Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கம் மீட்பு
கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கம் மீட்பு
இலங்கையில் இருந்து இலங்கைக்கு கடல்வழியாக எடுத்து
செல்ல பட்டு வீசப்பட்ட 33 கிலோ தங்கம் ,
காவல்துறையினரை கண்ணுற்ற நிலையில் கடலுக்கு வீச பட்டது .
இதனை அடுத்து கடத்தல் சாட்சிகள் வழங்கிய,
தகவலின் அடிப்படையில் ,கடலுக்குள் இருந்து
அந்த தங்கம் மீட்க பட்டுள்ளது .
இன்றைய இதன் மதிப்பு, பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது .
வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி
வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி
வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த அரசாங்கத்திற்கு சொந்தமான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர்
முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக அங்கு மக்களுக்கு இடையில் இரு குழுக்களாக முரண்பாடு ஏற்பட்டையடுத்து பொலிசாரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
இன்று (04.06) காலை முதல் மதியம் வரை இடம்பெற்ற இவ்முரண்பாடு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த பட்டானிச்சூர் புளியங்குளத்தின் நீரேந்து பிரதேசத்தை விடுமுறை நாட்களில் சிலர் கையகப்படுத்தி வேலி அடைத்து வந்திருந்தனர்.
இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட
விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.
வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி
அதில், வவுனியா கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைககள பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின்
அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம்
அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன்,
அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின்
உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், இன்று (04.06) காலை குறித்த பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நீரேந்து பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் சமூகத்தினர்
இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மரக்கன்றுகளையும் நாட்ட முனைந்தனர்.
இதன் போது, வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளனங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்னக முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்ப நிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றனர்.
இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை வன்னி மாவட்ட ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது, குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளார்.
குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன்
செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திலீபன் எம்.பி கோரியுள்ளார்.
குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை.
இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.
அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனவும் திலீபன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு
ராகுல் காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு
இந்தியா காங்கிரஸ் கட்சி செயல் வீரர் ராகுல் ,
காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது .
இந்திய தூதராலய அதிகாரி விடுத்த வேண்டுகோளைஏற்று ,
இலங்கை வருவதற்கு ராகுல் காந்தி தயாராகி வருகிறார் .
ராஜீவ் காந்தி இலங்கை வந்த பொழுது ,
துப்பாக்கியல் பிடரியில் அடித்தனர் .
ராகுல் காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு
இப்பொழுது இங்கை வர போகும்,
நாளைய இந்திய பிரதமர் ராகுல் காந்திக்கு
எவவாறு அடிக்க போகிறார்கள் என்பதை ,
இலங்கை திட்டம் போடலாம் என எதிர் பார்க்க படுகிறது .
சோனியா ஆட்ச்சியில் தமிழீழ விடுதலை புலிகள்,
முற்றாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் இப்பொழுது
காங்கிரஸ் இலங்கை அழைத்து செல்வது ,
தமிழர்களை நசுக்கும் நோக்கம் கொண்டதாகவே பார்க்க படுகிறது .
யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ,
கடும் மோதல் இடம் பெற்றதை மாணவர்கள் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .
மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
அதனை எடுத்து மேற்கொள்ள பட்ட நீதி ,
விசாரணைகளின் பின்னர் ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
யாழ்ப்பாண வளாகம் தற்போது ரவுடிகளின்,
காவல் நிலையமாக மாறியுள்ளதாக ,குற்ற சாட்டு விமர்சனம்
மக்களினால் முன் வைக்க படுகிறது
வாகன விபத்தில் எட்டு பேர் காயம்
வாகன விபத்தில் எட்டு பேர் காயம் ,
கடந்த தினம் இலங்கை இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் சிக்கி எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்த யாவரும் மீட்ட பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த வாகன விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வாகன விபத்தில் எட்டு பேர் காயம்
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள்,
அதிகரித்து காணப்படுகிறது .இலங்கை காவல்துறையின் அலட்சியம் ,
மக்களின் விழிப்புணர்வு அற்ற செயலும் ஒரு காரணமாக உள்ளது .
