Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மருத்துவமனை அலட்சியம் குழந்தை பெற்ற பெண் மரணம்
மருத்துவமனை அலட்சியம் குழந்தை பெற்ற பெண் மரணம்
திருகோணமலை – பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மூதூர் தள வைத்தியசாலையில் விசேட பெண் வைத்திய நிபுணர் குறித்த நாளில் வருகை தராமையால் மிகவும் ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையும், தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் சிறந்த சமையல்காரனாக தெரிவான தமிழர்
பிரான்சில் சிறந்த சமையல்காரனாக தெரிவான தமிழர்
பிரான்ஸ் பரிசில் இடம்பெற்ற உணவு தயாரிப்பாளார்கள் போட்டி நிகழ்வில் ,இலங்கையை சேர்ந்த தரசன் செல்வராஜா என்ற தமிழர் வெற்றியை பெற்று நான்காயிரம் யூரோ பணத்தை தட்டி சென்றுள்ளார் .
மேலும் இவர் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு, உணவுகளை வழங்குவதற்கும் ,அனுமதிக்க பட்டுள்ளார் .
தான் தயாரிக்கும் உணவுகளை பிரான்ஸ் ஜனாதிபதி சுவைப்பராயின் ,
அதைவிட மகிழ்ச்சி வேறு ஏதும் இல்லை என அவர் தெரிவித்து ,மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்துளளார் ,
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் ,அதனை ரசித்து ருசித்து செய்த,
கொள்கையால் இன்று ,பிரான்சில் சிற்றுண்டி சாலைகளின் உணவுகள் தயாரிப்பில்,முதலிடம் பிடித்து சாதனை படைத்து, தான் பிறந்த நாட்டுக்கு,
பெருமை சேர்த்துள்ளார் இந்த தமிழன் .
இலங்கையின் விமான சேவைக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு
இலங்கையின் விமான சேவைக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு
பண நெருக்கடியில் உள்ள இலங்கையின் தேசிய விமான நிறுவனம்
நேற்று 525 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்தது.
ஏறக்குறைய 6,000 ஊழியர்களைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்,
வரவு செலவுத் திட்டத்தை வடிகட்டியுள்ள மற்றும் இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான நிதி நெருக்கடியை அதிகப்படுத்திய பணக்கஷ்டமான அரச நிறுவனங்களில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .
மார்ச் 2022 வரையிலான ஆண்டில், கேரியர் 163.58 பில்லியன் ரூபாயை (525 மில்லியன் அமெரிக்க டாலர்) இழந்தது, அது ஒரு அறிக்கையில் கூறியது – முந்தைய 12 மாதங்களில், கோவிட் -19 தொற்றுநோயால் விமானப் பயணம் பாதிக்கப்பட்டபோது அதன் பற்றாக்குறையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இலங்கையின் விமான சேவைக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு
அந்நியச் செலாவணி தீர்ந்துவிட்டதால் அரசாங்கமே அதன் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய எட்டு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பரில் 175 மில்லியன் அமெரிக்க டாலர் பத்திரத்திற்கான வட்டித் தொகையை விமான நிறுவனம் செலுத்த தவறி விட்டது.
இலங்கை விமான சேவை உள்ளிட்டவை பல மில்லியன் இழப்பை சந்தித்து வருவதாக ஆளும் அரசுகள் கணக்கை காண்பித்து பணத்தை ஆட்டையை போட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்
மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்
மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவுக்கு மக்கள் மீது திடீர் காதல் வந்துள்ளது .
இலங்கையில் பல நிறுவனங்களில் பல நல்ல கொள்கைகள் இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்த முடியாமல் போகிறது .
அதற்கு காரணம் ஆட்சிகள் மாறும் பொழுது ,அமைச்சர்கள் மாறுகின்றார்கள் ,அதனால் அவர்களினால் அதனைஸ் செயல் படுத்த முடியமால் போகிறது .
எனேவ தான் மக்களுக்கு கிடைக்க பெற வேண்டிய பல விடயங்கள் தடை பட்டு போகின்றன ,மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமாகின் ,அமைச்சர்கள் ஆட்சிகள் மாறினாலும் ,நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது ,வாய்மை தவறாத இலங்கை இளம் அரசியல்வாதியின் பேச்சாக உள்ளது .
கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்
கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்
இலங்கை தலைநகர் கொழும்பு முக்கிய பகுதிகள் ,
எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விசேட இராணுவ குவிப்பு மக்கள் மத்தியில்,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பின் கதவு வழியாக மீளவும் ,
பிரதமராக முனைகிறார் என்பதால் ,
மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் என்பதால் ,
மீளவும் இராணுவம் குவிக்க படுவதாக
உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன .
அமைதியான மக்களை மீளவும் உசுப்பி விட வருகிறார் இலங்கை
புலிகேசி என நெட்டிசன்கள் பகிர்வுகளை பகிர்ந்து வருகின்றனர் .
தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்
தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச் சென்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த துஷ்மந்த அவிஷ்க என்ற சந்தேக நபர் கடந்த மே மாதம் 9ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் பூகொட நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சிறைச்சாலை ஊடாக அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கில் மே 9 ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் கைவிலங்குடன் பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கைவிலங்குகள் தளர்ந்து காணப்பட்டதையடுத்து, அவர் அவற்றைக் கழற்றி விட்டு ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறான கைதியே இபொழுது நீதிமன்றில் சரண் அடைந்துள்ளார்
இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று பரவி
வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் கடந்த தினம் முன் தினம் இருவர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது
என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
இந்த இறப்புக்களில் 9,503 ஆண்கள், 7,350 பெண்கள்.
பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை நடைமுறை
படுத்த ஆளும் அரசு அதன் கூட்டணி ,பங்காளி
கட்சி முனைவதால் ,மக்கள் எழுச்சியை கட்டு படுத்த மீளவும் ,இலங்கையில் கொரனோ
பரவி வருவதான நிலையை இலங்கை ஆள்;உம அரசு உருவாக்கி வருகிறது .
விரைவில் மக்கள் விரும்பாதவர் இலங்கை ஆட்சியில் ,
அமர போகிறார்கள் என்பதே இந்த கொரனோ அறிவிப்பு முன்னோட்டமாக
இதனை பார்க்கலாம் .
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கஜுகம பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
கஜுகம பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
கொழும்பு- கண்டி வீதியில் பட்டலிய கஜுகம பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று (13) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக அந்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்று பிரேக் போட்ட போது சறுக்கி மின்கம்பத்தில் மோதியதுடன், அப்போது எதிர்திசையில் வந்த இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
10 வருடங்களில் கல்வித்துறை நவீனமயப்படுத்தப்படும்
10 வருடங்களில் கல்வித்துறை நவீனமயப்படுத்தப்படும்
அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
திறன் மற்றும் தொழில் கண்காட்சியான ´skills Expo 2023´ நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
10 வருடங்களில் கல்வித்துறை நவீனமயப்படுத்தப்படும்
´வாழ்க்கைக்கு திறன் – திறனுக்கு தொழில்´ என்ற தொனிப்பொருளின் கீழ் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் மேற்படி கண்காட்சி இம் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரையில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம்.
Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியின் ஊடாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, துறைசார் திறன் விருத்தியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வலுவானதொரு பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிட வந்தவர்களோடும் கலந்துரையாடினார்.
தொழில்நுட்ப விவசாய வேலைத்திட்டத்திற்கான இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, தொழில்நுட்ப விவசாயக் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலான் ட்ரோன் பாவனையை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பவியலாளர்கள் மூவருக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இங்கு ஏற்பாட்டு பணிகளை முன்னெடுத்த மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த வருடத்தை திரும்பி பார்க்கின்ற போது இவ்வாறானதொரு கண்காட்சியை நடத்த எம்மால் முடியுமா என்பது கேள்விக்குரியாகியிருந்தது. குழப்பகரமான சூழலில் முடங்கிக் கிடந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
நாம் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் எமது செலவுகளையும் நாம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் நமது செலவினங்கள் தொடர்பில் பார்கின்ற போது, நாம் கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்பதை கண்டுகொண்டேன்.
நாம் ஸ்ரீ லங்கன் விமான சேவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு செலவிட்ட பணத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட்டிருந்தால் தெற்காசியாவின் மிகச்சிறந்த கல்வித்துறையை கொண்ட நாடுகளுடன் போட்டியிடும் நிலையை அடைந்திருப்போம். அவை ஒன்றையும் நாம் செய்யாமையால் இன்று கடன்களை செலுத்தி முடிக்க வேண்டிய நிலை நமக்கு உருவாகியுள்ளது. அடுத்த பத்து வருடங்களில் விரைவாக கடன்களை செலுத்தி முடிக்கவே நான் முயற்சிக்கிறேன்.
நாட்டிற்கு பயனற்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் காணப்பட்டன. அவ்வாறான திட்டங்களுக்கு வழங்கிய நிதிக்கு என்ன ஆனது என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது. அவ்வாறான செலவுகளையே நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக நாம் அத்தியாவசியமற்ற சேவைகளை முதலில் கட்டுப்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதற்காக அத்தியாவசிய சேவைகளுக்கான செலவீனங்கள் மட்டுப்படுத்தப்படாது. எதிர்காலத்தில் கல்வி,சுகாதாரம்,சமூக பாதுகாப்பு, வீடமைப்பு ஆகிய விடயங்களுக்காக மாத்திரம் சலுகை வழங்கல் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோன்று, நாட்டுக்கு நல்ல கல்வி முறையொன்று அவசியம். இந்தக் கல்வி முறையில் மிக முக்கியமான விடயம் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவை வழங்குவது. நாம் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். அனைவருக்கும் தேவையான அறிவை வழங்க முடிந்தால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
இலங்கை, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய நாடாகும். எனவே, அறிவை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பாடசாலைக் கல்வியை வழங்கிய பின், தொழில் தகைமையை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இன்று பல அமைப்புகள் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இன்றைய தேவைக்கேற்ப நமது கல்விமுறை நவீனமயப்படுத்தப்படவில்லை. அதனால் நாம் 10-15 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். நாம் இப்போது புதிதாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த அறிவை வழங்குவதற்கு தேவையான பயிற்சியை அரசாங்கத்தால் மாத்திரம் வழங்க முடியாது. அந்த பயிற்சி மற்றும் அறிவு பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு வெளியே உள்ளன. இந்த அறிவை வழங்கக் கூடிய தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இந்தப் பணியை முறையாகச் செயல்படுத்துவதற்காக, இந்தமுறை கல்வி அமைச்சை ஒரு அமைச்சருக்கு வழங்கினோம். இந்த முழுமையான பொறிமுறையிலும் அவர் கவனம் செலுத்தி, அதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். கல்விக்காக நாம் தனி அமைச்சரவைக் குழுவை நியமித்துள்ளோம். எனவே கல்வியின் நவீனமயமாக்கலை இங்கிருந்து தொடங்குவோம். நாம் ஒரு புதிய உலகத்தை நோக்கி நகர்கிறோம்.
