Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சிக்கியது ஆறு கோடி தங்கம்
இலங்கை விமான நிலையத்தில் ஐந்து கோடியே 80, கோடி தங்கம் பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி இன்று காலை கைது
செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான
நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.
சீமானை போட்டு தாக்கும் ஜெகத் கஸ்பர்video
சீமானை போட்டு தாக்கும் ஜெகத் கஸ்பர்
சீமான் மீது கொண்ட ஏதோ ஓர் வன்மத்தை எப்போதும் போல் மறைமுகமாக வைத்து பேசும் இவர் எந்த வகையிலும் ஜெகத் கஸ்பர் ஃபாதர் என்ற பதத்துக்கு புறம்பாகப்படுகிறார்.
கனிமொழி பாவாடை துவைப்பதே கடவுள் சேவையா ஃபாதர்?வெட்கமில்லையா?த்தூ. ( இது வாசகர் ஒருவர் கருத்து பதிவு )
பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடம் தடை – கோட்டா அதிரடி உத்தரவு
இலங்கையில் -பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடம் தடை – கோட்டா அதிரடி உத்தரவு
இலங்கையில் பல்கலை கழகங்களில் பகிடி வதையில் ஈடுபட்டால் அவ்வாறான குற்றத்தை புரிபவர்கள் சுமார்
எட்டு வருடங்களுக்கு கல்வி பயில தடை என ஆளும் ஏழாவது ஜனாதிபதி கோத்தபாயா அதிரடியாக அறிவித்துளளார் .
ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு பட்ட விடயங்களில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் இவர் இவ்வாறு அறிவித்திருப்பது அனைத்து மக்களினாலும் இது வரவேற்க படுகிறது
சிங்களவர்கள் முட்டாள் என்ற காலம் முடிந்து விட்டது – மகிந்தா திமிர் பேச்சு
இலங்கையில் -சிங்களவர்கள் முட்டாள் என்ற காலம் முடிந்து விட்டது – மகிந்தா திமிர் பேச்சு
இலங்கையில் சிங்களவர்களை முட்டாள் என கூறிய காலம் முடிந்து விட்டது என இலங்கையில் ஆளும் பிரதமரும்
தமிழினப் படு கொலையின் நாயகனுமான மகிந்த ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .
மகிந்த குடும்பம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் மீளவும் நாட்டில் கடத்தல் ,காணாமல் போதல் , ,கைதுகள் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளன ,
பவுத்தம் அல்லாத பிற மத தளங்கள் தாக்க பட்டு வருகின்றது .
இவ்வாறான சூழலில் பவுத்த மதம் பாதுகாப்பன ஒன்றாக இருந்தால் மட்டுமே பிற மாதங்கள் நல்லிணக்கத்துடன் வாழமுடியும் என மகிந்த திமிருடன் பேசியுள்ளார் .
பவுத்தமே இலங்கையின் முதல் மதம் எனவும் ,சிங்களவர்களே நாட்டில் முதன்மை குடிகள் எனவும் இவர் கூறி வருகிறார் .
இது இலங்கை வரலாற்றில் மீளவும் ஒரு கறை படிந்த வரலாறாக எழுத படும் நிலைமை உருவாக்க படுகிறது என்பதே உண்மையாகும் .
இதே சிங்களவர்கள் முட்டாள் சிங்களவர்கள் நாளை மகிந்த குடும்பத்தை அடியோடு வெறுக்கின்ற காலத்தை இவர்கள்ஸ் செயல் பாடுகள் உருவாக்காகி வைக்க போகின்றன .
தமிழர் பிரச்சனைகளை தீர்க்கவில்லை – ஒப்புக்கொண்ட சுமந்திரன்
இலங்கையில் -தமிழர் பிரச்சனைகளை நாம் தீர்க்கவில்லை – ஒப்புக்கொண்ட சுமந்திரன்
இலங்கையில் நல்லிணக்க ஆட்சி என்ற மைத்திரி ஆட்சியில் அரச சுகங்களை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்த்து
வந்த சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்கள் தமது இருப்புக்களை தக்க வைத்து கொண்டனரே தவிர தமிழர் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர்கள் ஏதும் பேசவில்லை .
இவ்வாறான நிலையில் பாராளும்னற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சுமந்திரன் தமிழர் நிலை தொடர்பாக பேசி வருகிறார் .
