Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை
2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க.
செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர்.
இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை
இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர். இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலேவத்த பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தன் உயிரை மாய்த்து உயிரிழந்து உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (17) பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த மாணவி உயிரிழந்த நிலையில் தனது அறையில் கிடந்ததை அவருடைய தந்தையார் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுப்பெண் காய்ச்சலால் மரணம்
புதுப்பெண் காய்ச்சலால் மரணம்
திருமணமாகி 4 மாதங்களேயான யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை (17) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
by நிருபர் காவலன் - எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
by நிருபர் காவலன் - இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
by நிருபர் காவலன் - வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
by நிருபர் காவலன்
பாவனைக்கு உதவாத இனிப்பு பண்டங்களை விற்றவருக்கு சிக்கல்
பாவனைக்கு உதவாத இனிப்பு பண்டங்களை விற்றவருக்கு சிக்கல்
சிறார்களின் மனங்களை கவரும் வகையில், கண்டி நகரில் ஒரு பெரிய காட்சியறையை நடத்தி, மனித பாவனைக்கு உதவாத, காலவதியான இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளது. டொபி, சொக்கலேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களை மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்ட விற்பனை நிலையம், கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
அதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த இனிப்பு பண்டங்களில், உற்பத்தித் திகதி மறைக்கப்பட்டு, காலவதியான திகதி மாற்றப்பட்டு,
விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.
அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம் பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
ஆகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் பாராளுமன்ற
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இருவர் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இன்றைய தினம் (17) பொலிஸாரின் உதவியுடன் சாணக்கியன் இராசமாணிக்கம் பேரூந்துகளின் அனுமதிப் பத்திரங்களையும் அதிரடியாக சோதனை செய்தார்.
ஒழுங்கான முறையில் விதிப் போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால் குறுந்தூர பேருந்து சாரதிகளுக்கும் நெடுந்தூரப் பேருந்து சாரதிகளுக்கு இடையிலே போட்டித் தன்மை காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பணி பெண்ணுக்கு நடந்த கொடூரம்
இலங்கை பணி பெண்ணுக்கு நடந்த கொடூரம்
சவூதி அரேபியாவில், ரியாட் நகரில் வீட்டு வேலை பணிக்காகச் சென்ற ஒரு பெண் அந்நாட்டில் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் ஊசியால் குத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் பொலிஸில் நேற்று (16) புகார் செய்துள்ளார்.
தலவாக்கலை பகுதியை சேர்ந்த வி. சிவரஞ்சனி (வயது 30) என்பவரே இவ்வாறு பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளார்.
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
இனி மேல் எமது கட்சியினர் துன்புறுத்தப்பட்டால் நிச்சயமாக வட்டியுடன் சேர்த்து முதலையும் சேர்த்து வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றும் அதே வேளையில் எந்தவொரு சவாலையும் ஏற்றுக் கொள்ளத் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தோ அல்லது தாம் சவால்களில் இருந்து தப்பி ஓடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று (16) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மினுவாங்கொடை தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்,
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி, நாங்கள் மீண்டும் சவால்களுக்கு முகம் கொடுத்து, இதை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்று யோசித்தோம்.
எனது தந்தை ரெஜி ரணதுங்கவிற்கு பக்க பலமாக இருந்த சகலரும் அந்த இடத்தில் கலந்து கொண்டார்கள். 1977 இல் ரெஜி. அவர்களது வீட்டுக்கு தீ வைத்தார்கள்.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேலை செய்தார்கள். அன்று அவர்களது முதலாவது கட்சியின் கிளைக் கூட்டத்துக்கு 13 பேர் மட்டுமே வந்தனர்.
அவர்களோடு இணைந்து அமைச்சர் மிகவும் பலமான வேலைத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். மினுவாங்கொடை அன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஆசனமாக இருந்தது.
ரெஜி ரணதுங்க தான் அன்று மினுவாங்கொடை ஆசனத்தை வென்று அதன் மீது தான் நாம். இன்று அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். நாங்கள் வென்றோம் மினுவாங்கொடை தொகுதியில் நாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தோம்.
பின்னர், நாடு முழுவதும் இதே சித்தாந்தம் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹாவில் இருந்து 365,000 வாக்குகள் அதிகம் பெற்று கோட்டாபய வெற்றி பெற்றார்.
அதன் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது. கம்பஹாவில் எமக்கு பெரும் அமைப்பு சக்தி இருந்தது. அந்த வலிமையை உடைக்க போராளிகள் விரும்பினர்.