சாலையோர விதிகளை கடைபிடிக்காது இயல்பு
,நடைமுறைகளுக்கு எதிராக ,செயல் படுவதும் இந்த விபத்துக்கள் ,
அதிகரித்து செல்ல காரணமாகிறது .
குளத்தில் மூழ்கி இருவர் மரணம்
குளத்தில் மூழ்கி இருவர் மரணம்
இலங்கை ஹெனானிகல குளத்தில் குளித்துக் கொண்டிருந்த,
17 மற்றும் 19 வயதுடைய இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்
ஹபராதுவ பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற 50 பேர் கொண்ட குழுவில் ,
குடித்த வாலிபர்களை நீராடிய பொழுது ,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
நீரில் மூழ்கி உயிரிழந்த இரு வாலிபர்களும் ,
மீட்க பட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி
இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
இலங்கைத் தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் பல்வேறு பட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் இனஅழிப்பு நடவடிக்கையின் புதிய வடிவத்தையே காட்டிநிற்கின்றது
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை கொன்றொழித்து படுகொலைகளை செய்ய ஜேர் ஆர் ஜெயவர்தனவின் மருமகனான ரணில் அரசின் இந்த செயற்பாடானது இந்த நாட்டிலே அதியுச்ச அடக்குமுறையையே
காட்டிநிற்கிறது என்று தெரிவித்த அவர் இந்த நாட்டிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலங்கை வருமானவரி திணைக்களத்திலே பதிவு செய்து தங்களுடைய உழைப்பு வருமானங்களுக்கு வருடாந்தம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
ஒரு நாட்டிலே வரி அறவிடுவது என்பது மிக நல்ல விடயம். ஆனால், இலங்கையில் ஒரு நான்கு வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை சுயமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியாத அதாவது பருவ காலச்
சீட்டை பெற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணம் செய்து தமது கல்வியை தொடர முடியாத நிலை ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கைகளில் ஒரு வசதியை செய்து கொடுக்காத இந்த அரசாங்கம் 18
வயதிற்குப் பின்னர் அவர்களிடமிருந்து வரியை அறவிடுவது என்பது இந்த நாட்டின் ஒரு மிக மோசமான நிலைமையை காட்டி நிற்கின்றது.
இந்த அரசாங்கத்தில் பலர் பல்வேறு பட்ட மோசடிகளை செய்து போயிருக்கின்றார்கள் இந்த அரசாங்கத்தினுடைய மத்திய வங்கியின் பல மில்லியன் கணக்கிலே இதே ரணில் அரசு இருக்கின்ற போது கொள்ளையடித்து
சென்றவர்களை மத்திய வங்கி ஆளுநரைக் கூட இதுவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
சீனியிலும் தேங்காய் எண்ணெயிலும் ஊழல் மோசடி செய்த ; கோத்தபாயவனுடைய குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்ய திராணியற்ற ரணில் அரசாங்கம் இங்கே பல ஊழல்களில் ஈடுபட்டு
விடுதலைப் புலிகளிடமிரந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளிலே வைப்பிலிட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையும் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.
இருபது தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு இருக்கின்ற மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை விசாரிக்கவும் இந்த அரசாங்கம் இன்று தயாராக இல்லை ஆனால் இந்த இளைஞர்களில் மட்டும் அதிகரிச்சனை கொண்டிருக்கின்றது என்றார்.
கொள்ளையடித்தவர்கள் களவெடுத்தவர்களினுடைய பக்கத்தில் தான் இந்த நாடு எப்பொழுதும் நிற்கின்றது இந்த தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.
இதன்போது ஆபிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.ந. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா
துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் எவன்கார்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்த 103 தானியங்கி மற்றும் அரை
தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் கையகப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் இதுவரை வழங்கப்படாத 04 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 03 அரை தானியங்கி துப்பாக்கிகள் உட்பட 13 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கும் எவன்கார்ட் மெரிடைம் சர்வீஸ் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 2019 ஜனவரி 24ஆம் திகதி காலாவதியாகியுள்ளதால் ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ரங்கல மற்றும் காலி மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து வரவேண்டிய சுமார் 80 கோடி ரூபா 07 வருடங்களுக்கு மேலாக அறவிடப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், உள்நாட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறையான
முகாமைத்துவம் மற்றும் கட்டுப்படுத்த, பொருத்தமான உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நிர்வாகத்தின் கவனம் செலுத்தப்படவில்லை என கணக்காய்வு திணைக்களங்களுக்கு தெரியவந்துள்ளது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!
