Tag: புகையிரதத்தில் மோதி
புகையிரதத்தில் மோதி பெண் பலி
புகையிரதத்தில் மோதி பெண் பலி
யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற
புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்by நிருபர் காவலன்
- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்by நிருபர் காவலன்
- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்by நிருபர் காவலன்
புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி
புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














