசியமாகவே உள்ளது. தமிழர் தேசம்; காலனித்துவ
காலத்தில் தான் இழந்த இறைமையினை மீட்டெடுத்து, தனது பாரம்பரியத் தாயகத்தில் தனக்கான தமிழீழத் தனியரசினை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது.
உலகின் அரசற்ற தேசங்களில் ஒன்றாகத் ஈழத் தமிழர் தேசமும் இருந்து வருகிறது.
சிங்கள தேசத்தின் அரசாக இருக்கிற சிறிலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசு அல்ல. அது ஓர் இனநாயக அரசு. ஒரு இனத்தின் முடிவுகளின் அடிப்படையில் இயங்கும் அரசு.
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா
அதாவது சிங்கள தேசத்தின் மக்களால் முடிவுகள் தீர்மானிக்கப்படும் ஓர் அரசு. கோத்தாபயவும் சிங்கள தேசத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் அரசுத் தலைவர்தான்.
அவர் சிங்கள தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே இயங்குவார். இதில் எமக்கு எந்த வருத்தமோ முரண்பாடோ இல்லை. சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி
கிடைக்காது என்பதனை நாம் காலாதி காலமாகக் கூறியே வந்திருக்கிறோம். கோத்தாபயவின் கூற்று எமது நிலைப்பாட்டையே உறுதிப்படுத்துகிறது.
இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் இறைமையும், அந்த இறைமையின் அடிப்படையில் தனக்கென்றதோர் அரசினை இத் தாயக மண்ணில் அமைப்பதற்கு ஈழத் தமிழ
தேசத்துக்குள்ள உரிமையும், அவ்வுரிமையினைச் சிங்கள தேசம் நிராகரிப்பதிலும் இருந்துதான் ஈழத் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினை உருக்கொள்கிறது. தமிழர் தேசத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்திக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை கோத்தாபயவுக்கோ அல்லது வேறு எந்த சிங்களத் தலைவர்களுக்கோ கிடையாது. காலனித்துவ காலத்தில்
வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டு சிங்கள தேசம் தமிழர் தேசத்தை அடிமை கொள்ள முடியாது.
தமிழ் மக்களின் சம்மதம் இல்லாத முடிவுகளைச் சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது.
சிங்கள தேசத்தின் தலைவராகவுள்ள கோத்தாபய சிங்கள மக்களின் விருப்பப்படி தமது ஆட்சியைத் தொடரட்டும். ஈழத் தமிழர் தேசத்தினை அதன் விருப்பப்படியே விட்டு
விடட்டும். தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் உரிமையினைக் கொண்டவர்கள் என்பதனை நாம் என்றும் முரசறைந்து கூறுவோம்.
மேலும் கோத்தாபய ஒரு தமிழின அழிப்புக் குற்றவாளி என்பதனையும், மனித குலத்துக்கு எதிராக இவர் இழைத்த குற்றத்துக்காக அனைத்துலக குற்றவியல்
விசாரணைப்பொறிமுறையின் கீழ் நிறுத்தப்பட வேண்டியவர் என்பதனையும் நாம் அனைத்துலக
சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் வெளிப்படுத்துவோம்.
2020ஆம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஈழத் தாயகத்தில் இப் பத்தாண்டுகளில் மாவீரர்களின் கனவான
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைப்பது என்ற உயரிய இலட்சியத்தை நாம் சுமந்து வந்திருக்கிறோம். தமிழ் மக்கள் தமது அரசியற்
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா
பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கு உரிய அரசியல்வெளி இல்லாத சூழலில் வாழ்வதால் நாம் இதனை எமது முதன்மை இலக்காகக் கொண்டு இயங்குகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப் படுவதற்கு அமைக்கப்பட்ட மதியுரைஞர் குழு அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து ஈழத் தமிழ்
மக்கள் மீதான இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. தமிழர் தலைவிதி தமிழர் கையில்
என்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தையும் நடத்தி வருகிறது. தமிழீழத்தை அமைப்பதற்கு உதவக்கூடிய வெளியுறவுக் கொள்கையுடன் இணைந்தவாறு தனது
செயற்பாடுகளை பல்வேறு தளங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ் வருடமும் தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்துப் பெருங்கடல் நீர்ப்பரப்பின் புவிசார் அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் காலத்துக்காலம் சந்திக்கும் பல்வேறு அரசதந்திர மற்றும்
உபாயங்கள் சார்பான சவால்களை எதிர்கொள்ளவென எமக்கேயான அறிஞர் குழாம் ஒன்றினை இவவாண்டு நாம் கட்டியமைக்கவும் உள்ளோம்.
