சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மகிந்தவின் சகோதரரான தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ராஜாங்க அமைச்சராக

முன்னாள் ராஜாங்க அமைச்சராக செயல்பட்ட சசீந்திர ராஜபக்ஷவுக்கு இந்து இவ்வாறு தொடர்ந்து பிணைவழங்க மறுக்கப்பட்டு விளக்கமறையில் நீடிக்கப்பட்டுள்ளது .

இதன்படி ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் தேதி வரை விளக்கமரில் வைக்குமாறு கொழும்பு நீதவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

லஞ்ச ஊழல் மோசடி

லஞ்ச ஊழல் மோசடி செய்த நபர்களுக்கு எதிரான போட்டியை ஆரம்பித்து உள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடுகிறது.

அவ்விதிகமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் பின்னர் குற்றங்கள் அற்றவராக பிணையில் விடுவிக்கப்படுவது தான் ஏமாற்று நாடகத்தின் உச்சகட்ட திருவிழா கோலமாக காணப்படுகிறது

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை

அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை எதிர்த்து மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி

முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபை ஊழியர்கள் குழுக்களாக இணைந்து மின்சார சபை தலைமையகத்தின் முன் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய மின்சார சபை

புதிய மின்சார சபைச் சட்டத்தின் பாதகமான விளைவுகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு ,இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்

ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

அதிகாரிகளால் மார்ச் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவின் தடை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு ,; ஈழ ஆதரவு குழுவின் மேல்முறையீடு தோல்வி

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி TGTE (தமிழீழ இடைக்கால அரசாங்கம்) விடுத்த வேண்டுகோளை UK தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

ஆறுமுகம் மற்றும் பலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோரின் மேல்முறையீட்டில் ஆணையம் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது.

அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், ஐக்கிய இராச்சியத்தில் இது தடைசெய்யப்படவில்லை என்று TGTE வாதிட்டது.

சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் (“GoSL”) TGTE இன் வழிமுறைகள், ஆளும் குறிப்புகள் பற்றி வேறுபட்ட பார்வையை எடுத்தது.

மார்ச் 29, 2001 அன்று, UK இராஜாங்கச் செயலர் எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதச் சட்டம் 2000 (தடைசெய்யப்பட்ட அமைப்புகள்) (திருத்தம்) ஆணை 2001 இன்

அட்டவணை 2 இல் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார்.

விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டிசம்பர் 7, 2018 அன்று, பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை 2 ல் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட வேண்டும் என்று TGTE உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது.

கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான UK

மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் மார்ச் 8, 2019 அன்று விண்ணப்பத்தை நிராகரித்தார்.

அக்டோபர் 21, 2020 அன்று, மேல்முறையீட்டு ஆணையம் மேல்முறையீட்டாளர்களின் மேல்முறையீட்டை அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, மே 13, 2021 தேதியிட்ட உத்தரவின்படி, TGTE ஆனது ஜூன் 3,

2021க்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் மாநிலச் செயலர் தனது

தடையை நீக்குவதற்கான முடிவு

விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31, 2021க்குப் பிறகு இல்லை.

நிவாரணம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் மீதான தடை யைத் தக்கவைக்க மாநிலச் செயலாளர் ஒரு புதிய

முடிவை எடுத்தார், மேலும் முடிவு ஆகஸ்ட் 31, 2021 அன்று TGTE க்கு அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற நிகழ்வுகளை அடுத்து இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு

இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது

. இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்கே, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 30 மே 2023 இல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

கடந்தவருடம் முதல் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள், மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவசரமாக இறக்குமதி செய்வதற்கு இந்த கடனுதவி திட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். .

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் பல்வேறு கடனுதவி திட்டங்கள் மற்றும் நாணய உதவிகள் ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவி கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்கும் எமது நிலையான அர்ப்பணிப்புக்கான ஓர் சாட்சியமே இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது

Featured

Loading...