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
போராட்டத்தின் பின்னர் மீண்டும் மினுவாங்கொடைக்கு வந்து எரிந்த அலுவலகத்தை புனரமைத்து பணிகளை ஆரம்பித்தேன். வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது.
ஒரு வெற்றிகரமான நபர் அடிமட்டத்தில் இருந்து எழுபவர் தான். நீங்கள் தான் என் பலம். அன்று என் தந்தையின் வீடு தீப்பற்றி எரிந்த போது அவரைப் பாதுகாத்தது போல் மினுவாங்கொடையில் என்னையும் காப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் தான் என் பலம். உங்கள் முடிவுகளின் அடிப்படையில் நான் எடுத்த முடிவு தவறானதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் போது எந்த சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாங்களும் சவால்களில் இருந்து தப்பி ஓட மாட்டோம்.
77 இல் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 1994 இல் எதிர்க்கட்சிகளின் வீடுகளுக்கு தீ வைக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை துன்புறுத்தினால் வட்டியுடன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
நாங்கள் இப்போது விளையாட்டில் இருக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்கவை என்னைப் போல் திட்டியவர்கள் எவரும் இல்லை. போராட்டத்துடன் மகிந்த தலைமையிலான அரசாங்கம் வெளியேறியது.
பின்னர் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினார். அதன் பிறகு யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. கட்சியை பிளவுபடுத்தி நாட்டை ஒன்றிணைத்து திரு. ரணில் அவர்களுக்கு ஆதரவளிக்க முன் வந்தோம்.
தற்போது 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்
வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்
வவுனியா தமிழர் கலாசார பண்பாட்டுடன் தொடர்புடைய ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் இ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாடலை வவுனியா பிரமாண்டு வித்தியாலய மாணவர்கள் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றதுடன், ஆடிக்கூழும் வழங்கப்பட்டது.

வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்
இந் நிகழ்வில் மாநகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்
ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்
ஜாவின் – தர்ம சீலன் தனது நான்காவது பிறந்த நாளை இன்று குதூகலமாக
லண்டனில் கொண்டாடி கொண்டுள்ளார் .
இவருக்கு எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
by நிருபர் காவலன் - இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
by நிருபர் காவலன் - வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஜப்பான் இலங்கைக்கு உதவி
by நிருபர் காவலன் - ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்
by நிருபர் காவலன்
வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பொலிசாருடன் மோதி விபத்துக்குள்ளானது.
வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று (16) இரவு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா படகினை பயன்படுத்தி கடற்படையினர் சிலர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக சென்றனர்.
தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
எனினும் நள்ளிரவு 1 மணிக்குப் பின்னரும் அந்த படகினை காண முடியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார் – 2023 ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது.
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
இந்நிகழ்விற்கு விருந்தினராக சனத் ஜயசூரிய கலந்து கொண்டுள்ளார்.அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது.
இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
லிந்துலை கிளனிகல்ஸ் தோட்டத்தில் 30 வயதுடைய இளம் தாய் ஒருவர் குடும்ப வறுமை காரணமாகவும் சொந்தமாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் கொள்ளும் நோக்கிலும் கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு அந் நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் மூலம் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சவுதியில் தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளரின் மனைவி குறித்த பெண், தான் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு
வரும்போது குறித்த வீட்டின் எஜமானி இவரை கடுமையாக தாக்கிய குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.
இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
கணவன் மற்றும் அவரின் உறவினர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் இச்சம்பவம் தொடர்பாக பல முறை தெரிவித்த போதிலும். பணம் கொடுத்தால் மீண்டும் நாட்டிற்கு எடுத்து தருவதாகவும் உபதரகர் அச்சுறுத்தியதாக கணவன் தெரிவிக்கின்றார்.
சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இலங்கைக்கு கடும் உடல் சுகயீனமுற்ற நிலையில் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குண்டு ஊசிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.உடம்பில் இருந்து இதுவரை நான்கு குண்டு ஊசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் “எங்களுக்கு வீடு இல்லை. வெளிநாடு சென்றால் வீடு ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்துடன் சென்றேன் என்னை லிந்துலை கேம்பிரி தோட்டத்தில் இருக்கின்ற தரகர் எனது வீட்டுக்கு வருகைதந்து கணவருடன் பேசிய பின்பு கொழும்பில் உள்ள தரகர் மூலம் அனுப்பிவைத்தனர்.
இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
எனக்கு பயிற்சிகள் வழங்கவில்லை. அந்த நாட்டு மொழி தெரியாது என கூறியபோது, அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அந்த நாட்டுக்கு சென்ற பின் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். அங்கு சென்றவுடன் மெடம் கதைத்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சொல்வது அவருக்கு புரியவில்லை. எப்படியோ சமாளித்து கொள்ளலாம் என நினைத்தபோது என்னால் அவர்கள் கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் வேலைகளை செய்து கொண்டிருந்த போது என்னை தவறாக பேசியதோடு ஒவ்வொரு நாளும் அடித்து கன்னத்தில் அறைவது சாப்பாடு கொடுக்காமல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
பின்னர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்ற போது அங்கு பலவந்தமாக கதவை திறந்து கொண்டு என்னை தாக்கியதோடு எனது உடம்பு பகுதியில் குண்டூசிகளை குத்தினார்கள். நான் எவ்வளவு கெஞ்சி கேட்ட போதிலும் தாக்கினார்கள்.
நாங்கள் வறுமை காரணமாக தான் வெளிநாடு செல்கின்றோம். அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இலங்கையில் உள்ளவர்கள் பொய்யான தகவல்களை கூறி எங்களை போன்றவர்களை அனுப்பினாலும் எந்த பாதுகாப்பும் வழங்குவதில்லை. இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது” என கண்ணீர் மல்க இவர் கேட்டுக் கொண்டார்.
விசேட நடவடிக்கையின் போது பலர் கைது
விசேட நடவடிக்கையின் போது பலர் கைது
பொரளை, சஹஸ்புர வீடமைப்புத் தொகுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (16) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
விசேட நடவடிக்கையின் போது பலர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும், மேலும் இரு சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
by நிருபர் காவலன் - எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
by நிருபர் காவலன் - இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
by நிருபர் காவலன் - வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
by நிருபர் காவலன்
இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை
இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் இலங்கையானது ஜூன் மாத இறுதியளவில் 8 வேலைத்திட்டங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன் 33 வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் எவ்வாறு வினைத்திறனுடன் செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க இலங்கையின் “வெரிட்டே“ நிறுவனத்தின் மூலம் IMF Tracker’ என்ற நிகழ்நிலைத்தளம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.
இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை
2023 மே மாதத்தில் 4 ஆகவிருந்த தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் மற்றும் முழுமைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களின் எண்ணிக்கையானது 2023 ஜூன் மாதத்தில் 8 ஆக உயர்வடைந்துள்ளதாக வெரிட்டேவின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக அமைச்சரவை ஒப்புதலைப் பெறுதல், ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை இயற்றுதல், அரசுக்கு சொந்தமான 52 முக்கிய நிறுவனங்களின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கு திட்டமிடல் போன்றவையும் இவற்றில் உள்ளடங்கும்.
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
by நிருபர் காவலன் - எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
by நிருபர் காவலன் - இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
by நிருபர் காவலன் - வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
by நிருபர் காவலன்
புதிய சாதனை படைத்த தருஷி
புதிய சாதனை படைத்த தருஷி
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனையை படைத்து அவர் இந்த தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
போட்டித் தூரத்தை நிறைவு செய்ய அவருக்கு 2.00.66 நிமிடங்கள் பிடித்தன.
இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றார்
பஸ் தரிப்பிடத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
பஸ் தரிப்பிடத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக பயணி ஒருவர் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் நேற்று (15) பிற்பகல் முதல் அப்பகுதியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று (16.07) இரவு இடம்பெற்றது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்
குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிபகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதர் மீதும் குறித்த குழு வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வைத்திய வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த சம்பவத்தால் மொத்தமாக 5 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (15) மட்டு நகர் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த 74 வயதுடைய சங்கரப்பிள்ளை கதிர்காமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
குறித்த முதியவர் கடந்த 5 ம் திகதி வீட்டை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடிய போது அவர் கிடைக்காததால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியதுடன் அவருக்கு நீண்ட காலமாக காணப்பட்ட நோய் சுகமடையாது இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டவரை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஓப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
by நிருபர் காவலன் - இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
by நிருபர் காவலன் - வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஜப்பான் இலங்கைக்கு உதவி
by நிருபர் காவலன் - ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்
by நிருபர் காவலன்

