சிங்கள தேசம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து இனக்கபளீகரம் செய்யப் பகீரத முயற்சி நடாத்தும் இன்றைய சூழலில் ஈழத் தமிழர் தேசம் தனது தேச
அடையாளத்தை ஈழத் தாயகத்திலும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும் கொண்டாட வேண்டும். எமது அரும்பெரும் மொழியினை நாம் வீட்டிலும், வெளியிலும், நாம்
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா
கூடுமிடமெங்கும் பேசவேண்டும். அதையும் பிறமொழிக் கலப்பின்றி எமக்கே இயல்பான அழகுடன் பேசித்திரிய வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகள்
புதுமெருகுடன் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் பாரம்பரிய உணவும் மரபும் தமிழ் வாழ்க்கைமுறையுடன் வலுவாக இணைக்கப்படுவதுடன் உலக மக்கள் மத்தியிலும்
பரவலாக்கப்பட வேண்டும். தமிழர் கூடும் விழாக்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிரம்பி எமது தேச அடையாளம் அங்கு மிளிர வேண்டும்.
தமிழர் தேசத்;தின் அரசியற்குரலாக தேர்தல் அரசியலைக் கடந்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக வேண்டும். சுயநல அரசியல்வாதிகளுக்கு மாற்றாக
மக்களை உண்மையாக நேசிக்கும், மக்களுடன் இணைந்து செயற்படும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் புதிய அரசியற் தலைமை தமிழ் மக்களுக்காக
உருவாக வேண்டும். தேசப்பற்று, நிமிர்ந்த நன்நடை, புதுமை மிக்க சிந்தனை, அறிவுசார் நடத்தை, தளராத உறுதி, சொல்லில் தெளிவு, செயற்பாட்டில் துணிவு, சோர்ந்து
போகாத தொலைநோக்கு, சமூகநீதியில் பற்றுறுதி, இயற்கை மீது காதல், சூழல் பாதுகாப்பில் அதியுயர் அக்கறை, உயரிய மனித நேயம் இத்தனையும் கொண்ட
புதியதோர் அரசியற்சமூகம் உருவாக வேண்டும். அத்தகைய அரசியற்சமூகத்தைக் கட்டியெழுப்பும்போது அதற்கிசைவான புதியதொரு அரசியற் பண்பாடும் தானாக
உருவாகி வெளிப்படும். அழுக்கடைந்து கொண்டே போகும் இன்றைய அரசியற் பண்பாடு எம்மைவிட்டு நீங்கும். அப்போது மட்டுமே ஈழத் தமிழர் தேசம் சிங்கள
ஆக்கிரமிப்பில் இருந்து தன்னைப் பாதுகாப்பதுடன், ஒரு மாண்புமிகு சமூகமாகவும் தன்னை ஆக்கிக் கொள்ள முடியும்.
இதற்கான விதைகளை நாட்டும் பெரும்பணி 2020 தொடக்கம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இப் புதிய ஆண்டினை வரவேற்றுக் கொள்வோமாக.
தமிழர் தலைவிதி தமிழர் கையில், தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். .
மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வு
பைஷல் இஸ்மாயில் –
அட்டாளைச்சேனை மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வும், 2020 ஆண்டுக்கான
உத்தியோகத்தர்களின் கடமைச் சபத பிரகடனும் இன்று (01) வங்கி முகாமையாளர் எம்.ஐ.எகியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளாஹ் மற்றும்
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எஸ்.எம்.முனாஸ்தீன்,
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத் தலைவர் கலாநிதி ஏ.எல்.அனீஸ், தொழிலதிபர் எஸ்.ஐ.அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, அதிதிகள் மற்றும் முகாமையாளர் எம்.ஐ.எகியா, பிரதி முகாமையாளர் எஸ்.எம்.ஏ.ஜவாத்,
வியாபார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் ஆகியோரினால் வாடிக்கையாளருக்கு புதுவருட பரில்களும், வங்கி
உத்தியோகத்தர்களுக்கான புது வருட கடமைச் சபதமும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவ சிப்பாய் அடித்து கொலை
இலங்கையில் -இராணுவ சிப்பாய் அடித்து கொலை
இலங்கை -வில்லிகொட பகுதியில் குடும்ப தகராறு ஒன்றை தாதுக்க சென்ற 21 வயது இராணுவ சிப்பாய் ஒருவர் கோரமாக தாக்க பட்டு வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார் .
இறந்தவராது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
கொலை குற்ற செயலை புரிந்த நபர் கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்
குவைத்தில் இருந்து 36 பேர் இலங்கை திரும்பினார்
இலங்கைக்கு -குவைத்தில் இருந்து 36 பேர் இலங்கை திரும்பினார்
இலங்கையில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி குவைத் நாட்டுக்கு சென்ற இலங்கை பணிப்பெண்கள் சுமார் 36 பேர் தமது எஜமானர்களினால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .
அவ்வாறு 36 பேர் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்
பொலிசார் அதிரடி வேட்டை பலநூறு பேர் கைது
இலங்கையில் – பொலிசார் அதிரடி வேட்டை பலநூறு பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கை தழுவிய ரீதியில் காவல்துறையினர் மேற்கொண்ட
திடீர் வீதி சோதனையில் மது போதையில் வாகனத்தை செலுத்தி சென்ற பலநூறு சாரதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களில் சில டசின் பேரது வாகன சாரதி பாத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன .
போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன .
பண்டிகை காலத்தை முன்னிட்டு இராணுவம் ,போலீசார் சிறப்பு பாதுகாப்பில் ஈடு படுத்த பட்டனர் இதன் போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன








