கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி

கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி

புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.

இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.

கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி

அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும்.

குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.

அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

பேருந்தில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து டிக்கெட்டுகள் வெளி வந்தன.

இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

வீடியோ

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா

வடக்குக்கு நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.

இந்நிலையில் யாழில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா

இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தை கில்மிஷா உதயசீலன் சூட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது

விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது

இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார்.

இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வீடியோ

விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்

முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

வீடியோ

கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
Posted in அசானி asani saregamapa songs இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி

கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி

இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

வீடியோ

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது

பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது

அண்மையில், பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ‘ஐபோன்’ தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அதன்படி, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

​பின்னர், மொடலிங் போட்டியொன்றில் வெற்றி பெற்றால், ‘ஐபோன்’ கைப்பேசி இலவசமாக வழங்கப்படும் என்றும் குறித்த நபர் அப் பெண்களிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது

பணம் தராத யுவதிகளை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், முகநூல் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவிகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வீடியோ

82 வீத வரி அறவிடப்படவில்லை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

82 வீத வரி அறவிடப்படவில்லை

82 வீத வரி அறவிடப்படவில்லை

2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அறவிடப்பட வேண்டிய வரி வருமானத்தில் 82 வீதம் அறவிடப்படவில்லை என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தெரியவந்தது.

கடந்த ஆண்டுக்கான வரி அறவீடு மற்றும் அதன் செயற்றிறன் தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டது.

82 வீத வரி அறவிடப்படவில்லை

கடந்த ஆண்டின் முதல் 06 மாதங்களில் அறவிடப்பட வேண்டிய வரி வருமானம் 943 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தொகையில் 767 பில்லியன் ரூபாவை பல்வேறு காரணங்களால் அறிவிட முடியாது போயுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்

சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்

சிங்ளகளை காவல்துறையை கழுவி
ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம் .

தமிழர்களை அடக்குவது ,கேவல் படுத்துவது ,பொய் வழக்கு போட்டு உள்ளே வைப்பது என்ற நாடகத்தை ஆடும் பேரினவாக சிங்கள பவுத்த அரசுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வழங்கிய சாட்டை அடி

முஸ்லீம்கள் சொத்துக்களை கடைகளை ,பள்ளி வாசல்களையே அடித்து உடைப்பது ,இந்துக்களின் ஆலயங்களை உடைப்பது தான் இன்றைய சிங்கள தீவிரவாதம் என்பது .


அப்படியா சிங்கள கூலிகளுக்கு இவர்கள் வழங்கிய தரமான சம்பவம் இது .

இந்த வருடத்தின் சிறந்த தரமான சம்பவம இது பதிய பெற்றுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் ஆயுதங்கள்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

வத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

டி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 04 மெகசின்கள் மற்றும் 9 MM ரக 18 தோட்டாகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆயுதங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவவிற்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்

களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்

கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது

யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

வீடியோ

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

டிசம்பர் 17-23 வரையான வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகரிப்பாகும் என வௌிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் (TIN) பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம். எனவே,

விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும். கோரிக்கையை பரிசீலித்த பிறகு,

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

வரி செலுத்துவோரின் அடையாள எண் (TIN) மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (PIN) ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, ​​அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித்

திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஜனவரி

01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்
Posted in இலங்கை செய்திகள்

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

9 ஆம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் திடீரென தீப்பறவியுள்ளது.

இதன் போது வீட்டில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சிவில் ஆவணங்கள் என முக்கியமான பொருட்கள் தீயில் கருகி உள்ளன.

வீட்டில் இருந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ

மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு

மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.

கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர் மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது

அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய 246 பயன்படுத்தப்படாத அலைபேசிககளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 அலைபேசிககளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் அலைபேசிககளை எடுத்துச்

செல்லும் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது,

கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தீவிரமடைந்துள்ள டெங்கு 23 பேருக்கு எதிராக வழக்கு

தீவிரமடைந்துள்ள டெங்கு 23 பேருக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , 189 பேருக்கு எச்சரிக்கை படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,

“யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடையவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை (02) 114 பேர் டெங்கு நோய்க்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதேச மட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தீவிரமடைந்துள்ள டெங்கு 23 பேருக்கு எதிராக வழக்கு

அதன் போது டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்கள் அவதானிக்கப்பட்டால் , அதன் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு , தங்கள் குடியிருப்புக்கள் மற்றும் அயல் பிரதேசங்களில் நீர் தேங்க கூடிய இடங்கள் , பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை , டெங்கு தொடர்பான தகவல்களை பெறவும் , முறைப்பாடுகளை வழங்குவதற்கும் 076 179 9901 என்ற தொலைபேசி இலக்கத்தை வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

இந்த இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தகவல் பெறவோ முறைப்பாடுகளை வழங்கவோ முடியும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

21 வயதான யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

குறித்த யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான விரிவுரைகளை ஆற்றி வருபவர் என அறியப்பட்ட ருவன் பிரசன்ன குணரத்ன அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் இதேபோன்று இறந்து கிடந்தார்.

உயிரிழந்த பெண்ணும், ஆணும் ருவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட போதகரின் பிரசங்கங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக முடித்துக்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ கூறினார்.

‘அடுத்த ஆன்மாவை நோக்கிய விரைவான மாற்றத்திற்கான ஒரு வழிமுறையே தற்கொலை” என இந்த பிரசங்கங்களில், குணரத்ன உயிரை மாய்ப்பதை ‘நியாயப்படுத்தியதாக’ கூறப்படுகிறது .

உயிரிழந்த போதகர், கொட்டாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ரூ. 150,000 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீடியோ

காதல் ஜோடிக்கு வலை
Posted in இலங்கை செய்திகள்

புது ஜோடியைக் கொன்ற காதலன்

புது ஜோடியைக் கொன்ற காதலன்

2023 டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி (நக்கல வத்த) கல்வெட்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக மொனராகலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஜானக சிறிரத்ன தெரிவித்தார்.

மொனராகலை-பிபில வீதியில் இடம்பெற்றது விபத்தல்ல, அவரது முன்னாள் காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தம்பகல்ல, கொட்டகலை, மஹாலந்த கிவுல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான திசாநாயக்க முதியன்செலாகே அமிதா ஜீவமாலி (37) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் ஆயுர்வேத துறையில் பணியாற்றி வருகிறார்.

தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்த பின்னர், மொனராகலை பிபில வீதியின் சாரதி ஒருவருடன் சுமார் ஐந்து வருடங்களாக வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரை பிரிந்து மற்றுமொரு சாரதியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.

புது ஜோடியைக் கொன்ற காதலன்

அவ்வாறு இருக்கையில், முதலாவது காதலன், அப்பெண்ணுக்கும், அவருடைய தற்போதைய காதலனுக்கும் தொலைபேசியிலும், பல முறை மிரட்டல் விடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி காலை புதிய காதலனுடன் அப்பெண் மோட்டார் சைக்கிளில் பதுளை பகுதிக்கு செல்வதை அறிந்த பழைய காதலன் அவர்கள் மொனராகலை-பிபில வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணின் புதிய காதலன் மற்றும் பெண், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி வான், படல்கும்புர கரவிலபாறையில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற முன்னாள் காதலன், சட்டத்தரணி ஊடாக மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என கண்டறிந்தனர். இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை (04) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