Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் என கோரி லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்டட நால்வர் கைது

பொலிஸ் அதிகாரிகள் என கோரி லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்டட நால்வர் கைது

இலங்கையில் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் என கோரி பெண் ஒருவரிடம் லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்ட நால்வர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,இந்த குழு இதுபோல பலரை மிரட்டி கப்பம் பெற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

பொலிஸ் அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு

யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தரித்து நின்ற வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்

குறித்த குழுவை சேர்ந்த நபர்களை தாம் கைது செய்து வருவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேற்படி தாக்குதலை

நடத்தியவர்களை கைது செய்யாமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

மக்களின் செல்வாக்குடன் இந்த குழு செயல் பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

யாழில் வாகனத்தை அடித்து
Posted in இலங்கை செய்திகள்

சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்

சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்

நுவரெலியா மாவட்டம் பீட்ரூ தோட்டம் லவர்சிலிப் பிரிவு ஸ்ரீ முத்துமாரியமன் தோட்ட ஆலய பரிபாலன சபையின்

வேண்டுகோலுக்கு அமைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்

முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி

ஓதுக்கீட்டின் மூலம் சமையல் பாத்திரங்கள் கையளிக்கப்பட்டது

சமையல் பாத்திரம் வழங்கி
சமையல் பாத்திரம் வழங்கி
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் – 90 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் – 90 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 90 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

இந்தநோயின் பரவல் காரணமாக கடைகளில் பொருட்கள் தட்டு பாடு நிலவுவதுடன் ,லாக் டவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என

பீதியில் மக்கள் அதிகம் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர் .

இதனாலேயே இந்த தட்டு பாடு நிலவுகிறது ,மேலும் இறக்குமதியும் தடை பட்டுள்ளது


,இத்தாலி ,ஈரான் போன்று பாடசாலைகள் மூட பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்படலாம் என்ற பெரும் பீதி மக்கள் மத்தியில் நிலவுகிறது

இவ்வாறு ஏற்பட்டால் பலத்த பொருளாதாரா சரிவு ஏற்படுவதுடன் ,மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் 85 கிலோ மீனை பறித்து சென்ற கடல் படை – நடந்தது இது தான்

மன்னாரில் 85 கிலோ மீனை பறித்து சென்ற கடல் படை – நடந்ததுஇது தான்

இலங்கை மன்னார் கடற்பரப்பில் வெடிகுண்டுகள் வைத்து மீன் பிடித்து அதனை குளிர்சாதன பெட்டியில் படுக்கை வைத்திருந்த

நிலையில் ,இந்த மீன் பிடி வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது செய்ய பட்டதுடன் அவர்கள் பிடித்து சென்ற மீனும் பறி முதல் செய்ய பட்டன

கடற்படையினர் தீவிர ரோந்து கண் காணிப்பில் தற்பொழுது ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

மன்னாரில் 85 கிலோ
Posted in இலங்கை செய்திகள்

600 மில்லியன் ரூபா heroin படகு மடக்கி பிடித்த சிங்கள கடற்படை

600 மில்லியன் ரூபா heroin படகு மடக்கி பிடித்த சிங்கள கடற்படை

இலங்கையில் இடம்பெற்று வந்த மிகப்பெரும் போதைவஸ்து கடத்தல் ஒன்று கடற்படையினரால் முறியடிக்க பட்டுள்ளது .


கடல்படையினருக்கு படகு மூலம் பெரும் கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து
திடீர் தேடுதல் மாறும் சுற்று காவல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

அப்போது வேகமாக வந்த கொண்டிருந்த படகை துரத்தி பிடித்தனர் .
அதில் சுமார் 600 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான heroin போதைவஸ்து இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

கைதானவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

600 மில்லியன் ரூபா
Posted in இலங்கை செய்திகள்

கடலுக்குள் வீசி எறியப்பட்ட 14 கிலோ தங்கம்

கடலுக்குள் வீசி எறியப்பட்ட 14 கிலோ தங்கம்

கடத்தி வரும் போது அதிகாரிகள் குறுக்கிட்டதால் கடலுக்குள் தூக்கியெறியப்பட்ட சுமார் 14 கிலோ தங்கத்தை இந்திய மத்திய

வருவாய் புலனாய்வுத் துறை, கடலோர காவல்படை உதவியுடன் மீட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குத் தங்கத்தை சிலர் கடத்திவருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்

துறைக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிப் படகின் மூலம் ராமேஸ்வரம் வருவதாகவும் தெரியவந்தது.