இன்னும் பத்து ஆண்டுகளில் நமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படும். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்திற்காக நாம் கல்வியை உருவாக்க வேண்டும். அதற்கான பலமான வேலைத்திட்டம் தேவை. இளைஞர்களுக்கு இதுபற்றி முறையாகத் தெளிவுபடுத்தி, எதிர்காலத்திற்குத் தேவையான அறிவும் திறமையும் கொண்ட ஒரு பரிபூரண சமுதாயத்தை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு ஆகும். அதற்குத் தேவையான நிதியை 2024 ஆம் ஆண்டு முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல், கமல் குணரத்ன மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காணாமல் போன இளம் பெண் கொலை
காணாமல் போன இளம் பெண் கொலை
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
யாழில் ஒரே நாளில் மூன்று கடைகளுக்கு சீல் வைப்பு
யாழில் ஒரே நாளில் மூன்று கடைகளுக்கு சீல் வைப்பு
யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நகர் பகுதியில் உள்ள உணவகங்களில், யாழ்.மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு எதிராக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
யாழில் ஒரே நாளில் மூன்று கடைகளுக்கு சீல் வைப்பு
வழக்கு விசாரணைகளை அடுத்து உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று , இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு பணித்ததுடன் , வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அதேவேளை யாழ். ஆனைப்பந்தி பகுதியில் அமைந்திருந்த கொத்து கடையும் யாழ்.நீதிமன்ற உத்தரவில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிக்ரொக்கில் வன்முறை 8 பேர் கைது
ரிக்ரொக்கில் வன்முறை 8 பேர் கைது
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸை சார்ந்த பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இளைஞனுக்கு எமனாக வந்த நாய்
இளைஞனுக்கு எமனாக வந்த நாய்
வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தை சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடல் வழியாக இன்று (12) அதிகாலை கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் தொடர்ச்சியாக கஞ்சா கடத்தி வரப்பட்டு தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மிகப்பெரிய கும்பல் ஒன்று திட்டமிட்டு கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக கொள்முதல் செய்து சிறிய அளவிலான பாக்கெட்டுகள் மூலம் இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து சமூக வலைதளங்களை பயன் படுத்தியும் விற்பனை செய்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையும் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக கஞ்சா விற்பனையை தடுக்கும் முயற்சியை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பெயரில் மதுரை மாநகரில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
இந்நிலையில் மதுரை மாநகர காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த ராஜ்குமார் மற்றும் ஜெ.கே என்ற ஜெயக்குமார் ஆகியோர்களை தேடி வந்தனர்.
இதனிடையே மதுரை சிந்தாமணி ரிங் ரோடு வழியாக வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் தனி படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து மதுரை ரிங் ரோடு சிந்தாமணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரின் பின்புறம் 40 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த மதுரை எல்லிஸ் நகரை சேர்ந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ராஜ்குமார் தனது கூட்டாளிகளான ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுகுமாரன், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா, சுடலைமணி, மகேஷ்குமார் மற்றும் முத்துராஜ் ஆகியோருடன் மதுரை புதூரை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி போலியான TN 59 AW 1575 என்ற பதிவெண்ணை கொண்ட Eicher (Close Type) வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்த அதனை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் என்ற கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மேற்படி கார், 3 செல்போன்கள், மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றனர்.
அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் இருந்து 2 ஆயிரம் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனை காவல்துறையினர் கைப்பற்றி போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற சுகுமாரன், ராஜா, சுடலைமணி, மகேஷ்குமார்,. முத்துராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மதுரையை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து 4 கோடி மதிப்பில் 2090 கிலோ கஞ்சா வாங்கி வந்து, தூத்துக்குடி ஆரோன் என்பவர் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
இதை அடுத்து கஞ்சா ஏற்றி வைத்திருந்த சரக்கு வாகனங்கள், 5 செல்போன்கள், 25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு பலியான ஜோடி
காட்டு யானையின் தாக்குதலுக்கு பலியான ஜோடி
உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரம் ஒன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
காட்டு யானை தாக்கியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த யுவதி மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்
மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்
மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (11) மதியமளவில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ் வீதியில் பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்
குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொதுமக்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம்
மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி
அலுவலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும்
நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில்
பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச்
செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற
சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு
தீர்க்கமாக ஆராயப்பட்டது.
அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான
பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி
உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும்
பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச
செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி
வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற
காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும்,
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை
பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில்
காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு
அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை
வழங்கினார்
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து
தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி
விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற ஜனநாயக
போராட்டம் மே 9 ஆம் திகதிக்கு பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது.
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை
ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள்
மீது தாக்குதல் நடத்தினார்கள்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்துக்கு
எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது
டுவிட்டர் ஊடாக செய்தி வெளியிட்டார். ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது
செய்யப்படவில்லை.
காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள் என்பதை அனைவரும் நன்கு
அறிவார்கள்.
ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள். உண்மையை
மறைத்து விடுகிறார்கள்” என்றார்.
யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை
யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.
யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை
காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்கிறோம் , பனம் பழங்களின் விதைகள் கொண்டு , பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்கிறோம்.
பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட எமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.






