இலங்கையில் 10-24 வயதுடையவர்களில், 39 வீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிபரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்கள் உட்பட 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்து இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் விமான சேவை
யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் விமான சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்
அச்சுவேலி பகுதியில்தீக்கிரையான வர்த்தக நிலையம்
அச்சுவேலி பகுதியில்தீக்கிரையான வர்த்தக நிலையம்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இன்றைய தினம் (3) வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி, தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு சேதமடைந்தது.
யாழ். மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் தீப்பரவலால் வர்த்தக நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
வர்த்தக நிலையத்துக்கு விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் வன்முறை
யாழ்ப்பாணத்தில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் வன்முறை
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (50) என்பவரே மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (33) எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் வன்முறை
இந்நிலையில் சுகுமாரின் வீட்டிற்குள், அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் இரவு எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வரும் நிலையில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி
உள்ளமை பொலிஸாருக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்
தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்
சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும், அதுவும் தோல்வியுற்றால்
நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் மூக்கை நுழைத்தாலும் பொருட்படுத்தாது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்
வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி மக்களை அடைத்து வைக்கும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிராம மட்டத்தில் நிற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று (2) ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பொலவில் உள்ள தனது வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் இதற்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
கேள்வி: நீங்கள் இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்திருக்கிறீர்கள். இன்று ஏன் வந்தீர்கள்?
பதில்- கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வீடு எரிப்பு சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான மேலதிக வேலைகளுக்காக இன்று வருமாறு கூறி இருந்தார்கள்.
கேள்வி- இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதா?
பதில்- வீடுகளை எரித்ததன் மூலம் எங்களின் மனித உரிமைகள் மீறப்பட்டன. காலிமுகத் திடல் போராட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பாதுகாப்பு சபையினால் இது நடக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் தேவையான முடிவுகள் எடுக்கப்படவில்லை.குறைந்த பட்சம் எங்களின் வீடுகள் தீப்பற்றி எரியும் போது பாதுகாப்பு படையினர் குறைந்தபட்ச பலத்தை கூட பயன்படுத்தவில்லை.
மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது.
மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொசன் பௌர்ணமி தின வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம்.
குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே உருவாகின.
மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், நாட்டில் ஏற்பட்ட, தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் அரசியல், சமூக பொருளாதார குழப்பங்கள் தீர்ந்து இலங்கையை உலகின் மீண்டும் முன்னேற்றம் அடைந்த நாடாக உயர்த்துவதற்கு இந்த பௌர்ணமி தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.
இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து பௌத்த மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவருக்கும் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள்
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது
நமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம்
பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும், வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும்
சுதந்திர ஊடக நிறுவனங்கள் கூட அடக்குமுறைக்குட்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவதாகவும், அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது
புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் தயாராகி வருவதாகவும், இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை
மேற்கொண்டு வருவதாகவும் இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.
அரலகங்வில தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (02) ஆராயச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
ஜனாதிபதி ரணில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
பொசன் போயாவை முன்னிட்டு கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அரச மன்னிப்பை வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
அபராதம் செலுத்தாததால் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர்
அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர்
அலுபோமுல்ல குருச சந்தி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பல்பொருள் அங்காடிக்கு வந்து கைப் பையில் பல பொருட்களை திருடிக்கொண்டு, ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பணம் செலுத்தியதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களை சோதனை செய்ததில் தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்து திருட்டில் ஈடுபட்டமை தெரியவந்தது.
அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர்
கடைக்கு முன்பாக நின்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகநபர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலும் பொருட்களைத் திருடியதற்காக புளத்சிங்கள பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தம்பதிகள் அவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களான தம்பதியினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்






























