வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் உட்பட மூன்று சுயேட்சை குழு வன்னியில் போட்டியிட கட்டுப்பணம்!
எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் உட்பட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று முன்தினம் ஒருவரும் நேற்று இருவரும் கட்டுப்பணத்தை வவுனியா மாவட்டச்செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோஉட பத்திரனகே நீல்சாந்த ஆகிய மூவருமே சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