இவரது இந்த பேச்சு கோட்டபாயாவை வெல்ல வைக்கும் நோக்குடன் பணத்தை வாங்கி செயல் படுவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
தமிழர்கள் பிரச்சனைகளை தீர்க்க நாம் போராடவிலை என்பதை ஒத்துக்கொண்டுள்ள சுமந்திரன் அரசியலை
விட்டு ஒதுங்கி வீடு செல்ல வேண்டியது தானே என மக்கள் வேண்டி கொள்கின்றனர்
காவல்துறையில் அதிரடி மாற்றம் – 8 பெண்கள் பெரும் பதவிகள்
இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றம் – 8 பெண்கள் பெரும் பதவிகள்
இலங்கை காவல்துறை ஆம்பிக்க பட்டு இன்றுவரை பெண்களுக்கு பெரும் உயர்பதவிகள் வழங்கப்படாது இருந்து வந்தது ,தற்போது அது மாற்றி அமைக்க பட்டுள்ளது
எட்டு பெண்க்ளுக்கு காவல்துறை அத்தியாட்சகர் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது
மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிகள் பெண்களுக்கு வழங்க படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிறைச்சாலை கூரையில் ஏறி கைதி போராட்டம்
இலங்கையில் -சிறைச்சாலை கூரையில் ஏறி கைதி போராட்டம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம்
தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் குறித்த சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி
அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் புதிய வரைபடம் வௌியீடு
இலங்கையின் புதிய வரைபடம் வௌியீடு
இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
புதிய வீதி வரைபடத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பான தகவல்கள் அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் புதிய வீதி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரஞ்சன் ராமநாயாக்க நீதிமன்றில் ஆயர் படுத்த நடவடிக்கை
இலங்கையில் -ரஞ்சன் ராமநாயாக்க நீதிமன்றில் ஆயர் படுத்த நடவடிக்கை
இலங்கையில் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்த நிலையில் அரசியல் பழிவாங்கும் நிகழ்வுகளை வண்ணம் உள்ளார்
.இவரது இந்த தொடர் செயலினால் ப முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் கைதாகிய வண்ணம் உள்ளனர் .
மிரட்டி சர்வதிகார ஆட்சியில் மிதக்கும் கோத்தபாயவின் இந்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .
இதே மக்கள் விரோத செயலுடன் கோட்டபாய செல்வார் எனின் இவர் இந்த ஆட்சியுடன் வீடு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது
வெடி பொருளுடன் நபர் கைது
இலங்கையில் -வெடி பொருளுடன் நபர் கைது
பெல்காவல பகுதியில் அனுமதியின்றி வெடி பொருட்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் .
கைதானவர் போலீஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்
இது தீவிரவாத செயலுடன் தொடர்பா என்பது தொடர்பில் தெரியவரவிலை
தமிழ் மொழியின் சிறப்பை கூறும் இந்த ஆண்டின் புத்தம் புதிய பாடல்
இலங்கையில் -தமிழ் மொழியின் சிறப்பை கூறும் இந்த ஆண்டின் புத்தம் புதிய பாடல்
எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை கூறும் இந்த ஆண்டின் புத்தம் புதிய பாடல் இதோ “எம்மொழி வாழினும் எம் தமிழ் வளரும் ”
ஊவா வெல்லஸ்ஸ பல்கலை கழக மாணவர்களால் நடாத்தப்படும் “மலைத்தென்றல்” கலாசார நிகழ்விற்கான பாடலாக இப்பாடல் உருவாக்கம் பெற்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது
பாடல் இசை -கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள் -கலாபூஷணம் கீழ்கரவைகி.குலசேகரன்
குரல் வடிவம் -கந்தப்பு ஜெயரூபன்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலை கழக மாணவர்களின் முயற்சியில் வீடியோ வடிவம் கொடுக்கப்பட்டு பாடல் வெளிவருகின்றது எல்லோரும் ஷேர் செய்து ஆதரவு வழங்குங்கள் வீடியோ
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு
வீரர்களை உறுவாக்குகின்றேன்
0767152987
மலையத்தில் வாழும் மலையக மக்கள் ஏனைய சமூகத்தினரை விட சலைத்தவர்கள் அல்லர்.
