Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு, ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்கள் இருவர் நேற்றைய தினம் (09.07) மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தாக்குதல் நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானவர் அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

https://www.youtube.com/watch?v=sl25RFhNVYs
மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பஸ் விபத்துச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

குறித்த விபத்துச் சம்பவத்தில் சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இன்று (10) காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

25 வயது இளைஞனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின் லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 இற்கு நான் எதிரானவன்
Posted in இலங்கை செய்திகள்

13 இற்கு நான் எதிரானவன்

13 இற்கு நான் எதிரானவன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சில கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து எமக்கு சிறு அதிருப்திகள் காணப்படுகின்றன. அவ்வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு நான் எதிரானவன். இது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.

எனினும் ஜனாதிபதி இது குறித்து இறுதி தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நான் இது பற்றி தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் வினவிய போது ”13 ஆவது திருத்தச் சட்டத்தை சமர்பிப்பதை மாத்திரமே நான் செய்யப்போகிறேன். அதனை நிறைவேற்றுவது தொடர்பிலான தீர்மானம் பாராளுமன்ற

உறுப்பினர்களின் கைகளிலேயே உள்ளது. 13 தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை நான் கொண்டிருந்தாலும், நீங்கள் தான் நிறைவேற்றுபவர்கள்” என ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

13 இற்கு நான் எதிரானவன்

அதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதாயின் பாராளுமன்றமே அதனை தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றம் என்பது நாமே.

எனவே, இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மீது குற்றஞ்சுமத்துவது அவசியமற்றது. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது எமது கைகளிலேயே உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் வரும் போது பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர

மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்வரும் 21 ஆம் திகதி சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியாக பதியேற்று சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இந்தியாவுக்குச் செல்வது விசேட அம்சமாகும்.

அந்த விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஒக்டோபரில் மேற்கொள்ளவுள்ளார்.

சீனப் பயணத்தின் போது, ​​புதிய முதலீடுகளைத் தேடுவது, வர்த்தக உடன்படிக்கைகளை எட்டுவது மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை மீண்டும் தொடங்குவது ஆகியவை தொடர்பில் கலந்துரையாடுவது ஜனாதிபதிகளின் முக்கியப் பணியாகும்.

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்

கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை-கடவத்தை-மீரிகம பகுதிக்கான நிதியை மீள ஆரம்பிப்பது குறித்து எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை ஹம்பாந்தோட்டை பகுதியைச் சுற்றி புதிய முதலீடுகளைத் தேடுதல் கலந்துரையாடல் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட ஒரு சுத்திகரிப்புத் திட்டத்தில் சீனா முதலீடு செய்வதும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பி​ரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய

வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

75 கால இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்திய அரசு சரியான முடிவொன்றை எடுத்து இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க

வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில், யாழ்ப்பாண இந்திய துணை துாரகத்தின் பொறுப்பதிகாரியிடம் அந்த கடிதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

75 கால இனப்பிரச்சினை தீர்வு, ஒற்றை ஆட்சிக்கு பொருத்தமானது அல்ல, அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என அக்கடித்தில் வலுயுறுத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன் தெரிவித்துள்ளார்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

இலங்கையில் தனியார் பேரூந்து ஒன்று ஆற்றில் பாய்ந்ததில் ,
அதில் பயணித்த பத்து பேர் பலியாகியும் நாற்பதுர் காயமடைந்துள்ளனர்

பொலநறுவையில் இருந்து காத்தான் குடிக்கு,
பயணித்து கொண்டிருந்த பேருந்தே ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

யாழ்பாணத்தில் தடியால் வண்டியை இழுத்து யாழ்பாணத்து ,
தமிழர் ஒருவர் உலக சாதனை நிலை நாட்டியுள்ளார் .

1500 கிலோ எடையுள்ள ஊர்தியை .ஐம்பத்தி ஒன்பது வயதுடைய,
செல்லையா திருச்செலவாம் என்கின்ற முதியவர் ,
இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் .

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

நானூறு மீட்டர் தூரத்தை ஏழு நிமிடம் 48 வினாடிகளில் இழுத்து ,
மகத்தான சாதனையை நிலை நாட்டியுள்ளார் .

இவர் இதற்கு முன்னரும் நீண்ட பல சாதனைகளை ,
நிலை நாட்டி தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரது இந்த சாதனைகள் ,தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்

100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (09.07) காலை யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பரீட்சார்த்தமாக பயணத்திருந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹோ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பரீட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து, மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை அதேவேகத்தில் பயணித்திருந்தது.

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது. இப் புகையிரதத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்

போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (09.07) வவுனியா, தோணிக்கல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே குறித்த படங்களுடன் முன்னாள் போராளிகள் ஒன்று கூடியிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரி சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அனுககூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்திருந்தார்.

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்

இதன்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தியாகதீபம் திலீபன் மற்றும் அனைபூபதி ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிகுமரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்

வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன் போது புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நவகமுவ சம்பவம் 8 பேருக்கு விளக்கமறியல்

நவகமுவ சம்பவம் 8 பேருக்கு விளக்கமறியல்

நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நேற்று (8) கடுவலை நீதிவான் முன், ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரை உங்களுக்குத் தெரியுமா
Posted in இலங்கை செய்திகள்

இவரை உங்களுக்குத் தெரியுமா

இவரை உங்களுக்குத் தெரியுமா

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடி படகுகள் 02 வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து ஜூலை 08 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தி இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை

கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் 74 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கைகள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையினர் தொடர்ந்து

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை (07) கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று சனிக்கிழமை (08) பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் கரை தட்டி உள்ளது.

நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ


நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ

இரு பெண்களுடன் சிக்கிய பிக்கு காம லீலை சர்ச்சை ,பொக வந்தலாவ ராகுல தேரர் ,கேட்கும் கேள்விகளுக்கு தமிழர்கள் உங்கள் பதில் என்ன ..?.அறிவுபூர்வமாக சிந்தித்தால் ,எல்லாம் அரசியல் தாங்க போங்க .

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்