அந்த படகு தமிழக கடற்பகுதியை மார்ச் 3ஆம் திகதியன்று நெருங்கிய நிலையில், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள்

அவர்கள் வந்த படகை சுற்றி வளைத்தனர். படகிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

ஆனால், அவர்களிடம் தங்கம் ஏதும் இல்லாத நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில்

அவர்கள் தங்கத்தை கடத்தி வந்ததையும் அதிகாரிகளைப் பார்த்ததும் தங்கத்தை கடலுக்குள் போட்டு விட்டதையும்

தெரிவித்தனர். ஆனால், அப்போது மாலை வேளை ஆகிவிட்டதால் விசாரணை தொடரவில்லை.

இதற்குப் பிறகு நேற்று (04) காலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் உதவியுடன் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில்

கடலடியில் போடப்பட்ட தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட, பார் வடிவிலான, 14.568 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 6,30,21,168 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடலுக்குள் வீசி எறியப்பட்ட
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபன் -நடந்தது என்ன …?

வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபன் -நடந்தது என்ன …?

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் நீர் நிரப்பி

வைத்திருக்கும் அறை ஒன்றில் இருந்து தூங்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (04) மாலை 03 மணி அளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் எவரும் இல்லாத வேலை குறித்த இளைஞன் தனது வீட்டின் சமையலறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரப்பி

வைக்கபட்டிருக்கும் அறையில் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியதாகவும் குறித்த இளைஞனின் சகோதரன் பாடசாலை

விட்டு வீடு வந்து பார்த்த போது தூக்கில் தொங்கியதை கண்டு குச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சசிகுமார் பிரதாப்

என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் ஆறு மாத காலம் தொழிபுரிந்து தற்பொழுது வீட்டில் இருந்ததாகவும்

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வீட்டில் தூக்கில் தொங்கிய
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா பொலிசாரின் தொடர் வேட்டை: ஆவா குழு என சந்தேகத்தில் மேலும் மூவர் கைது!

வவுனியா பொலிசாரின் தொடர் வேட்டை: ஆவா குழு என சந்தேகத்தில் மேலும் மூவர் கைது!

வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ள தீவிர விசாரணைகளின் அடிப்படையில் பண்டாரிக்குளம் பகுதியில் வாள்களுடன் நடமாடி வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் சந்தேகத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் வாளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை வவுனியா குற்றத் தடுப்பு பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஓப்படைத்திருந்தனர். அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கடந்த 29 ஆம் திகதி இரவு 8 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டு வீட்டு கேற்றும் வாளால் குத்தி சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் அடைந்த பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப்பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு தலைமையில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து முன்னெடுத்துள்ள விசாரணைகளின் காரணமாக வாரிக்குட்டியூர், திருநாவற்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அத்துடன் மேலும் 9 பேரை பொலிசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த இளைஞர்களில் மூவர் நேற்று மாலை வவுனியா நகரம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் வைது;து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இதுவரை 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு வாள்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி போராடி வந்த மற்றுமொரு தாய் மரணம்!

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி போராடி வந்த மற்றுமொரு தாய் மரணம்!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு பிள்ளையான பாலசுப்ரமணியம் அருட்செல்வனை (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 21) கடந்த பத்து வருடங்களாக தேடிக் கொண்டிருந்த தாயார் பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி (72 வயது) நேற்று அதிகாலை 2.10 மணியளவில் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், காணாமல் ஆக்கப்பட்டாேரை தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஆயிரத்து நூற்று பதினொரு நாட்களை (1111) எட்டியுள்ள நிலையில், அப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் மரணமடைந’துள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி தெரிவித்து வந்த நிலையில் தனது மகனை காணாது அதற்கு முடிவு என்ன என தெரியாது மரணமடைந்துள்ளார்.

தாயாரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் இன்று 5.3.2020 வியாழக்கிழமை 12.00 மணிக்கு இடம்பெறும் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் உட்பட மூன்று சுயேட்சை குழு வன்னியில் போட்டியிட கட்டுப்பணம்!

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் உட்பட மூன்று சுயேட்சை குழு வன்னியில் போட்டியிட கட்டுப்பணம்!

எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் உட்பட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று முன்தினம் ஒருவரும் நேற்று இருவரும் கட்டுப்பணத்தை வவுனியா மாவட்டச்செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோஉட பத்திரனகே நீல்சாந்த ஆகிய மூவருமே சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் கொரனோ 85 பேர் பாதிப்பு- பீதியில் மக்கள்

பிரிட்டனில் கொரனோ 85 பேர் பாதிப்பு- பீதியில் மக்கள்

பிரிட்டனில் இதுவரை சுமார் 85 பேர் கொரனோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இன்று காலை மேலும் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .மேலும் பரவி வரவும் நோய் தாக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

தொடர்ந்து பாடசாலைகளை மூடும் நிலைக்கு பிரிட்டன் அதிரடியாக செல்ல கூடும் என்ற கவனம் திசை திரும்பி வருகிறது

இத்தாலியில் பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் பல நாடுகளில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது

பிரிட்டனில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ரெலோ வேட்பாளரை வெல்ல வைக்க சுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய ரெலோ: சுமந்திரனை போட்டு தாக்கும் ரெலோ முக்கிய உறுப்பினர்

யாழில் ரெலோ வேட்பாளரை வெல்ல வைக்க சுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய ரெலோ: சுமந்திரனை போட்டு தாக்கும் ரெலோ முக்கிய உறுப்பினர்

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ள ரெலோவின் வேட்பாளர் சுரேன் அவர்களை வெற்றி பெறச் செய்வதாக ரெலோ தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனடிப்படையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் முக்கிய உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் ஆரம்பித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசிய கூட்டமைப்பை புறம்தள்ளி விடக்கூடாது. யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் சகோதர படுகொலைகளை செய்துதான் தனி இயக்கமாக உருவாகினார்கள் என அவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று சுமந்திரன் இருக்கின்ற கட்சியும் சகோதர கட்சிகளை புறம்தள்ளி ஐந்து கட்சிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை மூன்று கட்சிகள்தான் இருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஒன்று மட்டும்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இருக்கின்ற கட்சியாகும். இந்நிலையில் இடையில் வந்த சிலரது கருத்துக்கள் காரணமாகவும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் காரணமாகவும் மற்றவர்கள் பிரிந்து சென்று விட்டார்கள்.

இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரித்து விடக்கூடாது. தான் சொல்வது சரி தான் நினைப்பது சரி. தான் இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவது சரி என சுமந்திரன் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் அவர் கதைப்பது சரியா பிழையா என உணர்ந்து கொள்ள வேண்டும். யாழ் மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் இருந்து அவர் தான் கதைத்தது சரியா, பிழையா என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தன், சுமந்திரன், மாவைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

சம்பந்தன், சுமந்திரன், மாவைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியது.

இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள அவர்களது போராட்ட தளத்தில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

உறவுகள் கருத்து தெரிவிக்கும் போது, தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் போர்க்குற்றம் ஒரு சர்வதேச குற்றம் எனவே இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்தினால் விசாரிக்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை வடகிழக்கு வரவேண்டும். வந்து எங்கள் துயரங்களை நேரில் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதன்போது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 5 பேர் கைது; 9 பேர் மீது வலைவீச்சு! ஆவா குழுவா என விசாரணை

வவுனியாவில் 5 பேர் கைது; 9 பேர் மீது வலைவீச்சு! ஆவா குழுவா என விசாரணை

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றின் மீத தாக்குதல் நடத்தி ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் சந்தேகத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் நேற்று (03.03) மாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் வாளுடன் நடந்து சென்ற 24, 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை வவுனியா குற்றம்தடுப்பு பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஓப்படைத்தனர். அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 9 பேரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உஎள்ள வீடு ஒன்றின் முன் கடந்த 29 ஆம் திகதி இரவு 8 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டிருந்ததுடன், வீட்டு கேற்றும் வாளால் குத்தி சேதமாக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கும் மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப்பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு தலைமையிலான குழுவினர் விரைந்து முன்னெடுத்துள்ள விசாரணைகளின் காரணமாக வேப்பங்குளம் பகுதியில் வாளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இருவரும், வாரிக்குட்டியூர் பகுதியில் 20 வயதுடைய ஒருவரும், திருநாவற்குளம் பகுதியில் 20 வயதுடைய ஒருவரும், குருமன்காடு பகுதியில் ஒருவருமென ஐந்து பேரை கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து மேலும் 9 பேரை பொலிசார் தேடிவருகின்றனர். இவர்களை தடுத்து வைத்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வைரசுக்கு மருந்து கண்டு பிடிப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

கொரனோ வைரசுக்கு மருந்து கண்டு பிடிப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

உலகம்தழுவிய நிலையில் மக்களை ஆட்டை படைத்தது மிரள வைத்து வரும் கொரனோ வைரசுக்கு அமெரிக்கா மருந்தினை கண்டு பிடித்துள்ளது

இதன் சோதனை தற்போது வெற்றி அளித்துள்ளது

குறித்த நோய் பரவுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அமெரிக்கா இந்த மருந்தை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டது

தற்போது அதனை தாம் கண்டு பிடித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
இது பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேலும் தாமும் மருந்தை கண்டு பிடித்து விட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிட தக்கது

கொரனோ வைரசுக்கு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்து கருகிய பெரும் தோட்டம்

தீயில் எரிந்து கருகிய பெரும் தோட்டம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு பகுதியில் உள்ள மானா

தோப்பிற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் மூன்று ஏக்கர் மானா தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு (03) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீ வைக்கபட்ட சம்பவத்தை அறிந்த பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்திய பிரிவு மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்,

சுமார் மூன்று மணித்தியாலங்கள் போராடி குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

தீயில் எரிந்து கருகிய
Posted in இலங்கை செய்திகள்

திருமலையில் மீன்பிடி படகுகளை எரித்தவிசமிகள்

திருமலையில் மீன்பிடி படகுகளை எரித்தவிசமிகள்

இலங்கை திருகோணமலை இறால்குழி பகுதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த சுமார் ஐந்து படகுகளை விசமிகள்


தீ வைத்து எரித்துள்ளனர் .இதனால் அந்த படகுகளை பயன் படுத்தி தொழில் ஈடுபட்டவர்கள் பெரும் துயரில் தோய்ந்துள்ளனர்

இந்த தீ வைப்பிற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

திருமலையில் மீன்பிடி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்த போர்க் கப்பல் – பயிற்சிகள் தீவிரம்

இலங்கை வந்தடைந்த போர்க் கப்பல் – பயிற்சிகள் தீவிரம்

வங்காளம் கடற்படையின் சதிநொடா (SHADHINOTA) கப்பல் நேற்று ( கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் முஸ்டபா சிலுர் ரஹிம் கான் (Captain Mostafa Zillur Rahim

Khan) உட்பட அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் விரசிங்கவை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.

இலங்கை வந்தடைந்த
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் நின்ற் வண்டி – எரிந்து அழிந்த பேரவலம்

வீதியில் நின்ற் வண்டி – எரிந்து அழிந்த பேரவலம்

இலங்கை பதுளை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்த
வண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது

இந்த தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீதியில் நின்ற் வண்டி