வருமை என்பது அவர்களை முன்னுக்கு வருவதற்கு தடையாக இருந்து வந்த போதும் அதனையும் தாண்டி அனைத்து துறைகளிலும் சாதித்தவர்கள் பலர்
இருக்கின்றனர். சிலர் சாதித்துவிட்டு அவர்களுக்கான உரிய அங்கிகாரமும் கனவை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல போதிய உதவிகளும் வழிகாட்டல்களும் இல்லாமம்
முடிங்கி கிடக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவரான மலையகத்தில் முதல் முதலில் பதக்கம் வென்ற மெய்யப்பன் மனோகரன் அவர்களை அவரது வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து.
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
இதன் போது மனோகரன் அவர்களிடம் உங்களது சாதனை தொடர்பில் கருத்து கூறுமாறு கேட்ட போது.
மெய்யப்பன் மனோகராகிய நான் நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்லியனாட் தோட்டத்தில் 1970.05.10 இல் பிறந்தேன்.
எனது தந்தை மெய்யப்பன் எனது தாய் அழகாய் ஆவார். பிறந்து நான்கு வயதில் எனது கால் போலியோ போன்று ஏற்;பட்டு இடது கால் ஊனமாகியிருந்தது.
ஒரு வருடமாத இவ்வாறு ஏற்ப்பட்டு இருந்தது. அதன் பின் சென்வியனாட்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தேன்.
அப் பாடசாலையில் நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டியில் அஞ்சல் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதோடு ளுரn இல்லத் தலைவராகவும்
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
செயற்ப்பட்டேன். அதன் பின்னர் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வி கற்கச் சென்றேன். அங்கும் இல்ல விளையாட்டுப் போட்டிகளில கலந்து மரதன் மற்றும்
3000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் திறமையை காட்டி வந்தேன். தொடர்ந்தும் பாடசாலையை விட்டு விலகி “டுரஉமல யுசஅள” விளையாட்டு கழகத்தில் இணைந்து
நான் 1989 இல் நுவரெலியா வலப்பனை மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கு பங்கு பற்றினேன். அவ்வருடமே தேசிய மட்டப் போட்டிக்கு போய் 100 போடடியாளர்களுடன் ஓடி 34ம் இடத்தில் வந்து முடிந்தேன்.
அவ்வருடமே குடும்ப சூழ்நிலை காரணமாக தோட்டத்தில் பெயர் பதிந்து தோட்டத்தொழிலாளியாக சகல வேலைகளையும் செய்தேன்.
அப்போதும் 1500 மீட்டர் 5000 மீட்டர் 10000 மீட்டர் ஆகியவற்றில் கலந்து கொண்டு வந்தேன். எனது அப்பா மணல் அகழ்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்தார் அப்போது அவருக்கு உதவும்
முகமாக ஓடி ஓடி உதவி செய்வேன் அதுவே என்னை ஒரு ஒட்ட வீரராக மாற்றியது.
1993ம் ஆண்டு இராகலை இளைஞர் கழகத்தை வளர்க்கும் நோக்கத்தில் அவ்வாண்டு நடைப்பெற்ற தேசிய மரதன் ஓட்டப் போட்டியில் ஓடி 2ம் இடம் பெற்றதோடு 10000 மீட்டர்
போட்டியில் முதலிடம் பெற்றேன். தொடர்ந்து மத்திய மாகாண ரீதியாக நடைப்பெற்ற போட்டிகளில் பங்கு பற்றி 3 முறை மரதன் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றதோடு
5000 மீட்டர் 10000 மீட்டர் போட்டிகளிலும் கலந்து கொண்டேன். எனது சுயமான முயற்சி ஆர்வம் என்பவற்றின் மூலமே இதுவரை காலமும் பங்குபற்றி வெற்றி பெற்று வந்தேன்.
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
எந்த விதமான ஊக்குவிப்போ பயிற்சிகளோ கிடைக்கவில்லை.
தொடர்நது 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் மரதன் ஒட்;டப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றுக் கொண்டேன்.
அம்முறை எட்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (ளுயக புயஅநள) கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தான் எனக்கு திரு.ர்.பு.
ஆரியரட்ண என்பவர் பயிற்றுவிப்பாளராக கிடைத்தார். அவரின் பயிற்சி மூலமே நேபாளத்தில் கட்மண்டு நகரில் நடைப்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம்
பெற்றேன். ஓடுவதற்கு ஒரு பாதணி இன்றி நான் ஓடிக்கொண்டிருந்த வேளையில் அப்போதிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ திரு.எஸ்.பி
திசாநாயக்க அவர்கள் பாதணி ஒன்றை வாங்கித் தந்தார். அதனை அணிந்து நேபாள நாட்டில் ஓடியது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
அதன் பின்னர் இந்தியாவில் பூனே சென்னை பெங்களுர் ஆகிய இடங்களில் நடைப்n;பற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.
2001 இல் ஹொங்ஹொங்கில் நடைப்பெற்ற போட்டியில் 7000 போட்டியாளர்களில் 27 ஆம் இடத்தினை பெற்று பதக்கம் பெற்று வந்தேன்.
தொடர்ந்து மூன்று வருடங்களாக எவ்விதபோட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. சகோதரனின் மறைவு அதே தொடர்ந்து தாயின் மறைவு காரணமாகவும் பங்குபற்றவில்;லை.
அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு திருமணமாகி 13 ஆம் நாள் தந்தையின் மறைவு குடும்ப சுமை காரணமாக தடைப்பட்டது.
5000 மீட்டர் மீண்டும் 2012 இல் வயது வந்தவர்களுக்கான முதலிடம் பெற்று வந்தேன். அவ்வருடம் சீன தாய்பே நகரில் நடைப்பெற்ற ஓட்டப் போட்டியில் இரண்டாம் பெற்றேன்.
2014ம் ஆண்டில் ஜப்பானில் நடைப்பெற்ற போட்டியில் 4ம் இடத்தையும் 2016 இல் சிங்கப்பூரில் 5000 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வந்தேன்.
தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொள்ள பொருளாதார தடை ஏற்பட்டது.
இலங்கையில் நடைப்பெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்த போதும் எனது பொருளாதார நிலை காரணமாக செல்ல முடியவில்லை.
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
தற்போது தேயிலைத் தொழிற்சாலையொன்றில் உத்தியோகத்தராக இருக்கும் நான் பலமுறை மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளராக ஆவதற்கு விண்ணப்பங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் இல்லை.
ஏதாவது பாடசாலைகளில் பயிற்சியாளராக நியமனம் பெற்றால் என்னால் முடியுமான அளவில் கடினமான உழைப்பை வழங்க முடியும்.
இந்த நுவரெலியா மாவட்டத்திலோ அல்லது பிற மாவட்டங்களிலோ உள்ள மாணவர்களுக்கு என்னால் பயிற்சியளிக்க முடியுமானால் அதனை பெரும் வரப்பிரசாதமாக ஏற்றுக் கொள்வேன்.
எனக்கு என் சமூகத்தில் பல்வேறு கஷ்டத்தின் மத்தியிலும் போட்டிகளுக்கு செல்லும் பிள்ளைகளுக்கு நன்கு பயிற்சியளித்து மேலும் மேலும் வெற்றிப் பெற எனது
இரத்தத்தை சிந்துவேன் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றேன்.
மேலும் குறிப்பிட்ட சொல்லக்கூடிய ஒரு விடயம் 1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் போது எனக்கு வயிற்றுப் பகுதியில் கல்லடைப்பு ஏற்ப்பட்டு வைத்தியர் ஓட
வேண்டாம் என்று கூறிய பின்னரும் அவரது தடையையும் மீறி ஓடியே வெள்ளிப்பதகத்தை எமது நாட்டுக்காக மலையக மண்ணுக்காக பெற்றுக் கொடுத்தேன் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன். என்று கூறினார்
2000 புதிய பேரூந்து மக்களும் பாவனைக்கு
இலங்கையில் -2000 புதிய பேரூந்து மக்களும் பாவனைக்கு
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களினால் சுமார் 2000 புதிய பேரூந்துகள் கொள்வனவு செய்ய படுகின்றன
ஜப்பான் ,சீனா ,மலேசியாவில் இருந்த்து இந்த பேரூந்துகள் கொள்வனவு செய்ய படுகின்றன .
மக்களின் இலகு பயணத்திற்கு இந்த பேரூந்துகள் கொள்வனவு செய்ய படுவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்
யூரியா பையில் கட்டப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு
இலங்கை -யூரியா பையில் கட்டப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு
புங்குடுதீவு 11 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம்
ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் .
பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழந்தை பிறந்து 2 நாள்கள் இருக்கும். மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது.
எனினும் யூரியா பையுடன் வேறு வேறாக துண்டான நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (04) காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு
கிணற்றை எட்டிப் பார்த்துள்ள போது சடலத்தை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .
ரஜிதா தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி
இலங்கையில் -ரஜிதா தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி
இலங்கையின் – முன்னாள் சுகாதர் அமைச்சர் ராஜித தொடர்ந்தும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
வெள்ளை வான் கடத்தல் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய குற்ற சாட்டில் இவரது இரு வான் சாரதிகள் கைது செய்ய பட்டனர் .
அதன் பின்னர் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன .பிணையில் விடுவிக்க பட்ட பொழுதும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
வவுனியால் குளம் உடைப்பு – மக்கள் பாதிப்பு
இலங்கை -வவுனியால் குளம் உடைப்பு – மக்கள் பாதிப்பு
வவுனியா ஈச்சங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளிக்குளம் விவசாயக்குளம் நேற்றிரவு (03) 10
மணியளவில் உடைப்பெடுத்ததன் காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால்
விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட கள்ளிக்குளத்தில் இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக குளம்
நீரினால் நிரம்பிக் காணப்பட்டது. இந் நிலையில் குளக்கட்டில் சிறியளவு துவாரத்தின் ஊடாக நீர் கசிந்து படிப்படியாக அரிக்கப்பட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது.
இதனால் 120 ஏக்கர் பரப்புடைய நெற்பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு சுமார்
35,000 தொடக்கம் 40,000 ரூபாய் வரை செலவு செய்து பயனடையவிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு
நெற்செய்கை பாதிப்படைந்ததால் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபன் பலி
புத்தர் சிலை மாயம்
மோடியின் தமிழ்நாடு பயணத்துக்காகக் மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவுப் பகுதியில் பெரிய புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்தப் புத்தர் சிலையுடன்
இருபக்கமும் யானை சிலைகள் வைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் புத்தர் சிலை முன்பு புகைப்படங்களை எடுத்துவந்தனர்.
புத்தர் சிலை நிரந்தரமாக அங்கேயே வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.
புத்தர் சிலைக்கு 8 லட்சமும், யானை சிலைக்கு தலா 5 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அந்தச் சிலைகளுக்கு உண்டான வாடகையைக் கூட பேரூராட்சி நிர்வாகம் சிற்பிகளுக்கு இதுவரை கொடுக்கவில்லை.
இதனால் புத்தர் சிலையின் உரிமையாளர் சிலையை நேற்று எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், யானை சிலைகளையும் அதன் உரிமையாளர் எடுத்துச்செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது…
ரயிலுடன் மோதி சிதறிய கார்
இலங்கையில் -ரயிலுடன் மோதி சிதறிய கார்
இலங்கை -றாகாமை பகுதியில் ரயிலுடன் கார் ஒன்று மோதி சிதறியதால் அதன் சாரதி சம்பவ இடத்தில உடல் சிதறி பலியானார்
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சிக்கிய இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
பள்ளத்தில் பாய்ந்த வான் – சாரதி தப்பி ஓட்டம்
பள்ளத்தில் பாய்ந்த வான் – சாரதி தப்பி ஓட்டம்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் நேற்று
(03) மாலை 5 மணி அளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த வேனினை செலுத்திய சாரதி தலைமறைவாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேன் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வேனினை தாழ்பால் இட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுமார் 1 மணித்தியாலம் வரை எந்தவித தகவலும் வழங்காமையினால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வேன் சாரதி போதையில் வாகனம் செலுத்தினாரா? அல்லது சட்ட விரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவா?
அல்லது வேறு ஏதும் காரணங்களினால் தலைமறைவாகினாரா? போன்று பல்வேறு சந்தேகங்களை பொலிஸாருக்கு ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த வேன் விபத்து இடம்பெற்றது, தொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வேனில் காணப்படும் வாகன அனுமதி
பத்திரத்தனையும், பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்








